முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இலங்கை இலக்கியம்; தொடர்கள்; உரையாடல்கள்...

அன்புமிக்க வாசகர்களே. இவ்வருடம் வல்லினத்தில் தொடங்கப்பட்ட பல புதிய தொடர்கள் ஒவ்வொன்றாய் நிறைவு காண்கின்றன. எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் எழுதிய 'அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே', யோகியின் 'கட்டங்களில் அமைந்த உலகு' போன்றவை கடந்த மாதத்தோடு நிறைவடைந்தன. அவர்களுக்கு நமது நன்றி. தொடர்ந்து அவர்களின் பங்களிப்பை வல்லினம் இதழில் எதிர்ப்பார்க்கிறோம். அதேபோல இம்மாதத்தில் பாலமுருகனின் 'ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்' நிறைவு பெறுகிறது. தொடர்ந்து பாலமுருகன் இலங்கை சிறுகதைகள் குறித்த தனது பார்வையை வல்லினத்தில் தொடராகப் பதிவு செய்வார். அதே போல பூங்குழலியும் தனது 'சுவடுகளில் பதியுமொரு பாதை' தொடரில் இலங்கை கவிதைகள் குறித்து இனி தொடர்ந்து எழுதுவார். நானும் இலங்கை நாவல்கள் குறித்து எழுத முனைந்துள்ளேன்.

மலேசிய மற்றும் இலங்கை இலக்கியவாதிகளிடையே உரையாடல்களை ஏற்படுத்தவும் கருத்து பரிமாற்றம் செய்துகொள்ளவும் ஏற்படுத்தப்படும் எளிய முயற்சி இது. அதே போல இலங்கை எழுத்தாளர்களும் மலேசிய எழுத்துகள் குறித்து தங்கள் பதிவினை எழுதுவதோடு மலேசிய எழுத்துகளை இலங்கையில் அறிமுகம் செய்வார்களாயின் அடுத்த ஓரிரு வருடங்களில் மலேசிய - இலங்கை தமிழ் இலக்கியவாதிகளிடையே ஒரு கலந்துரையாடல் நிகழ்வை ஏற்படுத்தலாம். இதுபோன்ற அறிமுகங்கள் நிகழவேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஆசைபட்டவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான அவர்கள்தான். அதற்கான ஆரம்ப பணிகள் சிலவற்றையும் அவர் மலேசியாவில் இருந்தபோது செய்ய முயன்றார். இந்த முயற்சிகள் அவருக்குச் சமர்பணம். இனி மலேசிய - இலங்கை படைப்பாளிகள் செய்யவேண்டியது ஒன்றுதான். வல்லினத்தில் தொடர்ச்சியாகப் படைப்புகளைப் பங்களிப்புகள் செய்வதன் வழி புதிய எழுத்துகளை இரு சாராரும் தொடர்ந்து வாசிக்கவும் கருத்து பரிமாறவும் வகை செய்ய இயலும். வல்லினம் மூலம் இலங்கை இலக்கியங்களை தொடர்ந்து பதிவு செய்ய விரும்புகிறோம். ஆக்கங்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்.


இதழ் 34
அக்டோபர் 2011

வல்லினத்திற்கு படைப்புகளை அனுப்பும் எழுத்தாள நண்பர்கள், வேறு இணைய இதழ்களிலோ அல்லது அச்சு இதழ்களிலோ
ஏற்கனவே பிரசுரமான படைப்புகளை அனுப்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் - ஆசிரியர் குழு
 







             
 

பத்தி


தேர்தலும் கலர் துண்டும்
கே. பாலமுருகன்

தேர்தல் காலம் நெருங்கிவிட்டால் நகரங்கள் பரப்பரப்படைகின்றன. குறைந்தபட்சம் ஆங்காங்கே அவசர கூட்டங்களும் அதிரடியான சரிக்கட்டல்களும் நடக்கத் துவங்கும். ஒவ்வொரு இயக்கமும் அரசியல் கட்சியும் தனிமனிதர்களும் தேர்தலைத் தனக்குச் சாதகமான ஒன்றாக மாற்ற முயற்சிக்கிறார்கள். தேர்தல் சமூகத்தில் வாழக்கூடிய ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வேலையைக் கொடுக்கிறது. அதிகாரப்பூர்மற்ற முறையில் பல இடங்களில் தேர்தல் பீரங்கிகளாகக் கடமையில் அமர்த்தப்படுகிறார்கள்....

புலம்பெயர் முகங்கள்... 2
வி. ஜீவகுமாரன்

புலம் பெயர் வாழ்வில் தமிழ்க் கல்வியானது புதுவிதமான பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் தொழில் நிமித்தம் காரணமாகவும் உயர்கல்வி பெறும் பொருட்டும் வேறு நாடுகளுக்கு - அனேகமாக ஆங்கில மொழி பேசும் நாடுகளுக்கு சென்று வாழ ஆரம்பித்த கல்விமான்களின் குடும்பங்களும், 1980இன் முற்பகுதியில் இலங்கைப் பிரச்சனை காரணமாக அகதிகளாக மேலைநாடுகளுக்கு இடம் பெயர்ந்து வாழத் தொடங்கிய குடும்பங்களும் உள்ளங்கும்...


சிறுகதை


தமிழ்க்கதை
யோ. கர்ணன்

ஆயிரத்தெட்டு சிறுகதைகளும், இருபத்தேழு குறுநாவல்களும் பதின்மூன்று நாவல்களும், நான்கு நாடகங்களும், மூன்று உரைநூல்களும், ஒரு சமையல் குறிப்புமென கணக்கில்லாமல் புத்தகங்கள் போட்டுத்தள்ளிய கலைஞர் அப்புக்காத்துவை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாவிட்டாலும் பாதகமெதுவுமில்லை. சிலர் அவரது புத்தகங்களில் ஓரிரண்டாவது படித்திருக்கக் கூடும். இந்த இரண்டு நிபந்தனைகளிற்கும் நீங்கள் உட்படுவீர்களெனில் இதற்கடுத்த பத்தியை வாசிக்கத் தேவையில்லை. கடந்து சென்று விடலாம். அவரை அறியாதவர்களிற்காக இதற்கடுத்த பகுதியை எழுத நேர்கிறது......

 
கேள்வி பதில்

கவிதை
o இளங்கோவன்
o ந. பெரியசாமி
மாதங்கி
o லதாமகன்
வ.ஐ.ச. ஜெயபாலன்
ஷம்மி முத்துவேல்
ரவிக்குமார்
தேனு

பதிவு


தூது போகும் போராளிகளும், போராடும் தூதுவர்களும்...
தயாஜி

பயிலரங்கில் பேச்சாளர் குறித்து வினவிய போது தமிழகத்திலிருந்து பத்திரிகையாளர் மாலன் என்றார்கள். மாலன் குறித்த வேறெந்த அறிமுகமும் சொன்னவர்களுக்குப் புலப்படவில்லை....



எதிர்வினை
 
 
க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்

 
       
 
 
 
 
       
 
 
 
 
       
 
 
 
 
         
             

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768