|
|
|
|
|
|
கவிதை
- சம்பு - |
|
|
|
|
|
உங்களுக்கு ஒரு
வார்த்தை
எனினும்
தாழ்பணிந்து
அதற்கொரு அலங்காரம் செய்தீர்கள்
சிறிதும் அசூயையின்றி
சிரமேற் தாங்கிப்பிடித்தும்
வாசனாதி
பரிமளத் தைலங்களும் பூசப்பட்டன
அது கொஞ்சம் மணக்கவும் செய்தது
அல்லாமல்
அந்த இளங்காலைப் பொழுதிலேயே
சூரியனை நோக்கி டாலடித்து
மினுங்குமதை விழுந்து வணங்கவும் செய்தீர்கள்
பிறகோ
பரிவாரம் சூழ்ந்து ஜெயபேரிகை கொட்டி
அரியாசனத்தில் அமர்ந்த
பின்
ஒருபோதும் அசைக்கவே இயலாமல்
போனதை எண்ணி
வாயிலும் வயிற்றிலும்
இப்போது அடித்துக்கொள்கிறீர்கள்
அதே பணிவுடன்
உங்களுக்கொரு வார்த்தை நண்பர்களே
உங்களால்
ரத்தினக்கற்களும் பதிக்கப்பட்ட
அந்தக் குண்டியை பெயர்த்தெடுப்பதொன்றும்
எனக்கு விஷயமேயில்லை
அதன் பின் நானோ
அதை ஒரே செதுக்கில்
ரத்தம் சொட்ட
சீவியெறிவதைத்தான் பெரிதும் விரும்புகிறேன்
சம்மதமெனில்
சபையிலிருந்து
கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்......
|
|
|
|
|
|
|
|
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
Back to Top |
|
|
|
|
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved.
2012. | Designed by CVA | Best View in : Mozilla Firefox | Best
resolution : 1024 X 768
|