முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 32
ஆகஸ்ட் 2011

  யார் இந்த அம்பிகா சீனிவாசன்?
கே. பாலமுருகன்
 
 
       
நேர்காணல்:

"இலக்கியவாதிகள் உண்மைக்குக் குரல் கொடுக்க வேண்டும்"

சமாட் சைட்



பத்தி:

யார் இந்த அம்பிகா சீனிவாசன்?

கே. பாலமுருகன்

சுரண்டப்படும் மலேசிய எழுத்தாளர்கள்

ம. நவீன்



கட்டுரை:

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி : ஆளுமைகளின் சேர்க்கை
லதா

நான் உதவ முடியாது!
அ. முத்துலிங்கம்

உணர்வுசார் நுண்ணறிவு (EQ) குறித்து நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?
சிவா பெரியண்ணன்



சிறுகதை:

கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது
கே. பாலமுருகன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...14
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...22

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

சமீபத்தில் கோலாலம்பூர் எங்கும் நடந்தேறிய பெர்சே 2.0 பேரணியைத் தலைமைவகித்து நடத்திய அம்பிகா சீனிவாசன் அவர்கள் யார் எனும் கேள்வி மலேசியா முழுவதும் பெரும் அதிர்ச்சியுடன் பரவியது. போதாததற்கு அரசாங்க தொலைக்காட்சிகளில் ‘பெர்சே’வில் கலந்துகொள்ள கூடாது என எச்சரிக்கைகளும் விளம்பரங்களும் தொடர்ந்து ஒளிபரப்பாகின. அவரைச் சிறுமைப்படுத்தி பல குறுந்தகவல்கள் பரப்பப்பட்டு நாடெங்கும் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதில் முக்கியமானதாக நண்பர் மஹாத்மன் என்னிடம் காட்டிய குறுந்தகவல் முகத்தைச் சுழிக்கச் செய்தது. 'பயங்கரவாதி இந்து பெண்' எனும் வகையில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் டத்தோ அம்பிகா வசைப்படுத்தப்பட்டிருந்தார். இவை யாவும் அவருடைய பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே கூட்டாகச் சேர்ந்து செய்யப்பட்டது என நினைக்கிறேன்.

வெறும் பேரணியின் மூலம் வெளிப்படும் எதிர்வினைகளை வைத்து அம்பிகா அவர்களைப் புரிந்துகொள்ள நினைப்பது அல்லது அடையாளப்படுத்த நினைப்பது தவறானதாகும். 2009 ஆம் ஆண்டு டத்தோ அம்பிகாவுக்கும் மேலும் உலக நாடுகளைச் சேர்ந்த 8 பேருக்கும் சிறந்த துணிகரமிக்க பெண்மணிக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அந்த விருது வழங்கும் நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் செயலாளரான ஹில்லரி கிலின்டன் டத்தோ அம்பிகாவை இப்படி அடையாளப்படுத்தினார், “அம்பிகா அவர்கள் மலேசியாவின் மிக விநோதமான ஆளுமை படைத்தவர். மலேசிய சூழலில் அவருடைய வித்தியாசமான அடைவுகள் கவனிக்கத்தக்கதாகும். புதிய சட்ட சீர்த்திருத்தங்களையும் செயலாக்கங்களையும் உருவாக்கும் வல்லமை படைத்தவர். நிர்வாகத் திறமையும் நீதிதுறையும் புதிய மாற்றங்களைக் கொண்டு வரவும் அம்பிகா தொடர்ந்து கடமையாற்றி வருவது பாராட்டத்தக்கது. பெண்களுக்கு மத்தியில் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மதச் சகிப்புத்தன்மையை எல்லோர் மனதிலும் விதைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவருடைய இந்தச் சேவைகள் அவரை உலகின் சிறந்த பெண்மணியாக அடையாளப்படுத்துகிறது. ஆகையால் அவரின் பங்களிப்பையும் சேவையையும் அங்கீகரிக்கும் வகையில் அவர் இந்த மேடையில் கௌரவிக்கப்படுகிறார்.”

1975-இல் தலைமை சட்ட மாணவியாக புக்கிட் நெனாஸ் இடைநிலைப்பள்ளியில் அம்பிகா சீனிவாசன் அவர்களின் பயணம் தொடங்கியது. ஜூலை 2011-இல் அம்பிகா சீனிவாசனுக்கு அல்மா மாட்டெர் பல்கலைக்கழத்தால் சட்டத்துறைக்கான டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. ஒரு வழக்கறிஞராக அம்பிகா அவர்கள் தனது உயரிய சேவையை வழங்கியதற்காகவும் 3 ஆண்டுகள் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகப் பணியாற்றியதற்காகவும் இந்த டாக்டர் விருது அவருக்கு வழங்கப்படுகிறது. 30 ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணிப்புரிந்த அம்பிகா அவர்கள் வெவ்வேறு துறையிலும் சட்ட ஆலோசகராகச் சேவையாற்றிய அனுபவமுடையவர்.

அவர் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்தபோது, பல முஸ்லீம் மத அமைப்புகளையும் மீறி, ஷரியா மற்றும் மத சுதந்திரம் உரிமைகள் தொடர்பான ஒரு கலந்துரையாடல் அரங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அம்பிகா சீனிவாசன் 2008 ஆம் ஆண்டில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் என்ற முறையில், உலக மனித உரிமை ஆணையத்துடன் இணைந்து ஒரு குழுவை உருவாக்கினார். அதன் பிறகு, 1988 ஆம் ஆண்டு சட்ட ஒழுங்கில் ஏற்பட்ட சிதைவையும் தேக்கத்தையும் ஆராய்ந்து அறிக்கை விடப்பட்டது. மேலும் அதிகார மீறல்களைத் தொடர்ந்து கவனித்து கண்டிக்கவும் இந்தக் குழு செயல்பட்டது.

2007இல் ஜூன் 15 முதல் 17 ஆம் திகதி வரை மலாக்கா நகரத்தில் மலேசிய வழக்கறிஞர் மாநாடு நடந்தேறியது. அதில் கலந்துகொள்ள வந்த மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் அம்பிகா அவர்களை நேர்காணல் செய்யப்பட்டது. என் பார்வையில் இதை ஒரு முக்கியமான நேர்காணலாகக் கருதுகிறேன். எனவே இதை தமிழாக்கம் செய்து உங்கள் வாசிப்பிற்குத் தந்துள்ளேன். ஒருவகையில் இந்த நேர்காணல் பின்னாட்களில் அம்பிகா சீனிவாசன் அவர்கள் முன்னெடுத்த விடயங்களுக்கு ஒரு தொடக்கமாகவும் படுகிறது.

கேள்வி : மார்ச் 2007க்குப் பிறகு இந்த வழக்கறிஞர் மன்றத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற உங்களின் அனுபவம் எப்படி இருக்கிறது?

அம்பிகா: வேறெதுவும் தலைமை பொறுப்புக்கான தகுதிகளை உருவாக்கிவிட முடியாது. அதனை ஏற்றுக்கொண்ட பிறகே தலைமைத்துவத்தைப் பழகிக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். என் வாழ்வின் பெரும்பான்மையான பகுதியை அது பிடுங்கிக் கொண்டது எனத்தான் சொல்ல வேண்டும். இருப்பினும் இதை நான் ஒரு புகாராக முன்வைக்கவில்லை. மாறாக இந்தத் தலைமை பொறுப்பு எனக்கு அதிகமான சவால்களையே கொடுத்திருக்கிறது. சவால்களை விரும்பக்கூடிய ஒரு மனபோக்கு உடைய எனக்கு அது பிரமிப்பையே தருகிறது.

இந்தப் பொறுப்பில் இருந்த காலக்கட்டத்தில் எத்தனையோ வகையான பிரச்சனைகளை நான் சந்தித்துவிட்டேன். ஒவ்வொன்றும் வித்தியாசனமானவை. ஒரு பிரச்சனையைப் போல் இன்னொன்று இருப்பதில்லை. ஆகையால் வெகு விரைவிலேயே நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதன் சந்தர்ப்பங்கள் உருவாகின.

கேள்வி : மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக உங்கள் பொழுதுகள் எப்படி இருக்கின்றன?

அம்பிகா: எந்த நேரத்திலும் எப்பொழுதும் அழைக்கப்படலாம். ஆகவே தயார்நிலையில் இருக்க வேண்டிய சூழல். நான் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வேலையைப் பழகிக்கொண்டிருப்பதால் எனக்கு இது ஒரு பயிற்சியாக இருக்கிறது. நான் அலுவலகத்தில் இருப்பதைவிட தொலைப்பேசியின் வாயிலாகத் தொடர்புக் கொண்டு சில வேலைகளை முடித்துக் கொடுப்பதுதான் அதிகமாக நடக்கிறது. இதில் இன்னும் கூடுதலான விசயம், பத்திரிக்கை, மீடியாக்களுக்கு அறிக்கை கொடுப்பதுதான். அவ்வப்போது பிரச்சனைகள் சார்ந்து முக்கியமான தகவல்களையும் அறிக்கைகளையும் அவர்களுக்குக் கொடுத்தாக வேண்டும். மீடியாக்களும் நாங்கள் நேர்மையான தீர்க்கமான கருத்துகளையும் தகவல்களையும் சொல்வோம் என நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாங்களும் அதைச் செய்வதில் முழுமையாகக் கடமைப்பட்டுள்ளோம். சட்டம் அல்லது சமூகம் சார்ந்த பிரச்சனைகள் எழும் போது, நீதியை நிலை நாட்ட குரல் எழுப்ப வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கின்றது. இதைத் தவிர்த்து எனது பட்டறைகளுக்கும் மாநாடுகளுக்கும் உரைகளைத் தயார் செய்யும் பணியிலும் நான் ஈடுபட்டு வருகிறேன். இவற்றை எல்லாம் நிறைவாய் செய்துவிட நீண்ட கால அவகாசம் தேவை. எனினும் இவற்றை எல்லாம் உரிய நேரத்தில் சரியாய் கையாளும் கலையை நான் அறிவேன்.

கேள்வி : செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் அறிக்கை விடுப்பதற்கும் உரைகளைத் தயார் செய்து கொடுப்பதற்கும் உங்களுக்கு யாராவது உதவி செய்கிறார்களா?

அம்பிகா: ஆமாம் செயலவை கூட்டத்தில் எனக்கு உதவுவதற்கு ஒரு சில முக்கியமானவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் சில வேளைகளில் பிரச்சனைகள் குறித்தும் வழங்கப்படவிருக்கும் உரைகள் குறித்தும் ஆய்வுகள் செய்து சிந்திப்பதற்கு நான் நேரத்தைச் செலவிடுவேன். செய்தியாளர்கள் சந்திப்பிலும் நான் சுயமாகச் சிந்தித்து சில விசயங்களில் கருத்துரைப்பேன். அது என் வழக்கமும் கூட. எடுத்துக்காட்டாக லீனா ஜாய் வழக்கு நிலவரத்தில் இரு தரப்பு தீர்ப்புகளையும் ஆழ்ந்து படித்து ஆய்வு செய்த பிறகே செய்தியாளர் சந்திப்பில் எனது கருத்தை முன்வைத்தேன்.

கேள்வி : இந்தத் தவணையில், உங்களின் முதன்மையான நடவடிக்கைகள் என்ன?

அம்பிகா: எங்கள் ஆலோசனைக் குழு தொழிற்துறை மேம்பாட்டு அணுகுமுறையை மறுசீரமைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் நாங்கள் கட்டாயச் சட்டக் கல்வியை ஊக்குவித்து வருகிறோம். இதனைத் தவிர்த்து உறுப்பினர்களின் நலன் கருதியும் சிறந்த சேவையை வழங்கவும் எங்களின் அலுவலக நிர்வாகத்தை மேலும் நேர்த்தியாக்க எத்தணித்துள்ளோம். எங்களின் மனித உரிமைக்கான செயற்குழு சில மனித உரிமை நிரல்களின் கீழ் செயல் படுத்துவதற்காக ஓர் அடிப்படை வரைவினை தயார் செய்து வருகின்றது. நடுநிலை சட்ட ஆணையமான IPCMC தொடர்பான, 1988 ஆம் ஆண்டு ஏற்பட்ட சட்ட நெருக்கடியை மறுபரிசீலனை செய்தல், உள்நாட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளை மறுசீரமைப்புச் செய்தல் போன்ற மிக இன்றியமையாத விவகாரங்களின் மீதும் நாங்கள் கவனம் செழுத்தி வருகிறோம். இதன் தொடர்பாக அண்மையில் உள்நாட்டு அரசாங்கத்தைப் பற்றிய கருத்தாடல் நிகழ்த்திய மலாக்கா மாநில வழக்கறிஞர் மன்றத்தை நான் இவ்வேளையில் பெரிதும் பாராட்டுகிறேன். இதன் மூலம், இந்த தவணையில் நாங்கள் பல ஆக்ககரமான செயற்பாடுகளில் கவனம் செழுத்தி வருவதை நீங்கள் அறியலாம்.

கேள்வி : மலேசிய வழக்கறிஞர் மன்றம் சந்திக்கும் முதன்மையான சவால்கள் என்னவாக இருக்கின்றன?

அம்பிகா: ஒவ்வொரு வருடமும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. வழக்குகளின் எண்ணிக்கையும் இந்த வருடம் அதிகரித்துள்ளன. மேலும் புதிய பிரச்சனைகள், புதிய சிக்கல்களையொட்டி அரசாங்கம் எங்களுடன் பேச்சு வார்த்தைக்கும் கலந்துரையாடல் அணுகுமுறைக்கும் எப்பொழுதும் தயாராக இருக்கிறது. ஆகையால் நாங்களும் சிறந்த சேவையை வழங்கவே முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி : வழக்கறிஞர் கழகத்திலுள்ள சில உறுப்பினர்கள் அக்கழகத்தில் அதிகம் அரசியல் பேசப்படுவதால் அதிலிருந்து விலகியே இருக்கின்றனர். இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

அம்பிகா: நிஜம் தான். வழக்கறிஞர் கழகம் விமர்சனத்திற்கு பேர் போனதாகயால் அங்கே சில கடுமையான விமர்சனங்கள் இருப்பதுண்டு. அங்கே முன்வைக்கப்படும் அனைத்துமே விமர்சனத்தை கண்டிப்பாக எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும். கழகம் அரசியலாக்கப்படும் நோக்கம் பல உறுப்பினர்களை தொண்டு செய்வதிலிருந்து மெல்ல மெல்ல அகற்றி இருக்கிறது. ஆனாலும் இந்த நிலை போக போக மாறி ஆக்ககரமான சூழலை கழகத்தில் உருவாக்கும் என எதிர்ப்பார்ப்போம். நாம் அனைவரும் தொண்டர்கள் என்றும் நம் உருப்பினர்களுக்காக முடிந்த வரை சேவை செய்வோம் என்பதையும் மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும். இங்கே த்யோடோர் ரூசெவெல்ட் சொன்னது நினைவுக்கு வருகிறது. “...இவ்வுலகில் உண்மையாய் வேலை செய்பவரே நினைவால் எண்ணப்படுபவர், விமர்சிப்பவரல்ல…’ அதாவது அவர் செய்யும் வேலை முழுமையடையாமலும் கடினமானதாக இருந்தாலும் கூட அவரே தான் வேலை செய்பவராக கருதப்படுவார். அதை எப்படி செய்வது என்று சொல்பவரோ எழுதுபவரோ அல்ல.

இவ்வாறு ஒரு வழக்கறிஞர் கழகத் தலைவராகப் பேசிய அம்பிகா சீனிவாசன் இன்று அரசாங்கத்துக்குச் சவால்விடும் மிகப்பெரிய சக்தியாக உருமாறியுள்ளார். 7000 போலீஸ்காரர்களை அரசாங்கம் சாலையில் நிறுத்தி வைத்தது. 3 கண்ணீர் புகை பாய்ச்சும் நீர் வண்டிகள்... கண்ணீர் புகை குண்டுகள்... 5 ஹெலிகோப்டர்கள்... நான்கு கெ9 நாய் போலீஸ் குழுவினர்... 8 சாலைகள் முற்றாக மூடபட்டன... 50க்கும் மேற்பட்ட சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தடுப்புகள்... பொது போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டன.

சரியாக 2.00 மணிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகப் கோலாலம்பூர் மாநகரத்திற்குள் படை எடுக்கத் தொடங்கினர். அரசாங்கம், பல தடைகளையும் மிரட்டல்களையும் மக்களுக்கு விதித்தும் ‘சட்டவிரோத பேரணி’ என்று முத்திரை குத்தியிருந்தபோதும் அவற்றையும் மீறி ஏறக்குறைய 50,000 மக்கள் கோலாலம்பூரில் ஒன்று திரண்டனர். ஒவ்வொருவரும் அவரவர் வாகனத்தை 10 கிலோமீட்டர் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஒன்றுக்கூடும் இடத்திற்கு நடந்தே வந்து பெர்சே பேரணியை வெற்றியடைய வைத்தனர்.

அம்பிகா ஸ்ரீனிவாசன் தலைமையில் நடந்த இப்பேரணி எட்டு கோரிக்கைகளை நேர்மையான தேர்தலுக்கு அடிப்படையாகக் கோருகிறது. அவை :

1. விரைவில் அகலா கருப்பு மையைப் பயன்படுத்தவேண்டும்.
2. குறைந்த பட்சம் 21 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒதுக்க வேண்டும்
3. தூய்மையான வாக்களிப்பு முறை.
4. அஞ்சல் ஓட்டுகள் முறையைச் சீரமைப்பது.
5. நேர்மையான, சுதந்திரமான ஊடகச் செயல்பாடு.
6. பொதுமக்கள் விழிப்புணர்வை அதிகரிப்பது.
7. ஊழலை ஒழிப்பது.
8. கறைப்படிந்த அரசியலை நிறுத்துவது.

அம்பிகாவின் இந்தக் கோரிக்கைகளுக்கு மலேசியாவின் பல்வேறு இன மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்ப்பு அரசியலின் ஆக்ககரமான தொடக்கமாகவே பெர்செ பேரணியின் வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது.


நன்றி: http://www.malaysianbar.org.my/

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768