முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 46
அக்டோபர் 2012

  சிறுவர் இலக்கியம் உருவாக்கப்பட வேண்டும்
கே. பாலமுருகன்
 
 
       

பதிவு:

வல்லினம் வகுப்புகள் 2 - 'மஹாத்மன் சிறுகதைகள் உலகத்தரமானவை'
தமிழவன்



கட்டுரை:

காலாவதியான இரசனையும் சினிமாவும்
கே. பாலமுருகன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
கே. எஸ். சுதாகர்

மதமாற்றத்தின் அரசியல்
கே. பாலமுருகன்

ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்
லதா



நேர்காணல்:

எனக்கு அறிவியல் பள்ளியில் இடம் இல்லை
ஸ்ரீ அறிவேஷ்

சிறுவர் இலக்கியம் உருவாக்கப்பட வேண்டும்
கே. பாலமுருகன்



சிறுவர் சிறுகதை:

ஓரம் போ
கே. பாலமுருகன்


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 5
அ. மார்க்ஸ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை
அ. பாண்டியன்

அச்சில் ஏறாத உண்மைகள்
இரா. சரவணதீர்த்தா

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்



கவிதை:

இரா. சரவண தீர்த்தா

சின்னப்பயல்

செ. சுஜாதா

ந. பெரியசாமி

துரோணா

எழுத்தாளர் கே.பாலமுருகனின் சிறுவர் சிறுகதை தொகுப்பையொட்டி அவருடன் ஒரு நேர்காணல் செய்திருந்தேன். மலேசிய வரலாற்றில் உள்ளூர் எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளிவரும் முதல் சிறுவர் சிறுகதை தொகுப்பு இது என்பதில் அவர் உற்சாகமாக இருக்கிறார். கெடா மாநிலத்தைச் சேர்ந்த கே.பாலமுருகன் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமானவர். தொடர்ந்து ஆறு வருடமாக அவருடைய அகப்பக்கத்தில் கட்டுரைகள், சினிமா விமர்சனம், சிறுகதைகள் என பல படைப்புகளைப் படைத்து வருகிறார்.


கேள்வி : வணக்கம் பாலமுருகன். உங்களுடைய சிறுவர் சிறுகதை தொகுப்பைப் பற்றி அறிமுகம் செய்யுங்கள்.

பதில் : 4,5, மற்றும் 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் மேலும் சோதனையில் கதை எழுதும் பகுதியில் அவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெறவும் இந்தச் சிறுகதை தொகுப்பு எழுதப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் கதை எழுதும் பயிற்சி தொடர்பாக எந்தப் பயிற்சி நூலும் அல்லது வழிகாட்டி நூலும் தயாரிக்கப்பட்டதில்லை என்றே சொல்ல வேண்டும். இதுவே முதல் முயற்சி. மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் நோக்கியே இந்தச் சிறுவர் சிறுகதை தொகுப்பு பயணிக்கப்படவுள்ளது. மேலும், சோதனை, பயிற்சியும் என்பதுக்கு அப்பாற்பட்டு இன்றைய மாணவர்களை நாளைய படைப்பாளர்களாகவும் நல்ல வாசகர்களாகவும் மாற்றுவதற்கான ஒரு களமாகவும் இந்த நூல் இருக்கும் என நம்புகிறேன்.

கேள்வி: இந்தச் சிறுகதை தொகுப்பின் தலைப்பு என்ன? இதில் பிரசுரமாயிருக்கும் கதைகள் பற்றியும் சொல்லுங்கள்.

பதில் : சிறுவர் சிறுகதை தொகுப்பிற்குத் 'தேவதைகளின் காகித கப்பல்’ எனத் தலைப்பிட்டுள்ளேன். மொத்தம் 10 சிறுவர் சிறுகதைகள் இதில் எழுதப்பட்டுள்ளன. முகிலனின் வண்ணத்துப்பூச்சி, பென்சில், முத்தம்மா மாடு, காகித கப்பல், மணியம் பேருந்து, முகிலனின் காலணி என அனைத்துக் கதைகளும் சிறுவர் உலகத்தைப் பற்றியே பேசுகின்றன. ஒவ்வொரு கதையும் யு.பி.எஸ்.ஆர் சோதனை அமைப்புமுறைக்கேற்பவே எழுதப்பட்டுள்ளது. ஆகவே, மாணவர்கள் தாராளமாக கதைகளை வாசித்துத் தன்னுடைய கதை எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள முடியும்.

கேள்வி: உங்களுக்கு எப்படி இந்த நூலைத் தொகுக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது?

பதில் : நான் ஓர் ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளி ஆசிரியர். மேலும் சிறுகதை ஆசிரியரும்கூட. ஆகையால், சிறுகதை தொடர்பாக மாணவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அப்பொழுது இருந்தது. ஆறாம் ஆண்டு தமிழ்மொழி பாடம் போதிக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் மாணவர்களுக்குக் கதை எழுதுவதில் ஆர்வம் குறைவாக இருந்ததோடு அதில் திறமையும் இல்லாமல் இருந்ததைக் கண்டறிய முடிந்தது. இது என்னுடைய வகுப்பு மாணவர்களின் பிரச்சினையாக மட்டும் இல்லை எனத் தெரிந்து கொண்டேன். அதே சமயத்தில்தான் 2010ஆம் ஆண்டு தேர்வு ஆணையம் ஒரு பட்டறைக்கு என்னை அழைத்திருந்தது. தேர்வு ஆணையத்தின் தமிழ் பிரிவு அதிகாரியும் நல்ல சிந்தனையாளருமான திரு.பி.எம்.மூர்த்தி அவர்களை அங்குத்தான் சந்தித்தேன். அவர்தான் எனக்குள் ஆர்வத்தை மிகுதியாக்கிவிட்டவர். மேலும், சிறுவர் சிறுகதை தொடர்பான சிந்தனைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அங்கிருந்து சிறுவர் சிறுகதை தொடர்பாக நான் சிந்திக்கத் தொடங்கினேன். சுமார் 20 ஆசிரியர்கள் சிறுவர் சிறுகதை எழுதும் பட்டறையில் பயிற்சியளிக்கப்பட்டார்கள். நானும் அங்கிருந்துதான் பயிற்சி பெற்று எழுதத் துவங்கினேன்.

கேள்வி: இந்தச் சிறுகதை தொகுப்பை மாணவர்கள் பயிற்சி நூலாகவும் பயன்படுத்த வாய்ப்புண்டா?

பதில் : முதலில் இந்த நூலை ஒரு சிறுவர் சிறுகதை தொகுப்பாக மட்டுமே கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனை இருந்தது. ஆனால், மாணவர்கள் இந்த நூலைப் படித்துவிட்டு வைத்துவிடக் கூடாது. அவர்கள் அந்த நூலுடன் எப்பொழுதுமே உரையாட ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானித்ததால் பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டேன். மேலும், கதை எழுதுவது தொடர்பாக வழிகாட்டி விளக்கங்களையும் சேர்த்திருக்கிறேன். ஆகவே, இந்த நூலை மூன்று வகையில் மாணவர்கள் பயன்படுத்தலாம். சிறுகதை தொகுப்பாகவும், சிறுவர் சிறுகதை பயிற்சி நூலாகவும் மற்றும் சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூலாகவும் மாணவர்கள் இதனை உபயோகித்துப் பயனடைவார்கள் என நம்புகிறேன்.

கேள்வி: இதற்கு முன் ஏன் இந்த மாதிரி முயற்சிகள் நடக்கவில்லை என நினைக்கிறீர்கள்?

பதில் : உள்ளூர் எழுத்தாளர்கள் சிறுவர் சிறுகதை எழுதுவது குறித்து ஆர்வம் காட்டியதில்லை. திரு.பி.எம்.மூர்த்தி கல்வி துறையில் நுழைந்து மாற்றத்தினை ஏற்படுத்துவரையில் அது குறித்து யாரும் சிந்தித்ததில்லை. இதற்கு முன் மாணவர்களுக்கென வழங்கப்பட்ட அனைத்துக் கதைகளுமே ஈசாப் நீதிக்கதைகளும், மிருகங்களை வைத்துப் போதிக்கப்படும் நன்னெறிக் கதைகளாகவும் மட்டுமே இருந்தன. திரு.மூர்த்தி அவர்களே சிறுவர்களுக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் என்ற நோக்கிலும் எதிர்காலத்தில் இந்நாட்டில் படைப்பாளர்கள் தோன்ற வேண்டும் என்ற நோக்கிலும் யு.பி.எஸ்.ஆர் சோதனையில் கதை எழுதும் பிரிவை அறிமுகப்படுத்தினார். இன்று இந்த நூல் வருவதற்கான ஒரு களம் அங்கிருந்துதான் உருவாகியிருக்கின்றது.

கேள்வி: இறுதியாக உங்களுடைய ‘தேவதைகளின் காகித கப்பல்’ சிறுவர் சிறுகதை நூல் எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?

பதில் : முதலில் மாணவர்களின் கதை எழுதும் ஆற்றலை இந்த நூல் வழிகாட்டியாக இருந்து வளர்க்கும்.மேலும், 4,5 மற்றும் 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்குக் கதை எழுதுவதில் சிக்கல் ஏற்படும் போதெல்லாம் இந்த நூல் ஒரு வழிகாட்டியாகவும் மேற்கோள் நூலாகவும் இருந்து வழிநடத்தும். அடுத்ததாக, மாணவர்களுக்குப் போதிக்கும் ஆசிரியர்களும் இந்த நூலை மேற்கோள் நூலாகப் பயன்படுத்தி பயன் பெறலாம். நான் கேட்டவரை பல பள்ளிகளில் இந்த நூலை எதிர்ப்பார்க்கிறார்கள். இப்பொழுதே சில பள்ளிகளில் நூலைக் கேட்டுவிட்டார்கள். சமூகத்தில் சிறுவர் உலகினை சொல்வதற்குரிய ஒரு களத்தினை இந்தச் சிறுவர் சிறுகதை தொகுப்பின் மூலம் உருவாக்க முடியும் என நம்புகிறேன். அவர்களின் வாழ்வை அவர்களின் மொழியிலேயே சொல்லி சிறுவர்களின் உலகினை மீட்க வேண்டும். மலேசியாவில் தரமான சிருவர் இலக்கியம் தோன்ற வேண்டும். நன்றி.


நேர்காணல் செய்தவர்: ம.நவீன்

குறிப்பு : இந்தப் புத்தகத்தை நாடு முழுவதும் விநியோகம் செய்யும் பொறுப்பை பாரதி பதிப்பகம் ஏற்றுள்ளது. பள்ளிகள் 0163194522 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்களுக்குத் தேவையான பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768