வல்லினத்திற்கு படைப்புகளை அனுப்பும் எழுத்தாள நண்பர்கள், வேறு இணைய
இதழ்களிலோ அல்லது
அச்சு இதழ்களிலோ ஏற்கனவே பிரசுரமான படைப்புகளை அனுப்ப வேண்டாமென
கேட்டுக்கொள்கிறோம் - ஆசிரியர் குழு
கட்டுரை: முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும் மா. சண்முகசிவா எங்களிடையே தொங்கிய மாயத்திரைகள் மெல்ல மெல்ல விலக நேயமிக்க உணர்வுகளை இப்பொழுதெல்லாம் உணர முடிகிறது. குற்றமும் அவமான உணர்வுகளும் நீங்கிய முகங்களில் அன்பின் இதமான அசைவுகளும் மகிழ்வின் மங்கிய ரேகைகளும் தென்பட ஆரம்பித்தன. இலேசாகக் கதவு திறக்கப்படும் போது சிலர் வேறு சிறைகளுக்கு மாற்றப்படுவது வருத்தமளித்தது. அவர்களை எங்கே, எப்படி தொடர்வது?
கட்டுரை: ஜன நாயகத்தை கேலிக்கூத்தாக்கும் டிவி சேனல்கள் நெடுவை தவத்திருமணி தொலைக்காட்சிகள் மக்களுக்கு விரோதமான, ஏமாற்றுப் பேர்வழிகளின் விளம்பரங்களை எந்த வித உறுத்தலும் இல்லாமல், எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாக வெளியிடுகின்றன. அவ்வகை விளம்பரங்களால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பது தெரிந்தே தவறு செய்பவர்களுக்கு துணை போகின்றன.
பத்தி: அவதாரும் ஆத்தாவும்! ம. நவீன் பூசி குட்டிப்போடும் போது அம்மா எங்களைப் பார்க்கவிடவில்லை. அது நான்கு குட்டி போட்டதாகவும் ஒரு குட்டியைப் பூசியே சாப்பிட்டுவிட்டதாகவும் அம்மா கூறினார். பூசி மீதமிருந்த தனது மூன்று குட்டிகளை வாஞ்சையோடு நக்கிவிட்டபடி இருந்தது. ஆத்தா எங்கள் கண்களில் படாமல் பூசி தின்று மீதம் வைத்திருந்த இறந்த குட்டியின் தலையை மட்டும் எடுத்து வெளியில் புதைத்தார். அப்போது ஆத்தாவிடம் எந்தச் சலனமும் இல்லை. பத்தி: செறுத்துறுத்தி உண்ணிகிருஷ்ணன் கமலாதேவி அரவிந்தன் விமானத்தில் மீண்டு சிங்கை வந்தால், வரிசையாக நிகழ்வுகள். மீண்டும் பயணங்கள் இவள் எதிர்பாராதது. அடுத்தடுத்து, பினாங்கு, சிரம்பான், ரவாங் எனத் தொடர்ந்த பயணங்கள், என்னமோ நிமித்தம்போல் அமைந்துவிட்டது. இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு. பயண அலுப்பும், உடல் சோர்வுமாய் தொலைபேசியை எடுத்தால்,
”ஹலோ கமலம்! எந்தா மனசிலாயில்லே?” என்று கேட்க, உண்மையிலேயே அவளுக்குப்புரியவில்லை. பத்தி: இயற்கை (2) - நதி எம். ரிஷான் ஷெரீப் நதிகள் எதையும் தூய்மைப்படுத்தி அனுப்புவதைத் தம் சேவையாகக் கொண்டிருப்பினும் அதன் மனதிற்குள் திருட்டுப்புத்தியும் ஒளிந்திருக்கிறது. ஆண்கள் சவர்க்காரங்களையும் துணிகளையும் தூண்டில்களையும் அதன் நீருக்குள் தொலைத்துவிடுவதுபோல எல்லாவற்றிலும் கவனமாக இருக்கும் பெண்கள் கூட தங்கள் அணிகலன்களை நதிகளில் தொலைத்துவிடுகிறார்கள். நதியும் உடனே அவ் ஆபரணங்களை எடுத்துத் தனக்குள் இருக்கும் பரந்த கற்களிடையே, பாசிகளிடையே ஒளித்து வைத்துவிடுகின்றது. பத்தி: அந்தப் போலிஸ்காரர்களும் இந்தப் போலிஸ்காரரும் தோழி முதலாளி கவலை தோய்ந்த முகத்தோடு புகைப் பிடித்தப்படி வெளியில் நின்றிருந்தார். என்னைக் கண்டதும் தலையை இடதும் வலதுமாக ஆட்டினார். கதவு கம்பி நெம்பப்பட்டு வெளியேத் தொங்கிக் கொண்டிருந்தது. மெலிந்த உடலைக் கொண்டவர் இலகுவாக உள்ள நுழையும் அளவு ஓட்டை. நாங்கள் உள்ளே நுழைந்தபோது பொருட்கள் அங்கும் இங்கும் சிதறி அலங்கோலமாக இருப்பதைக் கண்டோம். பத்தி: எஞ்சி இருக்கும் காகிதமும்... கொஞ்சம் பிரியமும் வீ. அ. மணிமொழி அன்றைய மாலை வேளையில், தமிழ்நேசனில் வெளிவந்த அந்தச் செய்தியை வெட்டி வைத்தேன். அவர் கேட்கும் போது விரைவில் எடுத்துக் கொடுக்க இலகுவாக இருப்பதற்காக வெட்டிய செய்தியைத் எனது தகவல் பலகையில் ஒட்டினேன். திடீரென அம்மாவின் ஞாபகம் முளைத்துக் கொண்டது. பெரும்பாலும், அம்மாவைப் பற்றிய பிரக்ஞை என்னிடம் நெருங்காமல் இருப்பதில் மிகவும் தீவிரமாக இருப்பேன்.
சிறுகதை:
மோதிக்கொள்ளும் காய்கள்
ராம்ப்ரசாத் இடம் மாறி படுத்தும் கனவுகள் நிற்கவில்லை. அதெப்படி ஒரே கனவு மீண்டும் மீண்டும் வருகிறதென்றும் விளங்கவில்லை. ராகவன் தீர்க்கமாய்
யோசித்துக்கொண்டிருக்கும் போதே அந்த குரல் கேட்டது.
சிறுகதை:
தயக்கம்
மதன். எஸ் ராத்திரி கொள்ளையா இருக்கு, ஒரு தோசைக்கு 38 ரூபாயா. இதுக்கு பத்து ரூபாய்க்கு ஒரு முழு சாப்பாடே சாப்பிடலாமே என திருவனத்தபுரம் மருத்துவ கல்லூரியை ஒட்டி, அவன் பயிற்சி வகுப்பு நடக்கும் இடத்தில் இருந்த உணவு விடுதிக்கு சென்றான். பத்து ரூபாய்க்கு ஒரு முட்டை கறியும், முழு சாப்பாடும் சாப்பிட்டு விட்டு வந்தான்.
தொடர்: எனது நங்கூரங்கள் ...10 இளைய அப்துல்லாஹ் புருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு இன்ஸ்றட் இல்லாத பெண்மணி.
தொடர்: நடந்து வந்த பாதையில் ...5 கமலாதேவி அரவிந்தன் ஆசிரியர் முத்துசாமி அட்டகாசமாக சிரித்தார், வீரபாண்டிய கட்டபொம்மன் மீசையை திருகி விட்டுக்கொண்டே, கேட்டார். ’கமலாதேவி, பார்த்தீர்களா? சேரியில் தான் இலக்கியம் வாழ்கிறது, என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா?’ என்றபோது இவள் பேசவே இல்லை. இதை விட வேடிக்கை மறுநாளே நடந்தது.