இதழ் 19 - ஜூலை 2010   எனது நங்கூரங்கள் ...12
இளைய அப்துல்லாஹ்
 
 
 
  நேர்காணல்:

சமூகத்தை நோக்கி நகர்த்தப்படும் எந்த முயற்சியும் வீண் போகாது!
பசுபதி சிதம்பரம்

பத்தி:

அட்ரா சக்க... அட்ரா சக்க...

சீ. முத்துசாமி

(இ)ராவணன் பார்த்த கதை
சு. யுவராஜன்

இயற்கை (4) - மழை
எம். ரிஷான் ஷெரீப்

மழைத்தூறல்கள்
க. ராஜம்ரஞ்சனி

கட்டுரை:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம்
நெடுவை தவத்திருமணி

தாண்டவராயன் கதையும் சில கதையாடல்களும்
எச். முஜீப் ரஹ்மான்

திரைவிமர்சனம்:

The Songs Of Sparrows
கிரகம்

சிறுகதை:

குடை
சின்ன‌ப்ப‌ய‌ல்


நடுக்கடலில்...
ராம்ப்ரசாத்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...1
எம். ஜி. சுரேஷ்

ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...7
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...12
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...7
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...9

ஏ. தேவராஜன்

லதா

ராம்ப்ரசாத்

செல்வராஜ் ஜெகதீசன்

எதிர்வினை:


படைப்புகள் விலைபோகுமோ இல்லையோ நிச்சயம் விமர்சனம் விலைபோகும்
வேலுநாச்சி

சுவைக்குதவாத வெறும் அக்கப்போர்
சுப்பிரமணியன் ரமேஷ்
 
முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்
ராக்கியார்
     
     
 

தமிழர் கலாச்சாரமும் மாறுகின்ற தமிழர்களும்

கடந்த வாரம் ஒரு டொக்டர் வீட்டுக்கு போயிருந்தேன். டொக்டர் இங்கு லண்டனுக்கு வந்து 40 வருடங்களாகப் போகிறது. அவரின் மனைவியும் டொக்டர். லண்டனில் அகதிகளுக்காக உதவி செய்வது அவர்களுக்கு கடிதம் கொடுத்து வழக்குக்கு உதவுவது என்று அவர் தமிழர்களிடத்தில் பிரபலம்.

பேசிக் கொண்டிருக்கும் பொழுது டொக்டரின் மனைவி பழைய காலத்துக்கு போய் விட்டா.

அந்தக் காலத்து யாழ்ப்பாணம் எவ்வளவு செழிப்பாக இருக்கும். திருவெம்பாவை காலங்கள் எவ்வளவு குதூகலமாக இருக்கும். முப்பது வருஷமாக தமிழர்களின் அவலவாழ்வை பற்றி கவலைப்பட்டா.

தற்போதைய யாழ்ப்பாணத்தின் நிலமையை பற்றி பழைய ஆட்களுக்கு உள்ள கவலையை அவவெளிப்படுத்தினா. யாழ்ப்பாணக் கலாச்சாரம் சீரழிய போகுது என்று சொல்லிக் கொண்டிருந்தா.

நான் அந்த வீட்டில் இருந்த கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலமும் அந்தக் கவலையே அவவின் பேச்சில் தெரிந்தது.

முந்தி எண்டால் பெரியவர்களுக்கு என்ன மரியாதை ஊரில். பெரியவர்கள் தான் ஊரில் ராசாக்கள் போல சிறியவர்கள் எல்லோரும் மதித்தார்கள்.

ஆனால் இப்ப அந்த முறை முற்றிலுமாறி போய் விட்டது. பெரியவர்களை இப்பொழுது யாரும் மதிப்பதில்லை என்று சொன்னா. அது மட்டுமில்லை முந்தின காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் என்றால் அந்த ஊர் கடவுள் போல பார்க்கப்பட்டார்கள். அதிபர் பெரிய கடவுள் போல பார்க்கப்பட்டார்கள். பணக்காரருக்கு யாழ்ப்பாண சமூகத்தில் மதிப்பு இருக்கவே இல்லை. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தான் முன்னுரிமை. பணக்காரர் எப்பொழுதும் பின்னுக்கு தான். ஆனால் இப்பொழுது எல்லாமே தலை கீழாக மாறி விட்டது. முதல் என்றால் ரோட்டில் இரண்டு பெடியன்கள் சண்டை பிடித்தால் ரோட்டில் போகிற ஒரு பெரியவர் உறுக்கி அதட்டி போட்டு ஓடு என்று வீட்டுக்கு அனுப்பி போட்டு போவார். இப்ப இளைஞர்களிடம் இருக்கும் கொலைக்கருவி துப்பாக்கி அல்லவா.

இன்னொரு விடயத்தையும் டொக்டர் சொன்னா ஆயிரம் வருடமாக சிங்களவர்களும் தமிழர்களும் இலங்கை நாட்டில் இருக்கிறம் எத்தனை கலப்புத் திருமணம் நடந்திருக்கிறது சொல்லுங்கள் என்றா.

உண்மைதான் சிங்கள தமிழ் கலப்பு திருமணம் என்பது மிக மிக அரிதான ஒரு விடயம்தான். அதுவும் எங்காவது ஒரு சிங்கள பொலிஸ்காரர் தமிழ் பொம்பிளை ஒன்றை காதலித்து கல்யாணம் செய்து இருப்பார் அவ்வளவுதான். அல்லது ஹொஸ்பிட்டலிலை வந்து வேலை செய்கிற சிங்கள நேர்ஸ்ஸை தமிழ் பெடியன்கள் யாராவது ஆஸ்பத்திரிக்கு போன நேரம் காதலித்து கல்யாணம் முடித்து இருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் இனி அப்படியான நிலமை மாறி யாழ்ப்பாணத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் கலக்க கூடிய ஒரு இக்கட்டான நிலமை வரப் போகிறது என்று டொக்டரின் மனைவி பதகளிப்பட்டா.

என்ன பிரச்சனை என்றால் சிங்கள மக்களின் வருகை யாழ்ப்பாணத்தில் அதிகரிக்க அதிகரிக்க சமூக பிரச்சனைகள் கூடப் போகிறது என்கிறார் அவர்.

சிங்களப் பெட்டைகளின் நடை உடை பாவனைகள் கொழும்பு போல ஒரு திறந்த கலாச்சாரமாகப் போகிறது என்கிறார் டொக்டர்.

இறுக்கமான உடல் தெரியும் படியான உடுப்புகளை பொதுவாக தமிழ் பெற்றோர்கள் விரும்புவதில்லை நூற்றுக்கு தொண்ணூறு வீதமான யாழ்ப்பாண பெண்பிள்ளைகள் சல்வார் கமீஸ்தான் உடுப்பார்கள். ஆனால் சிங்கள பெட்டைகளின் உடுப்பு பெடியன்களை உஸார் படுத்தி விடும் என்று டொக்டர் சொன்னா. சிங்கள பெண்பிள்ளைகளின் ஆண்பிள்ளைகளின் வருகையால் இனி கலப்பு திருமணம் கல்யாணம் என்று யோசிக்க வைத்து விடும் என்றும் சொல்கிறா டொக்டர்.

உலகம் நவீன மயமாகிக் கொண்டு போகிற போக்கின் வேகத்துக்கும் முப்பத்தைந்து வருடத்துக்கு முந்திய யாழ்ப்பாணத்தை நினைக்கலாமா என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இந்த கொடிய யுத்தம் இல்லாமல் இருந்திருந்தால் யாழ்ப்பாணம் எப்போதோ இந்த உலக மயமாக்கலுக்குள் விழுந்துதான் இருந்திருக்கும். கொழும்பைப் போல கண்டியைப் போல அதனை யாராலும் தடுத்திருக்க முடியாது.

யுத்த்தினால் போக்குவரத்து மற்றும் நவீன சாதனங்களின் தொடர்பு இல்லாமையினால் யாழ்ப்பாணம் இவ்வாறு ஒரு இறுக்கத்தில் இருந்து விட்டு இப்பொழுது தளர்வு நிலைக்கு போயிருக்கிறது.

அந்தத் தளர்வு நிலையை கலாச்சார பாதிப்பு என்று சொல்லலாமா என்று யாழ்ப்பாணம் மாநகர சபை எதிர்க்கட்சி தலைவர் றெமீடியஸிடம் கேட்டபொழுது சிங்களவர்களின் வருகையால் சமூக ரீதியான தாக்கம் இருக்கிறது என்று சொன்னார். அதுமட்டுமல்ல இரவில் மிக நீண்ட நேரம் கொழும்பு சிங்களவர்கள் மது அருந்தி விட்டு கலாட்டா பண்ணுகிறார்கள்.

இப்பொழுது கஞ்சா போதைப்பொருட்கள் சாராயம் எல்லாம் மிகவும் தாராளமாக கிடைப்பதனால் தமிழ் இளைஞர்கள் இதற்கு அடிமையாகக் கூடிய நிலமை வெகுவாக அதிகரத்து காணப்படுகிறது. அது மட்டுமல்ல போதை வஸ்த்துக்களின் அதிக பரம்பல் சமூக ரீதியில் வாழ்க்கை பிரச்சனைகள் விவகாரத்து குடும்ப ஒற்றுமை. இவற்றை எல்லாம் சீரழித்து விடும் என்பதனையும் சொன்னார்.

யாழ்ப்பாண கலாச்சாரத்தில் முக்கியமானது என்ன என்று கேட்டேன். “அமைதி” என்றார். அடுத்தது “கீழ்படிதல்” இந்த இரண்டும் குலைக்கப்படும் பொழுது சமூகம் பெரும் விளைவுகளை சந்திக்கும் என்றார். பெரியவர்களை மதிக்காமல் வாழும் ஒரு சமூகம் உருவாகி விட்டது என்று மக்கள் இப்பொழுதே யோசிக்க தொடங்கி விட்டனர்.

கூட்டுக் குடும்பம் என்ற வாழ்க்கை முறை இனிமேல் அரிதாகி விடும் போல தெரிகிறது என்றும் மக்கள் கவலைப்படுகின்றனர். உதாரணத்துக்கு ஒரு மரண வீடு என்றால் சுற்றம் சூழ எல்லோரும் போய் இரவு பகலாக இருந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வார்கள். இப்பொழுது எல்லாம் அது தேவையில்லை என்று நினைக்கிறார்களாம்.

அத்தோடு யுத்தம் புலம் பெயர வைத்த பத்து லட்சம் தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள் அவர்கள் மத்தியில் கலாச்சார பண்புகள் என்று என்னத்தை தேட முடியும்.

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் கலாச்சாரத்தை அழிக்கிறார்கள் வந்து குவிகிறார்கள் என்று கூச்சலிடுகிறவர்கள் இங்கு வெளிநாடுகளில் வெள்ளைக்காரர்களுடைய கலாச்சாரத்தை வலிந்து கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அதை என்னவென்று சொல்வது?

புலம் பெயர் நாடுகளில் தமிழர் கலாச்சாரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு யாரும் இல்லை. கோவிலுக்கு போவதும் சாமி கும்பிடுவதும் சமய விழாக்களும் மட்டுமா தமிழர் கலாச்சாரம். அதற்கு அப்பால் சமூக கட்டுப்பாடுகள் தொடர்பாக அல்லது தமிழர் கலாச்சாரம் தொடர்பாக புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகளோடு பெற்றோர்கள் மோத முடியாமல் இருக்கிறது.

ஆங்கில கலாச்சாரம் அவர்களை உள்வாங்கிய அளவுக்கு தமிழ் கலாச்சாரம் என்னவென்று விளங்குதில்லை.

பொது வாழ்வில் எதுவுமே எட்டாத நிலையில் தென் ஆப்பிரிக்கா கென்யா மொறீசியஸ் போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் போல இருக்கிறார்கள். இந்த நாடுகளில் வரும் தமிழர்களுக்கு சுந்தரமூர்த்தி- நல்லையா போன்ற தமிழ் பெயர்கள் இருக்கின்றன. ஆனால் தமிழர்கள் கலாச்சாரம் வாழ்வு ஒழுக்கம் பற்றி எதுவும் தெரியாது. மிக நீண்ட காலமாக தொடர்புகள் அற்றிருந்த மக்கள் இப்பொழுது ஓரளவு தமிழர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி தமிழர் கலாச்சாரம் தொடர்பாக தேடுகின்றனர் மொறீசியஸ் போன்ற இடங்களில்.

அதே போல புலம் பெயர் நாடுகளில் வாழும் பிள்ளைகள் இப்பொழுதே கலாச்சாரம் என்றால் வெள்ளிக்கிழமை பப்புக்கு போவது சனி ஞாயிறு நன்றாக சந்தோஷமாக இருந்து விட்டு திங்கட்கிழமை வேலைக்கு போவது என்று தான் நினைக்கிறார்கள் என்று கவலைப்படுகிறார் சமூக சேவையாளர் க. சுப்ரமணியம்.

வெள்ளைக்கார சமூகத்தோடு கலந்து படித்து வேலைக்கு போய் வாழும் பொழுது தமிழ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான விட்டுக் கொடுப்பு வாழ்வு தொடர்பான பக்குவம் என்பதெல்லாம் சிந்திக்கிறார்களில்லை.

தமிழர் கலாச்சாரத்தில் அருமையான குடும்ப அமைப்பு பிள்ளைகள் வளர்ப்பு அமைப்பு என்று இருப்பதனை தேவையற்ற ஒன்றாகவே புலம் பெயர் தமிழ் இளைய சமூகம் நினைக்கிறது.

ஆண்கள் பெண்கள் நடை உடைகளில் முழுமையாக வெள்ளைக்கார கலாச்சாரத்தில் திளைக்கவே விரும்புகின்றனர்.

இங்கு பாட்டிகள் விழாக்கள் போன்றவற்றுக்கு போனால் தெரியும்; பார்க்கலாம் தமிழ் பெண்கள் எப்படி என்று. யாழ்ப்பாணத்தில் சிங்கள பெண்கள் இறுக்கமான கால்கள் தெரியக்கூடிய உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய ஆடைகளை அணிந்து கொண்டு வந்து தமிழர்களை கெடுக்கிறார்கள் என்று தமிழ் சமூகம் கதறிக் கொள்கிறது.
லண்டன் போன்ற இடங்களில் வாழும் இளம் தமிழ் பெண்கள் அதனைத்தான் தினமும் செய்கின்றனர்.

வெள்ளைக்காரர்கள் வெயில் வந்தால் என்ன மாதிரி குறைந்த ஆடைகளை உடுக்கிறார்களோ அதனைத்தான் தமிழ் பெண்களும் புலம் பெயர் நாடுகளில் உருக்கின்றனர். இப்பொழுது இந்த சமரில் நான் நினைத்தேன் தொடர்ந்து 12 மாதமும் வெயில் அடித்தால் இங்கு என்ன நிலமை.

உடல் ரீதியான கட்டுப்பாடுகளை அறுக்க வேண்டும் என்பது வெள்ளைக்கார கலாச்சாரம். அதனை அப்படியே தமிழ் சமூகமும் பின்பற்ற வேண்டுமா என்று இங்குள்ள ஆலயம் ஒன்றின் தர்மகர்த்தா சிவநேசபிள்ளை கேட்கிறார். ஆகவே வடக்கு கிழக்கில் இருந்த தமிழர் பாரம்பரியங்கள் வெளிநாடுகளில் எல்லாம் கஷ்டபப்பட்டும் பாதுகாக்க முடியாமல் போய் விடும் ஆபத்து இருக்கிறது. மொழி ஒன்று அழிந்து போகும் போது அந்த இனத்தின் அழிவு நெருங்கி கொண்டிருக்கிறது என்பது மொழி தொடர்பான ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்து.

மொழி தொடர்பான அச்சம் காலாகாலமாக தமிழ் புத்தி ஜீவகளுக்கு இருக்கிறது. ஏனெனில் எல்லோரையும் வெளிநாட்டு மோகம் ஆட்டிப்படைக்கிறது. வெளிநாட்டுக்கு வந்தவர்கள் ஏதோ வெளிநாட்டவர்கள் போல தங்களை பாசாங்கு செய்து கொண்டு பெருமை பேசிக்கொள்கின்றனர்.

ஒரு சில தமிழர்கள் தான் தங்கள் வாழ்வை தமிழோடு தமிழர் கலாச்சாரத்தோடு இணைத்து வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர். அனேகமானவர்கள் தமிழ்மொழியுடனான தொடர்பு வேண்டாம் என்றே நினைக்கின்றனர். அதில் வேதனையான விசயம் என்னவென்றால் தமிழ் சங்கங்களின் தலைவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

பிள்ளைக்கு பேசத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லும் பெற்றோரையும் புலம் பெயர் நாடுகளில் தினமும் பார்க்கிறேன்.

என்னதான் தமிழ் பள்ளிக்கூடம் தமிழ் பரீட்சை எடுத்தாலும் எனக்கு தமிழ் பேச வராது என்று சொல்லும் பிள்ளைகளை பெற்றோர் பெருமையாக பார்க்கின்றனர்.
அந்தப் பிள்ளைகள் இப்பொழுது கல்யாணம் முடித்து அவர்களுக்கும் பிள்ளைகள் வந்து விட்டார்கள். அந்தப் பிள்ளைகளுக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. தெரியவும் விரும்பவில்லை. அதனைப் பற்றிய அக்கறையும் இல்லை.

சமூக வாழ்வில் ஊரைப் போல வாழ முடியாது என்று விட்டு எத்தனையோ ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் கல்யாணத்தை முறித்துக் கொண்டு ஓடி விடுகிறார்கள்.

தமிழர் கல்யாணம், மூன்று முடிச்சு, வாழ்வு என்பன வெல்லாம் தேவையில்லை என்ற படிதான் இளைய சமூகம் சென்று கொண்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் புதிதாக திருமணம் முடித்தவர்கள் அதுவும் காதலித்து கல்யாணம் முடித்தவர்கள் முறிந்து போய் விட்டார்கள்.

கணவன் வேலையில் இருந்து வீட்டுக்கு வந்து களைப்பில் தனது கோட்டை முன் விறாந்தையில் உள்ள கதிரையில் கொழுவி வைத்திருந்தார். புதிய மனைவி கேட்ட “ஏன் உமக்கு கோட்டை வீட்டுக்குள் கொழுவ தெரியாதா?” கணவன் கேட்டார்; “ஏன் நீர் மனைவி தானே அதை எடுத்து வீட்டுக்குள் கொழுவினா என்ன?” பொம்பினை கேட்டா “மனைவி எண்டு தாலி கட்டினா புருஷனுக்கு என்ன வேலைக்காரியா?

அவ்வளவுதான் கல்யாணம் முறிந்து போய் விட்டது. நடந்தது ஒரு கோட்டை எடுத்து வீட்டுக்குள் கொழுவு ஆனால் இந்த ஈகோ தமிழர் கலாச்சாரத்தில் இல்லையே. இது வெள்ளைக்காரர்களிடம் இருந்து வந்தது. ஆகவே வெள்ளைக்கார கலாச்சாரத்தை அப்படியே உள்வாங்கி உள்வாங்கி தமிழர்கள் தான் தங்கள் கலாச்சாரத்தை உடைத்து அழித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே மற்றவர்கள் வந்து எங்களை கெடுக்கிறார்கள் என்பதெல்லாம் பொய்.

ஒரு மில்லியன் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வெள்ளைக்காரப் பின்னணியைக் கொண்ட கலாச்சாரத்தில் திளைத்துக் கொண்டு தமிழர் கலாச்சாரம் அழிகிறது அல்லது அழிக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் சும்மா பம்மாத்து.

உண்மையில் தமிழர் கலாச்சாரம் தொடர்பாக தமிழர்கள் தான் திருந்த வேண்டும்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768