மீள் துயில் காதலீற்
றோய்ந்த
நல் அனந்த சயனத்திற்
மீளாமற் மிதக்கின்றதோர்
ஒற்றைத் தும்பி
பூவொன்றின் இதற் மீது
வெண்பட்டுப் பனித்துளியை
சிறகிற்கும் மேற் சிரசிற்
மணி முடியாய் தரித்தபடி
உலகை அளந்தபடி
உலாவந்த
உலகளந்த பெருமானோ
தன் உலகும் அதன் உள்மூச்சும்
ஏழுலகும் கோடானு கோடி
ஜீவ ராசிகளும் மற்ற பிறவும்
குண்டுமணி
பனித்துளியொன்றிற்
பிம்பமாய் அடங்கியிருக்கக்
கண்டே
பீதியாற் உறைந்தான் கடவுள்
எதுவும் எதற்குள்ளும்
அடங்கிவிட முடியாதவை அல்ல
நிற்பவையெவையும்
நடந்துவிடாதது மல்ல
எனும் நிஜத் தத்துவம்
விளங்க
அவனுக்கு வெகுநேரம் பிடித்தது