இதழ் 13
ஜனவரி 2010
  காற்று வேட்டை
கெ.எல்.
 
     
  நேர்காண‌ல்:

"அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக் கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்"

பி. உத‌ய‌குமார்

சிறப்புப் பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை


பத்தி:

தமிழகத்திலும் ஒரு நீரோ மன்னன்

அ. ரெங்கசாமி

அவஸ்தை
இராம. கண்ணபிரான்


கட்டுரை:

பிலிப் கலாஸ் : இசையின் தீராத‌ ப‌க்க‌ங்க‌ள்
அகிலன்

காற்று வேட்டை
கெ.எல்.

வரமா? சாபமா?
நெடுவை தவத்திருமணி

மொழி ஆணால் உருவாக்கப்பட்டது...
வீ.அ. மணிமொழி

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம்
என். செல்வராஜா

சிறுகதை:

குரங்கு
கிரகம்


பிரமைகள்
ஸ்ரீரஞ்சனி

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னிதரைப் போல‌ ...5
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...6
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...1
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன்


இரா. சரவணதீர்த்தா


மன்னார் அமுதன்

ஏ.தேவராஜன்

பதிவு:

மலேசியத் தமிழ்க் கவிதாயினிகளின் முதலாவது மலையருவிக் கவியரங்கம்
தினேசுவரி

புத்தகப்பார்வை:

விட்டு விடுதலை காண்
நிந்தவுர் ஷிப்லி

லும்ப‌ன் ப‌க்க‌ம்:


ஒரு கோமாளியின் வ‌ருகை...
லும்ப‌ன்

அறிவிப்பு:


அஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி

எதிர்வினை:


கடிதம்
     
     
 

நல்ல வேலையைத் தேடுகிறோம். நிறைய படிக்க விரும்புகிறோம். அதிகம் சம்பாதிக்க நினைக்கிறோம். பேரோடும் புகழோடும் வசதியாக வாழ நினைக்கிறோம்.ஆனால் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையான சுத்தமான காற்று, நல்ல குடிநீர், உணவின் அத்தியாவசியம் பற்றி (வறுமையில் வாடுபவர்களைத் தவிர) நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

இன்று சிரமப்படாமலே உணவும் நீரும் காற்றும் கிடைப்பதால் அதைப்பற்றி சிந்திக்கத் தோன்றுவதில்லை. ஆனால் பேரறிவையும் பெரும் செல்வத்தையும் மனிதனின் அனைத்து பலத்தையும் செலவழித்தாலும் உயிர்வாழ்வுக்குத் தேவையான உணவும் காற்றும் நீரும் கிடைக்காத ஒரு காலம் வரும்.

நமது முன்னேற்றத்துக்காக நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையை சிதைத்து வருகிறோம். காற்றில் நஞ்சைக் கலக்கிறோம். அந்த நச்சுக்காற்று மரங்களையும் செடி கொடிகளையும் அழிக்கிறது. பனியை உருக்குகிறது. கடலைச் சூடாக்குகிறது.

இந்நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகம் பேரழிவை எதிர்நோக்கும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் சிலர் ஆணித்தரமாகக் கூறுகின்றனர். தொழில் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சிகள் மனித இனத்துக்குப் பெரும் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தன.

அதிக ஆயுள், வசதியான வாழ்க்கை உட்பட கோடானுகோடி நன்மைகளைத் தந்தன. அதேநேரத்தில் வேண்டாத விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. புத்தாக்கம் பெருகப் பெருகக் கழிவுகளும் அதிகரித்து பூமியைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலத்தின் மாசு அளவு கூடிக்கொண்டே வருகிறது. காற்று மண்டலத்தில் கரிமக் கழிவுகள் அதிகரித்து வருவதால் பூமியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. வெப்பநிலை அதிகரித்ததால் வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள பனி உருகத் தொடங்கியுள்ளது. இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது.

கடல் நீர் அளவு இப்படியே கூடிக்கொண்டே போனால் அந்தமான் தீவுகள், மாலைத் தீவுகள், இந்தோனீசியத் தீவுகள் போன்ற பல தீவுகள் உட்பட ஆசியாவின் பெரும் பகுதி கடலுக்குள் மூழ்கி விடும். ஆப்ரிக்கா கண்டம் பாலைவனமாகி விடும்அத்துடன் வாழ்வியல் பாதிக்கப்பட்டு, பல உயிரினங்களும் இயற்கை வளங்களும் அழிந்து போகும்.

இந்த பெரும் பிரச்சினை குறித்து பேச முக்கியமான காலகட்டத்தில் 192 நாடுகள், 15,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் ஐக்கிய நாடுகள்சபையின் தலைமையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கூடினர். 10 நாட்கள் நடைபெற்ற மிக முக்கியமான இந்த உச்சநிலை மாநாடு ஏமாற்றத்திலேயே முடிந்தது.

வளர்ந்த நாடுகளுக்கும் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் இடையே நடந்த இழுபறிச் சண்டையில் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்துவதில் உருப்படியான உடன்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. உலக வெப்ப நிலை அதிகரிப்பைச் சுமார் 2 டிகிரி செல்சியஸ் உயர்வோடு கட்டுப்படுத்த வேண்டும் என்பது இலக்கு.

இந்த இலக்கை அடைய 2050க்குள் கரியமிலவாயு வெளியீட்டை 80%-95% வரை குறைப்பது அவசியமாகிறது.உடன்பாடுகள் எதுவும் கையெழுத்திடப்படாத பொழுதிலும் சில நாடுகள் மாசுக் கட்டுப்பாடு முயற்சிகளுக்கு தனிப்பட்ட முறையில் உறுதி தெரிவித்துள்ளன.

வரும் 2020க்குள் சீனா 45%, அமெரிக்கா 17%, ஐரோப்பிய ஒன்றியம் 20% அளவு கரிமக் கழிவைக் கட்டுப்படுத்த உறுதி தெரிவித்துள்ளன. இந்தியா தன் பங்குக்கு 25% கரிமக் கழிவைக் கட்டுப் படுத்துவதாக அறிவித்துள்ளது.

ஆகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, கரியமிலவாயுவை ஆக அதிகமாக வெளியேற்றும் நாடுகளான சீனா, இந்தியாவின் கடப்பாட்டை பொருத்து உலக பருவநிலை மாற்றத்தின் சீரழிவுகளை ஓரளவு தடுக்க முடியும்.

உலக வெப்பம் அதிகரித்ததற்கு வளர்ச்சி அடைந்த ஒரு சில நாடுகளே காரணம் என்ற பொழுதும், அதன் விளைவுகள் ஒட்டுமொத்த உலகத்தையுமே பாதிக்கிறது. பெரிய அளவில் நாடுகள் முயற்சி எடுக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் முயற்சி எடுத்தாலே அழிவைச் சிறிது குறைக்க முடியும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிரமப்பட்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. சூழலை மாசுபடுத்தும் செயல்களை நிறுத்தினாலே போதுமானது. பிரமாண்டமான இந்த உலகுக்கு நாம் பெரும் நன்மை செய்தவர்களாவோம்.

அழிந்து வரும் உலகம்

மாலத் தீவு 1,192 தீவுகளைக் கொண்ட தீவு தேசமாகும். உலகம் வெப்பமாகும் நிலையில் பனிக்கட்டிகள் உருகி, உலக கடல் நீர் மட்டம் அதிகரிக்கிறது. இதனால் தாழ்வாக உள்ள நிலப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் ஆபத்து அதிகரித்துள்ளது.குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மாலத் தீவு இந்நூற்றாண்டின் இறுதிக்குள் கடலுக்கடியில் மூழ்கிவிடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. கடல் மட்டம் 7 அங்குலம் உயர்ந்தாலும் கூட மாலத் தீவு முழுமையும் கடலுக் கடியில் சென்று விடும். இவ்வாறு ஏற்பட்டால் அந்நாட்டில் வாழும் 400,000க்கும் மேற்பட்டோர் பருவ நிலை மாற்றத்தால் அகதிகளாக்கப்படுவர்.

• தென் அமெரிக்காவிலுள்ள உலகத்தின் ஆகப் பெரிய அமேசோன் மலைக்காட்டில் 20% மரங்கள் ஏற்கனவே வெட்டப்பட்டுவிட்டன. அதேபோல் இந்தோனீசியாவிலும் பெருமளவு காடு அழிக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் வருகிறது. காட்டுவளம் அழிக்கப்படுவது உலக வெப்பம் அதிகரிப்பதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

• கடந்த 400 ஆண்டுகளில், கடைசி 20 ஆண்டுகளே பதிவு செய்யப்பட்டதில் ஆக அதிக வெப்பநிலையை கொண்ட ஆண்டுகளாகும். 1880களிலிருந்து இன்றுவரை உலக வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதனால் இந்நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் ஒரு மீட்டருக்கு மேல் உயரக்கூடும்.

• வட துருவத்தில் உள்ள உறைந்த பன¬படலங்கள் வரும் ஆண்டுகளில் 40% வரை உருகிவிடக்கூடும். அப்பகுதியிலுள்ள அனைத்து பனிப்படலங்களும் இந்நூற்றாண்டுக்குள் உருகிவிடும் என்று கணிக்கப்படுகிறது. அங்கு வாழும் பன¬க் கரடிகள் வாழ்விடங்களை இழந்து வருகின்றன.

• இமய மலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையாகத் தோன்றி உறைந்திருந்த பனியிலிருந்தே கங்கை ஆறு ஊற்றெடுக்கிறது. ஆயினும் இப்பனிக்கட்டிகள் மிக விரைவாக மறைந்து வருவதால், இந்துக்கள் புனித நதியாக கருதும் கங்கை முற்றிலுமாக வறண்டு போகும் வாய்ப்பு உள்ளது.

• சீனாவின் பருவநிலை பெரும் மாற்றம் கண்டு வருகிறது. முன்போல் பருவ மழை அங்கு பொழியாததால், நீண்ட வறட்சி ஏற்பட்டு ஆறுகள் வறண்டு போகும் என்று சுற்றுப்புர ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.

• உலகில் உற்பத்தியாகும் பெரும் பகுதி தானியங்கள் கால் நடைகளுக்கு கொடுக்கப்படுகின்றன. கால் நடைகளை பெருமளவில் வளர்ப்பதற்காக விளை நிலங்கள் அழிக்கப்படுகின்றன. உலகத்தில் உள்ள பெரும்பாலானோர் இறைச்சியை அதிகமாக உண்ணும் வழக்கத்திற்கு மாறியிருப்பதே இதற்கு காரணம்.

• கிலிமான்சாரோ மலை, மொன்டேனா தேசிய பூங்கா ஆகிய மலை பிரதேசங்களில் உள்ள மிகப் பெரிய பனிப்பாறைகள் பெருமளவில் உருகிவிட்டன. குறிப்பாக மொன்டேனா தேசிய பூங்காவில் 1910ம் ஆண்டு 150 பன¬ப்பாறைகள் இருந்தன, இன்று 30 மட்டுமே எஞ்சியுள்ளன.

சுற்றுச்சூழலை பாதுகாக்க நம்மால் முடிந்த 20 எளிய வழிகள்.

1. சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு நம்மால் தீர்வு காண முடியும் என்று நம்புவது.

2. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நம் தலைவர்களைத் தூண்டுவது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சிறிய முயற்சிக்கும் ஊக்கம் தருவது.

3. மறுபயனீடு செய்ய முடியாத ‘பிளாஸ்டிக்’ பைகளைத் தவிர்ப்பது. இதில் ஆண்டுக்கு 3% தான் மறுபயனீடு செய்யப்படுகின்றன. மாறாக மறுபயனீடு செய்யக்கூடிய பொருட்களால் ஆன பைகளைப் பயன்படுத்துவது.

4. உறங்குமுன் கணினி, வானொலி போன்ற மின் சாதனங்களை செயலிலழக்கச் செய்வது. இதன் மூலம் 83% கரியமில வாயு கசிவைக் தடுக்கலாம்.

5. கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்யாத நேரத்தில் சார்ஜரை கழற்றி வைத்து விடுவது. அதேபோல் மற்ற மின் சாதனங்களையும் பயன்படுத்தாத வேளைகளில் மின் இணைப்பைத் துண்டித்து விடுவது.

6. துணி துவைக்கும் மின் இயந்திரம் முழுமையான அளவு துணிகள் நிரப்பிய பின் துவைக்க விடுவது. துணி துவைக்க வெந்நீருக்குப் பதிலாக குளிர் நீரை உபயோகிப்பது. இதனால் கிட்டத்தட்ட 3 கிலொகிராம் எடை அளவுள்ள கரியமிலவாயு கசிவைத் தடுக்கலாம்.

7. அறையைவிட்டு வெளியேறும்போது விளக்குகளை அனைத்துவிடுவது. மின்சாரப் பயன்பாட்டை குறைக்கும் ஃபுளோரசன்ட் விளக்குகளை பொருத்தலாம்.

8. காபி கடைக்கு சொந்த கோப்பையைக் கொண்டு செல்வது. இதனால் பிளாஸ்டிக் கோப்பை பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.

9. பாட்டில் பாட்டிலாகக் குடிநீர் வாங்குவதைவிட, மறுபயனீடு செய்யக்கூடிய ஒரு பாட்டிலை வாங்கி தேவைப்படும் போது தண்ணீர் நிரப்பிக்கொள்வது.

10. நீண்ட நேரம் குளித்து தண்ணீரை விரயப்படுத்துவதைத் தவிர்ப்பது.

11. பல் துலக்கும்போது தண்ணீர் குழாயை அடைத்துவிடுவது.

12. காகிதத்தின் இரு பக்கங்களையும் பயன்படுத்திவிட்டு அதை மறுபயனீடு செய்வது. ஓவ்வோர் ஆண்டும் பயன்படுத்தப்படும் 8 மில்லியன் டன் எடையுள்ள காகிதத்தில் 9% மட்டுமே மறுபயனீடு செய்யப்படுகிறது.

13. முடிந்தவரை உள்ளூர் உணவையே உண்பது. எவ்வளவு தூரம் உணவு பயணிக்கிறதோ, அவ்வளவுக்கு கரியமில வாயு கசிவும் ஏற்படுகிறது.

14. முட்டைகளை காகித அட்டைப் பெட்டிகளில் வாங்குவது. இவற்றைப் மறுபயனீடு செய்யலாம்.

15. முடிந்தவரை இறைச்சி உண்பதை, குறிப்பாக மாட்டு இறைச்சியை குறைப்பது. இறைச்சித் துறை உலகின் 18% நச்சுவாயு கசிவை உண்டாக்குகிறது.

16. செய்தித்தாளைப் மறுபயனீடு செய்வது.

17. பரிசு சுற்றும் தாள்கள், ரிப்பன்கள், பூக்களை மறுபயனீடு செய்வது.

18. முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது அல்லது நடந்து செல்லுங்கள்.

19. மின்கலங்களை மறுபயனீடு செய்வது. ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 179,000 மின்கலங்கள் குப்பைகளில் வந்து சேர்கின்றன.

20. முடிந்த வரை சிகரெட் முதல் கரி, விறகு, குப்பைகள் வரை எதையுமே எரிப்பதைத் தடுப்பது.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>