இதழ் 10
அக்டோபர் 2009
வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை, இலக்கிய விழா' காணொளிclick here
 

பத்தி: ஒரு மாட்டுத் தலை காதில் சொல்லிப் போன சேதிகள்
சீ. முத்துசாமி
மலேசியா போன்ற ஒரு பல்லின, பல சமய, பன்முக பண்பாடு கலாச்சார, பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நாட்டில், நல்லிணக்கம் என்பது, சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகள் கடந்த நிலையிலும், சகிப்புத்தன்மை என்கிற ஒரு சிறு கூட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டு மூச்சுத் திணறிக் கிடக்கிறது என்பது கவலைக்குரிய நிலையே. அரசியல்வாதிகளும் தங்களின் சுயநல வேட்கைக்கு ஏதுவாக வெற்று ஸ்லோகங்களை மட்டுமே அதற்கு அவ்வப்போது உணவாக அளித்து அதை அங்கேயே தக்கவைத்து பராமரிப்பதில் கண்ணுங்கருத்துமாக செயல்படுகின்றனர்.

கட்டுரை: கதையும் நாடகப்பொருளும்  
இராம. கண்ணபிரான்
சத்யவதிக்குச் சித்திராங்கதன், விசித்திரவீர்யன் என்ற இரு மகன்கள் பிறக்கிறார்கள். மன வலிமை குறைந்த சித்திராங்கதன் முதலில் இறந்துபோக, சந்தனு மஹாராஜாவுக்குப் பிறகு, விசித்திரவீர்யன் அஸ்தினாபுரத்தைத் தலைநகராய்க்கொண்டு இராஜ்ஜியத்தை ஆள்கிறான். கொஞ்ச காலத்திற்குப் பின்னர், காச நோயால் அவதியுற்ற விசித்திரவீர்யனும், சந்ததி இல்லாமல் மரணமடைகிறான். அவனுடைய அம்பிகா, அம்பபாலிகா என்ற இரு மனைவியரும் தம் இளம் வயதிலேயே விதவைகள் ஆகின்றனர். அஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசன் இல்லாமல் தவிக்கிறது.


புதியப்பதிவு: 27.10.2009
Enter your email address to receive Vallinam updates:

Delivered by FeedBurner

 

பத்தி:
எனக்குத் தெரிந்த மழை

யோகி
அன்று அத்துணை காதலுடன் இருந்த மழை மீது இன்று நனைந்து ஆறு வருடங்கள் ஆகிறதென்றால் நம்புவீர்களா? நகரம் வாங்கிய சாபம் அப்படி. ஒரு ஐந்துமாடி குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் உறவினர் வீட்டில் வேலை நிமித்தமாக தங்கியிருந்தேன். மழைக்காக நான்கு மாடி இறங்கி மெனக்கெட முடியாது.வேலைக்குப் போகும் போது நனைய இயலாது. உடைகள் நனைந்தால் வேலை எப்படி செய்வது? வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போதும் நனைய முடியாது. பேருந்தில் ஈர துணியுடன் நிற்பது பேருந்தை ஈரமாக்கி விடலாம். பலர் கண்களுக்குக் காட்சி பொருளாகவும் சிலர் பரிதாபமும் படலாம். பிழைப்புக்காக வந்த இடத்தில் இது அவசியம் இல்லாதது.


கட்டுரை:
மலைகள் மீதொரு ராட்சத யாளி

ஜெயந்தி சங்கர்
கட்டுமானப் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு போவது அக்காலத்தில் எளிய காரியமாக இருக்கவில்லை. ஆகவே, மலைப் பிரதேசங்களில் பாறைகளும் கற்களும் சமவெளிகளில் மண்ணும் பதப்படுத்தப்பட்ட மண்ணும் பயன்படுத்தப்பட்டன. கடுமையான வேலைகளில் ஈடும்பட்ட சுமார் 2-3 மில்லியன் கட்டுமானப்பணியார்கள் உயிரை விட்டிருக்கின்றனர். பணியின் போது இறந்த விவசாயிகளும் பணியாளர்களும் சுவருக்குள்ளேயே புதைக்கப்பட்டிருக்கின்றனர். அகழ்வாய்வாளர்கள் இதற்கான துல்லிய சான்றுகளைத் தோண்டியெடுத்துள்ளனர். பிற்காலத்தில், ஹ்ஹன், ஸ்யூ, வட/தென் ஜின் முடியாட்சிகளிலும் தொடர்ந்து சுவரைப் பழுது பார்க்கும் பணிகளும், புதிய கட்டுமானங்களும் வடக்கிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு நடந்திருக்கின்றன.


பத்தி:
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; ஓர் இலக்கியப் பார்வை
சு. யுவ‌ராஜ‌ன் 
பட்டப்படிப்பை நிறைவு செய்யும் இறுதியாண்டில் முடிக்கப்பட வேண்டிய ஆய்வுகளை பற்றி நாம் அறிவோம். தமிழ் நூலகத்தில் தொகுக்கப்பட்டிருந்த ஆய்வுகளை ஒரு பார்வை இட்ட போது மலேசியாவின் முக்கிய எழுத்தாளர்களான சை.பீர் முகம்மது, மா.சண்முகசிவா, கோ.புண்ணியவான், எம்.ஏ இளஞ்செல்வன் போன்றவர்களுடையப் படைப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது காண முடிந்தது. கொஞ்சம் செதுக்கி, புத்தகங்களாக வெளியிடப்பட்டிருந்தால் ஆழமான விமர்சனமாக இல்லாவிட்டாலும், எழுத்தாளர்கள் குறித்த நல்ல பதிவாகவாவது இருந்திருக்கும்.


"வல்லினம்" – ஒரு பார்வை (செப்டம்பர் மாத வல்லினம் இதழ் விமர்சனம்)
கவின் மலர் 
இன்றைய நிலையில் தீவிர வாசிப்புக்குரிய அனைத்து தன்மைகளோடும் ஒரு பத்திரிகை நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல. எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல் இருந்தாலொழிய அது சாத்தியமில்லை. சிரமப்பட்டு கையிலிருந்து பணம் செலவழித்து இதழ் நடத்தி ஒரு கட்டத்தில் முடியாமல் போக அதை நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஏற்படும் வலி “வல்லினம்” ஆசிரியர் குழுவுக்கும் ஏற்பட்டிருக்கும். அதன் வாசகர்களுக்கோ அதைவிட பெரிய வலி. இருதரப்பினரின் வலிநிவாரணியாக வந்திருக்கிறது www.vallinam.com.my இணைய இதழ்.


பதிவு:
வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'

ம. நவீன்
நிகழ்வின் ஏற்பாட்டாளரான வ‌ல்லின‌ம் இத‌ழ் ஆசிரிய‌ர் ம.நவீன் தமது வரவேற்புரையில் சமரசங்கள் இன்றி வல்லினம் தனது பாதையில் செல்வதையும் அதன் பயணம் வேறொரு பரிணாமத்தை அடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். காலாண்டித‌ழாக‌ இத‌ழ் வ‌டிவில் ம‌ட்டுமே வெளிவ‌ந்து கொண்டிருந்த‌ வ‌ல்லின‌ம், எந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌மும் கையேந்தாத‌தால் அத‌ன் இணைய‌ப் ப‌ரிணாம‌ம் பொது புத்தியில் 'தோல்வியாக‌' வ‌கைப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌தைப் பூட‌க‌மாக‌ச் சுட்டிக்காட்டினார். சுமார் இருப‌த்து ஐந்து பேரிட‌ம் ப‌ண‌ம் பெற்று ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ இவ்வித‌ழ் ஒரு சில‌ரால் 'பிச்சை வாங்கி ந‌ட‌த்த‌ப்ப‌டும் இத‌ழ்' என‌ விம‌ர்சிக்கப்ப‌ட்ட‌தையும் சாடுவ‌தாக‌ அமைந்த‌து அவ‌ர் உரை.


கலை, இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட திறனாய்வுக் கட்டுரைகள்:
வல்லினம் கவிதைகள்: மூன்று மாதங்கள் நான் சாப்பிட்டுத் தீராத அட்சயக் கவிதைகளும் அடங்காப் பேய்ப் பசியும்!
ஜாசின் ஏ. தேவராஜன்

வல்லினம் சிறுகதைகள்
சு. யுவ‌ராஜ‌ன்புத்தகப்பார்வை:
மஹாத்மன் சிறுகதைகள்

சிவா பெரியண்ணன் 


எதிர்வினை: புத்தர், போதிமரம், சரணம் மற்றும் மரணங்கள்
(செப்ரம்பர் மாத வல்லினத்தில் வெளியாகிய இளங்கோவனின் 'புத்தரின் கையெறி குண்டு' எனும் கவிதையை முன் வைத்து....)

தர்மினி 

 
 

சிறுகதை: பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்
அ. ரெங்கசாமி
குண்டடி பட்டு ஆங்காங்கே மக்கள் போடுற ஓலமும் கூச்சலும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்துச்சு. பக்கத்துக் குழியிலே படுத்திருந்த மாமியும் அலறுனாங்க.


சிறுகதை: மண்மீதும் மலை மீதும் படர்ந்-திருந்த நீலங்கள்!
கோ. முனியாண்டி
கொஞ்ச நேரம் கழிச்சி என்னய மட்டும் கூப்புட்ட எங்க தம்பிராஜா ஆசிரியரு “இத யெல்லாம் எப்படி காப்பியடிச்சே”னு கேட்டு மெரட்டுனாரு.


தொடர்:      பல வேடிக்கை மனிதரைப் போல...3
ம‌. ந‌வீன்
ஆரோக்கியமற்ற ஒரு கல்விச் சூழலில் உருவாகும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களும் அலட்சியப் போக்கும் மொண்ணைப் பார்வையும் சுயநலமுமே இந்திய ஆய்வியல் துறை மாணவர்களுக்கு அதன் கல்வி மான்கள் இறுதியாண்டில் அருளும் கொடை.


தொடர்: பரதேசியின் நாட்குறிப்புகள் ...3
மஹாத்மன்
ஒரு நாள் ஒரு பெண்மணி பக்தர்கள் முன்னிலையில் ‘நான் உணவுக்காகவே இங்கு வந்தேன்...’ என்ற தனது சாட்சியைச் சொல்லும்போது சிலர் அதிர்ந்து போயினர். சிலர் தலை கவிழ்ந்தனர். என் மனம் ‘சபாஷ் பெண்ணே!’ என்றது.


தொடர்: எனது நங்கூரங்கள் ...3
இளைய அப்துல்லாஹ்
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கூட்டம் குடும்பம் எல்லாம் கலியாணம் பார்க்க வரப் போகிறோம். நீ டிக்கட் எடுத்துத் தா! என்று இவருக்கு நச்சரிக்க, இவர் தலையில் கை வைத்துக் கொண்டிருக்கிறார்.

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...8
சீ. முத்துசாமி
எனது பால்யகால அனுபவங்களில் என்னோடு இன்று வரை தொடரும் மிக முக்கியமானவை இறப்பும், அதன் தொடர்பான சில பயங்களும்.

கவிதை:
o இளங்கோவன் 
o ஜி.எஸ்.தயாளன் 
எம்.ரிஷான் ஷெரீப்
o ஷிஜூ சிதம்பரம்
புனிதா முனியாண்டி
சேனன்
ரேணுகா

 

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768 | Hit Counts : Web Counter