சிறுகதை
சூன்யப்பெருவெளிக்கதைகள்
எம்.ஐ. ஷாஜஹான்
சாச்சாவின் கதையைச் சொல்லப்போகின்றேன். ஈழப்போராட்டம் இப்போது நாடு கடந்த நிலைக்குப் பரிணாமம் அடைந்து விட்டதால் குளிர் விட்டுப்போய் சிலருக்கு தைரியம் பிறந்ததே அதுபோன்ற ஒரு துணிச்சல் எனக்கும் ஏற்பட்டதால் இன்று அதைச் சொல்லிவிடலாம் என்று தோன்றியது. நாளை எப்படியிருக்குமோ யாருக்குத் தெரியும்?...
அவலம்
அண்டனூர் சுரா
ரேவந்த் என் கண் முன்னால் நிழலாடிக்கொண்டிருந்தான். அவனை பார்க்கணும் போல தோன்றியது எனக்கு. அதை விட முக்கியம் சித்தப்பாவிற்கு ஆறுதல் சொல்லியாக வேண்டும். ஒரு மணி டவுன் பஸ்ஸை பிடித்து அவர் வீடு போய் சேர்வதற்குள் மணி மூன்று ஆகியிருந்தது. நான் வீட்டிற்குள் நுழைந்ததும் ரேவந்த் தலை தூக்கி பார்த்தான்...
கட்டுரை
இந்தோனேசியக் கவிஞர் சைறில் அன்வர் ஓர் அறிமுகம்
மூலம் : ஜேம்ஸ் எஸ் ஹோம்ஸ் | தமிழில் : எம்.ஏ.நுஃமான்
1950ல் சைறில் அன்வர் காலமாகி ஒரு வருடத்துக்குப் பின்னர்தான் அவரது பெயர் எனது கவனத்துக்கு வந்தது. டச்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது ஒரு தொகுதிக் கவிதைகளை அப்போதுதான் நான் படித்தேன். அப்போது டச்சு மொழியில் எனது புலமை அவ்வளவு திருப்தியானது அல்ல. அதுமட்டுமன்றி, சிறந்த மொழிபெயர்ப்புகள்கூட கழைக்கூத்தாடிகள் கம்பியில் நடப்பது போன்ற சாத்தியமற்றதன் மீதான முயற்சிகள்தான்...
தமிழில் சைறில் அன்வர் கவிதைகள்
எம்.ஏ.நுஃமான்
சைறில் அன்வர் (1922-1949) நவீன இந்தொனேசிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாகக் கருதப்படுகிறார். அவர் வாழ்ந்த காலமும் குறைவு அதுபோல் அவர் எழுதியவையும் குறைவு. அவர் இறக்கும்போது அவருக்கு இருபத்தேழு வயது நிறையவில்லை. மொத்தமாக சுமார் எழுபது கவிதைகள்தான் எழுதியிருக்கிறார். ஆயினும் இன்றுவரை அன்வர்தான் இந்தொனேசியாவின் தலையாய நவீன கவிஞராகக் கருதப்படுகிறார்...
பதிவு
வல்லினம் வகுப்புகள் 1 - இலக்கியமும் மொழியியலும்
கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கிராண்ட் பசிபிக் தங்கும்
விடுதியில் வல்லினமும் செம்பருத்தி இணையத்தளமும்
(www.semparuthi.com) இணைந்து மொழியியல் வகுப்பு ஒன்றினை ஏற்பாடு
செய்திருந்தது. இந்த மொழியியல் வகுப்பினை நடத்த இலங்கையிலிருந்து
பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் கலந்துகொண்டார்.
'ஐ.பி.ஏ' ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் பதிவுகள்
|