முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 39
மார்ச் 2012

  கவிதை:
கிண்ணியா எஸ். பாயிஸா அலி
 
 
       
பதிவு:

கலை இலக்கிய விழா 4 : நிறைவுறாத நிகழ்வுகள்

ம. நவீன்



எழுத்தாளர் எம். குமாரன் மறைவையொட்டி அஞ்சலி பதிவுகள்:


அஞ்சலி - எம். குமாரன் : காணாமல் போகும் தொலைபேசி எண்கள்!
ம. நவீன்

சிறுகதை : சீனக் கிழவன்
எம். குமாரன்

எம். குமாரனின் 'செம்மண்ணும் நீல மலர்களும்'
ம. நவீன்



வல்லினம் கலை, இலக்கிய விழா 4 தொடர்பான பதிவுகள்:

நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை
ம. நவீன்

புத்தகப்பார்வை : துடைக்கப்படாத இரத்தக் கறைகள்
பூங்குழலி வீரன்

புத்தகப்பார்வை : தீர்ந்து போகாத வெண்கட்டிகள்
சு. காளிதாஸ்

புத்தகப்பார்வை : கடக்க முடியாத காலம்
அகிலன்

புத்தகப்பார்வை : என்னை நாயென்று கூப்பிடுங்கள்!
மா. சண்முகசிவா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



கட்டுரை:

இழக்கப்பட்ட தேசிய சினிமா
கே. பாலமுருகன்



சிறுகதை:

மேம்பாலம்
கே. பாலமுருகன்



புத்தகப்பார்வை:

தானே மழையாகிப் பெய்யும் 'எதுவும் பேசாத மழை நாள்'
கிண்ணியா எஸ். பாயிஸா அலி



தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்
பூங்குழலி வீரன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...29

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ஸ்ரீவிஜி

சின்னப்பயல்

குமரன்

கருணாகரன்

உன்னிருமின்வரிகள்

கமழும்பூக்கூடையாய் பாசத்தை மட்டுமே ஏந்திவருமென்
ஆயிரங்கேள்விகளுக்கோர் ஒற்றைப்பதிலாய்…..
வானம்பத்திரப்படுத்தும் அபூர்வமின்னலென…..
இருந்துநின்று எப்போதாவது வந்துசேரும்
விளிப்பு முடிப்பற்ற உன்னிருமின்வரிகள்.
பரிவு பந்தமெலாஞ்சீவிச்சீவிக்கழித்த படி தனித்திருக்குமவை
சுமாராய் உன் போலான போதுமென்ன
வரிக்குறளை விரித்து விரித்து வாங்கிய பட்டமுண்டு
வரிக்கு முன்னும் பின்னுமாய்
விட்டிருக்கும் நெடிய இடைவெளிகளை
முன்னம் நீ புழங்கிய சொல்லிட்டே நிரப்புவேன்.
அழகிய கவிதை யாயது மேலெழுந்து மேகமாய் மிதக்கும்
சடசடத்துக் கீழிறங்கும்
அலையெழுப்பி அகவும்
கீச்சிட்டபடி ரீங்காரமிடும்
தென்னம்பிஞ்சுகள் சொரித்தவாறே
பூவிதழை அசைத்தசைத்துப் பனியுதிர்க்கும்
பாகாய் பரவிப்பரவி உறையும்
ஆய்ந்து முடித்ததுதான் நியுற்றன் விதியெனில்
ஒரு தென்னைமரமாய்
நெடிந்தோங்கியிருக்குமுன் பெருங்கர்வங்கூட
என்றாவதுடைந்து சிதறத்தானேகூடும்
ஓயாது தட்டுமென் வலிய அன்பின் முன்.


குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி


குவிந்த விரல்களூடே
குறுக்கும் நெடுக்குமாய் சிவந்த ரேகைகள் வழிகிற
உள்ளங்கைச் சிறைக்குள்
படபடக்குஞ் சிறு வண்ணாத்தி புலன்களுக்குள்
குவியமிலா நெடுங்கனவுச் சிதறுகை.
கரைந்திடுங்கணங்களில்
வர்ணங்களின் பிசுபிசுப்பும்
படபடப்பின் அமர்முடுகலும்
ஒரு சேர உணர்த்திய விபரீதங்களின் நடுக்கங்களோடு
சடாரென விரியும் பிஞ்சுவிரல்களே வரைந்திடுமோ
விண்ணளவுக்குமான அதன் விடுதலையை.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768