முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 29
மே 2011

  வழித்துணை ...5
ப. மணிஜெகதீசன்
 
 
       
நேர்காணல்:

பாலஸ்தீனப் பயண அனுபவங்கள் : "உலகின் அனைத்து துயரங்களின் மொழியும் ஒரே அலைவரிசையில்தான் இருக்கின்றன"

அ. முத்துகிருஷ்ணன்பத்தி:

அசுரனாகத் தொடங்கிய வாழ்வு
கே. பாலமுருகன்சிறுகதை:

ஒட்டிக் கொண்டது...
ஸ்ரீஜா வெங்கடேஷ்பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...11
எம். ஜி. சுரேஷ்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவாகவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...19

ஷம்மி முத்துவேல்

சூர்யகுமாரன்

ந. மயூரரூபன்

லதா

என். விநாயக முருகன்

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

மண்ணும் மனிதர்களும்

 

பயணங்கள் என்றுமே அலுப்பதில்லை; பயணிக்கும் தருணமெல்லாம் சிந்தனையைப் புணரமைத்து, வாழ்வின் நோக்கை புதுப்பித்துக்கொண்டே செல்கிறோம். சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் விட்டுச் செல்லும் நிரப்ப இயலாத வெற்றிடம், நிரம்பி வழியும் அர்த்தங்கள். மனவெளியை விரிவடையச் செய்யும் காட்சிப் படிமங்கள். ஒவ்வொரு பயணமும் அடுத்த பயணதின் தொடக்கத்தில்தான் முழுமைப்பெறக்கூடும்.

எங்களின் 35 நாட்கள் பயணத்தின் முக்கிய தருணங்கள் சிலவற்றின் குறிப்புகளை சின்ன குடுவையில் அடைப்பதுபோல் சுருக்கித் தருகிறேன்.

***

நாகூர் தர்காவில் நடந்த கதையுடன் எங்கள் பயண அனுபவத்தை ஆரம்பிக்கிறேன். நாங்கள் அங்குப் போய்ச்சேரும்போது பொழுதுபோயிருந்தது. நடக்கப்போகும் 'த்ரிலிங்கான' அனுபவத்துக்கு ஏற்ற ஒரு பூடகமான சூழல். உள்ளே போய்ப் பார்வையிடலாம் என எத்தனிக்கையில் 'வாங்க..வாங்க..' என்ற அன்பொழுகும் குரல். நாங்களும் `மேய்ப்பனின் பின்னால் செல்லும் ஆடுகள் போல` போனோம்! அப்புறமாய் எங்களைத் தனித்தனியாகப் பிரித்து, மிரட்டலான தொனியில் 'கதைகள் பல பேசி' பணம் கேட்டு அச்சுறுத்தியவர்களிடமிருந்து மீண்டது (கேட்ட பணத்தைவிட கொஞ்சம் குறைவாகத்தானே கொடுத்தோம் என்ற மீசையில் மண் ஒட்டாத தர்க்கத்துடன்!) ஒரு பெரிய அனுபவம். எங்கள் ஓட்டுனர் (ஒரு முஸ்லீம்) மட்டும் தக்கச் சமயத்தில் வந்திராவிட்டால் சிம்மாச்சலம் சித்தம் பேதலித்து அங்குதான் இன்னும் சுற்றிக்கொண்டிருப்பார்! இணக்கமற்ற, இறுக்கமான ஒரு இருப்பை கட்டமைத்து, உங்கள் தரப்பை முற்றுமாக நிராகரித்து, உங்கள் வார்த்தைகளையெல்லாம் மறுதலித்து, சற்றும் புரியாத, மயக்கம் தரும் மாற்றுக் கருத்துகளை உங்கள் சிந்தனையில் திணித்து (மூளைசலவை!) பணம் பண்ணுபவர்கள் இவர்கள். இவர்களுக்கு இன்னொரு முகமும் உண்டு. நீங்கள் கேள்விபட்டதுதான். 'தன்முனைப்பு பயிற்சியாளர்கள்'! (ஆனால் இவர்கள் கூற்றுப்படி நடப்பது என்னவோ சிந்தனைப் புரட்சிதான்)

***

இந்த 'அதிர்ச்சிக்கு'பின் நாங்கள் ரொம்பவே உஷாரானோம். எப்போதும் முகத்தில் ஒர் அசாதாரண முன்னெச்சரிக்கை; எப்ப 'ஆப்படிக்கப்படுவோம்' என்ற சிந்தனையே மனம் முழுக்க வியாபித்திருந்ததால் 'கைகூடிய' முக அமைப்பு அது.

திருப்பதி வெங்கடேசப்பெருமானை கட்டாயம் தரிசித்து, பிரசாதத்தோடு வரும்படி நண்பர் கூறியிருந்தார். சரிதான். 45 நிமிடங்களில் பெருமாளை நெருங்கிவிட்டோம். நின்று சேவிக்க வாய்ப்பில்லை. எல்லாம் `on-the-go`தான்! அப்போதுதான் அந்த `அதிசயம்` நடந்தது. சட்டென ஒருவர் என்னை பிடித்திழுத்து பகவானின் முன் நிறுத்தினார்; புன்னகைத்தார். ஆஹா..என்ன ஓர் அருட்கடாட்சம். அப்பன் என் முன்னே மந்தகாசமாய் வீற்றிருந்தார். பக்தக் கோடிகள் எல்லோரும் என்னை அதிசயித்துப் பார்த்து நகர்த்தப்பட்டுக்கொண்டே இருந்தனர். என்னைக் கடந்து சென்ற நண்பர்களின் பார்வையில் மட்டும் திகைப்பும், கேள்விக்குறியும். திரும்பினேன் ; நடந்தேன். ரூபாய் கேட்டு துரத்தியவரை விட நான் விரைவாகவும், சாமர்த்தியமாகவும் வெளியே போக உதவிய அப்பனை என்றும் மறவேன்!! நண்பர்கள் எதுவும் கேட்கவில்லை.

திருப்பதி அப்பனை தரிசித்துவிட்டு வெளியே வந்து கடைகளைப் பார்த்துக்கொண்டு வந்தோம். கடைக்காரர்கள் எல்லோருமே 'கழுத்தறுக்க' காத்திருப்பவர்கள் போலவே தெரிந்தார்கள். அப்போது தெய்வங்களைப் பிரேமுக்குள் அடைத்து விற்பனைக்கு வைத்திருந்த ஒருவர் எங்களைக் கூப்பிட்டார். நாங்களாவது போவதாவது. ஏற்கனவே பர்ஸில் ஓட்டை. 'எடத்தவிட்டு கெளம்புடா' என்றது மனம். ஆனாலும் விதி வலியது அல்லவா. போனோம். "சார், ரொம்ப பயப்படறீங்க. யாராவது நல்லா ஏமாத்திட்டாங்களா?" 'எப்படி' என்றார் தமிழ்மாறன். "உங்க மொகத்தையெல்லாம் பாத்தாலே தெரியுதே" சிரித்துக்கொண்டே சொன்னார். அகத்தின் அழகு முகத்தில் வழிந்தது! பிறகு ஆளுக்கொரு படம், பிடித்த கடவுளாக எடுத்துக்கொள்ளுங்கள், என்னோட பரிசு, பணம் எதுவும் வேண்டாம் என்ற அவர் சொன்னபோது எங்களின் அதீத தற்காப்பு முஸ்தாயிபுகள் கொஞ்சம் தளர்ந்தன. நாங்களாகவே முன்வந்து பணம் கொடுத்தபோதும் வாங்க மறுத்துவிட்டார். அதன் பிறகு நாங்கள் எச்சரிக்கையாக இருந்தோம்; பயமில்லை.

***

ஸ்ரீரங்கத்தில் இன்னொரு சம்பவம்.

சென்ற எல்லா கோயிலிலும் (தமிழ் நாட்டிலும், திருப்பதியிலும்) சந்தித்த அர்ச்சகர்கள், பூசாரிகள் பெரும்பாலும் உபரிபணம் சம்பாதிப்பதை முக்கிய பணியாகவே மேற்கொண்டனர். உதாரணமாக, பழனியாண்டவருக்கும் உங்களுக்குமான இடைவெளி , கொடுக்கும் ரூபாய்க்கு ஏற்ப சுருங்கும்; விரியும். (கேரளாவிலும், கர்நாடகாவிலும் இப்படியான அனுபவம் கிட்டவில்லை; எங்களுக்கு கொடுப்பனை இல்லை போல!!).

ஸ்ரீரங்கநாதரிடம் முகம் காட்டிவிட்டு (பெரும்பாலான கோயில்களுக்கு 'மரியாதை நிமித்த' வருகைதான். கொஞ்சமான கோயில்களா என்ன. ஒருத்தரைப் பார்த்திட்டு மற்றவரை விடுவது மனதுக்கு சரியாகப்படவில்லை) பரிகாரத்தை வலம் வருகையில் ஒரு சிறு மண்டபத்தின் மேல் அமர்ந்திருந்த முதியவர் எங்களை அழைத்தார். காலில் பழுது; துரத்திப் பணம் பறிக்க வாய்ப்பில்லை; அருகில் சென்றோம். அப்பவும் ரொம்ப ஜாக்கிரதையாகத்தான் இருந்தோம்.

"கிட்டத்தில வாங்கடா"

போனோம்.

"எந்த ஊரு?"

மலேசியா.

"ஓ." இடுக்கிய கண்களால் கொஞ்ச நேரம் பார்த்தார். துளையிடுவதுபோல் இருந்தது.

பிறகு, ஒரு அரைமணி நேரம் வினைப்பயன் பற்றி தெளிவான உதாரணங்கள், மேற்கோள்களுடன் கூடிய உரை. 'என் வாழ்வே, என் செய்தி' என்று காந்தி மட்டுமா சொன்னார். நிறுத்திவிட்டு எங்களைப் பார்த்தார். இன்னும் என்னமோ சொல்லப் போகிறார் என்று அவர் முகபாவனை காட்டியது (ரூவா கேட்பாரோ??).

"போங்கடா..இன்னும் என்னடா வேணும்? போங்க..போங்க.." வேறு எங்கேயோ பார்த்தபடி, ஏதோ அன்றைய கடமையை முடித்திவிட்ட தொனி.

யாரும் பேசிக்கொள்ளவில்லை. கொஞ்சம் குழப்பமாகவே அந்தக் கணத்தைக் கடந்தோம்.

***

திருவண்ணாமலையை அடைந்தபோது உடல் கொஞ்சம் வருத்தமடைந்திருந்தது. இரவு 7 இருக்கும். வீதியில் உலாவிக்கொண்டிருந்தோம். ஆறடி உயரத்தில், கருங்கல் சிலைபோல் ஒரு பெரியவர் முன்னே வந்துகொண்டிருந்தார். வெள்ளை வேட்டி, சட்டையில், சட்டென மரியாதையான கவனத்தை ஈர்க்கும் தோற்றம் அவருக்கு. தமிழ்மாறன்தான் பேசினார். நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். 'ஒரு யோகியின் சுயசரிதை' (பரமஹன்ச யோகானந்தா) படித்த பிறகு யாரைப் பார்த்தாலும் பிரபஞ்ச அமைப்பில் இவர் யார்,? இவருக்கும் எனக்குமான உறவு என்ன? இந்த சந்திப்பு ஏன் ஏற்பட்டது? என்ற ரீதியில்தான் சிந்தனையின் செயல்பாடே இருக்கும். சில நிமிடம் நல்ல தகவல்களைச் சொல்லிவிட்டுச் சென்றார். இரவு முழுதும் அவரைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.

எல்லோரும் இரவு 9- க்கு கிரிவலம் போனார்கள். நான் விடுதியில் உறங்கிப்போனேன். காலை 5-க்கு திரும்பிய சத்தம் கேட்டு விழித்து, நான் என் வலம் காணப் புறப்பட்டேன்.

***

கர்நாகாவில் பேலூர்/ஹலபீடு போக எண்ணி ஹசன் எனும் இடத்தில் தங்கினோம். சிறிய ஓர் விடுதிக்கு கட்டணம் தலைக்கு 18 ரூபாய் (ரிம 1.60!) கொசுவலையுடன் கூடிய படுக்கை. கொசுக்களின் ரீங்காரத்தில்கூட தூங்க முடிந்த அசதி. காலையில் ஏறக்குறைய 40கிமீ (சரியாக ஞாபகமில்லை) பயணம். குண்டும், குழியுமான சாலையில்.

ஹலபீடில் சிவன் ஆலயத்தையும், பேலூரில் ஷென்ன கேசவா கோவிலையும் கண்டபின் பயணத்தின் மொத்த களைப்பும் பூரிப்பாகி, மனம் கொண்ட உவகை எங்கள் பயணத்தின் முக்கிய பதிவுகளில் ஒன்று. (கர்நாடகா செல்பவர்கள் இவ்விரு ஆலயங்களையும் கட்டாயம் போய்ப் பார்க்க சிபாரிசு செய்கிறேன்).

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768