முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 25
ஜனவரி 2011

  சுவடுகள் பதிவுமொரு பாதை ...1
பூங்குழலி வீரன்
 
 
       
நேர்காணல்:

"புரட்சியாளர்கள் இறக்குமதிச் சரக்குகளல்ல"

ஆதவன் தீட்சண்யா


பத்தி:

இது இருப‌த்து ஐந்தாவ‌து இத‌ழ்
ம‌. ந‌வீன்


சிறுகதை:

சிற்றறிவு
எஸ். ராமகிருஷ்ணன்

அப்பாவின் தண்டனைகள்
ஏ. தேவராஜன்


பதிவு:

எழுத்தாளார் அ. ரெங்கசாமிக்கு விருது


கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா


தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...7
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...14
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...2
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் ...1
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு ...1
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை ...1
பூங்குழலி வீரன்

வழித்துணை ...1
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை ...1
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு ...1
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம் ...1
தர்மினி

பயணிப்பவனின் பக்கம் ...1
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு ...1
யோகி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...15

தேனம்மைலெக்ஷ்மணன்

செல்வராஜ் ஜெகதீசன்

கே. பாலமுருகன்

எம். ரிஷான் ஷெரீப்

ரெ. பாண்டியன்


எதிர்வினை:

"மலேசியா - சிங்கப்பூர் 2010" வல்லினம் தொகுப்பை முன்வைத்து கவிதைகள் ஒரு பார்வை
தவமணி (KSAH)

ஒரு அதிஷ்டம் நிறைந்த நாள்
சுரேந்திரகுமார்

அறிவிப்பு:

எஸ். ராமகிருஷ்ணனின் துயில் நாவல் வெளியீடு

நேர்காணல் மூன்றாம் இதழ்

கே. பாலமுருகனுக்கு 2009 ஆண்டிற்கான கரிகாற் சோழன் விருது

நாம் ஒரு மரத்தை வெறுக்கும் போது...
(மனுஷ்ய புத்திரன் - ஒரு மணலின் கதை கவிதை தொகுப்பிலிருந்து)


"தாரே ஷாமீன் பார்" என்ற பெயரில் ஓர் இந்திப் படம் சில ஆண்டுகளுக்குமுன் வெளிவந்திருந்தது. கற்றல் திறனில் இயற்கையிலே குறையுடைய, ஆனால் அந்த குறையினிலிருந்து முயன்றால் மீண்டு வரலாம் என்ற நிலையிலிருக்கும் பத்து வயது சிறுவன் ஒருவனைச்சுற்றி பின்னப்பட்ட கதை. ஆசிரியர் ஒருவரின் துணையோடு அந்த சிறுவன் எவ்வாறு சக சிறுவர்கள் போல் வழமையான வாழ்விற்குத் திரும்புகிறான் என்பது மிக அழகாக இப்படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

இப்படத்தில் ஒரு காட்சி வரும். அச்சிறுவனின் தந்தை தானும் தன் மனைவியும் தன் பிள்ளையின் மேல் எப்படியான அக்கறையைக் கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து விளக்குவார். அப்போது அந்த ஆசிரியர் அந்த தந்தைக்கு கதை ஒன்றை நினைவுப்படுத்துவார்.

ஓர் ஊரில் பெரிய மரங்கள் நிறைய இருந்தன. அம்மரங்களால் அவ்வூர் மக்களுக்குப் பல வகையில் சிரமங்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு நாளும் அவ்வூர் மக்கள் அம்மரங்களுக்கு அருகில் சென்று அம்மரங்களைச் சபிக்கத் தொடங்கினர். நாளாவட்டத்தில் வெட்டிச் சாய்க்காமலேயே மரங்கள் அனைத்தும் மரித்து போயின. யதார்த்தத்தில் இது நடக்குமா என்ற கேள்விக்குப் பின்னால் நடப்பதற்கான எல்லா சாத்தியபாடுகளும் இருக்கிறது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.

நாம் ஒரு மரத்தை வெறுக்கும் போது
முதலில் ஓர் இலையிலிருந்து தொடங்க வேண்டும்...

அடர்ந்த ஒரு பெருமரத்தில் எத்தனை ஆயிரம் இலைகள் இருக்கும்? ஒரு மரத்தை வெறுப்பதற்கு முடிவெடுத்த பிறகு அதன் ஒவ்வொரு இலையையும் வெறுத்து முடித்து ஒரு முழு மரத்தையும் வெறுத்து வாழும் வாழ்விற்கு எவ்வளவு காலம் எடுக்கும். ஓர் அடியும் நகராமல் இருந்த இடத்தில் இருக்கும் ஒரு மரத்தை வெறுப்பதற்கு ஆயிரமாயிரம் இலை தாண்டி வர வேண்டும் என்பது நிதர்சனம் என்றால் இரத்தமும் சதையுமாய் நம் கண் முன் நடமாடித் திரியும் ஒரு மனிதனை எப்படி சில நொடி நேரத்தில் வெறுத்துப் போகிறோம். மரத்தை வெறுப்பதை விட மனிதம் வெறுப்பது மலிவாக போய்விட்டது மட்டும் தெளிவாக தெரிகிறது.

நாம் வெறுக்கும்போது
கருகும் ஒவ்வொருஇலைக்கும்
நாம் விளக்கமளிக்க வேண்டும்
ஒவ்வொரு விளக்கத்திற்குப் பிறகும்
நம் வெறுப்பு நேர்த்தியாகிக் கொண்டே வரும்...

ஒரு மனிதனையோ அல்லது வேறு ஏதாவதொரு பொருளையோ நாம் வெறுக்கத் தொடங்குகிற நொடியில் அதனை வெறுப்பதற்கான எல்லா காரணங்களையும் நமக்குச் சாதகமான ஒன்றாக நாம் உருவாக்கிக் கொள்கிறோம். அம்மனிதனை அல்லது அப்பொருளை ஏன் வெறுக்கிறோம் என்ற காரணத்தினை எல்லாருக்கும் உளறித் திரிகிறோம். மிகத் தெளிவான விளக்கமளிப்புகளை அதற்காக நாம் தயார்படுத்துகிறோம். நமது வெறுப்பறிக்கைகளைக் கேட்டுத் தலையாட்டுவதற்கும் கூடுதல் கருத்துரைகள் வழங்குவதற்கும் ஒரு கும்பலை நம்மைசுற்றி உருவாக்கி வைத்துக் கொள்கிறோம். தம் வாழ்நாளில் பாதிநாட்களைப் பலர் இதற்காகவே செலவழிக்கின்றனர். தமது வெறுப்புகள் குறித்த பட்டியலை கடைசிவரை தம்மோடு உடன்கொண்டு திரிகின்றனர்.

ஒரு மரத்தை வெறுக்கும்போது
வசந்த காலங்களில் வெறுப்பதை தவிர்த்துவிட வேண்டும்
மலர்களின் நிறங்கள்
நம் வெறுப்பை உறுதியிழக்கச் செய்யும்.
அதன் வாசனை
நம்மைபின்வாங்கத்தூண்டும்.

சில நேரங்களில் சிலரை வெறுக்கின்ற போது இயல்பாகவே அவர்கள் மீதான வெறுப்புமாறிப் போக கூடிய சூழ்நிலைகள் உருவாகுவதைக் காணலாம். ஏதாவதொரு சந்திப்பில் அவர் மீதான வெறுப்புமாறிப் போகலாம். நம் வெறுப்பையும் புறக்கணித்துவிட்டு அவர் நமக்கு செய்யும் சில நல்ல செயல்கள் அந்த ஒருவர் மீதான வெறுப்பைமாற்றி அமைக்கலாம். உறுதியாக ஒன்றை வெறுத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றபோது புறத்தாக்கங்கள் நம்மை ஒன்றும் செய்துவிடாது.

வெறுக்கப்படும் ஒரு மரத்திலிருந்து
அதன் பறவைகள் தப்பிச் செல்லவேவிரும்பும்
நாம் அதன் அலகுகளைத் திறந்து
வெறுப்பைப் புகட்ட வேண்டும்.
பிறகு அவை நம் வெறுப்பை
வேறொரு மரத்திற்கு எடுத்துச் செல்லும்

நாம் ஒன்றை வெறுக்கத் தொடங்குகிற நொடியில் அதன் எல்லா நல்ல குணங்களும் அதனை விட்டுப் போய்விட்டதாகவே நமக்குத் தோன்றும். முன்பிருந்தபடியே அதன் தன்மை இருந்தாலும் நமது வெறுப்பு அதனை மழுங்கடித்துவிடும். நமது வெறுப்பு நம்மோடு மட்டும் இருந்து விடாமல் நம்மை சேர்ந்தவர்களால் கொஞ்சம் கொஞ்சமாய்பரவும். நமது வெறுப்பை முடிந்த மட்டும் நாம் விரிவாக்குவோம். நமக்குபிடிக்காதது மற்றவர்களுக்கும் பிடிக்கக் கூடாது என்பது முன்வைத்து மிகத் துல்லியமாக நமது நகர்வுகள் இருக்கும்.

ஒரு மரத்தை எவ்வளவுதான் வெறுத்தபோதும்
தரையில் அசைந்து கொண்டிருக்கும்
அதன் நிழல்களை நம்மால் ஏன் தீண்ட முடியவில்லை
என்பதை நாம் சற்றே யோசிக்க வேண்டும்.

எதனையாவது வெறுக்கத் தொடங்கும் முன் இனி சிலவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். வெறுத்தல், விலகிப்போதல் நம்மை விலக்கி வைக்கிறதே தவிர நாம் வெறுப்பவர்களை அல்ல... எப்போதும் போல் மிக இயல்பாய் அவர்கள் நடமாடித் திரிகிறார்கள். நம்மை சந்தித்தால் நம்மோடு சிரித்து பேசியபடி, நாம் வெறுத்து கருகிய அவர்களின் இலைகள் மீண்டும் துளிர்விட்டபடி, பறவைகள் கூடு திரும்பியபடிதான் அவர்கள் இருக்கிறார்கள்.

நமது வெறுப்புகள் அவர்களின் நிழல்களை ஒரு போதும் தீண்டப்போவதில்லை.

    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768