இதழ் 24
டிசம்பர் 2010
  கவிதை:
கிண்ணியா எஸ். பாயிஸா அலி
 
 
 
  நேர்காணல்:

"ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!"

சேனன்

தமிழ்நாட்டைச் சாராமல், இலங்கைத் தமிழ் இலக்கியவாதிகளால் தனித்தியங்க முடியும்!
லெ. முருகபூபதி

சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரானுடன் ஓர் உரையாடல்... 'மலேசியா - சிங்கை 2010' நூலை முன்வைத்து'
கே. பாலமுருகன்


பத்தி:

தி பீட்டல்ஸ் (The Beatles)
அகிலன்

ஜே. ஜே. சில குறிப்புகள் : சில சிந்தனைகள்
சு. யுவராஜன்


விமர்சனம்:

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 - தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்
கே. பாலமுருகன்

சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும்
கே. பாலமுருகன்

ஸ்ரீரஞ்சனியின் நான் நிழலானால்... ஒரு விமர்சனப் பார்வை
கலாநிதி மைதிலி தயாநிதி

இலங்கைக் கவிஞர் எஸ். நளீமின் 'இலை துளிர்த்து குயில் கூவும்'
எம். ரிஷான் ஷெரீப்

பதிவு:

வல்லினம் சந்திப்பு 1 - சில நினைவுகள்
யோகி


சிறுகதை:

தங்கராசு
ஷைலஜா

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...6
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...13
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...1
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...14

ம‌. ந‌வீன்

யதீந்திரா

ஏ. தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

ரெ. பாண்டியன்


கிண்ணியா எஸ்.பாயிஸா அலி



எதிர்வினை:


சமூக போராளியின் நேர்காணல்
வெ. தனலெட்சுமி

தவறுக்கு வருந்துகிறேன்
எம். கே. குமார்


கடிதம்:

மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்
     
     
 

மீள வேண்டும்

மாலைநேரத் தணிவெயில் போலவே
மெதுவாய் தேய்ந்தழியத் தொடங்குகிறது
உன்னை
வழியனுப்பித் திரும்பிய
வாகனத்தின் இயங்கோசை
இறுதி ஸ்பரிசங்களால் திளைத்திருக்கும்
நீளஅங்கிக்கு விடைதர மனமின்றியே
புதைந்து கொள்கிறேன்
முன்னறையின் நாற்காலியொன்றுக்குள்.
உன் செல்லங்கொஞ்சலின்
இன்மையிலிருந்து விடுபடுமாப்போலே
கரடிபொம்மைகளோடு
கதைபேசத் தொடங்குகிறான் குழந்தை.
தேவைப்படாத இராவுணவிற்கான மாக்கரைசல்
குளிர்ப்பெட்டிக்குள்ளே
குமிழி விடத் தொடங்குகிறது.
இனி
மறுவிடுமுறை வரைக்கும் சதா
ஒலித்துக் கொண்டே இருக்கப்போகிறது
நீ
பார்த்துப் பார்த்துக் கட்டிய அறைக்குள்
பாலைத்திணையின் வெம்மை வரிகள்
மீளவேண்டுமே
உந்தன் கனிவு மிகைத்த
கிண்டல்மொழிகளோடு இணைந்து வரும்
நகையொலிகளுக்குள் நம்
எல்லா ஜன்னல்களினதும் மௌனம் உடைந்திட.


ஒப்படைத்தாயிற்று

நெடுஞ்சாலையில் எதிரேகிய
சாவடிகள் யாவையுமே
பொறுமையும் சிரம்பணிதலுமாய்
கடந்தாயிற்று
பாரப்பொதியாய் கண்ணுக்குள் கனத்த
உடமைகளை
உரிய முகவரிகளுக்குள்;
ஒப்படைத்தாயிற்று
பணிகளுக்குள்ளும் இயலுமளவு
சுற்றுநிரூபம் பேணியாயிற்று
ஆகயூயூ
சக்கரங்களின் தடம்புரளல் இன்றியே
வண்டி நகர்ந்திட
இழைகளுக்குள் மிக அடர்வாய்
இறுகக்கோர்த்த உருமணிகள்
வெண்மையை மட்டுமே
மீதமாய் இருத்திவிட்டுத்
தெறித்துருளும்
இவ்வெல்லைப்புற நாட்களின் முடிவினிலே
அவன் வாக்களித்த வாசமொன்றே
நிதர்சனமானால்...
செவிட்டுப்பூமி புரிந்திடத் தவறிய
அல்லது மறுத்த
உன்னத அன்பின் ரகசியங்களை
பரிமாறியபடி
சதா ஓடிக்கொண்டேயிருக்கும்
அருவியோரம்
துளிர்களால் நெய்த ஈர வானம்
கூரையாய் கவிழ்ந்திருக்கும்
குளிர் வனத்தில்
நீள்கூந்தல் தோள்தூங்க
மேலுமையிரு பொன்விரலை
விரலிடுக்கும் புதிதாய் பிரசவிக்க
இலைநுனியூடே இடரிவீழும்
பனித்துளியின் ரீங்காரமொன்றே
பின்னிசையாய் ஒலிக்கும்
அம்முடிவிலி யுகங்களுக்குள்
சுற்றிச்சுழழும் பத்திப்புகையாய்
கனிவு மணப்பதும்
நான் எப்போதுமே விரும்புகிறதுமான
உன் தாலாட்டொன்றே
கேட்டிருப்பேன்
மறுபடியுமோர்
தொட்டில்குழந்தையாகியே.

 

 

 

 

 

 

 

 

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768