வல்லினத்திற்கு படைப்புகளை அனுப்பும் எழுத்தாள நண்பர்கள், வேறு இணைய
இதழ்களிலோ அல்லது
அச்சு இதழ்களிலோ ஏற்கனவே பிரசுரமான படைப்புகளை அனுப்ப வேண்டாமென
கேட்டுக்கொள்கிறோம் - ஆசிரியர் குழுலும்பினி (www.lumpini.in) இதழில் இடம்பெற்ற வல்லினம் ஆசிரியர் ம. நவீனின் நேர்காணல்,
வல்லினம் வாசகர்களுக்காக ம. நவீன் பக்கங்களில் மறுபதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பத்தி: வற்றிப்போகும் சினிமா இசை! அகிலன் இன்று சினிமாவின் கரம் வலிந்து, சினிமா இசைக்காக சில வரையரைகளை வகுத்து அதற்குள்ளாகவே இசையை பயணிக்க கட்டளையிட்டிருக்கிறது. அதனாலேயே பெரும்பாலான திறனாலிகள் கற்பனை வறட்சியுடையவர்களாக தென்படுகிறார்கள். எஸ். தமன், முஹமட் ரிஜ்வான், சதீஸ் சக்கரவர்த்தி என்று பல புதிய திறமைசாலிகளை சினிமா, திரையிட்டு மறைக்கக்கூடும்.
பத்தி: இயற்கை (5) - கடல் எம். ரிஷான் ஷெரீப் உலகின் மூன்றிலிரண்டு பங்கை ஒரே நேரத்தில் உங்கள் கண்களில் நிரப்பிக் கொள்ள முடியுமா? முடியும். கடலைப் பார்ப்பதன் மூலம் நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள். கடல் ஒரு மாயக் கிடங்கு. அது காலத்தின் இரகசியங்கள் பலவற்றைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஒரு மனநோயாளியைப் போல, வெளியுலகுக்குக் காட்டிடாத பல உயிர்களை, புதையல்களைத் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது.
பத்தி: மெக்சிகன் சூப்பர் ஹீரோ - எல் சேன்டோ (El Santo) கிரகம் ஹைய்தராபாத் ஃபிலிம் கிளப்பில் 'Mexican Film Festival' நடத்தப்பட்டது. ஜந்து தொகுப்புகள் கொண்டது. முதல் தொகுப்பாக மெக்சிகன் சூப்பர் ஹீரோ எல் சேன்டோ நடித்த ஜந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் நான்கு திரைப்படங்கள் பார்த்தேன். திரையிடப்பட்ட படங்கள் 1963 முதல் 1972 க்குள் வெளியானவை. எல் சேன்டோ மெக்சிகன் சினிமாவின் சூப்பர் ஹீரோ.
கட்டுரை: கூட்டணிகளால் கொள்ளை போகும் இந்திய ஜனநாயகம் நெடுவை தவத்திருமணி அரசியல் கட்சிகள் தரமானவையாக இருந்தால் தான் ஜன நாயகம் தழைத்தோங்கி மக்கள் சந்தோஷமுடன் வாழ்வார்கள். ஆனால் இந்தியாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் போக்கினால் இந்தியா சுக்கு நூறாய் சிதறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கிடையே தங்களின் அரசியல் லாபத்திற்காக விரோத மனப்பான்மையை வளர்க்கின்றார்கள் அரசியல்வாதிகள்.
கட்டுரை: மண்ணின்றி வளரும் மரங்களும் சிங்கை இலக்கியமும் லதா நிலம் பார்த்து, அதற்குத் தோதான மரம் பார்த்து, வளரும் இடம் பார்த்து, பார்த்துப் பார்த்துத்தான் மரங்களை வளர்க்கிறார்கள். ஆனாலும் மரங்கள் விழுகின்றன. இப்போது அதிகம் விழுகின்றன. இந்த மரங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது, சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் நினைவில் வந்தது.
கட்டுரை: காதல் விபரீதங்கள் சந்தியா கிரிதர் ஆறு வயது பெண் குழந்தையோடு, ஏலம்மா வீட்டுக்கு அருகே ஒரு சின்ன அறை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, தனியார் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருக்கும் அல்பனா ஒரு
சாதாரண வாழ்க்கையை வாழ முனைந்தாலும் மனம் மட்டும் அந்த ஆழமான காயங்களை மறக்க முடியாமல் மௌனமாக அழுது கொண்டிருக்கிறது.
எதிர்வினை: இலக்கிய விவாதமும் அக்கப்போர்களும்! முனைவர் எம். எஸ். ஸ்ரீ லஷ்மி “சிங்கப்பரின் தமிழ்க் கவிதைச் சூழல் 90களுக்குப்பிறகு” என்னும் எனது கட்டுரைக்கு எதிர்வினை என்ற பெயரில் பல அக்கப்போர்கள் வந்துள்ளன. “சூன்யா” என்னும் பெயரில் கொச்சைத் தமிழில் பண்பற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித் தனிமனிதத் தாக்குதலில் ஒருவர் ஈடுபட்டிருப்பதைக் கண்டேன். இப்படிப்பட்ட சூன்யங்களுக்குப் பதில் எழுதுவது தரக்குறைவான வேலை. ஆகவே சூன்யா சூன்யமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!
சிறுகதை:
போலீஸ் வந்துவிட்டால்...
ராம்ப்ரசாத் கதிருக்கு தன் கண்களைத் தன்னாலேயே நம்ப முடியவில்லை. கணிப்பொறித் திரையையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். திரையில் ஒரு பெண். இருபத்தைந்து வயது இருக்கலாம். திருமணமானவள் போலத் தோன்றவில்லை. வாளிப்பான உடல். முகம் தெரியவில்லை.
சிறுகதை:
சங்கமம்
கிரகம் திருமணம் முடிந்த பின்பு மாலாவையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு கிளம்பினேன். திருமணம் முடிந்த பல நாட்கள் அவளுடன் உடலுறவிலே கழிந்தன. அவளைப்பற்றி அறிந்து கொள்ளவே எனக்கு பல மாதங்கள் ஆகின.
தொடர்: அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...2 எம். ஜி. சுரேஷ் பழைய கோட்பாடு கடவுளை மையமாக்கினால், புதிய கோட்பாடு பகுத்தறிவை மையமாக்குகிறது. எப்படி சக்கரம் சுழல்வதற்கு மையத்தில் அச்சாணி தேவையோ, அதைப்போலவே கோட்பாடு சுழன்று இயங்குவதற்கு அச்சாணியாக ஒரு மையம் தேவை.
தொடர்: எனது நங்கூரங்கள் ...13 இளைய அப்துல்லாஹ் அம்மம்மா எனது அன்புக்குரியவர். அவவின் அன்பு அளவுகடந்தது. அம்மம்மாவின் பாலுண்ணிதான் எனக்கு மிகவும் பிடித்தமானது. அது அம்மம்மாவின் முதுகின் இடது பக்க சள்ளைக்கு மேலால் திரண்டு அழகான ஒரு சின்ன கொட்டப்பாக்கு அளவில் இருக்கும்.
தொடர்: நடந்து வந்த பாதையில் ...8 கமலாதேவி அரவிந்தன் அன்றுமாலையே பசுபதியும், சந்திரா, கலைராணி என இவளுக்கு சென்னைத்தமிழைப்பற்றி விளக்கமாகச் சொல்லிக்கொடுத்தார்கள். மறக்கவே முடியாத பலசொற்களுண்டு, ஆனால் இன்று நினைத்தாலும் சிரித்துச் சிரித்து கண்ணீர் வரும் வரிகள் ஒன்றுண்டு. என்ன தெரியுமா?