முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 29
மே 2011

  பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்
 
 
       
நேர்காணல்:

பாலஸ்தீனப் பயண அனுபவங்கள் : "உலகின் அனைத்து துயரங்களின் மொழியும் ஒரே அலைவரிசையில்தான் இருக்கின்றன"

அ. முத்துகிருஷ்ணன்பத்தி:

அசுரனாகத் தொடங்கிய வாழ்வு
கே. பாலமுருகன்சிறுகதை:

ஒட்டிக் கொண்டது...
ஸ்ரீஜா வெங்கடேஷ்பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...11
எம். ஜி. சுரேஷ்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவாகவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...19

ஷம்மி முத்துவேல்

சூர்யகுமாரன்

ந. மயூரரூபன்

லதா

என். விநாயக முருகன்

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

இந்தக் கதை சொல்லப்படுவதற்கோ வாசிக்கப்படுவதற்கோ அல்ல. இது பகிர்ந்து கொள்வதற்கான முயற்சி. ஆகையால் இக்கதையில் சேர வேண்டியவை - சொல்லப்படவேண்டியவை - வாசிப்பின் சிரமங்கள் பற்றிய வேதனைகள் - வசிக்க முடியாதுள்ள குறைபாடுகள் - குறிப்புகள் - திட்டுகள் - சித்திரங்கள் - படங்கள் - என்று அனுப்பக்கூடியதுகளை அனுப்புங்கள். எல்லாம் இக்கதையில் சேர்த்துக்கொள்ளப்படும்.


6. இரண்டாவது குட்டிக்கதை

அவவின் பெயர் ‘ச’. 1986ல் திருமணம் செய்த அவவுக்கு ‘சு’ என்ற நான்கு பிள்ளைகள் உண்டு.

அவரின் சத்தியக்கூற்று வருமாறு.

1) அவரது சகோதரியை அவர் கணவர் கல்யாணம் செய்துகொண்ட அதே ஆண்டு - 1995 ஆடி மாசம் யாழ்ப்பாண புனித பேதுருவானவர் தேவாலயத்தின்மீது இலங்கை விமானப்படையின் ‘கிபிர்’ விமானங்கள் குண்டு வீசித் தாக்கியது.

2) 50க்கும் மேற்பட்டவர்கள் அடையாளமின்றி சிதறிப்போயினர்.

3) எந்த உடற்பாகத்தை வைத்து யார் யாருக்கு செத்தவீடு செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்க முடியுமோ? ச வின் கணவரின் கடையில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட டயர்களைத் திருடி ஒட்டுமொத்தமாக எல்லா உடற்பாகங்களையும் போட்டு எரித்தார்கள்.

4) கடை நட்டத்தில் விழுந்தது. அதன் பிறகு அவர் மல்லாவிக்குப் போய்ச்சேர்ந்த பாதையை கீழே காண்க.

1995-10 யாழ்ப்பானத்தில் இரானுவ நடவடிக்கையின் பின்

மானிப்பாய் சென்றார் பின்பு

மிருசுவில் - (6 மாதம் அங்கு தங்கியபின 1996-04 ல் கிளாளி பாதை ஊடாக)

அனிச்சங்குளம் மல்லாவி சென்றடைந்தார்.

5) இதன் பிறகு 10 வருசம் கழிச்சு 2006ல் மகன் சு வுக்கு கடும் காய்ச்சல் வந்தது. இராணுவத்தின் மருத்துவத் தடை காரணமாக மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு ஓடவேண்டியிருந்தது.

6) யாழ் மருத்துவமனையில் செப்ரிசீமியா காய்ச்சலுக்கு நாய் கடிச்சதாகச் சொல்லிச் சிகிச்சை செய்தனர். ச சொல்லி அவர்கள் கேட்கத்தயாராக இல்லை. 2006.02.11ல் மகன் சு மரணமடைந்தான். அல்லது மருத்துவரால் கொல்லப்பட்டான்.

7) யாழ்ப்பாணத்தில் ச வின் செத்தவீட்டுத் துன்பம் ஆறமுதல் ஆறு மாசத்துக்குள் இன்னுமொரு மகனான சு வை மல்லாவியில் இயக்கத்தில் இணையும்படி கட்டாயப்படுத்திக் கூட்டிச் சென்றுவிட்டனர். ஆமியிடம் அனுமதியெடுக்க உலை உலை என்று உலைந்து மீண்டும் ச தன் மல்லாவிப் பயணத்தைத் தொடங்கினார். பின்வரும் நீண்ட பாதையில் மல்லாவி போய்ச்சேர்ந்தார்.

திருகோணமலை

வவுனியா

பனிச்சங்குளம்

அனிச்சங்குளம் மல்லாவி

8) “அதன்பின் 2007ல் சு அமைப்பில் இருந்து என்னிடம் ஓடிவந்துவிட்டான்”. – ச சொன்னது.

9) மகள் சு அதன்பிறகு பாடசாலை செல்லவில்லை. பிடிக்கப்படலாம் - குண்டுத்தாக்குதலுக்குள் சிக்கலாம் என்று அவள் வெளியில் வெளிக்கிடவில்லை. சாவுகளையும் கோரங்களையும் பார்த்துப் பார்த்து அவளுக்கு ‘மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது’.

10) 2008ல் பனிச்சங்குளத்துக்கு தப்பியோடியிருந்த பொழுது பல்குழல் பீரங்கிக் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது அப்பிரதேசம். ஏராளமானவர்கள் செத்துப்போனார்கள். ஏராளமானவர்கள் காயமடைந்தார்கள்.

11) அதைத்தொடர்ந்து ச வும் குடும்பமும் பின்வருமாறு தொடர்ந்து ஓடினர்.

பனிச்சங்குளம்

(2008ல் பல்குழல் பீரங்கி குண்டுத்தாக்குதல் 10 விமானத்தாக்குதல்)

மூங்கிலாறு

வள்ளிபுனம்

சுதந்திரபுரம்

2008-10-14

தேவிபுரம் (அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடம்)

(2008-11-28 -பல்குழல் பீரங்கி குண்டுத்தாக்குதல்)

விசவமடு

(2008-02-05)

மாத்தளன் (அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடம்)

2009-03-10

முள்ளிவாய்க்கால் (அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடம்)

2009-04-05

வலைஞர்மடம் (அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடம்)

2009-04-28

வட்டுவாகல் (அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடம்)

2009-05-15

வற்றாப்பிள்ளை அம்மன் கோவில் (இரானுவ கட்டுப்பாட்டு பிரதேசம்.)

Click to Enlarge

(படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கலாம்)

12) இந்த ஓட்டத்தின்போது ச வும் அவர் குடும்பமும் படக்கூடாதுகள் பட்டு காணக்கூடாதுகள் கண்டதாக சொன்னார்கள். ஓவ்வொரு இடத்திலும் விழுந்த ஆமியின் அடியின் அகோரம் தாங்கமுடியாமல்தான் தொடர்ந்து ஓடவேண்டியிருந்தது.

13) விசுவமடுவில் வைத்து விழுந்த குண்டுத்தாக்குதலில் 2009.02.21ல் ச வின் கணவரின் முதுகில் குண்டு கீறியது.

14) மூங்கிலாறு வைத்தியசாலை மற்றும் மாத்தளன் வைத்தியசாலை என்று திரிந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் கப்பலில் மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கும் மேலதிக வசதிகள் இன்றி இரண்டு மாதத்தில் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்பு பம்பைமடு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு - இறுதியாக வைத்தியசாலைகளால் கைவிடப்பட்டார்.

15) பின்பு ஊனமுற்றவர் பதிவின் முலம் ச இருந்த காம்புக்கு வந்து சேர்ந்தார் கணவர். தற்போது இடுப்பிற்கு கீழ் உணர்வின்றி நடக்கமுடியாமல் இருக்கிறார்.

16) “நானும் எனது சகோதரியும் பிள்ளைகளும் அவரைத் தூக்கிகொண்டு ஒடவேண்டியிருக்கு”.- ச சொன்னது.

17) ‘மாத்தளனில் இருந்த பொழுதுகூட விமான குண்டுவீச்சினாலும் எறிகனை தாக்குதலினாலும் செத்துப்போனவர்கள் ஏராளம். இரானுவத்தினரின் மருத்துவத்தடை காரனமாக காயம்பட்டவர்களும் செத்துக்கொண்டிருந்தார்கள். பிணங்களைப் பார்ப்பது சகஜமாகிக்கொண்ட வந்தது. முள்ளி வாய்க்காலில் இருந்த பொழுதும் இதே நிலைதான். எமக்கு பக்கத்து ‘தற்காலிக கூடாரத்தில்’ இருந்தவர்கள் -பத்துப்பேருக்கு மேல்- சுக்கலாக சிதறிப்போனார்கள். நாம் அரசாங்கத்தின் ‘பாதுகாப்பு வலயங்களை’ தேடித்தேடி ஓடினோம். ஓவ்வொரு பாதுகாப்பு வலயத்துக்குள்ளும் வைத்து குண்டுமாரி பொழிந்தார்கள்’

18) வலைஞர்மடத்தில் பதுங்குக்குழிக்குள் இருந்தபோது அவர்கள் வந்தார்கள். 2009.04.12 அன்று பதுங்குக்குழிக்குள் வைத்து மகள் சு வை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றனர். மகன் சு இயக்கத்தில் இருக்கிறார் என்று ச கெஞ்சி குளறியதை யாரும் சட்டை செய்யாமல் மகள் சு வை கொண்டு சென்றனர்.

19) அன்றிரவு குண்டு மாரி பொழிந்தது. பிடிக்கப்பட்ட 350 பிள்ளைகளுடன் மகள் சு வும் பதுங்குக்குழி ஒன்றுக்குள் பதுங்கி கிடந்தனர். விடியும் தறுவாய்க்குள் அந்த பதுங்கு குழிக்குள் குண்டு விழுந்தது. சு வின் மகளும் இன்னும் 5 பேர் மட்டும் தப்பினர்.

20) “என்னால் நம்ப முடியவில்லை. வாரி அனைச்சு ஆறு பேரையும் எனது பதுங்கு குழிக்குள் பதுக்கிப்போட்டன்”

21) இதன் பிறகு வட்டுவாகல் சென்று இருந்தபோது ஒருநாள் கஞ்சிக்காக வரிசையில் நின்றபோது இரானுவத்தினர் எறிகணை வீச்சு செய்தனர். கஞ்சியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் உன்று ச எறிகனைகளை உச்சிக்கொண்டு ஓடிவிட்டார்.

22) முதன்முதலாக இரானுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு அவர்கள் 2009.05.15ல் போய்ச்சேர்ந்தனர். இரானுவம் எல்லோரையும் அசையவிடாமல் இருத்தி வைத்தது. உணவு தண்ணியின்றி ஒரு நாட் கழிந்தபின் விடிகாலை 4 மணிக்கு ஒமந்தைக்கு ஏற்றிச்சென்றார்கள். அதன்பின் வவுனியா செட்டிகுளம் முகாமுக்கு மாற்றினர்.

23) மகன் சு வை இயக்கத்தில் இருந்தவர் என்று பிடிச்ச இரானுவம் தடுப்பு முகாமுக்கு எடுத்துச்சென்றனர்.

24) சு –கொண்டு செல்லப்பட்ட தடுப்பு முகாம்கள்

2009.05.17 – 2010.02.12 கோயிற்குளம்
2010.02.12 – 2010.03.10 செட்டிகுளம்
2010.03.10 – 2010.04.13 மருதமடு
2010.04.13 – இன்றுவரை - வெலிகந்த

25) ச வின் அகதிபயனம் பின்வருமாறு இருந்தது

“வீடு, வீட்டுபாவனைப் பொருட்கள், துவிச்சக்கர வண்டி, பிளாஸ்ரிக் கதிரைகள், மேசை, பாடசாலைப் புத்தகங்கள், உடுதுணிகள், தொழில் உபகரனங்கள் மற்றும் வளவிற்குள் இருந்த பயிர்கள்” அனைத்தும் அழிக்கப்பட்டது.

26) “எனக்கும் உளரீதியான பாதிப்பு வந்துவிட்டது” - ச சொன்னது.

       
   

பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்") - பகுதி 1

பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்") - பகுதி 2

பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்") - பகுதி 3

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768