இதழ் 14
பிப்ரவரி 2010
  கவிதை
சு. யுவராஜன்
 
     
  நேர்காணல்: பகுதி 2

"இது வரைக்கும் நான் விலை போகவில்லை"

பி. உதயகுமார்

பத்தி:

நான் பார்த்த இளையராஜா

அகிலன்

காற்றின் மொழி
வீ. அ. மணிமொழி


2009-ன் ஆண்டின் சில நினைவுக்குறிப்புகள்… கொஞ்சம் தாமதமாக
சு. யுவராஜன்

தும்பி
ம. நவீன்

கட்டுரை:

தாமரை
ஜெயந்தி சங்கர்

சிறுகதை:

குரல்
சீ. முத்துசாமி


ஊமைகளின் உலகம்..!
குரு அரவிந்தன்

மறுபிறவி
கிரகம்

துளசிப்பாட்டி
க.ராஜம்ரஞ்சனி

தொடர்:


எனது நங்கூரங்கள் ...7
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...2
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...4


சு. யுவராஜன்


தர்மினி

தினேசுவரி

பா.அ.சிவம்

இளைய அப்துல்லாஹ்

மன்னார் அமுதன்

ரேணுகா

சிறப்புப்பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை

புத்தகப்பார்வை:


'சிதைவு'களோடு 'தேம்பி அழாதே பாப்பா'
எம். ரிஷான் ஷெரீப்
     
     
 

ஒளிவிதை

குளிர் வெருட்டும்
மின்னல் வெட்டும்
அடைமழை இரவில்
போர்வையின் வெம்மையில்
கண்கள் துயில் கொள்ளத்
தொடங்கின
தோள்தட்டும் நீலவானம்
மெல்லிய பனிமூடிய
பச்சைவனம் கனவில்
விரிந்தது
பசுமையும் ஈரமும்
பாவிய மண்ணில்
பூச்சிகளின் இசையைக்
கேட்டப்படியே மரங்கள்னூடே
நடக்கத் தொடங்கினேன்.
ஒளிப்புகாத வனத்தில்
மின்னியப்படி ஒளிர்ந்தது
ஒளிவிதை

உண்ணாமல் அருந்தாமல்
நெடும்பயணத்தில்
மடு மலை ஏரிகளைத்
தாண்டி ஒளிநிறைந்த
பிரதேசத்தில் விதையை
நட்டேன்
மிருகங்கள் அழித்திடாதிருக்க
சுற்றி முள்வேலி
எழுப்பினேன்
நீரூற்றி களைப்பிடுங்கி
அல்லும் பகலும்
விதை
மண்ணை
வெல்லும் நாளுக்காக
காத்திருந்தேன்

அசதியில் கண்ணில்
மிதந்தது கனவு
விண்ணை முட்டியும்
மண்ணைத் தழுவியும்
வளர்ந்தது ஒளிமரம்
மரத்தின் ஆதியறியும்
பயணத்தில்
பட்டாம்பூச்சிகள் மான்களை
வேட்டையாடின
புலிகள் ஒளிப்பழங்களைப்
புசித்துக் கொண்டிருந்தன
சிங்கங்களின் சிரிப்பில்
குருதிச் சொட்டிக்
கொண்டிருந்தது
வெள்ளையுடையணிந்த மனிதர்கள்
கந்தக நெடியுடன்
அலைந்துக் கொண்டிருந்தனர்

பலயுகப் பயணத்தில்
களைத்திருந்தவனைப் பார்த்து
கைகொட்டி சிரித்தது
கிழே விழுந்துக் கொண்டிருந்த
தாழம்பூ
கோபத்தோடு தாழம்பூமேல்
பாய்ந்த கணந்தான்
நிகழ்ந்தது அப்பெருவெடிப்பு
பெருவெடிப்பின் கந்தகஒளியில்
ஒருகணம் மறைந்த
ஒளிமரம் மறுகணம்
காலஇருளில் மூழ்கத்
தொடங்கியது
உருகிய உயிரின்
கடைசி நொடியில்
முகிழ்த்த கனவில்
பத்திரமாக இருந்தது
ஒளிவிதை!

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768