| |
சாவைக் கண்டடைதல்
கசிந்த குருதி புறமெங்கும் வழியத் தொடங்கியது.
கண்களிலிருந்த நீர் கடினமாகிக் கல்லாகி,
பிழிந்தெடுத்த குருதி வெறும் சகதியாகியது.
மெல்லிய நடுக்கம்
தொய்ந்து விழும் விரல்களுடன்
பேச வழியின்றிப் பொய்யாய்
சில வார்த்தைகளைப் பரப்பிப் புன்னகைக்க முனைகின்றன.
நீர் வற்றிய உடலும்
உன் நிழல் படியும் நிலம் தேடி விழ ஆசைப்படுகின்றது.
நீயோ அந்தரத்தில் மிதக்கும் உருவம்.
இவளுக்கு எதுவுமற்றதாக
நூறு நூறு கைகளான நினைவுகள் கழுத்தை நெரிக்கின்றன.
சாவு ஒன்றும் கடினமில்லை
வாழ்வைத் தாண்டி என்ன இருக்கு?
சாவைக் கண்டடைதல் சுகமானதாம்.
நான் செத்துப் போனதைக் கண்டு கொண்டேன்.
வானத்திலும்
சவமொன்றைப் பார்த்தபடி விமானம் பறந்து போனது.
|
|