இதழ் 24
டிசம்பர் 2010
  கவிதை:
யதீந்திரா
 
 
 
  நேர்காணல்:

"ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!"

சேனன்

தமிழ்நாட்டைச் சாராமல், இலங்கைத் தமிழ் இலக்கியவாதிகளால் தனித்தியங்க முடியும்!
லெ. முருகபூபதி

சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரானுடன் ஓர் உரையாடல்... 'மலேசியா - சிங்கை 2010' நூலை முன்வைத்து'
கே. பாலமுருகன்


பத்தி:

தி பீட்டல்ஸ் (The Beatles)
அகிலன்

ஜே. ஜே. சில குறிப்புகள் : சில சிந்தனைகள்
சு. யுவராஜன்


விமர்சனம்:

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 - தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்
கே. பாலமுருகன்

சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும்
கே. பாலமுருகன்

ஸ்ரீரஞ்சனியின் நான் நிழலானால்... ஒரு விமர்சனப் பார்வை
கலாநிதி மைதிலி தயாநிதி

இலங்கைக் கவிஞர் எஸ். நளீமின் 'இலை துளிர்த்து குயில் கூவும்'
எம். ரிஷான் ஷெரீப்

பதிவு:

வல்லினம் சந்திப்பு 1 - சில நினைவுகள்
யோகி


சிறுகதை:

தங்கராசு
ஷைலஜா

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...6
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...13
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...1
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...14

ம‌. ந‌வீன்

யதீந்திரா

ஏ. தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

ரெ. பாண்டியன்


கிண்ணியா எஸ்.பாயிஸா அலி



எதிர்வினை:


சமூக போராளியின் நேர்காணல்
வெ. தனலெட்சுமி

தவறுக்கு வருந்துகிறேன்
எம். கே. குமார்


கடிதம்:

மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்
     
     
 

கைநழுவிப் போன கடவுள்

என் பக்கத்து வீட்டுச் சிறுமி ஒருத்தி
கதையொன்று சொல்லுங்களேன் மாமா என்றாள்.
யாரோ அவளிடம் சொல்லியிருக்க வேண்டும்
நான் கதைகள் எழுதுவதாக.
எழுத்து என்றால் கதைகள் என்று மட்டுமே அறிந்திருக்கும் அறிவுசார் சமூகமொன்றில்
அவ்வாறு சொல்லுதல் ஆச்சரியமல்லதான்.

என் கதைகள் உனக்கு விளங்காது மகளே!
என்று எவ்வாறு சொல்வேன்.
ஆனாலும் சொல்வதற்கு கதைகள் ஏராளம் என்னிடம்.
எங்கள் பாட்டன் செல்வநாயகம் கடவுள் பார்த்த கதை சொல்லவா
பெருந் தலைவர் பிரபாகரனின் முள்ளிவாய்க்கால் காட்டிய கதை சொல்லவா
போய்வா மகனே என்று முன்று பிள்ளை கொடுத்து
தெருவில் நிற்கும் தாய்களின் கதை சொல்லவா
ஒவ்வொரு காலையும் தன் முகம் கான தானே அஞ்சும்
நம் போராளிகளின் கதை சொல்லவா
தேசியத்தின் பேரால் பிழைத்துக் கொண்டோர் கதை சொல்லவா
முக்குடைந்த கதை மறைத்து மறவர் பெருமை பேசும் மானிடர் பற்றிச் சொல்லவா
இன்னும் இன்னும் …… சொல்ல முடியாத வேதனைக் கதைகள் சொல்வதா.
கதைகள் ஏராளம் ஏராளம் !
ஆனால்,
துயரற்ற கதை ஒன்றை இவளுக்குச் சொல்வது எவ்வாறு?

சின்ன வயதில் பல கதைகள்
கேட்துண்டு நானும்.
அதில் எனக்கு பிடித்த ஒன்றைக் கேள் மகளே!
முயல் சிங்கத்தை கிணறு காட்டி வீழத்திய கதைதானது.
முயல் ஒருபோதுமே பலவானாகிவிட முடியாது என்பதை நினைவில் கொள் என் மகளே!
ஆனால் முயல்கள் தந்திரம் கற்றால் பிழைக்கலாம் என்பதையும் ஒரு போதும் மறந்துவிடாதே!
முயல்களான யூதர்கள் பலவான்களான வரலாற்றை பின்னர் படி.
ஆனால் பின் வந்த நாட்களில்
இந்த கதையை நம் அண்ணன்மார் மறந்துவிட நேர்ந்தது ஒரு துரதிஸ்டமே.

போதும் எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானையிருந்தது என்னும் புராணம்.
கூடவே சந்திர சூரியக் கதைகளையும் மற.
அது நமது பாட்டன்களின் உளறல்.
நவீன கடவுளை கைபற்றும் சூட்சுமங்கள் கல்.
நவீன உலகில்
அதிகாரம் ஒன்றே கடவுள்.
அடிக்காமல் வீழ்த்தும் சூட்சுமங்கள் கற்றால்
கைநழுவிப் போன கடவுள்
ஓர் நாள் வசமாவார்.



எங்கோ தொலைந்தது என் அம்மம்மாவின் வெத்திலை உரல்

உலகில் அனேகர் போல்
என் தொப்புழ் கொடி உறவும் கிராமம்தான்
என் அரும்பு மீசைப்பருவம்; முழுவதும் தவழ்ந்தது அந்த நிலத்தில்தான்
அந்த நாட்கள் பற்றிய நினைவுகள் இப்போதும் மனதை நிறைக்கிறது.

அம்மம்மாவின் வெத்திலை உரலும் சிறு இருப்புலக்கையும்
இப்போதும் என் நினைவில் வந்து போகிறது
அதனை அவர் எப்போம் கைவிட்டதில்லை
எல்லாம் இழந்து ஓடிய போதும்
மரத்தடியில் படுத்து உறங்கிய போதும்.

என் அம்மப்பு அடிக்கடி கத்தி தீட்டும்
முற்றத்து கல்லும் நினைவில் வந்து போகிறது.
அந்தக் கல் உங்களுக்கு தெரிகிறா நன்பர்களே?

இதுதான் எங்கள் சுடலை
எங்கள் ஆச்சியம்மா உரமாகிய நிலம்
முதன் முதலில் எனக்கு மரணம் கற்பித்த நிலமது

இந்த மேலான உலகில்
எங்கள் வெத்திலை உரலும் கத்தி தீட்டும் கல்லும்
பெறுமதியற்றது என்பதை நான் அறிவேன்
ஆயினும் நன்பர்களே
அவைகள் எனக்களிக்கும் நினைவுகள் இருக்கிறதே
அது விலையற்றது

அம்மம்மாவின் மரணம்
கிராமத்து உறவை முற்றிலும் அறுத்தது
இப்போது என்னிடமிருப்பதெல்லாம்
தொன்மைகள் பற்றிய நினைவுகள் மட்டும்தான்

ஓன்றில் திருப்தி
கழிந்து செல்லும் நாட்கள் மத்தியில்
நினைவுகளையாவது பேண முடிந்ததே!
எங்கோ தொலைந்தது என் அம்மம்மாவின் வெத்திலை உரல்.



அறிவாளியும் மூடனும்

மூடன் : நான் அறிவாளியாவது எப்படி ஜயா ?
அறிவாளி : உனக்கு அரிச்சந்திரனைத் தெரியுமா ?

மூடன் : இல்லை

அறிவாளி : அவர் உண்மையின் அரசன்
உண்மைக்கு இன்னொரு பெயர்தான் அவர்தான்.
அவர் உண்மை பேசுவதற்காகவே தனது மனைவி பிள்ளை
சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்தவர்

மூடன் : அப்படியா !

அறிவாளி : மேலும் கேள் மூடனே!
ஆனால் அவரை எவரும் அறிவாளி என்று சொல்வதில்லை
இதுதான் நான் உனக்குச் சொல்லும் அறிவுரை
அறிவாளியாவது மிகவும் இலகுவான ஒன்று

உனக்கு பொய்களை அழகாகச் சொல்லத் தெரிய வேண்டும்.

நான் அறிவாளியான கதையைச் சொல்லுகிறேன் கேள்

இறந்து போன ஒருவர் நகம் வளர்த்து வருவார் என்றேன்
அவருடன் கூடவே சிலரும் வருவார் என்றேன்.
அவரை நெருங்குவதென்பது சீறிய பாம்பின் கழுத்து திருகி
முடிவளர்த்த நம்பரமனை அழிப்பது போன்றது என்றேன்.
ஒளிவட்டம் பார்த்தவன் நான் என்றேன்
அதன் பிரகாசத்தில் என்கண்கள் நீர்சொரிந்த கதை சொன்னேன்.
தண்ணியடித்து தூங்கிய பின்னிரவொன்றில் வேலுடன் முருகன் பார்த்த
கதை சொன்னேன்.

ஓரிரவில் அறிவாளியானேன்
ஊடகங்கள் எல்லாம் என் படுக்கை அறையில்

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768