இதழ் 21
செப்டம்பர் 2010
  கவிதை:
லீனா மணிமேகலை
 
 
 
  பத்தி:

வல்லினம் க‌லை இல‌க்கிய‌ விழா 2

ம. நவீன்

மா. சண்முகசிவா : கனிவில் நனைந்த அக்கறை
சு. யுவராஜன்

பின்தொட‌ரும் ஓவிய‌ங்க‌ள்
யோகி

ஒரு மின்ன‌ஞ்ச‌லும்... த‌ற்கொலை செய்து கொள்ளும் த‌த்துவ‌ங்க‌ளும்!
ம‌. ந‌வீன்

இயற்கை (6) - காற்று
எம். ரிஷான் ஷெரீப்

கட்டுரை:

பிறந்த மண்ணின் இறந்த காலங்கள்
ஏ. தேவராஜன்

புனைவிலக்கியத்தில் நா. கோவிந்தசாமி... ஒரு மீள் பார்வை
கமலாதேவி அரவிந்தன்

‘கூர்’ - 2010 கனடா கலை இலக்கிய மலர் கட்டுரைகள் குறித்த கருத்துக் குறிப்பு
க. நவம்

புத்தகப்பார்வை:

எம். ரிஷான் ஷெரீஃபின் 'வீழ்தலின் நிழல்' - எனது பார்வையில்!
தேனம்மை லக்ஷ்மணன்

பதிவு:

நான் நிழலானால் சிறுகதைத் தொகுதி - விமர்சனக் கூட்டம்
வாணி பாலசுந்தரம்

சிறுகதை:

மார்க் தரும் நற்செய்தி
நாகரத்தினம் கிருஷ்ணா

தும்பிகள்
ஆர். அபிலாஷ்

பயணம்
சின்னப்பயல்

காசியும் கருப்பு நாயும்
ம. நவீன்

மௌனத்தின் உள்ளிருக்கும் மௌனங்கள்
க. ராஜம்ரஞ்சனி

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...3
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...9
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...11

லீனா மணிமேகலை

தர்மினி

இரா. சரவணதீர்த்தா

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ஏ. தேவராஜன்

ம. நவீன்

ராக்கியார்


எதிர்வினை:


இலக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம்
பா. அ. சிவம்

பா. அ. சிவத்தின் எதிர்வினைக்கான பதில்
ம. நவீன்

     
     
 

பரத்தையர்களுள் ராணி

நஞ்சாய் காய்ந்திருந்த நிலா நாளொன்று
தீண்டலற்ற கொதிப்பில்
உடலின் குறுக்கு சால் ஓடையொன்று உடைந்து
கைகளில் குருதியின் சகதி
ஏன் என்று கேட்டான் அவன்
ஏறிட்டு பார்த்த என் கண்களை
ஏற்கெனவே தெரியும் என்றான்

உறைய மறுத்த குருதியோடு போராடியபின்
உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்
சாரையை சுரக்க வைக்க வேண்டும் என்றேன்
வேர்களற்ற அவன் கால்களை என் கழுத்தில் சுற்றினேன்
வேட்கையின் நொதியைப்
பருகிய நொடிகளில்
வேறென்ன வேண்டும் என்றான்

பெண்களை வெறுப்பவனா நீ
அப்படி சொல்லிவிட முடியாது
ஆனால் யோனி மயிர்
ஏன்
கிருமிகள்
வெள்ளை பொய்கள்
குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியவை
சரிதான்
உனக்கு என்ன விலை வேண்டும் தருகிறேன்
என்னை நீ பார்க்க வேண்டும்
தொடுவது அவசியமில்லை
கண் கொட்டாமல்
எவ்வளவு நேரம் பார்க்கிறாயோ, அவ்வளவு விலை
சரி

என் படுக்கையறைக்கு வந்தான் அவன்
அம்மணம்
அவனுக்கு காட்சி
எனக்கு செயல்
எனக்கு காட்சி
அவனுக்கு செயல்
தவளை வாசனை
நனைந்த பறவைக் குஞ்சொன்றின் தலை
கசியும் ரகசியங்களின் வெளுப்பு
பொந்து
நனவிலி
நரகத்தின் வாசல்


வெளியேறினான்

ஆனால் மீண்டும் வந்தான்
பருத்த மின்னலொன்று தாக்குண்டவனாய்
அதன் ஒளிக்கு கட்டுண்டவனாய்

கன்னிமை என்பது கட்டுக்கதை என்றேன்
நீ நம்ப விருப்பப்படாதது என்றேன்
என் உடல் நினைவகம் அல்ல
மொழியுமல்ல
பேசுவேன்,
புரிந்துக் கொள்ள மாட்டேன்
அர்த்தம் அதிகாரம் என்றேன்

பார்க்க முடியாததை நோக்கி திரட்டப்பட்ட
மழுங்கிய முனையின் விறைப்பு
அவன் பார்வையை மங்கலாக்கியது

களைப்பாயிருக்கிறது
நாளை வருகிறேன்
அதிக விலை தருகிறேன்
என்னை அருகில் வந்து பார்

தூமையில் கெட்டித்திருந்த மயிர்
அவனின் நாக்கு ஒரு சிசுவினுடையதானது
பாலினம் மறந்தான்

அம்மா

அது ஆணின் நோய்
அப்பா என்ற சொல்லை பெருக்கிய தொற்று

நான் என்னையே பார்த்துக் கொள்ள சகியாமல் போகும்போதும்
உன் பார்வையை விலக்க கூடாது

என் மனதை பழக்கபடுத்த முயற்சிக்காதே

ஆண்டையின் தந்திரம் அது
வெறுப்பு என்னை வசியம் செய்கிறது

வெறுப்பதை கைவிடாதே

மூன்றாவது இரவு

கதவை திறந்துப் போட்டிருக்கிறாய்
யாரும் வந்துவிட்டால் என்ன செய்வாய்
என் ரத்தம் கெட்டுப் போகாது
உடைமையும் இழப்பும் நடக்க இங்கென்ன போரா நடக்கிறது?
ரத்த ஒழுக்கிற்கு எதுவும் தெரியாது
விடுதலையைத் தவிர
அதன் மைக்கருப்பு உனக்கு அச்சமூட்டுகிறதா?
என்னை நீ அவமதிக்க முடியாது
 உன்னால் கருத்தரிக்க முடியாதென்பதால் துளிர்க்கும் ஒவ்வொரு புதிய உயிரும் உன்
ஆளுகைக்கு உட்பட்டதல்ல அல்ல

மறைந்தாய்
நானும் மறைந்து போவேன்
பார்வைக்கு கட்டுப்படாமல்
பார்த்திருக்க இருக்க மறைந்துப் போவேன்
அதுவரை காத்திருப்பேன்

பரத்தை

அவன் வாய் முணுமுணுத்ததை
கவனிக்காமல் இல்லை
அசை போடும்போது திருத்திக் கொள்வான்
நான் பரத்தைகளுள் ராணி


இயக்குனர் காதரின் பிரேயிலிக்கு...........


ஓவியங்கள், நிழற்படங்கள் சிண்டி ஷேர்மேன்


 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768