இதழ் 19 - ஜூலை 2010


வல்லினத்திற்கு படைப்புகளை அனுப்பும் எழுத்தாள நண்பர்கள், வேறு இணைய இதழ்களிலோ அல்லது
அச்சு இதழ்களிலோ ஏற்கனவே பிரசுரமான படைப்புகளை அனுப்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் - ஆசிரியர் குழு
'வ‌ல்லின‌ம்' வாச‌க‌ர்க‌ளுக்கு எம். ஜி. சுரேஷ் பிர‌த்தியேக‌மாக‌ எழுதும்
'அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே' எனும் க‌ட்டுரைத் தொட‌ர் இவ்வித‌ழிலிருந்து தொட‌ங்குகிற‌து.

vallinam on FacebookEnter your email address to receive Vallinam updates:

Delivered by FeedBurner

 


பத்தி:
அட்ரா சக்க... அட்ரா சக்க...

சீ. முத்துசாமி
அவன் மனம் நொந்து நூலாகி தனது அறைக்குள் அடைந்து கிடக்கிறான் சில நாட்களாக. தன்னுடைய இந்த அவல நிலைக்கு தனது செயலேதான் காரணம் என்பதை நன்கு உணர்ந்திருந்தும் - அது குறித்து குற்ற உணர்வு ஏதும் இல்லாதவராக வேறு வகையான மன உளைச்சலில் இருந்தார் கோதண்டம் என்கிற கோ.

பத்தி:
(இ)ராவணன் பார்த்த கதை

சு. யுவராஜன்
படத்தில் மணியோடு வேலை செய்தவர்களின் பெயர்கள் வெறெந்த இயக்குநர்களையும் பொறாமை கொள்ள வைக்கும். சந்தோஷ் சிவன், மணிகண்டன், ரஹ்மான், விக்ரம், ஐஸ்வர்யா ராய் என்று போகிறது பட்டியல். இருந்தும் என்ன சொல்ல? பாட்டி அடிக்கடி ஒரு பழமொழி சொல்வார். ‘வித்தக்கள்ளி வீராத்தா விறகொடைக்கப் போனாளாம், கத்தாழ முள்ளு கொத்தோடு குத்திகிச்சாம்’

பத்தி:
இயற்கை (4) - மழை

எம். ரிஷான் ஷெரீப்
மழைக்கு பல்லாயிரக்கணக்கில் கரங்கள் இருக்கின்றன. அவை கணத்துக்கொன்றாய்ப் பிறந்தழியக் கூடிய குறுகிய ஆயுள் கொண்டவை. வாரியிறைக்கும் கொடையாளியைப் போல மழை தனது ஒவ்வொரு கரத்தாலும் நிலத்துக்கு வாரியிறைத்துக் கொண்டேயிருக்கின்றது. வெயிலைப் போன்ற அமைதியான நடை மழைக்கில்லை.

பத்தி:
மழைத்தூறல்கள்

க. ராஜம்ரஞ்சனி
கல்வி, அறிவு, பணம், பொருள், செல்வம் பெருக பெருக நம்மிடையே இருக்கும் கர்வம், ஆணவம், செருக்கு எல்லாமும் குறைந்து கொண்டே போக வேண்டும். அதை அடிக்கடி ஞாபகப்படுத்துவதை மழை தன்னுடைய கடமையாக கொண்டு தவறாமல் பொழிந்து வருகின்றதாக நான் எண்ணிக் கொள்வதுண்டு.


கட்டுரை:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம்

நெடுவை தவத்திருமணி
இந்திய நீதிபதிகள் தங்களைச் சட்டத்திற்கும் மேலானவர்களாக, கடவுளாக கருதிக் கொள்கிறார்கள் என்பதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதும் இதற்கு முன்பு நடந்த சில சம்பவங்கள் மூலமாக தெரிய வருகிறது.

கட்டுரை:
தாண்டவராயன் கதையும் சில கதையாடல்களும்

எச். முஜீப் ரஹ்மான்
இந்திய தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவம் என்பது வேறுபட்டது. வேறுபட்டு இருக்க வேண்டியது. தமிழில் நீண்ட மரபுடைய தத்துவ ஆய்வு நவீனத்தளத்தில் முறையாக விவாதிக்கப்படவில்லை. முடிவுகள் மட்டுமே இங்கு வைக்கப்படுகின்றன. அவற்றை கண்டடையும் வழிகள் மறைக்கப்படுகின்றன.


திரைவிமர்சனம்:
The Songs Of Sparrows

கிரகம்
இத்திரைப்படம் ஒரு குடும்பத்தை பற்றிய கதையென்றாலும், அந்தக் குடும்பம் வாழும் கிராமம், கிராமத்திலுள்ள நெருப்புக்கோழி பண்ணை, பொட்டல்காடு, கிராமத்தின் மற்றொரு புறம் பச்சைபசேலென்று வயல்வெளிகள், கிணறு என்று வாழ்வியல் சார்ந்த திரைப்பட வரிசையின் பட்டியலிட்டால் இப்படம் நிச்சயம் சேரும். இப்படத்தில் ஹீரோவாக நடித்த 'Reza Naji'க்கு 'Asia Pacific Screen Awards 2008'ல் 'Best Performance by an actor' அவார்ட் கிடைத்துள்ளது.


எதிர்வினை:
படைப்புகள் விலைபோகுமோ இல்லையோ நிச்சயம் விமர்சனம் விலைபோகும்

வேலுநாச்சி
மதிப்பிற்குரிய முனைவர் ஸ்ரீலட்சுமிக்கு வணக்கம். படைப்புகள் விலைபோகுமோ இல்லையோ நிச்சயம் விமர்சனம் விலைபோகும். தங்களது சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைச் சூழல் ஆய்வும் அலசலும் அவசியமே. விமர்சனத்திற்கு விமர்சனமோ என்று கருதிவிட வேண்டாம்.

எதிர்வினை:
சுவைக்குதவாத வெறும் அக்கப்போர்

சுப்பிரமணியன் ரமேஷ்
வல்லினம் இதழ் பதினெட்டில் (ஜூன் 2010) ‘முனைவர்’- திருமதி ஸ்ரீலஷ்மி எழுதிய அக்கப் போரைப் படித்தேன். சிரித்து மாளவில்லை. சிறந்த நகைச்சுவைக் கட்டுரை. வல்லினம் ரொம்ப சீரியஸான இதழ் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்!

எதிர்வினை:
முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்

ராக்கியார்
மா. சண்முகசிவா அவர்களுக்கு, தங்களின் முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும் படித்தேன். சமூகத்தில் மாற்றம் வேண்டி உங்களின் மன்றாடல் மனதை வருடுகிறது. உங்களுக்குத் தெரியும்; என்ன நோய்க்கு என்ன மருந்து கொடுப்பது என்று.

 
 

சிறுகதை: குடை
சின்ன‌ப்ப‌ய‌ல்
அவசர அவசரமாக அனைவரும் இயங்கிக் கொண்டிருந்தனர். கடிகாரம் மட்டும் ஆறு மணியை வெகு சாவகாசமாக நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்களின் அவசரத்திற்குக் காரணம் மழை. காலையிலேயே போக்கு காட்டிக் கொண்டிருந்தது. மத்தியானம் தரையிறங்கி, இப்போது மாலையில் விஸ்வரூப மெடுத்திருந்தது.

சிறுகதை: நடுக்கடலில்...
ராம்ப்ரசாத்
த‌னா ஆழ்ந்த‌ யோச‌னையில் சிலையாய் அம‌ர்ந்திருந்தான். ச‌லீம் சொல்வ‌து போல் வேறு வ‌ழியில்லைதான். வீட்டைச்சுற்றிக் க‌ட‌ன். தின‌ம் தின‌ம் மான‌ம் போகிற‌து. ஆறேழு மாதங்களாகிறது வீட்டு வாடகை தந்து. எப்போது வேண்டுமானாலும் வீட்டை விட்டு வெளி யேற்றப்படலாம்.


தொடர்: அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...1
எம். ஜி. சுரேஷ்
நம்மையும் அறியாமல் நமது யுகம் பல மரணங்களைச் சந்தித்திருக்கிறது என்பதை நாம் அறிவோமா? கடவுளின் மரணம்; நாவலின் மரணம்; மனிதனின் மரணம் போன்ற பல மரணங்கள் நிகழ்ந்துவிட்டன. அது குறித்துக் கவலை எதுவும் படாமல் நாம் எல்லாம் இயல்பாக இருப்பதாக நினைத்து நடமாடிக் கொண்டிருக்கிறோம்.

தொடர்: ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...7
ம‌. ந‌வீன்
திராவிட கழகப் பிண்ணனியில் பெரியாரைத் தவிர்த்து அறிஞர் அண்ணா, கருணாநிதி, போன்றோருடைய அடுக்குமொழியும் அலங்காரமுமான பேச்சில் உணர்ச்சி தூண்டப்பட்டு கொதித்தெழுந்த பரம்பரையின் இரத்தத்தொடர்பு, நமது நாட்டிலும் இன்னும் நீர்த்துப் போகாமல் இருக்கிறது.

தொடர்: எனது நங்கூரங்கள் ...12
இளைய அப்துல்லாஹ்
எங்கள் வீட்டில் மட்டும் தான் சைக்கிள் இல்லை. அதனை வாங்கித் தர வேண்டும் என்று எங்களது அம்மய்யா யோசிக்கவும் இல்லை. நான் சின்னப்பிள்ளை என்பதனால் சைக்கிள் பற்றி அவர் யோசிக்காமல் இருந்திருக்கலாம்.

தொடர்: நடந்து வந்த பாதையில் ...7
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்
படபடவென வந்தது அவளுக்கு. இவர் கேலி செய்கிறாரா? ஊஹூம் முத்துசாமி சார் மிகவும் சீரியஸான பேர்வழியாயிற்றே? சிங்கை, மலேசியத்தமிழ்தான் எனக்கு எழுதத் தெரியும். ஆனால் தமிழ் நாட்டுத் தமிழ் எனக்கு எழுதத்தெரியாது சார் என்று சொல்லும்போதே இவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.


கவிதை:

o இளங்கோவன் 
o ஏ. தேவராஜன் 
ல‌தா 
o ராம்ப்ரசாத்

o செல்வராஜ் ஜெகதீசன்

 

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768