இதழ் 24
டிசம்பர் 2010
  கவிதை:
ரெ. பாண்டியன்
 
 
 
  நேர்காணல்:

"ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!"

சேனன்

தமிழ்நாட்டைச் சாராமல், இலங்கைத் தமிழ் இலக்கியவாதிகளால் தனித்தியங்க முடியும்!
லெ. முருகபூபதி

சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரானுடன் ஓர் உரையாடல்... 'மலேசியா - சிங்கை 2010' நூலை முன்வைத்து'
கே. பாலமுருகன்


பத்தி:

தி பீட்டல்ஸ் (The Beatles)
அகிலன்

ஜே. ஜே. சில குறிப்புகள் : சில சிந்தனைகள்
சு. யுவராஜன்


விமர்சனம்:

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 - தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்
கே. பாலமுருகன்

சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும்
கே. பாலமுருகன்

ஸ்ரீரஞ்சனியின் நான் நிழலானால்... ஒரு விமர்சனப் பார்வை
கலாநிதி மைதிலி தயாநிதி

இலங்கைக் கவிஞர் எஸ். நளீமின் 'இலை துளிர்த்து குயில் கூவும்'
எம். ரிஷான் ஷெரீப்

பதிவு:

வல்லினம் சந்திப்பு 1 - சில நினைவுகள்
யோகி


சிறுகதை:

தங்கராசு
ஷைலஜா

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...6
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...13
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...1
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...14

ம‌. ந‌வீன்

யதீந்திரா

ஏ. தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

ரெ. பாண்டியன்


கிண்ணியா எஸ்.பாயிஸா அலி



எதிர்வினை:


சமூக போராளியின் நேர்காணல்
வெ. தனலெட்சுமி

தவறுக்கு வருந்துகிறேன்
எம். கே. குமார்


கடிதம்:

மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்
     
     
 

ஒருநாள் மூர்த்திகரம்

அமைதியில் சயனித்திருந்த
அந்த சிறிய கோயிலில்
நானும் இருந்தேன்.

என் எதிரே ரௌத்திரமூர்த்தியின்
தாண்டவம்
கண்களின் வெறி
கைகளின் தண்டாயுதங்கள்
கால்களின் இயக்கம் தண்டனை நிமித்தமாய்
முகத்தின் கொப்பளிப்பாய் பெருஞ்சினம்
காற்றிலசையும் சாத்தப்பட்ட ஆடைதான்
ரௌத்திரத்தின் சிலைவடிப்பு என்பதை
சொல்லிக்கொண்டிருந்தது.

நேற்று அலுவலகத்தில்
எனது மேலாளரின் நியாயத்திற்காக
நான் கம்பெனி இயக்குனரிடம்
ரௌத்திரமூர்த்தியாயிருந்தேன்.

ஆதாரங்கள் அத்தாட்சிகள்
மொண்ணை விசாரணைகளுக்கு
திரைவிலக்கும் எல்லா யதார்த்தங்களையும்
அவருக்கு மின்னலஞ்சலில் எழுதியனுப்பினேன்
தவறிழைத்த அவரது கைக்கூலியையும்
தெளிவாகக் காட்டிக்கொடுத்தேன்
இயக்குனர் பின்வாங்கி
எனது மேலாளரின் பணி
மீண்டும் உறுதிப்பட்டது
நான் அதிகப் பிரசங்கியாய் விமர்சிக்கப்பட்டேன்
இயக்குனரால்.
இருப்பினும்
சொருகின கத்தி சொருகினதுதானே
பழைய யதார்த்தம் கலைக்கப்பட்டதுதானே
நடுநிலையாளன் பாவம் வெளிறியதுதானே

இன்று
ரௌத்திரப்பருந்தின் நிழல்விலகி
குளிர்ந்தடங்கி
இந்த ஆளரவமற்ற கோயிலின்
அமைதியில் சயனித்திருக்கிறேன்
நிரந்தரமாய் வடிக்கப்பட்ட
புராண ரௌத்திரமூர்த்தியைப்போலல்லாது
நிஜ ரௌத்திரமூர்த்திகளின் காலம்
ஒரு கடந்து செல்லும் தினமே.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768