இதழ் 10
அக்டோபர் 2009
  கவிதை
சேனன்
 
     
  பத்தி:

ஒரு மாட்டுத்தலை காதில் சொல்லிப் போன சேதிகள்

சீ. முத்துசாமி

எனக்குத் தெரிந்த மழை
யோகி


மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; ஓர் இலக்கியப் பார்வை
சு. யுவ‌ராஜ‌ன்


கட்டுரை:

கதையும் நாடகப்பொருளும்
இராம. கண்ணபிரான்

மலைகள் மீதொரு ராட்சத யாளி
ஜெயந்தி சங்கர்


சிறுகதை:

பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்
அ.ரெங்கசாமி


மண் மீதும் மலை மீதும் படர்ந்திருந்த நீலங்கள்!
கோ.முனியாண்டி


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...3
"தமிழ் எங்கள் ...யிர்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...3
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...3
இளைய அப்துல்லாஹ்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...8
சீ. முத்துசாமி


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...1


ஜி.எஸ். தயாளன்


எம். ரிஷான் ஷெரீப்

ஷிஜூ சிதம்பரம்

புனிதா முனியாண்டி

சேனன்

ரேணுகா


பதிவு:

வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'

ம. நவீன்


விமர்சனம்:

வல்லினம் கவிதைகள்

ஜாசின் ஏ.தேவராஜன்

வல்லினம் சிறுகதைகள்

சு. யுவ‌ராஜ‌ன்

"வல்லினம்" – ஒரு பார்வை (செப்டம்பர் மாத வல்லினம் இதழ் விமர்சனம்)

கவின் மலர்


புத்தகப்பார்வை:

மஹாத்மன் சிறுகதைகள்

சிவா பெரியண்ணன்


எதிர்வினை:

புத்தர், போதிமரம், சரணம் மற்றும் மரணங்கள்

தர்மினி

     
     
 

The Matter of Time – Richard Serra

என்செய்வேன்?
உன்னைச் சுற்றிய வெளிச்ச முக்காடு இப்போதைக்கு விழா என்று
நித்தம் நினைவூட்டும் நீ
இடைக்கிடை உன் இறகுகள் காட்டி
பாவனை எப்படியென்று பரிதவிக்கிறாய்.

புகையிரதத் தடங்கள்
சமாந்தரத்தில் வளையும் என்றும்
ஒட்டாது என்றும்
நீயும் நானும் சின்னனில் கற்றோம்.

வளர்ந்தபோது அவை எங்கோ ஒரு புள்ளியில் சேரும் என்றார்கள்.
புள்ளியைத் தேடுதல் முடிவிலி தாண்டும் கணக்கு இன்று புரியும்.
நிலத்திற்; சமாந்தரக் கோடு வளைத்து –
அதை வானில் சமப்படுத்தி வரைந்து
பின் உருக்கிய இரும்பால் இணைத்து
சமாந்தரக் கோட்டு வெளியை காட்டும் ரிச்சர்ட் செரா கலைஞனாம்.

அவன் கலைக்குள் நுழைந்து
வெளிக்குள் வருபவர்கள் திசைமாறிச் செல்லலாம் என்ற எச்சரிப்பு வேறு!

திசை தெரிந்தோருக்கு எடுபடும் அந்தக்கதை.
உனக்கும் எனக்கும் எட்டாது அது.
திமிறும் வாழ்தடம் சமாந்தரத்தில் ஓடி சுழல்வது அறியாத விசரன் அவன்.
கலைக்காக அழுதல் அறியாத மடையன்.
நீ பல புள்ளிகளைக் கண்டுபிடித்தாய்.
இணைத்து ஒட்டச் சாத்தியமற்று
ஓடிவிளையாடும் மின்மினிகளவை.
அவன்கிடந்தான் மடக்கலைஞன்.
கலை இணைக்கும் - ‘உன்னாலும்தான்’ – மறந்துவிடாதே ஒரு போதும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768