இதழ் 9
செப்டம்பர் 2009
  கவிதை : நேற்றிருந்த நாடு
லதா
 
     
  பத்தி:

சை. பீர் என்ற......

யுவ‌ராஜ‌ன்

சிற்றிதழ்களும் தெருநாய்களும்
சிவா பெரியண்ணன்


நிறைய‌ க‌ண்க‌ளுட‌ன் ஒருவ‌ன்...
வீ.அ. ம‌ணிமொழி

பியானிஸ்ட் (The Pianist) – அடையாளம் கடந்த நேயம்
யுவ‌ராஜ‌ன் 

வசூல்
சீ. முத்துசாமி 


கட்டுரை:

HOW TO FIGHT BACK
சேனன்

ஒரு டோடோ பறவையின் வரலாறு
சித்ரா ர‌மேஸ்

உலகின் இறுதி நாள் 21-12-2012 - மாயன்கள் உறுதி!
விக்னேஷ்வரன் அடைக்கலம்


சிறுகதை:

ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்
முனிஸ்வரன்


தூரத்தே தெரியும் வான் விளிம்பு
ஜெயந்தி சங்கர்


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...2
"மலேசியத் தரகர்கள்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...2
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...2
இளைய அப்துல்லாஹ்


லும்ப‌ன் ப‌க்க‌ம்:

ஏய் ட‌ண்ட‌ன‌க்கா... ஏய் ட‌ன‌க்க‌ண‌க்கா


கவிதை:

தர்மினி


சந்துரு

லதா

தினேசுவரி

யோகி


தோழி

ரேணுகா

இளங்கோவன்
 
     
     
 

நூலகத்தின்
வாசல் மறைத்து நின்ற
பெரு மரம் தேடி
குருவிகள் வருவது இன்று
கடைசியாக இருக்கலாம்

நேயத்தை ஒளித்து வைக்க
காலம் படிந்த அதன்
செஞ்சுவர்களை
மக்கள்
பிடுங்கிச் சென்றுவிட்டனர்

நாராயணப் பிள்ளையின்
செங்கல் சூளையின் கதையும்
முடிந்தது

நகர மையத்தின் நடுவில்
கிளர்ச்சியூட்டிய தனிமையும்
ஏறித் தாவிய அரைச் சுவரும்
இரவுகளை மலர்த்திய கொண்டாட்டங்களும்
பிசாசுகளாய் மாறி
பக்கத்து அரும்பொருளகத்தில்
அலைவதாய்
சொல்கிறார்கள்

காதல் உறைந்த பாடல்கள் கருகுகின்றன
வாழ்வைத் தேக்கிய காற்றும் கலைகிறது

தடயங்களை விழுங்கி விட்டு
கவிஞன் ஒருவனின் குறுந்தாடியில்
தற்கொலை செய்துகொண்ட
வரலாற்றின் ஆத்ம சாந்திக்கு
கூட்டு வழிபாடுகள் ஏற்பாடாகின்றன

உயிர்த்தலை
அழித்துக்கொண்டோடும்
சுரங்கச் சாலை
புதுத் தடங்களைச் சொல்லட்டும்

இடம்பெயர்ந்த பழமையின்
வாசனையை
அழுந்தத் துடைத்துவிட்டேன்
நினைவுகளைச் சுமக்கும்
கனவுகளை
இனி எவரும் காணார்.

 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768