இதழ் 23
நவம்பர் 2010


vallinam on FacebookEnter your email address to receive Vallinam updates:

Delivered by FeedBurner

 

 

இளங்கோவன் சிறப்பிதழ் பத்திகள்

பத்தி:
அக்னிக் குஞ்சு

சீ. முத்துசாமி
சிங்கை இளங்கோவனின் படைப்புகளான கவிதைகள் நாடகப் பிரதிகள் எனும் படைப்பு வெளியில் நுழைந்து வெளிவர மனதில் நிரம்பி வழிந்து - பல இரவுகள் தூக்கத்திற்கு பங்கம் விளைவித்துவிடும் அந்த வலிமிகுந்த காட்சில் படிமங்களுள் நமக்கு கிட்டுவது - அதில் வேரடி மண்ணால் மையமிட்டு விரவி சுழலும் அவரது ‘ஆளுமை’ எனும் ஊற்றுக் கண்தான் என்பதை உணர முடிகிறது.

பத்தி:
இடம்பெயராத இளங்கோவன் எனும் ஆளுமை!

கோ. முனியாண்டி
70-களைத் தொடக்கமாகக் கொண்டு 80-கள் வரையும் அதற்குப் பின்னர் பல காலமும் தமிழ் நாட்டில் சுஜாதா ஒரு தவிர்க்க முடியாத சூழலாய் மாறியது போல் இங்கே சிங்கப்பூர், மலேசியாவில், க. இளங்கோவனும் தனித்தன்மையுடன் தமிழிலக்கியத் துறையில் வலம் வந்துக் கொண்டிருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.

பத்தி:
நிஷா : காலமும் வெளியும்

இராம. கண்ணபிரான்
தமிழ்ப் புதுக் கவிதையையும் தமிழ் நவீன நாடகத்தையும் சிங்கப்பூரில் முதன்முதலாக அறிமுகப்படுத்திய இளங்கோவன், ‘தலாக்’ என்ற நாடகத்தைத் தமிழில் எழுதி, இயக்கித் தொண்ணூறுகளின் இறுதியில் குடியரசில் இரண்டு முறை மேடையேற்றினார். பிறகு, அவரே அந்நாடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 1999இல் இருமொழி நூலாகவும் வெளியிட்டார். இந்நாடகம் அவருடைய முப்பத்திரண்டாவது மேடை நாடகமாகும்.

பத்தி:
FLUSH - வெறுப்பின் குருதி

சு. யுவராஜன்
சிங்கை இளங்கோவனின் நாடகமான ‘Flush’–ஐ மூன்றாவது முறையாக நாடகப்பிரதியைப் படித்துவிட்டு பிறகு எழுந்த சிந்தனைகள் இவை. ஒரு நிகழ்த்துக் கலையை ஒரு பிரதியாக மட்டுமே வாசித்து விட்டு கருத்துகள் எழுதுவது புது அனுபவமாக இருக்கிறது. ஆச்சரியமாக இளங்கோவனின் மிருகம் 1 & 2 போன்ற நாடகங்களைத் தவிர மற்ற நாடகங்களின் பிரதியை மட்டுமே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பத்தி:
இளங்கோவன் : தீ முள்

ம. நவீன்
முதன் முதலில் சிங்கப்பூர் சென்றிருந்த போது நானும் அகிலனும் தங்கியிருந்த விடுதிக்கு, லண்டனிலிருந்து வந்திருந்த என். செல்வராஜாவை சந்திக்க இளங்கோவன் வந்திருப்பது தெரிய வரவே லதாவின் மூலமாக அவரை சந்திக்க விரும்புவதாக தகவல் கொடுத்தேன். லதாவிடமிருந்து அழைப்பு வராததால் என் எண்ணம் உறுதியானது. நிச்சயமாக அவரைச் சந்திக்கவே கூடாது என உறுதி செய்து கொண்டேன்.

பத்தி:
இலக்கிய வானில் ஓர் விடிவெள்ளி

முனைவர் ஸ்ரீலஷ்மி
இளங்கோவனின் படைப்பு முயற்சிகள் பலவிதத் தடைகளை எதிர் கொண்டாலும் அவரது படைப்புகள் புதுமைத்தாகமுடைய இலக்கிய ஆர்வலர்களின் (தமிழ்க்குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் பரிணாமக்கொள்கைக்குத் தமிழ்ச் சாயம் பூசி மகிழும் உளுத்துப்போன பழம்பெருச்சாளிகள் அல்லர்) கவனத்தை ஈர்க்காமல் இல்லை.


பத்தி:
த‌ற்கொலை போதிக்கும் த‌த்துவ‌ங்க‌ள்!

யோகி
தற்கொலை என்ற சொல்லைக் கேட்டாலே கோழைத்தனம், உண்மைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் துரோகி, முட்டாள், சுயநலவாதி, ஏமாளி, கோமாளி இன்னும் எத்தனையோ பெயர்களை அறிவு ஜீவிகள் வரையறுக்கிறார்கள். ஒரு தற்கொலைக்குப் பின்னால் என்னென்ன நடந்திருக்கிறது?அஞ்சலி:
ரெ. ச‌ண்முக‌ம் : க‌லையின் குர‌ல்

ம. நவீன்
செவ்விசை சித்தர் ரெ. சண்முகம் இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்தவுடன் எந்த வகையான பதற்றமும் ஏற்படவில்லை. 'இறந்துவிட்டாரா?' என மட்டும் ஒரு தரம் கேட்டதாக ஞாபகம். பிறப்பைப் போலவே இறப்பும் சட்டென நடக்கும் ஒரு சம்பவம் இல்லை என நம்புபவன் நான்.


கட்டுரை:
மலேசியக் கல்விச் சூழலில் தமிழாளுமையின் சரிவும் இழந்தே பழகிய அரைநூற்றாண்டுச் சுரணையும்!

ஏ. தேவராஜன்
பேரா மாநிலத்தில் நடைபெற்ற கல்விக் கருத்தரங்கு நிகழ்வொன்றில் வெளியிடப்பட்ட புள்ளி விபரம் மீண்டுமோர் அபாயச் சங்கைக் காதுக்குள் சுடச்சுட வழியவிட்டது. இவ்விபரத்தின் உள்நிலவரம் பற்றிக் கருத்துரைப்பதைவிட இதை அனுமானமாகவோ நடப்புநிலையின் நீட்சியாகவோ கொள்வதிலும் தவறில்லை.

கட்டுரை:
அயராது உழைக்கும் ஜப்பானியர்கள்

சந்தியா கிரிதர்
மூர்த்தி சின்னதாகயிருந்தாலும் கீர்த்தி பெருசு என்று முன்னோர்கள் சொன்ன பழமொழியை ஜப்பானியர்கள் தப்பாமல் நிரூபித்திருக்கிறார்கள். உலக வரைப்படத்தில் ஜப்பான் நாடு சின்னதாகயிருந்தாலும், அவர்களுடைய அறிவியல் திறனைப் பார்த்து இந்த உலகமே வியந்து நிற்கிறது.


சிறுகதை:
சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்

கே. பாலமுருகன்
நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும். இருளில் சொற்கள் கரைந்துகொண்டிருக்கும் உணர்வைப் பெற முடியும். மின்சாரக் கம்பத்தில் வெகுநேரம் களைத்து அமர்ந்திருந்த சிட்டுக்குருவியின் படப்படப்பு மட்டும் அதீத ஓசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது.


தொடர்:
அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...5

எம்.ஜி. சுரேஷ்
மொத்த மேற்கத்தியத் தத்துவ வரலாற்றையும் புரட்டிப் பார்க்கும் போது, சாக்ரட்டீஸ் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தத்துவவாதியாகத் தோன்றுகிறார். அவர் தன் வாழ்நாளில் ஒரு வரி கூட எழுதியதில்லை. ஆனால், அவரைப் பற்றி ஆயிரக்கணக்கான பேர் பல்லாயிரக் கணக்கான வரிகள் எழுதி இருக்கிறார்கள் என்பது ஒரு நகை முரண்.

தொடர்:
நடந்து வந்த பாதையில் ...12

கமலாதேவி அரவிந்தன்
இவள் பெயர் படும் பாடு நினைத்தபோது ஏனோ சிரிப்பு வந்துவிட்டது. மலையாள அவையில் கமலம். தமிழ்த்தோழிகட்கு கமலா, ஆசிரியரும் குறிப்பிட்ட சிலரும் மட்டுமே இவளை முழுப்பெயரில் அழைப்பார்கள். மலையாளிகட்கு மறந்தும் இவள் முழுப்பெயர் வராது. எல்லோருக்குமே கமலம்தான். அதனாலேயே இவளே கூட, கமலமாகிப்போனாள். ஆனால் கமாலாக்‌ஷி...

 

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768