கட்டுரை
பள்ளிக்குச் செல்லாத நான்...
கலைவாணி
வாசிப்பற்ற, வாசிப்பை மறந்த ஒரு சமூகத்தின் முன் என் முதல் கட்டுரையை எழுதத் துவங்கியுள்ளேன். இப்போதைய நம் இயந்திர வளர்ச்சியில் நம்மிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இணையத்தில் விளையாடுவதிலும் அதிகநேரத்தை இன்னபிற இணையத்தளங்களில் செலவழிப்பதிலும் பொழுதைக் கழிக்கின்றனர்.
வாசிப்பதின் மூலம் நமது பொழுது பயனுள்ள பொழுதாக மாறும். எனது வாசிப்பு பழக்கம் பள்ளியில் இருந்து ஆரம்பமானதல்ல...
டேவிட் : தமிழ் சினிமாவில் இன்னொரு திருப்பம்...
மீனா
நடுத்தரவர்க்க சாதிப் பெருமையும் இந்துமதச் சார்பும் தமிழ்
சினிமாவில் ஊடாடிக் கொண்டிருப்பது புதிதானதல்ல. எனினும்
எண்பதுகளுக்குப் பின் வெளிவந்த ஒருசில திரைப்படங்களில் இந்த சாதி,
மத ஆதிக்கக் கூறுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. குறிப்பாகக் காதலை
மையப்படுத்தி வந்த பல்வேறு திரைக்கதைகள் இதைச் செம்மையாய்ச்
செய்தன. சாதியப் பெருமைகளைப் பின்னுக்குத் தள்ளின...
சிறுகதை
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்...
மாரி செல்வராஜ்
நேற்று
குவித்து வைக்கப்பட்ட உப்பு குவியல்கள் நடுவீட்டில் அப்படியே
இருக்கிறது. மணி பத்து தாண்டிவிட்டது முகிலன் இன்னும் வீடு வந்து
சேரவில்லை. அம்மாவுக்குதான் பயமாக இருந்தது. தினமும் அவன்
இவர்களிடம் அடிவாங்குவதை அவள் வெறுமென வேடிக்கை
பார்த்துக்கொண்டிருப்பது அவளுக்கு என்னவோ போலிருக்கிறது. அப்பா
செல்வராஜ் அப்படியே எழுந்து பின் வாசல் வழியாக அம்மன் கோவிலை
பார்த்து போனார். அவருக்கு எல்லாம் தெரியும் பையன் எங்கு
போயிருக்கான் அங்கு என்ன நடந்துச்சுன்னு...
|