இதழ் 24
டிசம்பர் 2010
  கவிதை:
ஏ. தேவராஜன்
 
 
 
  நேர்காணல்:

"ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!"

சேனன்

தமிழ்நாட்டைச் சாராமல், இலங்கைத் தமிழ் இலக்கியவாதிகளால் தனித்தியங்க முடியும்!
லெ. முருகபூபதி

சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரானுடன் ஓர் உரையாடல்... 'மலேசியா - சிங்கை 2010' நூலை முன்வைத்து'
கே. பாலமுருகன்


பத்தி:

தி பீட்டல்ஸ் (The Beatles)
அகிலன்

ஜே. ஜே. சில குறிப்புகள் : சில சிந்தனைகள்
சு. யுவராஜன்


விமர்சனம்:

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 - தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்
கே. பாலமுருகன்

சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும்
கே. பாலமுருகன்

ஸ்ரீரஞ்சனியின் நான் நிழலானால்... ஒரு விமர்சனப் பார்வை
கலாநிதி மைதிலி தயாநிதி

இலங்கைக் கவிஞர் எஸ். நளீமின் 'இலை துளிர்த்து குயில் கூவும்'
எம். ரிஷான் ஷெரீப்

பதிவு:

வல்லினம் சந்திப்பு 1 - சில நினைவுகள்
யோகி


சிறுகதை:

தங்கராசு
ஷைலஜா

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...6
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...13
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...1
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...14

ம‌. ந‌வீன்

யதீந்திரா

ஏ. தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

ரெ. பாண்டியன்


கிண்ணியா எஸ்.பாயிஸா அலி



எதிர்வினை:


சமூக போராளியின் நேர்காணல்
வெ. தனலெட்சுமி

தவறுக்கு வருந்துகிறேன்
எம். கே. குமார்


கடிதம்:

மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்
     
     
 

1

பிடுங்கி எறிந்தவற்றைக்
களை வேறாக வேர் வேறாக
வகைப்படுத்தப்பட்ட பின்னர்
ஒரு தறிகெட்ட கூட்டம்
இன்னமும் முண்டியடித்துக்கொண்டு
பாதி உயிரும்
கொஞ்சம் மயிரும் போய்
மூச்சிறைத்துக்கொண்டிருக்கிறது

ஒரு தரிசு நிலம் தட்டுப்பட
"வாங்கப்பா... உழுது பார்க்கலாம்"
என்கிறேன்

கூட்டம் அப்பொழுதுதான்
வேக வேகமாய்க் குனிகிறது
அவர்களின் முதுகில்
பழைய கோலொன்று
அதே விளாசலில்
குறைந்தபாடில்லை

கூட்டத்தில் எவனுமே
திரும்பிப் பார்க்கவில்லை

"கூப்பிட்றேன்ல...
காதுல விழலையா?
என்னங்கடா பண்றீங்க!"

"புடுங்கிக்கிட்டிருக்கோம்
வர்றீயா?!"

பொத்திக்கொண்டு
தரிசுக்குப் புறப்படவேண்டியதுதான்
இழந்தை நடுவதற்கு


2

அப்புறமாய்த்தான்
தெரிந்தது
இந்த நாடகம்
இப்போதைக்கு முடியாதென்று

பின்னர்
எப்பொழுதுதான் முடியுமென்று கேட்டால்
இன்னொரு நாடகத்தை
அவிழ்த்துவிட்டால் போச்சு

நேற்றைக்கு
இன்றைக்கு
நாளைக்கு என
எல்லோரும்
நாடகத்தில் உள்ளோம்
எல்லோருக்கும்
நடிக்கத் தெரியவில்லையெனும்போழ்தில்
எந்த வெங்காய்த்தை உரிப்பது
எனும் தலைப்பில்
போட வேண்டியதுதான்
ஒரு நாடகத்தை
அட வெங்காயங்களா!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768