|
||||||||
கவிதை - ஓவியர் சந்துரு - |
||||||||
|
||||||||
சுகந்த நறுமணம் சுகந்த நறுமணம் வீசிக்கொண்டிருந்த அடர்ந்த மரம் ஒன்று சரிந்து விழுந்தது அதிர்ந்து இலைகள் பட்டாம்பூச்சிகளாகவும் மினுக்கெட்டான் பூச்சிகளாகவும் நினைவுகளாகவும் கண்ணீராகவும் ஏமாற்றங்களாகவும் முறிந்த காதலாகவும் குற்ற உணர்வுகளாகவும் எந்த உணர்வுமற்ற உணர்வுகளாகவும் தங்களை உருமாற்றிக்கொண்டு அந்த மரத்தை கடந்தும் இளைப்பாறியும் சென்றவர்களின் இதயங்களில் போய் அமர்ந்து கொண்டன. அத்தனை இதயங்களிலும் இப்போது சுகந்த நறுமணம் வீசிக்கொண்டிருக்கிறது... (அண்மையில் இயற்கை எய்திய எழுத்தாளர் பா. அ. சிவம் அவர்களுக்கான அஞ்சலி கவிதை) |
||||||||
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top |
||||||||
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature |