முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 35
நவம்பர் 2011

ஷோபாசக்தி கேள்வி பதில்கள் அடுத்த இதழில் (டிசம்பர் 2011) நிறைவுபெறுகின்றது. எனவே, வாசகர்கள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் கேள்விகளை அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். - ஆசிரியர் குழு             
 

கட்டுரை


அப்சரா
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

'கம்போடியா' முற்காலத்தில் கம்பூச்சியா என அறியப்பட்ட ஒரு தென்கிழக்காசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றன. இந்நாட்டின் தலைநகர் 'புனோம் பென்'. இந்நாட்டுக் குடிமக்களைக் 'கம்போடியர்' மற்றும் 'கிமிர்' எனவும் அழைக்கின்றனர். பெரும்பலான கம்போடியர் தேரவாத பெளத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். 'தேரவாதம்' பெளத்தத்தில் மிகப் பழமையான பிரிவு. இலங்கை மக்களில் 70% இச்சமயத்தைச் சேர்ந்தவர்களாவர்...

கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”
கே. பாலமுருகன்

மலேசிய தமிழ் இலக்கிய சூழலில் வெகுகாலம் எழுதிக் கொண்டிருப்பவர் கோ.புண்ணியவான். 2005 ஆம் ஆண்டில் கல்லூரியில் பயிலும்போது அவருடைய சிறை நூலின் வழி கதைகளைப் படித்திருக்கிறேன். மேலும் 2008ஆம் ஆண்டு தொடங்கி அவருடைய சிறுகதை வளர்ச்சியையும் கவனித்து வருகிறேன். 2009ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய இதழான 'உயிர் எழுத்து' இதழில் அவர் சிறுகதை எழுதத் துவங்கிய பிறகு பெரும் மாற்றங்களை அடையாளம் காண முடிந்தன...

சாதிகள் இல்லையடி பாப்பா
யோகி

பாரதியார் யார் என்று அறிமுகப்படுதாமலேயே என் தகப்பனார் 'பாரதி தமிழ்ப்பள்ளியில்' என்னை முதலாம் ஆண்டில் சேர்த்திருந்தார். முண்டாசு தரித்த தலையுடனும் அகன்ற கண்ணும் முறுக்கிய மீசையுடனும் பள்ளியின் வாசல் பார்த்து இருந்த அவரின் படத்தை பார்த்த படியேதான் யாரும் உள்ளே வர வேண்டும். அந்த மிக பெரிய ஆளுமையின் வரலாற்றைப் படிப்பதற்கும் வியப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் எனது ஐந்து வருடங்களை தாராளமாகக் கொடுத்திருந்தேன்...

ஓர் இலக்கியச் சர்ச்சை
ஷம்மிக்கா

சமீபத்தில் எனது நண்பருடன் இலக்கியம் பற்றி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, "தற்போதுள்ள ஈழத்து எழுத்தாளர்களில் எஸ்.பொவும் அ.முத்துலிங்கமும்தான் சிறந்த எழுத்தாளர்கள் எனக் குறிப்பிடுவேன்" என்று சொன்னார். அவர் ஒரு ஊடகவியலாளர். நான் இடை மறித்து, "ஏன் அப்படிச் சொல்கின்றீர்கள்? செங்கை ஆழியான், முல்லைமணி, சேரன், ஷோபாசக்தி...." என்று நீண்டதொரு பட்டியலை அடிக்கிக் கொண்டே போனேன். பட்டியலைப் பூரணப்படுத்த அவர் விடவில்லை.

விவேகமான காயம்
செல்மா பிரியதர்ஷன்

நான் சிறுவனாயிருந்த போது எனக்கு அம்மா இருந்தாள். குடிசை வீட்டின் பின்புறமிருந்த வெட்ட வெளியில் பஞ்சாரங்களில் அடைத்து நிறைய கோழிகள் வளர்த்தாள். வான்கோழி முட்டைகளை நாட்டுப் பெட்டைக்கோழிகளின் சிறகுகளுக்குக் கீழ் வைத்துப் பொரிக்க வைப்பாள். கார்காலங்களில் வீட்டைச் சுற்றி வான்கோழிகள் தோகைகள் விரித்து செழித்து வளர்ந்தன. விருந்தினர்கள் வரும் விழாக்களின் போது கோழி அறுத்து விருந்து சமைப்பது பால்யத்தின் தீராத ஞாபகமிச்சம்.

 
கேள்வி பதில்

கவிதை
o இளங்கோவன்
o அசரீரி
ந. பெரியசாமி
o ம. நவீன்

பத்தி


புலம்பெயர் முகங்கள்... 3
வி. ஜீவகுமாரன்

மேற்கு நாடுகளில் கைத்தொழிற்புரட்சி வந்தபொழுது ஏற்பட்ட கலாச்சார சமயமாற்றங்களை கிழக்காசிய நாடுகளில் இருந்த நாம்பெரிதாக அவதானிக்கவில்லை. அல்லது அந்த வாழ்வின் மீதான மாற்றம் எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.


புத்தகப்பார்வை


துரத்தும் நிழல்களின் உக்கிரம் - சித்தாந்தன் கவிதைகள்
கருணாகரன்

முப்பது கவிதைகளையுடைய இந்த நூலில் பெரும்பாலானவையும் யுத்தக் கவிதைகள் அல்லது யுத்தம் பற்றிய கவிதைகள். அல்லது சித்தாந்தனின் வாழ்க்கைக் கவிதைகளாகவேயுள்ளன. இந்தக் கவிதைகளிலுள்ள பெரும்பாலான அடிகளிலும் யுத்தத்தின் உக்கிரம், சனங்களின் அவலம், இரத்தத்தின் நெடில், வாழ்க்கையின் இழப்பு, அச்சத்தின் பயங்கரம், காலத்தின் துயர் ஆகியனவே இருக்கின்றன.

 
 
க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்

 
       
 
 
 
 
       
 
 
 
 
       
 
 
 
 
             

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768