மெலிசாய்
புல் நுனிமேல் வந்தமரும்
அணு பூச்சியாய்
எண்ணத்தில்
சத்திய ஓசை கொண்டாடிடும்
பயணமிழந்தவர்களின்
பாசைகளுக்குள்ளே
குமுறிடும் கோபத்தில்
ஒரு நித்திய நாயகனின்
மெல்லிய கையசைக்கும் நினைவு
மின்னலாய் மொழியும்போது
புன்னகையைக்கக்கிவிட்டு
மௌனிக்கும் உதடு
கோசமிடும் கோபுரக்குரலுக்குள்
நெஞ்சுருகும் ஈரத்துடன்
போர் முரசு கொட்டாமல்
அமைதி மறியல்
அனுமதி காக்கும்
சுயநலக்கோடரி
தூக்கிடும்போது
சூழ்நிலைக்கைதியின்
தொடரும் காலம்
நீண்டு கொண்டாபோகும்?
யதார்த்தப் பார்வையில்
கசிந்து வடியும்
ஏக்கத்தின்
யாக நோக்கினை
இன்னுமொரு
ஐம்பதாண்டுகளுக்குத்
தூக்கிச் செல்லும் பளு
கல்லுக்குள் நீராய்
ஊற்றெடுக்கும்