முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 44
ஆகஸ்ட் 2012

  வழித்துணை... 15
ப. மணிஜெகதீசன்
 
 
       

கட்டுரை:

தமிழ்நேசன், மக்கள் ஓசை மற்றும் ஹஜி தஸ்லிம் கவனத்திற்கு...
கே. பாலமுருகன் - ம. நவீன்

துணைக்கல்வி அமைச்சர் பதவி
ந. பச்சைபாலன்

இந்தோனேசியக் கவிஞர் சைறில் அன்வர் ஓர் அறிமுகம்
மூலம் : ஜேம்ஸ் எஸ் ஹோம்ஸ் | தமிழில் : எம்.ஏ.நுஃமான்

தமிழில் சைறில் அன்வர் கவிதைகள்
எம்.ஏ.நுஃமான்



சிறுகதை:

சூன்யப்பெருவெளிக்கதைகள்
எம்.ஐ. ஷாஜஹான்

அவலம்
அண்டனூர் சுரா



பதிவு:

வல்லினம் வகுப்புகள் 1 - இலக்கியமும் மொழியியலும்

'ஐ.பி.ஏ' ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் பதிவுகள்


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 3
அ. மார்க்ஸ்


கேள்வி பதில்:

'லிவிங் ஸ்மைல்' வித்யா பதில்கள்
'லிவிங் ஸ்மைல்' வித்யா


புத்தகப்பார்வை:

ம. நவீனின் 'சர்வம் ப்ரம்மாஸ்மி' கவிதைகள் இன்றைய உலகயலின் அக புறத் தாக்கத்தின் ஆதாரங்கள்
மேமன்கவி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி

வழித்துணை
ப. மணிஜெகதீசன்



கவிதை:

எம். ராஜா

செ. சுஜாதா

ஆறுமுகம் முருகேசன்

ந. பெரியசாமி

பூங்குழலி வீரன்



எதிர்வினை



அறிவிப்பு:

லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியங்கள் விற்பனைக்கு...

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்: மலேசிய பெண் எழுத்தாளர்களின் விபரங்கள் தேவை

ஒரு காற்பந்து கவிதை

"நீங்க வல்லினத்துல எழுதரதில்லையா, மாமா?" என்று தயா கேட்டபோதுதான் நாளு பேரு என் எழுத்தையும் படிக்கிறார்கள் என்று மனதில் உறைத்தது. அதில் என் அக்கா நாளாவது வருகை என நம்புகிறேன்.

தமிழகத்திலிருந்து சுவாமி ப்ரம்மானந்தா அவர்கள் நாங்கள் பட்டியலிட்டுக் கொடுத்த எல்லாப் புத்தகங்களையும் (28 புத்தகங்கள்) கையோடு கொண்டு வந்து சேர்த்திருந்தார். படிக்க ஆரம்பித்துவிட்டால் எழுதுவது பிரச்சனைதான். (எழுதாமல் இருப்பது எப்போதுமே பிரச்சனையில்லை!)

பாரதி மணியின் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' வைக்க மனமில்லாமல் முடித்தேன். எவ்வளவு அனுபவங்கள்; மனதில் உள்ளதை அப்படியே எழுத்தில் கொண்டுவர முடிவதும், அது தன் சுயத்தால் வாசகர்களைக் கட்டி இழுத்துக்கொள்வதும், அருமையான படைப்பு. பெரும்பாலும் இத்தகைய "சொந்த சமாச்சாரங்கள்" நல்ல பகிர்வுகளாக அமைந்துவிடும். அதில், பல இடங்களில் நமக்கான நிமிடங்கள் இருந்துவிடுவது வாசிப்பு சுவாரசியத்தையும் தாண்டி, ஒரு நொஸ்தால்கிக் / பிரிவேக்கம் சூழும் தருணங்களாகவும் அமைந்துவிடும்.

இப்புத்தகம் அப்படியான ஒரு நிகழ்வை அசைப்போட வாய்ப்பளித்தது.

25-11-2011-ல் எங்கள் பெலாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க ஏற்பாட்டில் 'ஞாபகம் வருதே' எனும் சந்திப்பு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தோம். கொஞ்சம் வித்தியாசமான நிகழ்ச்சி இது. முன்னாள் தோட்ட காற்பந்து வீரர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி. எங்கள் தோட்டத்தின் ஆல் - இன் - ஆல் விளையாட்டு வீரர், எவ்வளவுதான் தொந்தரவுகளும், பரிகசிப்பும் வந்தாலும் பொதுத் தொண்டை தனக்கிடப்பட்ட ஒரு கருமமாகக் கருதி பணியாற்றும் சகோதரர் தெ. மனோகரன் அவர்களின் முனைப்பில்தான் இந்நிகழ்ச்சி சாத்தியமானது.

எங்கெங்கோ தொலைதூரங்களில் பால்ய, பழகிய ஏக்கங்களை சேமித்தவாறு வாழ்ந்து வரும் தோட்ட மக்களை ஒன்று கூட்டவதற்கான முயற்சியின் முதல் படியாக இந்நிகழ்ச்சி. (இப்போதெல்லாம் முன்னாள் மாணவர் சங்க அமைப்புக்கான அறிவிப்புகள், தோட்ட மக்கள் ஒன்று கூடல் நிகழ்வுகள் பற்றிய செய்திகளைப் படிக்கும் போது மனதில் ஒரு இனம் புரியாத ஏக்கம் சட்டென்று கவ்விக்கொள்வது நிஜம்)

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர், எங்கள் எல்லோரின் அன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய முன்னாள் பள்ளி தலைமையாசிரியர் (பெலாம் தமிழ்ப் பள்ளியின் முதல் மாணவர் இவர் 1950-களில் என்பது கட்டாயம் இங்கு குறிப்பிடத்தக்கது. எனக்கு இவர் அறிவியல் போதித்த ஆசிரியர். என்னுடைய 11 அல்லது 12 வயதில் 500 பக்க ராமாயணமும், மகாபாரதமும் படித்தது இவர் கொடுத்த ஊக்கத்தில்தான். புத்தகமும் அவர் கொடுத்ததுதான். (இப்போ நான் என் மாணவர்களுக்கு அப்படி ஒரு காரியம் செய்தால் என்ன ஆகும்? சொந்த செலவில் சூன்யம் வச்சிகிட்ட மாதிரிதான்!)

கூலிம், கேலாங் லாமா-வில் நிகழ்ச்சி. சுமார் 50 பேர் வந்திருந்தனர். 1960-களிலிருந்து 2011-வரையிலான, வெவ்வேறு காலகட்டங்களச் சேர்ந்தவர்கள். சட்டென ஒரு திருவிழாவுக்கான, ஏறத்தால, குதூகலமும், கூச்சலும் கும்மாளமுமான ஒரு 'கார்னிவல்' சூழல் களைகட்டிவிட்டது.

கோலாலம்பூரிலிருந்து திரு. தர்மலிங்கம் (முன்னாள் மலேசிய தமிழாசிரியர் சங்கத் தலைவர்) வந்திருந்தார். குடு குடுவென பந்தை எடுத்துக்கொண்டு அவர் ஓடுவதுதான் மனதில் நிற்கிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு நாகேஸ் அண்ணனைப் பார்த்தேன். 'மணி, எப்பிடிடா இருக்கே?" என்று கேட்டபோது......அவர்களெல்லாம் விளையாடிய நாட்களில் அவர்களுக்கு பந்து பொறுக்கி வீசியதும், எப்படா விளையாட ஒரு சான்ஸ் கிடைக்கும் என்று ஏங்கிக் காத்திருந்ததும் சுகமாக நிழலாடுகிறது.

போஜா என்ற செங்கோடன் ஒரு கையால் தன் 'தொள தொள' சிலுவாரைப் பிடித்துக் கொண்டு, 5 அல்லது 6 பேரை ஏமாற்றி பந்தை லாவகமாக எடுத்துச் செல்வது.... லியோனல் மெஸ்ஸி தெரியுமா... அந்த ஸ்டைல்தான்!

ஏறத்தாழ 2 மணி நேரம் நீடித்த நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக, வீரர்கள் தங்கள் நினைவுகளை மீட்டெடுக்க வழங்கிய கலந்துரையாடல். கொஞ்சம் கொஞ்சமாய் மனங்கள் கரைந்து, துளிர்த்த கண்ணீரோடு தொலைத்த நாட்களை தொகுக்க......

இராமகிருஷ்ணன் சார் முடித்து வைத்து முத்தாய்ப்பாய் ஒரு கவிதை(யாய்) வாசித்தார்;

தலைப்பு: பெலாம் தோட்ட முன்னாள் காற்பந்தாட்ட நினைவலைகள்

ஆட்டமென்ன ஆட்டமென்ன?
கலகலக்கும் காற்பந்து ஆட்டமென்ன?

காலம் கடந்தாலும் நாலும் நடந்தாலும்
காற்பந்து நினைவு கண்களில்
நீர் பெருகுதம்மா!

காலையில் எழுந்து சுடும் வெயிலில் உழைத்து
கண் கலங்கும் ஏச்சுக்கும் பேச்சிக்கும் நடுவே

கலகலக்கப் பேசி நண்பர்கள் கூடி
மாலை மயங்கும் மட்டும் ஆடும் ஆட்டம் அல்லவோ அது.

லயத்துக்கு தூரே பள்ளம் மேடு நிறைந்த
பசுந்திடல்தான் அங்கே!

பந்து வழங்கும் தோட்டத்து துரைமாரும் உண்டு
காற்றடித்து இறுக்கிக் கட்ட பலமான ஆள்வேண்டும்
இருவர் மூவர்!

அக்கம் பக்கம் தோட்டம் விட்டதில்லை
லோரி ஏறி கலகலக்கப் பேசிக் களித்து
ஆடிய ஆட்டமது!

துரைமாரின் ஆதரவும் உண்டு பூத்து விழும்
பூப்போல!
பூட்சுக்கு வழியில்லை! ஜேசிக்கும் பஞ்சமுண்டு!

கலியாணம் காட்சி என்றால் கண்டிப்பாய்
போட்டி உண்டு!
கப்பும் கிடைப்பதுண்டு விருந்து உண்டு
தப்பாது!

கூலிம் பட்டணத்தில் 'லீக்' ஆட்டமுண்டு
தோட்டங்கள் பங்கெடுத்து தூள் பறக்கும்
ஆட்டமது!

தோற்றால் துணிவு வரும்
வென்றால் வெள்ளி வரும்

(இப்படியாகப் போகும் அந்த 3 பக்கக் கவிதை, முடிகிறது இப்படியாக..)

காலத்தால் பிரிந்தாலும் வேறு வேறு திசையாகி
விதியை நினைத்தாலும்

தோட்ட பாசம் மறப்பதில்லை வாழ்ந்திருந்த
காலமதை என்றும் மறப்பதில்லை!
ஏக்கத்திற்குப் பஞ்சமில்லை!

நினைத்து மகிழ்வோம்!
நீதியோடு வாழ்வோம்!

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768