இதழ் 17 - மே 2010   ஜன நாயகத்தை கேலிக்கூத்தாக்கும் டிவி சேனல்கள்
நெடுவை தவத்திருமணி
 
 
 
  சிறப்புப்பகுதி:

சர்ச்சை: இலக்கிய மோசடி (தன்னிலை விளக்கம் & எதிர்வினை)

பத்தி:

உலுசிலாங்கூர் இடைத்தேர்தல் கண்ணோட்டம்: எப்போதும்போல் மீண்டும் கடவுள் தோற்றுவிட்டார்

சு. யுவராஜன்

அவ‌தாரும் ஆத்தாவும்!
ம‌. ந‌வீன்

செறுத்துறுத்தி உண்ணிகிருஷ்ணன்
கமலாதேவி அரவிந்தன்

இயற்கை (2) - நதி
எம். ரிஷான் ஷெரீப்

அந்த போலிஸ்காரர்களும் இந்த போலிஸ்காரரும்
தோழி

எஞ்சி இருக்கும் காகித‌மும்... கொஞ்ச‌ம் பிரிய‌மும்
வீ. அ. ம‌ணிமொழி

கட்டுரை:

முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்
மா. சண்முகசிவா

ஜன நாயகத்தை கேலிக்கூத்தாக்கும் டிவி சேனல்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மேலும் சில பக்கங்கள் - கதை 2
கோ. புண்ணியவான்


மோதிக்கொள்ளும் காய்கள்
ராம்ப்ரசாத்

தயக்கம்
மதன். எஸ்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...10
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...5
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...7

ம. நவீன்

செல்வராஜ் ஜெகதீசன்

லதா

இரா. சரவண தீர்த்தா

ரேணுகா


பதிவு:


சிலாங்கூர் மாநில இளம் படைப்பாளர் விருது 2010
     
     
 

டம்ளர் ஒன்று வெயிலில் வைக்கப்படுகிறது. அதனுள்ளே சிறிது அரிசியைப் போடுகிறார் பிரபல அருள்வாக்கு சித்தர்,ஜாதகத்தாலேயே மனித வாழ்வையே நிர்ணயித்துச் சொல்லுபவர், பில்லியா, சூனியமா, வியாபாரத்தில் நஷ்டமா, பொண்டாட்டி பிரச்சினையா, பிள்ளைகள் படிக்க மாட்டேன் என்கிறானா எல்லாவற்றுக்கும் இவர் தீர்வு சொல்வாராம்.

ஏதோ தண்ணீர் போன்ற ஒன்றை டம்ளருக்குள் ஊற்றுகிறார். எதிரே உட்கார்ந்து மந்திரங்களை முணுமுணுக்கிறார். சிறிது நேரத்தில் டம்ளரிலிருந்து நுரை நுரையாய்ப் பொங்குகிறது. மந்திரத்தில் அரிசியை வேக வைக்கிறாராம் அந்த ஆசாமி. பரவசத்தில் சுற்றி இருந்த மக்கள் அனைவரும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர். அதிசயம், ஆச்சரியம், அமானுஷ்யம் என்றெல்லாம் பில்டப்புகளைக் கொடுத்தார்கள் டிவியில்.

மகேந்திர ஜாலம் என்ற புத்தகத்தில் சுண்ணாம்புத் தண்ணீரில் ஊற வைத்த அரிசியின் மீது கொஞ்சம் எலுமிச்சை சாறை ஊற்றினால் அரிசி வெந்து விடும் என்று எழுதி இருந்தது. நானும் சும்மாயிராமல் செய்து பார்த்தேன். மிகச் சரியாக வந்தது. அந்த அரிசி சாதத்தைச் சாப்பிட்டால் குடல் வெந்து சாக வேண்டியதுதான். இது ஒரு தந்திர வித்தைக்காக செய்யப்படுவது. அதை மேற்படி ஆசாமி தன் மந்திரத்தால் அரிசி வெந்து சோறாகி வருகிறது என்பது போல சீன் போட்டுக் காட்டியிருந்தார்.

உடனடியாக எனது நண்பர் மூலம் அந்த நிகழ்ச்சியை எடுத்த இயக்குனரைப் போனில் பிடித்தேன். அவரிடம் அய்யா இது ஒரு தந்திர வித்தை. இதை எப்படி நீங்கள் அமானுஷ்யம் அது இது என்றெல்லாம் சொல்கின்றீர்கள் என்று கேட்டேன். மேலும் அரிசி எப்படி வெந்தது போல இருக்கிறது என்பதையும் விலாவரியாக அவரிடத்தில் விளக்கினேன். எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டார். சம்பந்தப்பட்ட ஆசாமியிடம் பேசி மறுப்பு ஒன்றை வெளியிடவும் என்றும் சொன்னேன். செய்து விடுகிறேன் என்று உறுதி கொடுத்தார் நிகழ்ச்சியின் இயக்குனர். அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா நண்பர்களே. அந்த ஏமாற்று ஆசாமியின் விளம்பர நிகழ்ச்சி தனியாக அந்த சம்பந்தப்பட்ட டிவியில் வந்து கொண்டிருக்கிறது. அந்த இயக்குனரோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

தொலைக்காட்சிகள் மக்களுக்கு விரோதமான, ஏமாற்றுப் பேர்வழிகளின் விளம்பரங்களை எந்த வித உறுத்தலும் இல்லாமல், எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாக வெளியிடுகின்றன. அவ்வகை விளம்பரங்களால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பது தெரிந்தே தவறு செய்பவர்களுக்கு துணை போகின்றன. வியாபாரத்தை முன் வைத்து பொது மக்களை ஏமாற்றக்கூடிய ஏமாற்றுக்காரர்களின் செயல்களுக்கு ஆதரவாய், அவர்கள் குற்றத்துக்கு துணையாய் மீடியாக்கள் இன்று வரை இருந்து வருகின்றன. குற்றம் செய்பவர்களுக்கு துணை போகின்றவர்களும் குற்றவாளிகள் என்று சட்டம் சொல்கின்றது. ஆனால் மீடியாக்காரர்கள் தப்பித்து விடுகின்றார்கள்.

ஆரம்பத்தில் சன் டிவியில் வெளியான மரம் வளர்ப்பு பிசினஸ் விளம்பரத்தை நம்பி எத்தனை பேர் தனது கைக்காசை இழந்தனர். நாட்டு மூலிகை, இயற்கை மருத்துவம், நேமாலஜி, நியூமராலஜி என்றெல்லாம் விளம்பரம் மூலமாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். விளம்பரத்தாலேயே கொள்ளை அடித்த போலி மருத்துவர்களை தமிழக காவல்துறை சமீபத்தில் கைது செய்த சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. உலகின் வெளிச்சத்திற்கு வராதவாறு தொழில் செய்து கொண்டிருந்த ஏமாற்றுக்காரர்களை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களின் கோடிக்கணக்கான செல்வத்தைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களுக்கு துணை போகும் மீடியாக்களுக்கு அவசியம் கட்டுப்பாடு தேவை. சன் டிவியில் சாமியாரின் அந்தரங்க லீலையை எந்த வித வெட்டும் இன்றி ஒளிபரப்பி சிறார்களின் மனத்தைக் கெடுத்தார்கள். இன்றைக்கு பெரும்பான்மையான குடும்பத்தில் சன் டிவி செக்ஸ் டிவி என்ற பெயரை பெற்று இருக்கிறது.

பண்பாட்டையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் கட்டிக் காத்து உலகிற்கே முன்மாதிரியாக இருந்து வரும் இந்தியாவை டெலிவிஷன் சானல்கள் கேலி செய்து வருகின்றன. இது இந்தியாவின் இறையாண்மைக்கு உகந்தது அல்ல. இந்திய அரசு இனிமேலும் வாளாயிராமல் தொலைக்காட்சியில் வரும் விளம்பரத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அதனால் பிரச்சினை வருமென்றால் டிவிக் கம்பெனிகள் தான் பொறுப்பாக வேண்டுமென்ற சட்டத்தினை இயற்றினால் தான் ஏமாற்றுக்காரர்களுக்கு துணை போகும் மீடியாக்களின் அயோக்கியத்தனமான போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மீடியாவின் தன்னிச்சையான போக்கும், அரசியல் சார்பு செய்திகளும் இந்திய ஜனநாயகத்தை கேலி செய்கின்றன. ஜன நாயகத்தில் நம்பிக்கை உடைய, இந்தியாவின் வளர்ச்சியின் மீது உண்மையான அக்கறையும் ஆர்வமும் உள்ள தலைவர்கள் மீடியாக்களின் அக்கிரமங்களை கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768