இதழ் 22
அக்டோபர் 2010
  நடந்து வந்த பாதையில் ...10
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்
 
 
 
  பதிவு:

வல்லினம் கலை இலக்கிய விழா 2 (புகைப்படத்தொகுப்பு)


பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன் மலேசிய வருகை - ஒரு ப‌திவு
கே. பாலமுருகன்

பத்தி:

இசை நிறுவனம் தொடங்குவது...

அகிலன்

பின் ஜெயமோகன்: சில நினைவுகள்
சு. யுவராஜன்

கட்டுரை:

அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா
புன்னியாமீன்

நிறைவளிக்கிறதா தமிழாசிரியர்களின் இலக்கியப் பங்களிப்பு?
ஏ. தேவராஜன்

சிறுகதை:

"பெல்ஜியம்" கண்ணாடி
சின்னப்பயல்


ஒரு பைத்தியமும் ஒரு கொலையும்
ராம்ப்ரசாத்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...4
எம். ஜி. சுரேஷ்

எனது நங்கூரங்கள் ...14
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...10
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...12

லதா

ஏ.தேவராஜன்

ரெ. பாண்டியன்

ராக்கியார்

ந. மயூரரூபன்

சேகர் கவிதன்

திரைவிமர்சனம்:


நான் மகான் அல்ல - மனநோயின் வேர்களும் குற்றவாளிகளின் நகரமும்
கே. பாலமுருகன்

புத்தக அறிமுகம்:

அன்புள்ள அய்யனார் - சுந்தர ராமசாமியின் 200 கடிதங்கள்

அறிவிப்பு:


தும்பி அறிவியல் இதழ் - அறிமுக விழா
     
     
 

"லாலாக்கடை அல்வா - மல்லிப்பூ"

தோழிகள் இப்படிக் கலகலத்துக் கொண்டிருக்க, எதிரே Dr. ராஜமாணிக்கமும் கிள்ளிவளவனும் வர, கீதா எழுந்து நிற்க, அனைவருமே கைகூப்பினோம். [ராஜமாணிக்கம் கீதாஞ்சலியுடன் ஒரே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்]. இவள் முனைவர் ராஜமாணிக்கத்தை மனம் திறந்து பாராட்டினாள். ”ஸார், இன்றைய நிகழ்விலேயே மிகச்சிறப்பாகப் பேசியவர் நிங்ஙள் தான். வெகு கனமான ஆழ்ந்த அவதானிப்பு சார்” என்று முடிக்கவில்லை. உடனே கிள்ளிவளவன் கேட்கிறார், “நிங்ஙள் என்ன கேரளாவா?” பளிச்சென்று இவள் பதில் கூறினாள்,” இல்லை தமிழ்ப்பெண், தமிழ்நாட்டில் தமிழர்கள் நிரம்பிய நிங்ஙளின் சபையில், தமிழ்க்கட்டுரையாளராக வந்துள்ள ஞானும் தமிழ்ப்பெண் தான்!” மலர்ந்து சிரித்தார் ராஜமாணிக்கம். ”இந்த பெருமைக்காகவே நிங்ஙளோடு பேசவேண்டுமே அம்மா,” என்று சடாரென்று எதிரில் அமர்ந்துகொண்டார். கிள்ளிவளவனிடம் எல்லோருக்கும் காப்பிக்கு சொல்ல, இவள் மட்டும் மறுத்துவிட்டாள். பூஜை முடிந்துவிட்டது... இனி ஜலபானம் கூட நாளைக் காலைதான். அதுகூட காப்பி அல்ல. சாய... சாய... மட்டுமே இவளது சாய்ஸ்... பிறகு ஏன் சிரமம்?

ஞான் - ஸார்! தமிழில் நிறைய சம்சயங்கள் உண்டு. தமிழறிஞர் நிங்ஙளிடம் கேட்கலாமா?

முனைவர் - தாராளமாகக் கேளுங்கள் அம்மா. எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்.

ஞான் - மலையாள இலக்கண நூலான ”லீலா திலகம் ”கூறும் இலக்கணவரம்பும், தமிழில் காணப்படும் இலக்கணக்கூறுகளும், முற்றும் முரண்பாடாகவே உள்ளது. தெலுங்கு ஆந்திர பாஷா பூஷணம்,” கன்னட இலக்கண நூலான சப்தமணி தர்ப்பணம், என எல்லா மொழிபெயர்ப்புகளுமே வாசித்திருக்கிறேன். எல்லாமே அழகான விளக்கங்கள்தானே? பின் இலக்கணம் மட்டும் ஏனிப்படி? திராவிடவகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்குமொழிகளிலும், தமிழ் மட்டுமே ஆர்யத்தின் உதவியின்றி தனித்தியங்குகிறதாம்? இது எப்படி என்று விளக்க முடியுமா சார்? மொழியை பாதுகாக்கிறேன் என்று ஓர் இரும்புச்சட்டையப்போல் இறுக்கி நெருக்கலாமா சார்?

முனைவர் - தமிழோடு ஆர்யம் கலக்கத்தொடங்கிய காலத்திலேயே, இலக்கண ஆசிரியர்கள் தமிழுக்கு வரம்பு கட்டிவிட்டார்கள் அம்மா. பிறமொழிச்சொற்கள் தமிழில் வழங்கலாகாது, என்று தமிழ் இலக்கணம் தடை செய்யவில்லை. ஏனைய மொழிகளில் இல்லாத இலக்கணமொன்று தமிழில் உண்டு. அதுதான் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணம். பிறமொழிச்சொற்கள், தமிழோடு கலந்து கொள்ளவேண்டுமாயின் அவை, தமிழ் ஓசையும், உருவமும் உடையனவாய் வரல் வேண்டுமென்பதை தமிழ் உலகம் ஏற்றுக்கொண்டதுதான் உண்மை.

ஞான் - வடமொழிக்கு வியாகரணம் எழுதிய பாணிணியும், தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியரும் ஒருவருக்கொருவர் நிகர் என்றுதானே அருட்சோதிமுனைவர் கூறுகிறார். திராவிடமொழி நூலின் தந்தையாகப்போற்றப்படும், "A comparative grammer of the dravidian family of languages" எழுதிய கோல்ட்வெல்லின், ஒப்பிலக்கணத்தில் கூட ஆர்யத்தையும் தமிழையும் ஒப்பீட்டு நோக்குங்கால் உள்ள ஒற்றுமையை, அருமையாக விளக்கியுள்ளாரே? அப்படியாயின் அதெல்லாம் தப்பா சார்?

முனைவர் தவறில்லை அம்மா, எந்த மொழியுமே மட்டமில்லை! எல்லா மொழிகட்குமே அதனதன் அழகுண்டு! ஆனால் தமிழில் நிரம்ப சிறப்பெழுத்துக்கள் உண்டு. அதைத்தான் ஒப்பிலக்கணத்தில் அறிஞர்கள் சிறப்பாகக் கூறுகிறார்கள். இது எல்லாவற்றையும் விட தமிழ் இலக்கணம் மற்ற திராவிடமொழிகளைப்போல், இடைக்காலத்தில் எழுதப்பட்டது அல்ல.

ஞான் - ஏற்றுக்கொள்கிறேன் சார், ஆனால் மிக முக்கிய சம்சயம் என்னவென்றால், ஆய்வாளர்களின் கூற்றிலிருந்து, கல்வெட்டுக்களில் கிட்டிய தகவல் முற்றிலும் மாறுபட்டுள்ளதே.
உதாரணத்துக்கு, தொல்காப்பியம் 3000 ஆண்டுகட்கு முந்தையது என்கின்றனர் ஆய்வாளர்கள். கல்வெட்டுக்களும் செப்பேடுகளும், 2000 ஆண்டுகட்கு முந்தையது தொல்காப்பியம் என்கிறது. ஆனால், தொல்காப்பியத்துக்கு முற்பட்ட இலக்கணம் ஒன்று அகத்திய முனிவரால், இயற்றப்பட்டிருந்ததென்று ”கர்ண பரம்பரை’ செப்பேடு கூறுகிறதே. தமிழிலக்கண ஆசிரியரான பவணந்திமுனிவர் எனும் சான்றோரும் இதை ஆமோதிக்கிறாரே? எது உண்மை என்று விளக்கமுடியுமா சார்?

முனைவர் ராஜ மாணிக்கம் விளக்கினார்.

சங்க இலக்கியம், மட்டுமல்ல, தமிழில் மிக ஆழமாக படித்திருக்கிறீர்கள், கமலா.

அருமையாக விளக்கினார், இவளின் எந்தக்கருத்தையுமே ஆட்சேபிக்கவில்லை.

மிக்க அன்போடு தனக்குத் தெரிந்ததை மட்டுமே பேசினார். தெரியாததை, தெரியாது அம்மா! என்றும் கூறினார். [இன்னும் பெரிய புராணம், திருமுறைச்சான்றோர்கள், பெளத்தகாப்பியம், வால்மீகி ராமாயணம் பற்றியெல்லாம் கேட்க நினைத்தும் நேரமாகிவிட்டதால் கேட்க முடியவில்லை] சான்றோர் ஒருவரோடு சம்பாஷித்த நிறைவு கிட்டியது.

அவர்கள் புறப்பட்ட கையோடு இவளும் எழ தோழிகள் விடவில்லை. உடல் களைப்பில் கெஞ்சியது. நாளைக்காலை முதல் நிகழ்விலேயே இவளது உரை. கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்கவில்லை. ஆனாலும் தோழிகளின் அன்புதான் வென்றது. ரொம்ப நாட்களாகவே இவளுக்கிருந்த ஒரு சம்சயம், தோழிகளிடம் கேட்டாள். தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பலரின் கதைகளிலும் படித்திருக்கிறாள்.

”லாலாக்கடை அல்வா, மல்லிப்பூ கொடுத்தால் போதும். மனைவிமார்கள் சமரசமாகிவிடுவார்கள் என்றெழுதுகிறார்களே?"

அது என்ன லாலாக்கடை அல்வா பற்றிய ஸ்பெஷல்? பிறகுமல்லிப்பூவில் மறைந்து கிடக்கும் ரஹஸ்யம் என்ன?

ஏன் மற்ற பூக்கள் கொடுத்தால் காதல் வராதா? என்றிவள் கேட்டதுதான் தாமதம்.

சொல்லிவைத்தாற்போல் அப்படியே வெட்கத்தில் குப்பென்று பெண்கள் முகம் நாண, இவளுக்குப்புரியவே இல்லை.

அது என்ன சிதம்பர ரஹஸ்யம் என்றிவளுக்கு உற்சாகம் பிறந்துவிட்டது.

”பொன்னுத்தாயிதான் நம்ம குழுவிலேயே சிறிசு, பொன்னியிடமே கேள் கமலா,” என்று மங்கையர்க்கரசி எடுத்துக்கொடுக்க, பொன்னியின் வெட்கம் காணவேண்டுமே.

அதொண்ணுமில்லை, கமலாக்கா, .................... என்று விளக்க விளக்க, இவளுக்கே வெட்கமாகப் போய்விட்டது.

ஒஹோ, இதில் இவ்வளவு விஷயம் உண்டா?

அன்னபூரணி விடவில்லை. எங்களையெல்லாம் கேட்டாயே, உன் சேதி என்ன? என்றிட,

சிங்கப்பூரில் நாங்கள் இப்படி மல்லிப்பூவை தலையில் வைத்துக்கொண்டு நடப்பதில்லை. இரண்டாவது, இந்த லாலாகடை சிங்கப்பூரில் இல்லை, அதனால் எங்கள் .......வேறு?!!! என்று, எதையோ சொல்லி சமாளித்து, அறைக்குள் திரும்பி, கட்டிலில் விழுந்த அடுத்தகணமே, அலுப்பில் தூங்கிப்போனாள்.

பொலபொலவென்று பொழுது புலரும் முன்னே, குளித்து, தொழுது, நாமம் சொல்லி, உடுத்தி, சகலமும் முடித்துக்கொண்டு, முதல் வேளையாக கணவருக்கு போன் செய்ததும், சிரிப்பை அடக்கிக்கொண்டு, இவள் கேட்ட முதல் கேள்வி, மணமாகி இத்தனை வருஷமாச்சே, ஒருநாளாவது லாலாக்கடை அல்வா, மல்லிப்பூ வாங்கி தந்திருக்கிறீர்களா?

வாட்? என்று கணவர் புரியாமல்அதிர, இவள் விளக்க, கணவர் வாயாரத் திட்ட, இவள் வாய் நிறைய சிரித்தாள்.

தமிழ் நாட்டில் கண்டதும் கேட்டதையும் அப்படியே அங்கேயே விட்டுவிட்டு வா. சிங்கப்பூருக்கு வந்த பிறகும் இந்த வசனம் பேசினால் அறை வாங்குவாய், என்றிட்ட கணவரின் கிண்ணாரத்தில் மனசெல்லாம் மகிழ்வில் மிதக்க, மாநாட்டு அரங்கினுள் நுழைய, அன்னபூரணி அப்படியே வந்து கட்டிக்கொண்டார். இதென்ன நகைகள் என்று கேட்க, மங்கையர்க்கரசி, இவ்வளவு நகைகளா, என்றிட, அப்பொழுதுதான் தன்னை நோக்கினாள்.

2 கைகளிலும் சொர்ணவளையல்கள், 4 விரல்களிலும் முத்து, பவழம், வைரம் என மோதிரங்கள், கழுத்தில் மின்னுதாலியுடன், பச்சைக்கல் பாலக்கா மாலை, கச்சத்திரி நெக்லஸ், பட்டுக்கம்மல் என ரொம்ப சிம்பளாகத்தானே வந்திருக்கிறாள்.

இதுதான் சிம்பளா? இந்த சிம்பள் பெண்ணோடே எங்களுக்கும் ஒரு போட்டொ எடுக்கணுமே, என்று தோழிகள் நச்சரிக்க, கிள்ளிவளவன் இவர்களை, இவளது கேமராவில் போட்டோ எடுத்தார். ஆனால் எந்த மகிழ்வும் இவளை அசைக்கவில்லை. மனசெல்லாம் நிகழ்ச்சியின் பாதிப்பிலேயே இருந்தது. இவளுக்கு படபடப்பாக இருந்தது. மலையாள அவையில் மைக்கைப்பிடித்துக்கொண்டு கம்பீரமாகப் பேசும் ஆற்றல் அவளுக்குண்டு. ஆனால், தமிழில், எழுதி வைத்துக் கொண்டு தான் பேசவேண்டும். டாக்டர், ராஜமாணிக்கம் வேறு, உங்களின் உரையைக்கேட்க காத்திருக்கிறோம் அம்மா! என்று முதல் நாள் காட்டிய ஆவல், தோழிகளின் எதிர்பார்ப்பு வேறு, என எல்லாமாய் இவள் வியர்த்துப்போய் அமர்ந்திருக்க, புஷ்பவனம் குப்புசாமியின் அற்புதமான இசைக்கச்சேரியில் மங்களகரமாய் தொடங்கியது நிகழ்ச்சி.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768