கட்டுரை
சாட்டை : ஒரு மீள் பார்வையில்...
ம. நவீன்
சாட்டை திரைப்படம் குறித்து நண்பர்கள் பலரும் சொல்லியிருந்தனர். பார்ப்பதற்கு முன்பே திரையரங்கிலிருந்து தூக்கிவிட்டனர். தாமதமாகத்தான் தொலைக்காட்சியில் தங்கத்திரையில் ஒளிபரப்பினார்கள். முதல் முறை பார்த்த உடனே படம் கவர்ந்தது. தங்கத்திரையில் அம்மாதம் முழுவதும் ஒரே படத்தை ஒளிபரப்புவார்கள் என்பதால் மீண்டும் சில முறை அப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது...
LINUS : முடவன் டுரியான் தின்ற கதை!
ம. நவீன்
ஒருவன் கைகள் இல்லாமல் இருக்கிறான். அவனுக்கு உணவை எப்படி அள்ளிச் சாப்பிடுவதென்று தெரியவில்லை. கண்முன் இருக்கும் மிட்டாயைக்கூட வாயில் வைக்க முடியாமல் தடுமாறுகிறான். அவனின் துயரைத்தீர்க்க ஓர் அறிவாளி முடிவெடுக்கிறான். அவனுக்கு எப்படிச் சாப்பிடுவதென போதிப்பதாகக் கூறுகிறான். கையில்லாத அவனை ஒரு இடத்தில் அமரச் செய்து டுரியான் பழத்தினை அவன் முன் வைக்கிறான்...
சிறுகதை
நாளைக்கு இறந்தவன்
வெ. சந்திரமோகன்
சிலரைப் பார்க்கையில் அவர்கள் ஏதோ ஒருவகையில் தற்காலிகமானவர்கள் என்ற கணிப்பு வரத் தொடங்கியபோது ரமணனுக்கு பதிமூன்று வயது தான் ஆகியிருந்தது. தற்காலிகம் என்றால் வாழ்க்கையிலா, படிப்பிலா வேலையிலா என்று உறுதியாக அவனுக்குத் தெரியவில்லை. வெற்றியடைந்தவர்கள் தோல்வியடைந்தவர்கள் என்ற வித்தியாசமும் இல்லை. நண்பர்கள் தெரிந்தவர்கள் உறவினர்களில் யாரைப் பற்றியேனும் திடீரென்று இந்த நினைப்பு வரும்...
|