வல்லினத்திற்கு படைப்புகளை அனுப்பும் எழுத்தாள நண்பர்கள், வேறு இணைய
இதழ்களிலோ அல்லது
அச்சு இதழ்களிலோ ஏற்கனவே பிரசுரமான படைப்புகளை அனுப்ப வேண்டாமென
கேட்டுக்கொள்கிறோம் - ஆசிரியர் குழு
பத்தி: காப்புரிமை (Copyright) - அறியாமையில் இந்தியர்கள் அகிலன் இசை மட்டுமே தெரிந்த பல இசை கலைஞர்கள் தற்கொலைக் கூட செய்துகொள்கிறார்கள் என்று யுவன் சங்கர் ராஜா ஒரு முறை என்னிடம் கூறியிருக்கிறார். இசைத் துறையை சார்ந்திருக்கும் அனைத்து நபர்களையும் இந்த கள்ளப்பதிப்பு பாதிக்கிறது. இசையின் தரமும் கூட இதனால் குறைந்து வருகிறது என்றுகூட சொல்லலாம். கட்டுரை: சொற்களில் சிக்கித் தவித்த காலமும் இலக்கியமும் யதீந்திரா இன்றைய சூழலில் இலக்கியம் மற்றும் சமூகம் குறித்து நாம் விவாதிப்பதாயின் கடந்த காலம் குறித்த தெளிவான விமர்சனப் பார்வையொன்று நமக்குத் தேவை. விமர்சனமென்றவுடன் விழுந்தவர்களை ஏறி மிதிப்பதென்பதல்ல அதன் அர்த்தம். நம்மை நாமே சுய விசாரணையொன்றுக்கு உட்படுத்துவது நமது சிந்தனைகளை மீளவும் ஓர் உரையாடல் பரப்பிற்குள் கொண்டுவந்து அலசி ஆராய்வது.
பத்தி: இயற்கை (1) - கோடை எம். ரிஷான் ஷெரீப் கோடை காலங்களில் எனது ஊரில் கிணறுகளருகில் பெண்கள் பெரும் முணுமுணுப்போடுதான் குடங்களில், வாளிகளில் நீரள்ளிப் போவதைப் பார்த்திருக்கிறேன். வெயில் தன் தாகம் போக மிச்சம் வைத்த நீர் கிணறுகளின் அடி ஆழத்தில் அமைதியாக, பாவமாகக் கிடக்கும். வற்றிப் போய், அடியில் சொற்பநீர் ஏந்தியபடி இருக்கும் அதி ஆழமான கிணறுகளில் தண்ணீரள்ள அதிகபட்சப் பிரயத்தனமும் சக்தியும் வேண்டும். பத்தி: அகிரா குரோசவாவின் 'இகிரு' : வாழ்வதின் பிரியம் சு. யுவராஜன் நெடுநாட்களாக பார்க்க எண்ணியிருந்த ‘இகிரு’வின் டிவிடியைச் சென்ற ஆண்டுதான் காளி வாங்கியிருந்தார். நான் இகிருவை பார்ப்பதற்காக துடித்துக் கொண்டிருந்ததிற்கு முக்கிய காரணம் மார்லோன் பிராண்டோதான். ஒரே துறையை சார்ந்தவர்கள் மற்றவர்களின் திறமையைப் பாராட்டுவது அரிது. இகிருவை பார்த்துவிட்டு அசந்து போய் மனதார தன் நண்பர்களிடம் பாராட்டி பேசினாராம் பிராண்டோ.
பத்தி: பிக்காசோவும் சரஸ்வதி அக்காவும்! சந்துரு சரஸ்வதி அக்காவின் வளர்ச்சி என்னை பிரமிக்க வைத்தது. கணினியில் வடிவமைப்பதிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் வேகமாகத் தட்டச்சு செய்வதிலும் தேர்ந்தவராக இருந்தார். மீண்டும் மாணவனாக சரஸ்வதி அக்காவிடம் கணினி வடிவமைப்பு பயில ஆரம்பித்தேன். அவர் கற்றுக் கொடுப்பது எளிமையாகவும் சுலபமாகவும் புரிந்து விடும்.
பத்தி: உண்மை என்னவெனில் - 95 சதவிகித எழுத்தாளர்கள் எழுதுவதை வெறுப்பவர்கள்! சீ. முத்துசாமி எழுதுவது என்கிற செயல்பாடு குறித்தும் அவர் வித்தியாசமான எண்ணத்தை முன்மொழிகிறார். பலரும் எழுதுவது என்கிற மனித செயல்பாடு குறித்து ஒரு ரொமான்டிக் கற்பனையை வகுத்து வைத்துள்ளனர். எழுதுபவர்கள் எப்போதும் சுகமான ஓரிடத்தில் அமர்ந்து தங்களது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு வார்த்தைகளை கொட்டுகின்றனர் என்பது போல.
கட்டுரை:: தெலுங்கானா - காங்கிரஸின் கோரத்தாண்டவம் நெடுவை தவத்திருமணி தனி தெலுங்கானா அமைய ராஷ்ட்ரிய சமிதி என்ற கட்சியை உருவாக்கிய சந்திர சேகரராவுடன் இணைந்து கொண்டு காங்கிரஸும் தனி தெலுங்கானா ஆதரவுக்கு தெரிவித்து தேர்தலில் நின்றன. ஜெயித்த பிறகு மத்திய அமைச்சரவையில் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் தெலுங்கானாவையும் சேர்த்துக் கொண்ட காங்கிரஸ் அதன்பிறகு மூச்சே விடவில்லை.
திரைவிமர்சனம்: அங்காடித் தெரு : மீந்திருக்கும் வாழ்வு ம. நவீன் கதையின் களமான பேரங்காடியில் பணிபுரியும் இளைஞர்கள், யுவதிகள் உண்ணும் மற்றும் உறங்கும் இடங்கள் போன்ற சூழலின் மெய்தன்மை குறித்தச் சந்தேகங்கள் தீர இங்குப் பணிபுரியும் சில தமிழகத் தொழிலாளர்களைச் சந்தித்தேன். அவர்கள் சித்தரித்தக் காட்சி திரையில் கண்டதைவிட கோரமாக இருந்தது.
சிறுகதை:
சிறகு
சு. யுவராஜன் அக்காவுக்குத் தோள்களில் இரு வெள்ளைச் சிறகுகள் முளைத்தன. வெள்ளை பட்டாம் பூச்சிகளின் கூட்டத்தோடு இணைந்து ஓடையின் மேல் பறக்கத் தொடங்கினாள். சிறகை அசைக்கும்போது உதிரும் பனி அக்காவின் உடலில் சிலிர்ப்பை உணரச் செய்தது.
சிறுகதை:
ஓரங்க நாடகம்
ஸ்ரீரஞ்சனி முதலில் வந்த அபர்ணா குழு மன உணர்ச்சிகளுக்கும் அவற்றைக் கையாளும் முறைகளுக்கும் உதாரணமாக நாம் அன்று படித்த ஒரு சம்பவத்தை நாடக-மாக்கினார்கள். ஆரம்பத்தில் இரண்டு சிநேகிதிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் அதில் ஒருவர் மூன்றாமவருடன் விளையாடப் போக மற்றவருக்கு கவலை வருகிறது.
சிறுகதை:
சுவீர்
கிரகம் சுவீரின் அலுவலகத்தில் பல அழகான பெண்கள் இருந்தாலும் அவனுக்கு பிடித்தமான பெண் ரீமா. அவள் அணிந்து வரும் தொடையிலிருந்து கால் வரையிலான இறுக்கமான ஜீன்ஸ்பேண்டும் மார்பகங்களை வெளித்தள்ளிக் கொண்டு இருக்கும் டீ-சர்ட்டும் சுவீரை அதிகம் கவர்ந்திருந்தது.
தொடர்: செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...10 சீ. முத்துசாமி ஒருநாள் எனது தேடலுக்கும் ஆவலுக்கும் ஆசிர்வாதம் கிடைத்திருந்தது. வீட்டை நெருங்கும்போதே கண்களில் பட்டது. கூட்டில் வாசலிலிருந்து வெளிப்பட்டு பறந்தது ஒரு சிட்டு. சில நாட்களில் எல்லாக் கூடுகளிலும் குடித்தனம் தொடங்கிவிட்டிருந்தது.
தொடர்: எனது நங்கூரங்கள் ...9 இளைய அப்துல்லாஹ் ஞாயிற்றுக் கிழமை அவசர அவரசரமாக எனது கிறிஸ்தவ நண்பன் ஒருவன் தேவாலயத்துக்கு ஓடிக் கொண்டிருந்தான். “என்ன விசயம்? ஏன் இவ்வளவு அவசரமா சேர்ச்சுக்கு ஓடுகிறாய்” என்று கேட்டால் “தேவாலயத்தில் பாதரின் கண்ணில் பட வேண்டும் அதற்காகத்தான்” என்கிறான்.
தொடர்: நடந்து வந்த பாதையில் ...4 கமலாதேவி அரவிந்தன் பொதுவாகவே, நவீன நாடகங்களில், கதைக்கும், நடை முறைக்கும் பொருத்தமே இருப்பதில்லை. ஆசிரியர் முத்து சாமியின் ”நாற்காலிக்காரர்” நாடகத்தில் முழுக்க முழுக்க வசனங்களையே குறியீடாக பயன்படுத்தியதை, இங்கு குறிப்பிடவேண்டும்.