இதழ் 13
ஜனவரி 2010
  மொழி ஆணால் உருவாக்கப்பட்டது...
வீ.அ. மணிமொழி
 
     
  நேர்காண‌ல்:

"அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக் கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்"

பி. உத‌ய‌குமார்

சிறப்புப் பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை


பத்தி:

தமிழகத்திலும் ஒரு நீரோ மன்னன்

அ. ரெங்கசாமி

அவஸ்தை
இராம. கண்ணபிரான்


கட்டுரை:

பிலிப் கலாஸ் : இசையின் தீராத‌ ப‌க்க‌ங்க‌ள்
அகிலன்

காற்று வேட்டை
கெ.எல்.

வரமா? சாபமா?
நெடுவை தவத்திருமணி

மொழி ஆணால் உருவாக்கப்பட்டது...
வீ.அ. மணிமொழி

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம்
என். செல்வராஜா

சிறுகதை:

குரங்கு
கிரகம்


பிரமைகள்
ஸ்ரீரஞ்சனி

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னிதரைப் போல‌ ...5
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...6
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...1
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன்


இரா. சரவணதீர்த்தா


மன்னார் அமுதன்

ஏ.தேவராஜன்

பதிவு:

மலேசியத் தமிழ்க் கவிதாயினிகளின் முதலாவது மலையருவிக் கவியரங்கம்
தினேசுவரி

புத்தகப்பார்வை:

விட்டு விடுதலை காண்
நிந்தவுர் ஷிப்லி

லும்ப‌ன் ப‌க்க‌ம்:


ஒரு கோமாளியின் வ‌ருகை...
லும்ப‌ன்

அறிவிப்பு:


அஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி

எதிர்வினை:


கடிதம்
     
     
 

மொழி கண்டுப் பிடிக்கப்படவில்லை. உருவாக்கப் பட்டவை. யார் முதன் முதலில் மொழியை உருவாக்கியது என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால், மொழி எப்படி உருவானது என்ற கேள்விக்குப் பதில் உண்டு. ஒலியில் பிறந்த அதன் சரித்திரத்தை ஆதாரங்களுடன் முன் வைக்க இயலும். மொழியின் உருவாக்கம் ஒரு கூட்டு பரிணாமம். அதன் தொடர்ச்சியை இன்றளவும் நகர்த்திச் செல்ல ஒரு மனித இயக்கம் தேவைப்படுகின்றது. இந்த மனித இயக்கத்தில் ஆண் பெண் இருபாலரும் உறுப்பினர்கள். ஆரம்பகால கட்டத்தில் ஒரு மொழி உருவாகுவதற்கு ஆண்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என மொழியியல் ஆய்வாளர்கள் பறைச்சாற்றுகிறார்கள். Dale Spender (1980), ‘மொழி ஆணால் உருவாக்கப்பட்டது’ (Man Made Language) என்கிறார். சில கூறுகளை ஆராய்ந்து பார்க்கையில் தொடக்க கால உலக மொழிகளாவிலும் ஆண்களின் பிம்பங்களைக் காண முடிக்கின்றன.

பண்டைக் காலத்தில், குடியிருப்பில் பெண்களைப் பாதுக்காப்பாக இருத்திவிட்டு ஆண்கள் உணவு, மரக்குச்சிகள் என நீரிலும் நிலத்திலும் தேடி அலைந்தனர். சொல்லுருவாக்கம் இல்லாத அக்காலக்கட்டத்தில் தங்களை ஒருவருக்கொருவர் அடையாளப்படுத்திக் கொள்ளவும் தொடர்ப்பு கொள்ளவும் அபாயங்களை விளக்கவும் ஒலியைப் பயன்படுத்திக்கொண்டனர். இவ்வகையான மொழியை ஒனோமதோப்பியா (onomatopoeia) என்று மொழியியலில் அழைப்பர். இந்த வகையான மொழி, மிருகங்கள் மற்றும் பறவைகளிருந்து பிறந்தவை. தேவைகளைத் தேடி அலைந்த ஆண் காட்டுவாசிகள் மிருங்கள், பறவைகளின் ஒலிகளை உள்வாங்கிக் கொண்டு மீண்டும் அதனை மேற்கூறிய நோக்கங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கினர்.

வளர்ச்சியின் காரணமாக ஒலிகளைத் தவிர்த்து, குறியீட்டுகளை அடையாளத்திற்கும் கருத்துகளைத் தெரிவிப்பதற்குப் ஆண் காட்டுவாசிகள் பயன்படுத்தத்தொடங்கினர். சிறு அல்லது பெரிய பாறைகளில் காட்டு மரங்களில் குகைகளில் படங்களை வரைந்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அன்றையக் காலத்தில் ஆண்கள் பெண்களைவிட கற்பனைத் திறன் உடையவர்களாய் காணப்பட்டனர். மாறுபட்ட சிந்தனை ஆற்றல் கொண்டிருந்தனர். இதன் தேக்கமாக அவர்களால் பல ஆயுதங்களையும் குடிசைகளையும் உருவாக்க முடிந்தது. தன்னைச்சுற்றியுள்ள சிறு துரும்புகளைக் கொண்டும்கூட சூழ்நிலையைத் தற்காத்து கொள்ளும் ஆற்றல் அவர்களிடம் அதிகமாகவே இருந்தது எனலாம்.

சில பரிணாம வளர்ச்சிக்குப் பின்னர், நிலத்தில் வாழக் கற்றுக் கொண்ட மக்கள் வீட்டை அடைக்காக்க பெண்களை நியமனம் செய்தனர். தொடர்ந்து ஆண்கள் பொருள் ஈட்ட வெளியே சென்றார்கள். இதனால், தன்னைச் சார்ந்த, தன் வேலையைச் சார்ந்த, தன்னைச்சுற்றியுள்ளவர்களைச் சார்ந்த சொற்களையும் வாக்கியங்களையும் உவமைகளையும் உருவாக்கிக் கொண்டனர். தொழிற்துறை சார்ந்த ஆங்கில சொற்களைக் எடுத்துக்கொண்டால், பெரும்பாலான சொற்கள் ஆண்களின் ஆதிக்கத்தைக் குறிப்பவையாக அமைந்துள்ளன. Chairman, businessman, fireman, scientist, driver, artist, poetry போன்ற சொற்கள் தொழிற்துறையின் மீதான ஆதிக்கத்தைச் சுட்டுகிறது. (ஆனால் இன்றையச் சூழலில் அனைத்து தொழிற் துறைகளிலும் பெண்கள் சரிநிகராக நிமிர்ந்து நிற்கத் தொடங்கிவிட்டனர்.) பெண்களைவிட ஆண்கள் அதிக அனுபவசாலிகளாகவும் திகழ்ந்தனர். இவர்கள் அதிகமான அனுபவங்களைப் பெற்றிருந்ததால் பெண்கள் இவர்களின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட தொடங்கினார்கள்.

ஆண்கள் தங்களை வீரர்களென்றும் சக்திவாய்ந்தவர்களென்றும் படம் பிடித்துக் காட்டிக்கொண்டனர். அதே சமயம் இவர்கள் பெண்களைப் பலவீனமானவர்கள், காமத்தின் இன்பம், பொறாமைகாரர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள் என முத்திரையையும் மொழியில் பதித்தனர். இது போன்ற ஆண்களை மேல்நோக்கியும் பெண்களைக் கீழ்நோக்கியும் புலப்படுத்தும் சொற்களின்வழி பெண்கள் மொழியை உருவாக்கவில்லை என தெளிவாகத் தெரிகிறது.

காலம் கடந்து செல்ல செல்ல மனிதர்கள், பரிணாம வளர்ச்சிகளுக்கு ஏற்ப சிந்தனைகளையும் செயல்களையும் மாற்றியமைத்து கொண்டனர். அவ்வகையில் மொழியும் மாற்றமடைந்திருக்கிறது. முன்பு ஒரு சாராரை மட்டும் சார்ந்திருந்த மொழி தற்பொழுது ஆண்-பெண் என இருபாலருக்கும் பொதுவாக அமைந்து விட்டது. ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த சொற்களின் மீது பெண்களும் ஆதிக்கத்தைக் கொண்டாட தொடங்கி விட்டனர். ஆணுக்கு நிகராக பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தங்களுக்கேற்ற தன்பாலைச்சார்ந்த சொற்களையும் உருவாக்கிக் கொண்டர். உருவாக்கியும் கொண்டிருக்கின்றனர்.

ஆகவே இக்கால மொழியியல் சூழல், மொழியை ஆண்மொழி-பெண்மொழி என வரையறுக்க தொடங்கலாயிற்று. இருபால்களும் ஒரு மொழியைப் பேசும் வேகம் கொண்டும் மொழியில் பயன்படுத்தப்படும் சொற்கள் கொண்டும் தொனியைக் கொண்டும் வரையறுத்துக் கொள்ளபடுகிறது. இதன் மீதான ஆய்வுகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மிக துல்லியமாக நடத்தப்படுகின்றது.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>