இதழ் 11
நவம்பர் 2009
Enter your email address to receive Vallinam updates:

Delivered by FeedBurner

 


கட்டுரை: இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்

லதா
கொழும்பில் செய்தியாளர் ஒருவரை சந்தித்தப்போது, அவர் என் நெற்றிப் பொட்டை தான் முதலில் உற்று நோக்கினார். சிறிய அமைதிக்குப் பிறகு “பொட்டு வைத்து, பஞ்சாபி ஆடை அணிந்துகொண்டு தைரியமாகக் கொழும்புத் தெருவில் நடக்க முடியாது,” என்றவர் மீண்டும் அமைதியானார். கேள்விகள் நிறைந்த அந்த அமைதியை பலர் முகத்திலும் காணமுடிந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள், ராணுவத்தினர், சிங்களவர்கள், தமிழர்கள் எல்லாருமே நிறைய பேசி, நிறைய சிரித்து, அன்றாட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும் அந்த பரபரப்புக்கு பின்னே விவரிக்க முடியாத ஓர் அமைதி தெரிந்தது.


கட்டுரை:
இழைகள்

இராம. கண்ணபிரான்
தற்காலச் சிறுகதைப் படைப்புகளில், கதைத் திட்டத்தைப் பொறுத்தவரை ஏறுமுகம் இறங்குமுகப் போக்கு இருப்பதில்லை. அக நினைவுகள் மேலோங்க, நிரலற்ற துண்டுச் சம்பவங்கள் கொப்பளிக்க, வடிவங்கள் இல்லாக் கதை ஆக்கங்களே பிறப்பெடுக்கின்றன. இவற்றைப் படிக்கும் இன்றைய வாசகர்கள் தத்தம் அர்த்தப்புரிதல்களுக்கு, கதைப் பின்னல்களில் காணப்படும் பொருள் இழைகளைத் தேடிப் பெறுகிறார்கள். சு. யுவராஜனின் சிற்றேட்டுச் சிறுகதைகளிலும் நினைவு இழை, ஆதார இழை, புகை இழை, தொலைப்பு இழை போன்ற இழைவகைகள் தென்படுகின்றன.


பத்தி:
வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

தினேசுவரி
நகர வாழ்வுக்குள் தனித்தனி வீடுகளிலும் அடுக்குமாடி வீடுகளிலும் சேகரித்த சேகரிக்கப்போகும் பொருட்களுக்காக மட்டுமே வீடுகளை நம்பியிருக்கிறோம். நச்சரித்துக் கொண்டேனும் நகர வாழ்வில் நசுங்கிப்போகிறோம் பகட்டான வாழ்வில். ஆனால் உண்மையில் மிஞ்சுவது என்ன? இறுக்கங்களும் இறுகிப் போன மன நிலைகளும் தான். நின்று இரசிக்க, பல வேளைகளில் சிரிக்க, சிலருடனாவது மனம் விட்டு பேச, உறவுகளைப் பலப் படுத்திக் கொள்ள பொழுதில்லை நமக்கு. இயந்திரங்களோடு பெருவெளியில் நாமும் இரத்த நாளங்கள் கொண்ட இயந்திரமாகி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.


பத்தி:
தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்

சீ. முத்துசாமி
அட எவண்டா இவன்? இத்தன வருஷமா (சரியாக சொல்வதனால் 28 வருடங்கள்) நம்ம தலமேல உக்காந்துவிட்டு தொலைஞ்சு போவாம கழுத்தறுத்திக்கிட்டிருக்கான்... என்று இந்த நாட்டின் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமே காட்டுக் கத்தாய் கத்தியும் நமது மாபெரும் தலைவன் டத்தோ சிரி (நன்றி நவீன்) சாமிவேலு அவர்கள் இன்னமும் ஏதேனும் ஒரு வழியில் 'தொலைந்து' போகாமல் அட்டை போல் ஒட்டி உறிஞ்சிக் கொண்டிருக்கிறார். அப்படியொரு 'தொலைதல்' நிகழுமாயின் அதுவே இச்சமூகம் குதூகலித்துக் கொண்டாடும் இன்னுமொரு மங்கள தீபாவளியாக அமையலாம்.


பத்தி:
இந்திரா டீச்சர்

சு. யுவராஜன்
எனக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து கொண்டே வந்தது. வகுப்பில் கடைசி வரிசை இருக்கைகளைத் தேடி அமர ஆரம்பித்திருந்தேன். தமிழ்ப் போதிக்க புதிதாக டீச்சர் வந்திருந்தார். பெயர் திருமதி இந்திரா. டீச்சர் அழகாக இருந்தார். மெதுவாக பேசினாலும் உறுதியான குரலுடையவர். பாடத்திட்டத்தைத் தாண்டி தமிழின் பொதுவான கூறுகளைப் பற்றியும் இணைத்துப் பாடம் நடத்துவார். பெரும்பாலான ஆசிரியைகளுக்கு குறைவாக இருக்கும் நகைச்சுவை தன்மை டீச்சரிடம் வளமாக இருந்தது. எப்போதும் கண்டித்துக் கொண்டேயிருக்காமல், தவறு செய்யும் மாணவர்களை நகைச்சுவையினாலேயே கூனிக் குறுக செய்து விடுவார்.

கவிதை:
o இளங்கோவன் 
o சித்தாந்தன் 
புனிதா முனியாண்டி
o முத்துசாமி பழனியப்பன்
ல‌தா
ஜீ.கே
ஷிஜூ சிதம்பரம்
ரேணுகா

 
 


சிறுகதை: அல்ட்ராமேன்
சு. யுவராஜன்
'நீங்க அடி வாங்கும் போதெல் லாம், அப்பாவை ஓங்கிக் குத்தனும் போல இருக்கும்' குமார் பேசிக் கொண்டிருக்கும் போதே அம்மா அவன் வாயைப் பொத்தினார்.


சிறுகதை: இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
ஜெயந்தி சங்கர்
அந்தக் காலத்தில் இரண்டாம் சித்தப்பா ஒரு காகிதப் பொருள் வியாபாரி. 'அந்தக் காலத்தில்' என்று ஏன் சொன்னேன் என்றால், அந்தவித வியா-பாரங்கள் உண்மையில் இன்றைய பேய்ஜிங்கின் கடந்த காலம் தான்.


தொடர்:      பல வேடிக்கை மனிதரைப் போல...4 'பிர‌பாக‌ர‌ன் உயிருட‌ன் இருக்கிறாரா?'
ம‌. ந‌வீன்
ஈழ‌த்தில் மீண்டும் போர் நிக‌ழ‌ வேண்டும் என‌ விரும்பும் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் ஏற‌க்குறைய‌ ஒரே வ‌கையான‌ கேள்வி-க‌ளைக் கேட்டு வைத்தேன். ஒரு வ‌ச‌திக்காக‌ அவ‌ற்றை பின் வ‌ருமாறு தொகுத்துப் ப‌ட்டிய‌-லிடுகிறேன். என‌து தொட‌ர் கேள்விக‌ள் வ‌ழி ந‌ண்ப‌ர்க‌ளின் ப‌தில்க‌ளையும் உங்க‌ளால் ஊகிக்க‌ முடியும்.


தொடர்: பரதேசியின் நாட்குறிப்புகள் ...4
மஹாத்மன்
என் சிறு பிராயத்தில் பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு நாய்க்குட்டியைக் கண்டு, எடுத்து ஆசையாய் வளர்த்து வந்தேன். ஒரு மழைக்காலத்தில் சொற்ப ஆயுசில் அது காலமானது. நாய்க்கும் எனக்கும் ராசியில்லை என்றெண்ணியதாலோ என்னவோ அம்மா பூனை வளர்க்கத் தொடங்கினார்.


தொடர்: எனது நங்கூரங்கள் ...4
இளைய அப்துல்லாஹ்
இயக்கப் பெடியன்கள் அவரை கொல்ல வேண்டும் என்றே கங்கணம் கட்டி இருந்தார்கள். அவ்வளவுக்கு உபத்திரவம் அவர். மானுருவியில் வைத்து அவர் கொல்லப் பட்டு விட்டார் என்ற கேள்விப்பட்ட போது எல்லோருக்கும் சந்தோசம். அவர் இனிமேல் அடிக்க மாட்டார் என்ற சந்தோஷம் தான் அது.

 

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768 | Hit Counts : Web Counter