இதழ் 14
பிப்ரவரி 2010







Enter your email address to receive Vallinam updates:

Delivered by FeedBurner

 


பத்தி:
காற்றின் மொழி
வீ. அ. மணிமொழி
அந்தோணியின் கண், வாய், முகம், கை அசைவு, தோள் பட்டை எல்லாம் பேசின. எல்லா உறுப்புகளுக்கும் வாயிருப்பது போல் உணர்ந்தேன். அவன் கருத்தை சொல்லும் போது ஏற்பட்ட தாமதங்கள்... கருத்து எங்கள் அனைவருக்கும் புரிகிறாதா என்ற கேள்விகள் கோபங்களாய் அவன் முகத்தில் வெளிப்பட்டன.


பத்தி:
2009-ன் ஆண்டின் சில நினைவுக்குறிப்புகள்… கொஞ்சம் தாமதமாக

சு. யுவராஜன்
தினமும் நாளிதழ்களின் எதிர்மறையான செய்திகளின் பாரம் தாங்காமல் திணறிடும் தமிழர்கள் அவற்றை இறக்கி வைப்பதற்காக வைட்டமின் மாத்திரைகளைப் போல 'மறதி' மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்வது, அவர்களின் மறதியை வேகமாக அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியே போனால், 2070-ல் அரசாங்க கணிப்புப்படி மலேசிய மக்கள் தொகை 7 கோடி ஆகிறதோ இல்லையோ, 'மலேசிய ஹீரோவும்' புரட்சிகர சிந்தனையான 'ஒரே மலேசியா'வின் தந்தையுமான நஜிப்பின் சிந்தனைப்படி தமிழர்கள் தங்கள் இன அடையாளத்தை எவ்வித அழுத்தமின்றி சுயமாக மறந்து...


கட்டுரை:
தாமரை

ஜெயந்தி சங்கர்
இந்து சமயக் கலைகளில் மட்டுமில்லாது பௌத்தக் கலைகளிலும் இலக்கியங்களிலும் சிற்பக்கலைகளிலும் தாமரைக்கு மிக முக்கிய இடமுண்டு. சீனத்து ஓவியங்களிலும் கவிதைகளிலும் தாமரை கருப்பொருளாகிறது. நளின நடனங்களிலும் கட்டடவியற் கலையிலும் சிற்பக் கலையிலும் அன்றாட பீங்கான் பாத்திரச் சித்திரங்களிலும் கூட தாமரை சித்தரிக்கப் படுவதைக் காணலாம். தாமரைச் சின்னங்கள் பௌத்த மடாலயங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.


பத்தி:
தும்பி

ம. நவீன்
எனது சேமிப்பில் இருந்த உபரி பாகங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் விழித்தக் காலங்களில் அவை எனதறையில் பெரிய குப்பையாக வளர்ந்தது. எல்லாவற்றையும் ஒவ்வொரு நாளும் தரையில் கொட்டி ஒன்றோடொன்று இணைத்துப் பார்த்தேன். அந்தந்தப் பொருட்கள் அந்தந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் முதன் முதலாக உடைபடும் போதுதான் கண்டுப்பிடிப்புகள் உருவாயின.


புத்தகப்பார்வை:
'சிதைவு'களோடு 'தேம்பி அழாதே பாப்பா'

எம். ரிஷான் ஷெரீப்
பொதுவாகவே கறுப்பினத்தவர்கள் காட்டுமிராண்டி களென்று வெள்ளையர்கள் பரப்பிய கருத்தினைப் பொய்யாக்கி, தன் பங்கு நேர்மையினை எடுத்தியம்புகின்றன இரண்டு கதைகளும், அதன் மாந்தரும். சினுவா ஆச்சுபியின் நாவலில் வாசிக்கக் கிடைக்கும் சுவாரஸ்யமான, பூர்வீக கறுப்பின மக்களின் வாழ்க்கை முறைகள், சம்பிரதாயங்கள், திருமண, திருவிழா, போட்டி, பந்தய நிகழ்வுகள், வன்மங்கள் போன்றன குறித்த பரந்த விளக்கம் கூகி வா தியாங்கோவின் நாவலில் அவ்வளவாக இல்லையெனினும் இரண்டுமே ஒரே கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்பட்டிருக்கின்றன.



மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை
மேலும் சில எழுத்தாளர்களின் கருத்துகள்...



கவிதை:
o இளங்கோவன் 

o சு. யுவராஜன் 

தர்மினி

o தினேசுவரி

o பா.அ.சிவம் 

o இளைய அப்துல்லாஹ் 

மன்னார் அமுதன்


ரேணுகா

 
 


சிறுகதை: குரல்
சீ. முத்துசாமி
அவன் எதிர்பார்த்த நல்ல செய்தி ஒரு வலை தளத்தில் இருப்பதைக் கண்டு ஆனந்தமடைந்தான். ஹவாய் தீவிலுள்ள ஓர் அமெரிக்க பல்கலைக்கழகம் நல்ல விலை தரத் தயாராக இருக்கும் எவருக்கும் ஒரு ‘டாக்டர்’ பட்டத்தை வழங்க தயார் என்று அறிவித்திருந்தது தொடர்பு கொள்ள வேண்டிய மலேசிய ஏஜென்டின் விபரங்களும் தரப்பட்டிருந்தன.

சிறுகதை: ஊமைகளின் உலகம்..!
குரு அரவிந்தன்
ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்த பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு பிரிந்து போவது என்பது அத்தனை இலகுவான காரியமாய் தமிழர்களுக்கு இருக்கவில்லை. அதில் உள்ள வேதனையும் வலியும் மற்றவர்களுக்கு இலகுவில் புரிவதுமில்லை.

சிறுகதை: மறுபிறவி
கிரகம்
கோமதி வெள்ளை நிறத்துடன் சற்று குண்டாக இருப்பாள். அவளைப்போலவே அவளின் எழுத்துக்களும் குண்டாக யிருக்கும். சாய் கோமதியை நேசிப்பதற்கு அவளின் எழுத்துக்களும் ஒரு காரணம்.

சிறுகதை: துளசிப்பாட்டி
க.ராஜம்ரஞ்சனி
வீடு முழுவதும் தேடி அலுத்திருந்தார்கள். தத்தம் வங்கிக் கணக்குகளை ஒருமுறை சரிப் பார்த்துக் கொண்டனர். பாட்டி மகன்களின் வங்கிக் கணக்கில் பணத்தைச் சேர்த்தற்கான தடயம் காணப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அவர்களுக்குத் தந்தது.

தொடர்: எனது நங்கூரங்கள் ...7
இளைய அப்துல்லாஹ்
சரி கதிரையில் இருந்து மனிசியும் நானும் பேச ஆரம்பிக்க ஏதாவது அல்-ஜஸீரா பி.பி.சி.யில் டொக்கியூமன்றி படம் போட ஆரம்பித்தால் எனது கவனம் முழுக்க அதில் போய்விடும்.

தொடர்: நடந்து வந்த பாதையில் ...2
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்
மாணவர்கள் எங்கே சிரித்துவிடுவார்களோ என்ற பயத்தில் வேக வேகமாய், பயிற்சி செய்ய முயன்று, மிகவும் களைத்துப்போனாள். மிகவும் கஷ்டமாக இருந்தது. சாப்பிடக்கூட இல்லை. அப்படியே படுத்துவிட்டாள்.

 

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768