முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 38
பிப்ரவரி 2012

  வெற்றியின் 'மமதையும்' வீழ்ச்சியின் 'ஞானமும்'
ஷம்மிக்கா
 
 
       
நேர்காணல்:

‘இது உறங்குங்காலம். நிச்சயம் விழிக்குங் காலமொன்று வரும்’

கருணாகரன்



வல்லினம் பதிப்பக நூல்கள்: எழுத்தாளர்களுடனான நேர்காணல்


உண்மைகள் மட்டுமே என் புத்தகத்துக்கான தரவுகள்
யோகி

சினிமா எனும் கலையைக் கொன்றவர்கள்
கே. பாலமுருகன்

நல்ல கவிதைகளில் வார்த்தைகள் ஆடைகள் மட்டும்தான்
ரேணுகா



கட்டுரை:

நாடு திரும்பாத கடைசி கம்யூனிஸ்ட் (ஆவணப்படம்) - அமிர் முகமாட் (மலேசியா)
கே. பாலமுருகன்

வெற்றியின் 'மமதையும்' வீழ்ச்சியின் 'ஞானமும்'
ஷம்மிக்கா



வல்லினம் கலை, இலக்கிய விழா 4:

கலை இலக்கிய விழா 4 : இன்னொரு தொடக்கம்
ம. நவீன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...28

ராஜா

சின்னப்பயல்

துரோணா

ந. பெரியசாமி

ஸ்ரீவிஜி

அவுஸ்திரேலியாவில் வெளிவந்த / வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் நான் அறிந்தவரையில் அவுஸ்திரேலியாவில் இரண்டு இலவச தமிழ்ப்பத்திரிகைகள் மெல்பேர்ணில் இருந்து வந்தன. ஒன்று 'ஈழமுரசு' - மாதம் இரண்டு தடவைகள் 1999ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. பிரான்ஸிலிருந்து வெளிவரும் இதழின் மறுபதிப்பு. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பாக வெளிவரும் பத்திரிகை. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படும் வரை முழுக்க முழுக்க 'விடுதலைப்புலிகள் சம்பந்தமான செய்திகளே வந்து கொண்டிருந்தன. 2009ஆம் ஆண்டின் பிற்பாடு பல புதிய சங்கதிகளையும் சேர்த்து வெளிவருகின்றது. இருப்பினும் எல்லா விதமான பலதரப்பட்ட எழுத்துக்களையும் சேர்த்துக் கொண்டு வரும் ஒரு தரமான பத்திரிகையாக இன்னமும் தெரியவில்லை.

மற்றயது 'உதயம்'. மாதாந்தம் வெளிவரும் இருமொழிப் பத்திரிகை. இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் வெளிவரும் புலி எதிர்ப்புப்பத்திரிகை என்று சொல்லுவார்கள். தமது எதிர்ப்புப்பிரச்சாரத்துடன் கலை இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து 1997ஆம் ஆண்டிலிருந்து வந்து கொண்டிருந்தது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்தவுடன், இனிப்பிரச்சாரமும் தேவையில்லை, கலை இலக்கியமும் தேவையில்லை என்று முடங்கிவிட்டது. இலங்கை அரசு பணத்தை நிறுத்திவிட்டது என்று பேச்சு. சரியாக இருக்கலாம். ஏனென்றால், உண்மையில் போர் முடிவடைந்த பின்னர்தான் இத்தகைய பத்திரிகைகள் எமது இனத்திற்குத் தேவை.

சஞ்சிகைகளை எடுத்துக் கொண்டால் - கலப்பை, தென்றல், தமிழருவி, தமிழ் ஓசை (ஆசிரியர், மாத்தளை சோமு), மெல்லினம் (சமீபத்தில் ஆரம்பம்) என்பவை தற்போது வெளிவந்து கொண்டிருப்பவை. இதில் தென்றல், தமிழ்முரசு இலவசம். ஆள் பாதி ஆடை பாதி என்பது போல, விளம்பரங்கள் நிறைந்து வழியும் சஞ்சிகைகள். எதுவுமே 'பிஸ்னஸ்' ஆகும் இவ்வுலகிலே அவர்களையும் குறை சொல்ல முடியாது. கலப்பை, சிட்னியிலிருந்து 1994 முதல் வெளிவரும் காலாண்டு இதழ். 'அவுஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் அமைப்பில்' இருந்து ஏனோ தானோவென்று வெளிவருகின்றது. இதில் எழுதும் சில எழுத்தாளர்கள் சமகாலப்படைப்புகளையோ அல்லது குறிப்பாக சிறுகதை, கவிதை என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதையோ அறியாதவர்களாக மிகவும் பிடிவாதமாக எழுதுகின்றார்கள். அவுஸ்திரேலியாவில் எத்தனையோ எழுத்தாளர்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சிலரின் படைப்புகளையே காணக்கூடியதாக உள்ளது.

முன்பொருகாலத்தில் மரபு (ஆசிரியர் விமல். அரவிந்தன் - மெல்பேர்ண், 1990), அவுஸ்திரேலிய முரசு (ஆசிரியர் அருண். விஜயராணி -அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம், 1990), அக்கினிக்குஞ்சு (ஆசிரியர் ச.பாஸ்கர், 1990), உணர்வு (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாணவர் அமைப்பு - மெல்பேர்ண், 1989), தமிழ் உலகம் (ஆசிரியர் சிறீஸ்கந்தராசா - 1994), பிரவாகம் (RMIT பல்கலைக்கழக மாணவர்கள், 2000) , கதிர் (சிட்னி, 1999), மக்கள் குரல் கையெழுத்துப்பிரதி(மெல்பேர்ண், 1988/89), தமிழ்க்குரல் (ஆசிரியர் மாத்தளை சோமு - சிட்னி 1988/89) போன்றவை வெளியாகின. வந்த வேகத்திலே மறைந்தும் போயின.

இதில் அக்கினிக்குஞ்சு (http://akkinikkunchu.com) தற்போது இணையத்தளமாக மெல்பேர்ணிலிருந்து வருகின்றது. தமிழ்முரசு (http://www.tamilmurasuaustralia.com) என்ற இணையத்தளம் சிட்னியில் இருந்து வருகின்றது. அரசியல், கலை இலக்கியம் என பல்சுவை கலந்த இணையத்தளங்கள் இவை.

யாருக்கு எழுதுகின்றீர்கள்?

எனது புத்தக வெளியீட்டுவிழாவிற்கு வருகை தருமாறு சொல்வதற்காக - சிட்னியில் எனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். எனது முதல் புத்தக வெளியீடு. அந்தப் பெண் எனது முயற்சி பற்றி பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தாள். அவளின் கணவன் ஒரு பொறியியலாளர். அருகேயிருந்து எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அவர், "நீங்கள் யாருக்குக் கதை எழுதுகிறீர்கள்? குழந்தைப் பிள்ளைகளுக்கா?" என்றார்.

"இல்லை! இல்லை!! வளர்ந்தவர்களுக்குத்தான்" என்றேன் நான். அவர் என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"எங்களுக்காகக் கதை எழுத நீங்கள் யார்?" என்பது போன்ற வெறுப்பான பார்வை அது. அவரைப் பொறுத்தவரை, அவரை விட வயதில் முதியவர்கள்தான் புத்தகங்கள் போடலாம் வெளியீட்டுவிழா நடத்தலாம் என்பது போன்று பிடிவாதம் கொண்டுள்ளார் போல் தெரிந்தது. அதன்பிறகு நூல் வெளியீட்டு விழாவிற்கு அவரும் வரவில்லை. மனைவியையும் வர அனுமதிக்கவில்லை.

யார் எழுத்தாளர்? எதைப்பற்றி எழுத வேண்டும்? யாருக்காக எழுத வேண்டும்? சிந்தனை எழுகின்றது!

அவுஸ்திரேலியப் பழங்குடிகள் (Indigenous Australians)

அவுஸ்திரேலியப்பழங்குடிகள் (Aborigines) ஏறக்குறைய 42,000 ஆண்டுகளாக வாழ்கின்றார்கள். இவர்கள் ஆரம்பத்தில் தென்கிழக்கு ஆசியத்தீவுகளில் இருந்து வந்ததாக நம்பப்படுகின்றது. 500 வகையான பழங்குடிகள் தமக்கேயுரித்தான சொந்தமொழிகளுடன் வாழ்ந்தார்கள்.

ஏறக்குறைய 3.5 இலட்சம் வரையில் இருந்த அம்மக்கள் தொகை கப்டன் ஜேம்ஸ் குக்கின் (1770) வருகைக்குப் பின்னர் குறையலாயிற்று. பிரித்தானியா இந்தநாட்டையும் தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்தது. 1788 இல் பிரித்தானியாவின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கொள்ளைக்காரர்கள், கொலையாளிகள் போன்ற கைதிகளை இங்கே குடியேற்றினர். அவர்களைக் கண்காணிப்பதற்கென போர்வீரர்களையும் அனுப்பி வைத்தார்கள். நதிக்கரையோரமாக வாழ்ந்துவந்த பழங்குடியினரை இவர்கள் தமது துப்பாக்கிமுனையில் வெளியேற்றினார்கள். கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தனர். போதாக்குறைக்கு அவர்களுடன் கூடவந்த தொற்றுநோய்கள் (அம்மை, சின்னம்மை) மற்றும் மீள்குடியேற்றம், பண்பாட்டுச்சீரமைப்பு போன்றவற்றாலும் நிறையப்பேர் இறந்தனர். மதுப்பழக்கத்தையும் அவர்கள்தான் பழங்குடி மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

1869 முதல் 1969 வரை, இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கை என்று கூறிக்கொண்டு பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகள் பிரித்தெடுக்கப்பட்டார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் ஐந்துவயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள். இந்தக்கட்டாயப் பிரித்தெடுப்பை 'திருடப்பட்ட தலைமுறைகள்' (Stolen Generations) என்று சொல்வார்கள். இந்த நடவடிக்கைக்குப் பொறுப்பான அப்போதைய அரசும் திருச்சபையினரும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான எந்தவிதமான பதிவுகளையும் எழுதி வைக்கவில்லை. இவர்கள் கிறிஸ்தவாலயங்களிலும் சமூகநல அமைப்புகளிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலரை வெள்ளையின மக்கள் தத்தெடுத்துக் கொண்டார்கள்.

1901 ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பு சார்ந்த அவுஸ்திரேலியா (Commonwealth of Australia) என்று மாற்றப்பட்ட போதும் இவர்கள் கணக்கெடுப்பில் அடங்காதவாறு சட்டம் இயற்றப்பட்டது. 1967 இல் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு அவர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 5 இலட்சம் மக்கள் இருக்கின்றார்கள். இது மொத்த சனத்தொகையின் (21.3 மில்லியன்கள்) 2.5% ஆகும்.

2008 பெப்ரவரி 13 இல் கெவின் ரட் தலைமையிலான நாடாளுமன்றம், இந்தப்பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்து அத்தலைமுறையினரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

என்னதான் இருந்த போதிலும் அவர்களுக்கு இன்னமும் பூரண விடிவு வரவில்லை. சமீபத்தில் குவீன்ஸ்லாந்திற்குப் (Queensland) போனபோது நிகழ்ந்த ஒரு சிறு சம்பவம் ஞாபகத்திற்கு வருகின்றது. தோன்லான்ஸில் (Thornlands) இருக்கும் நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அங்கிருந்த நாட்களில் ஒருநாள், அவர்களுக்கு அண்மையாக இருக்கும் குச்சிமுடிலு (Coochiemudlo Island) எனும் சிறியதீவிற்கு Stradbroke Ferry இல் சென்றோம். அழகான கடற்கரை. BBQ போடுவதற்கு இரண்டு இடங்கள் இருந்தன. BBQ போடுவதற்கு தேவையான பொருட்களை எடுத்துச் சென்றிருந்தோம். எரிபொருள் (gas) இலவசம். இரண்டு இடங்களிலும் பின்புறமாகவுள்ள இருந்த இடத்தைத் தெரிவுசெய்து BBQ மேசையை சுத்தம் செய்து கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் ஒரு அபொறியின்ஸ் குடும்பத்தினர் அங்கு வந்து சேர்ந்தார்கள். முதன்முதலாக அப்பொழுதுதான் அபொறியின்ஸ் இனத்தவரை மிகச்சமீபமாகப் பார்க்கின்றோம். சிட்னியில் ஓப்ரா ஹவுஸிற்கு (Opera House) முன்னால், தலைவிரி கோலம் - உடம்பெங்கும் பட்டைப் பூச்சு - ஆளைவிட நீண்டதொரு குழல் சகிதம் நின்றுகொண்டிருக்கும் கன்னங்கரிய ஒருவனைத்தான் இதுவரை கண்டிருக்கின்றேன். இவர்கள் சற்றே வித்தியாசமானவர்களாக இருந்தார்கள். 'திருடப்பட்ட தலைமுறை'யைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். Half castes Aborigines என்று அழைக்கப்படுபவர்கள். படித்தவர்கள் போலக் காணப்பட்டார்கள்.

வந்தவர்கள் எங்களை ஒருதடவை பார்த்தார்கள். பின்னர் எமக்கடுத்திருந்த BBQ மேசையைச் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். நாங்கள் சமைத்த உணவைச் சாப்பிடத் தொடங்கிவிட்டோம். அப்பொழுது ஒரு கூட்டம் இளைஞர் யுவதிகள் தமது பொதிகளையும் இழுத்துக் கொண்டு அவ்விடம் வந்தார்கள். வெள்ளை இனத்தவர்களான அவர்கள் ஆரவாரமாகச் சத்தமிட்டபடி பழங்குடிமக்களை நோக்கி வந்தார்கள். இவர்கள் மேசைமீது பரப்பி வைத்தவற்றையெல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டார்கள். கண் மூடி விழிப்பதற்குள் அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டார்கள். 230 ஆண்டுகளுக்கும் மேலான ஒடுக்குமுறைகளிற்குப் பழக்கப்பட்ட அவர்கள் எதிர்த்து வாழ்வதற்கு இன்னமும் நாளாகும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768