முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  லிவிங் ஸ்மைல் வித்யா பதில்கள்
- லிவிங் ஸ்மைல் வித்யா -
 
 
 
 

வல்லினம் வாசகர்களின் கேள்விகளுக்கு லிவிங் ஸ்மைல் வித்யா பதில் தருவார். கேள்விகளை editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.


ஸ்ரீபாண்டியன், விருதுநகர்


கேள்வி : உண்மையைச் சொல்லுங்கள் வித்யா. தமிழ்த் திரைப்படங்களின் இயக்குநர்கள் திருநங்கைகளை எப்படிச் சித்தரிக்கின்றனர்? அவர்களை நீங்கள் விமர்சித்ததுண்டா? அதுபோன்ற திரைப்படங்களைப் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

பதில் : திரைப்படங்களில் திருநங்கைகள் குறித்து சில கட்டுரைகள் எனது பக்கத்தில் எழுதியுள்ளேன். வாய்ப்பிருக்கும் போது இங்கே (livingsmile.blogspot.com/search/label/) பாருங்கள். நன்றி.


அபிராமி


கேள்வி : நான் ஒரு நாடகக் கலைஞராக மாற என்ன செய்ய வேண்டும்? தமிழகத்தில் யாரை அணுகலாம்?

பதில் : Welcome!!... என்னையே அணுகலாம். உங்களை குறித்த தகவல்களை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். பேசுவோம். livsmile@gmail.com நன்றி.

கேள்வி : நான் உங்களைக் குறிப்பிடவில்லை. பொதுவாக திருநங்கைகளுக்குப் பெண்களைப் பிடிக்குமா? ஏன் பெரும்பாலும் பெண்களைக் கண்டு விலகி செல்கின்றனர்?

பதில் : பெண்களை மதிப்பது நாகரீகம் என்று திருநங்கைகள் நம்புவதால் இருக்கும். அல்லது தன்னை பெண்ணாக மதிக்கும் / ஏற்கும் பக்குவம் இல்லாதவர்கள் மத்தியில் தான் எதிர்பார்த்து கிடைக்காத மரியாதையை சகபெண்களுக்கு நாமாவது கொடுக்க வேண்டும் என்ற தார்மீக அடிப்படையில் இருக்கலாம்.

கேள்வி : திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் அதிகம் உரிமைகள் கொடுத்துள்ள நாடு, தேசம் என ஏதும் உண்டா?

பதில் : எனது உலக அறிவை எட்டியவரை ஸ்பெயின், தாய்லாந்து போன்ற நாடுகளை கூறுவேன். அதுவும் அவர்கள் வாழ்வதில், அவர்களின் இருப்பில் மற்ற நாடுகளோடு ஒப்ப நோக்கின் பெரிய சிக்கல் என்று சொல்லலாம். மற்றபடி, அங்கும் சமூக மைய நீரோட்டத்தில் சக மனிதர்களாக பல்துறையில் தங்களுக்கான இடத்தை ஸ்திரமாக அடைந்துள்ளார்கள் என்று சொல்வதற்கில்லை.


சிவராமன், சிங்கை


கேள்வி : நான் உங்களை வாசித்ததுண்டு. முனைவர் ந. முத்துசாமியில் நாடகங்களில் உங்களைக் கவர்ந்தது எது?

பதில் : நன்றி தோழர்! நாற்காலிக்காரர் எனக்கு மிகவும் பிடித்த நாடகம்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768