முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 38
பிப்ரவரி 2012

  சுவடுகள் பதியுமொரு பாதை... 14
பூங்குழலி வீரன்
 
 
       
நேர்காணல்:

‘இது உறங்குங்காலம். நிச்சயம் விழிக்குங் காலமொன்று வரும்’

கருணாகரன்



வல்லினம் பதிப்பக நூல்கள்: எழுத்தாளர்களுடனான நேர்காணல்


உண்மைகள் மட்டுமே என் புத்தகத்துக்கான தரவுகள்
யோகி

சினிமா எனும் கலையைக் கொன்றவர்கள்
கே. பாலமுருகன்

நல்ல கவிதைகளில் வார்த்தைகள் ஆடைகள் மட்டும்தான்
ரேணுகா



கட்டுரை:

நாடு திரும்பாத கடைசி கம்யூனிஸ்ட் (ஆவணப்படம்) - அமிர் முகமாட் (மலேசியா)
கே. பாலமுருகன்

வெற்றியின் 'மமதையும்' வீழ்ச்சியின் 'ஞானமும்'
ஷம்மிக்கா



வல்லினம் கலை, இலக்கிய விழா 4:

கலை இலக்கிய விழா 4 : இன்னொரு தொடக்கம்
ம. நவீன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...28

ராஜா

சின்னப்பயல்

துரோணா

ந. பெரியசாமி

ஸ்ரீவிஜி

றியாஸ் குரானாவின் கவிதைகள்

நவீனின் இலங்கை பயணத்திற்குப் பிறகுதான் நான் றியாஸ் குரானாவைப் பற்றி முதன் முதலில் கேள்விப்பட்டேன். றியாஸ் குரானாவின் பெயர்தான் முதன் முதலில் அவரைப் பற்றிய தேடலைத் தொடக்கி வைத்தது. வல்லினத்தில் நவீனும் பாலமுருகனும் றியாஸ் குரானாவைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றனர். எனவே, அவரைப் பற்றிய அறிமுகத்தை இங்கு நான் மீண்டும் நிகழ்த்த விரும்பவில்லை. றியாஸ் குரானாவின் கவிதைகளுக்குள் நேரடியாகவே நமது பயணத்தைத் தொடர்வோம்.

வெள்ளைத்தாளில் சில சொற்களை ஒருங்கிணைத்து
சிறிய எதிர்பாகத்தான் தொடங்கியது
தனது பாட்டுக்கு மாறிமாறி இணைந்த சொற்கள்
உருவாக்கிய அர்த்தங்கள் பெருகப் பெருக
பெரும் கலகமாக வெடித்தது

சொற்கள் குறித்த பெரும் ஆய்வுகளைத் தன் கவிதைகள் தோரும் நிகழ்த்திக் காட்டியபடி இருக்கிறார் றியாஸ் குரானா. அது இயல்பாய் நடந்ததா அல்லது அதுதான் அவரின் இயங்கு தளமா என்பதை அவரது கவிதைகளை நீந்திக் கடந்தால் மட்டுமே நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். எழுத்துகளின் கூட்டு சொற்களைப் பிறப்பிக்கின்றது. சொற்களின் கூட்டு வாக்கியங்களை உருவாக்குகிறது. கவிதை என்பது மட்டும் எப்போதும் சொற்களின் கூட்டுகளால் மட்டுமே உருப்பெறுகிறது. அங்கே வாக்கியங்கள் உருவாகுவதில்லை. கவிதைகளில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு தளத்தில் தனித்து நின்று தன்னை இனங்காட்டுகிறது.

தனது கவிதைக்குள்
என்னை அழைத்துச் செல்ல
அவன் விரும்பியிருக்க வேண்டும்
சொற்களைத் திறந்தபோது எதையுமே
காணவில்லை
பலமுறை இப்படித்தான் நிகழ்ந்துள்ளது

அடுத்தவரின் கவிதைக்குள் நாம் பயணிப்பதன் ஆபத்தை இப்படித்தான் சொல்ல முடியும். எழுதியவராலேயே சில வேளைகளில் தனது கவிதைக்குள் பயணிக்க முடியாத பொழுது அடுத்தவரின் கவிதைக்குள் நாம் பயணிப்பதன் சாத்தியம் என்பது யோசித்துப் பார்க்க கூடிய ஒன்றாகும். தனது கவிதைக்குள் எல்லாரும் பயணப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு படைப்பாளனின் விருப்பமாகும். அந்தப் பயணப்படுதலை சிலர் தன்போக்கில் விட்டு விடுகின்றனர் விருப்பப்பட்டவர் படித்துவிட்டு போகட்டும் என்கிற மாதிரி; மற்றவரோ கூவி கூவி அழைக்கின்றனர் இது என்னுடைய கவிதை - படித்துவிட்டு நல்ல கவிதையா என பார்த்து சொல்லுங்கள் என்கிற மாதிரி.

சொற்களை மோப்பம் பிடித்து
தொடங்கியது பயணம்
பின்னோக்கி செல்லும்போதுதான்
சொற்கள் எங்கிருந்து வந்தன
என்று கண்டுபிடிக்க முடியும் என்பதை
அடிக்கடி நினைவு கொள்கிறேன்.

மீண்டும் சொற்களோடு ஒரு பயணம். சொற்களைக் கோர்த்து கவிதை ஒன்றை எழுதினோம் - அதை வாசக பரப்பினுள் வாசிப்பிற்கு விட்டோம் என்றில்லாமல் தன் கவிதைகள் வந்துசேர்ந்திருக்கும் சொற்கள் குறித்த ஆய்வினையே கவிதையாக்கி இருக்கிறார் கவிஞர். ஆண்டுக் கணக்கில் பின்னோக்கினால் அது வாழ்வியல் குறித்த வரலாறினை நமக்கு காட்டி நிற்கின்றது. பின்னோக்குதலில் வழி சொற்கள் எங்கிருந்து வந்தன என்றும் அறிய முடியும் என்கிறார் கவிஞர்.

அனுமதிப் பத்திரம்
பெறுவதற்கான விதிமுறைகளை
எனது கவிதைகள்
பின்பற்ற மறுக்கின்றன
அவை பயணிக்கும் பாதைகள்
முற்றிலும் வேறானவை

தானும் தன் கவிதைகளும் வழக்கத்திலிருக்கும் அனைத்திலுமிருந்து மாறுபட்டது என பிரகடனம் செய்வதற்கு தனி தைரியம் வேண்டும். இந்த பிரகடனத்தால் ஒரு கவிஞர் ஒரு சராசரி கவிஞனுக்குக் கிடைக்கும் புகழ்மாலைகளை இழக்க நேரிடலாம். ஒரு சராசரி கவிஞனாக அனுமதி பத்திரம் பெறுவற்கான விதிமுறைகளை எனது கவிதைகள் பின்பற்ற மறுக்கின்றன என்பது எவ்வளவு நிதர்சனமான வரிகள். மக்களுக்காக எழுதுகிறோம்; மக்களுக்கு நாங்கள் இப்படி எழுதினால்தான் விளங்குகிறது; மக்கள் இப்படி எழுதினால்தான் இரசிக்கிறார்கள் என்கிற கருத்துருவாக்கத்தை முன்னிலைப்படுத்தி குப்பைகளை சந்தைப்படுத்தும் இலக்கியவாதிகளுக்கு மட்டுமே அதிக வரவேற்பு இன்றைய நிலையில் இருக்கிறது. முற்றிலும் வேறான பாதையில் பயணிக்கும் கவிதைகள் அதே பாதையில் அல்லது அதற்கொத்த பாதையில் பயணிக்கும் கவிஞர்களால் மட்டுமே பல வேளைகளில் கவனிக்கப்படுகின்றன.

கரையில் நின்றுவிட்ட
மெதுவாய் வீசும் தென்றலைக் கூட்டிக்கொண்டு
வீட்டுக்கு வருகிறேன்
தன்பாட்டுக்கு வளரும் புல்வெளிகளினூடே...

தனது கவிதைளுக்கு அனுமதி பத்திரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இந்த வரிகளில் தெரியவில்லை. மாறாக பெருமிதம் - பேருவகை மட்டுமே இந்த வரிகள் துள்ளிக் குதிக்கின்றது. தனது கவிதைகள் தனக்குறிய பாதையில் மிக பத்திரமாகவே பயணிக்கின்றன என்கின்றபோது யாருக்கு வேண்டும் இவர்களின் அனுமதி பத்திரம் என்று கேட்பதுபோல் இருக்கிறது. தன்பாட்டுக்குதான் வளரும் புல்வெளிகள் - அதை யாரும் வளர்த்தெடுக்க முடியாது. கவிதையும் அப்படியானதுதான் - தன்பாட்டுக்கு வளரும் தன்மை கொண்டது.

சில தருணங்களில்
நாங்கள் விரும்பவும் செய்கிறோம்
பல சந்தர்ப்பங்களில்
மூர்க்கமாக வெறுப்பதைத்தவிர
வேறு தேர்வுகள் இல்லாமலே போய்விடுகின்றன
இதற்கு நாங்கள்
காதலென்று பெயர் சூட்டியிருக்கிறோம்

எப்போதும் இனிமையையும் பிரிவின் வலியையும் மட்டுமே கவிதையாக்கும் கவிஞர்கள் மத்தியில் றியாஸ் குரானா மாறுபடுகிறார். விரும்புதலும் வெறுக்கப்படுதலும்தான் காதல். எப்போதும் இப்படியான இருவேறு தலைகளுடன்தான் காதல் சுற்றியபடி இருக்கிறது. விரும்பப்படுதலின் விழுக்காடு அதிகரிக்கும் போது காதல் இனிமையானதாகவும் வெறுக்கப்படுதலில் விழுக்காடு அதிகரிக்கப்படும் போது காதல் பிரிவாகவும் மாறிப் போய்விடுகிறது. விரும்படுதலும் வெறுக்கப்படுதலும் சம விழுக்காட்டில் இருக்கும் பொழுது அதுவே வாழ்தலில் இயல்பாய் மாறி விடுகின்றது.

முழுமையாக கற்பனை இருந்தபோது
எழுதப்பட்ட கவிதையை
இரண்டாகப் பிரிக்கப்பட்ட
கற்பனைச் செயல்முறைகளால்
எப்படிக் கலைப்பதென்று புரியவில்லை
சொற்களை ஓரளவு கலைக்க முடிந்தது
தலைப்பைக் கலைத்துப் போடப்போட
வேறொரு தலைப்பாக மாறி,
முடிவற்ற அச்சுறுத்தலாக மாறியது

தனது கவிதைகளை கலைத்து புதிய கவிதையாய் மாற்றுகிற வித்தை பெரும்பாலும் பலருக்குக் கைகூடுவதில்லை. உருவாக்கப்பட்ட சொற்கள் தனக்குறிய இடத்தில் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறபொழுது எதை நகர்த்தி எங்கு வைப்பது என்ற சிக்கல் எழுகிறது. தனது சொந்த கவிதையை மாற்றுவதற்கே இவ்வாறான சிக்கல்கள் எழுகிறபொழுது எப்படி அடுத்தவரின் கவிதைகளை மாற்றி சிலர் தனக்குறிய கவிதைகளாக மாற்றி கொள்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது. கவிஞரின் அசல் சொற்களை மாற்றி பிற சொற்களை அதில் கோர்க்கும் பொழுது கவிதையில் ஏதோ குறையிருப்பது ஏன் இப்படியானவர்களுக்குத் தெரியாமல் போகிறது. கவிதையும் அடுத்தவரின் கற்பனையையும் திருடுபவர்கள் தனது மனசாட்சியை அடகு வைத்துவிட்டவர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

சொற்களுக்கு உள்ள வலிமை வேறு எதற்கும் இல்லை என்பேன் நான்.

இன்றைய நிலையில், சராசரி வாசிப்புத் தளத்திலிருந்து அடுத்தகட்ட தளத்திற்கு பயணப்பட றியாஸ் குரானாவின் கவிதைகள் சரியான தேர்வுகளில் ஒன்று.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768