முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 29
மே 2011

  கதவைத் தட்டும் கதைகள் ...5
க. ராஜம் ரஞ்சனி
 
 
       
நேர்காணல்:

பாலஸ்தீனப் பயண அனுபவங்கள் : "உலகின் அனைத்து துயரங்களின் மொழியும் ஒரே அலைவரிசையில்தான் இருக்கின்றன"

அ. முத்துகிருஷ்ணன்



பத்தி:

அசுரனாகத் தொடங்கிய வாழ்வு
கே. பாலமுருகன்



சிறுகதை:

ஒட்டிக் கொண்டது...
ஸ்ரீஜா வெங்கடேஷ்



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...11
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...19

ஷம்மி முத்துவேல்

சூர்யகுமாரன்

ந. மயூரரூபன்

லதா

என். விநாயக முருகன்

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

டாக்டர் மா. சண்முகசிவாவின் மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்

 

மெர்சிடிஸ் பென்சுக்கும் முண்டக்கண்ணியம்மனுக்கும் மிகுந்த தொடர்புடையவன் முனியாண்டி என்பதை டாக்டர் மா. சண்முகசிவா அவர்களின் கைவண்ணத்தில் உருவான இக்கதையைப் படித்துவிட்டவர்களுக்கு எளிதாக புரிந்துவிடும். முனியாண்டி கார் ஓட்டுனராக இக்கதையில் அறிமுகமாகின்றான். இருபத்தைந்து வருடங்களாய் ஜப்பான்காரர்களுக்குச் சொந்தமான தொழிற்சாலையில் கார் ஓட்டுனராகப் பணிபுரியும் முனியாண்டி சின்ன சிக்கலில் மாட்டிக்கொள்கின்றான். ஜப்பான் நிர்வாகிகளுக்கு ஓட்டுனராக இருந்த சமயங்களில் ஏதேனும் நிகழ்வுகளுக்குச் செல்வதாக இருந்தால் அவர்களே செலவுக்குப் பணமும் தந்து காரையும் பயனுக்களிப்பதுண்டு. அவர்களுக்குப் பின் நிர்வாகியாய் பொறுப்பேற்றுக்கொண்ட ரட்னராஜிடம் ஓட்டுனராக இருக்கும் சமயத்தில் ஒரு திருமணத்திற்கு அக்காரில் பயணித்துவிட அதுவே மிகப்பெரிய குற்றமாகிவிட்டது. ரட்னராஜிடம் மன்னிப்பு கேட்க சொல்கின்றான் பாலா. காலைப் பிடித்து மன்னிப்பு கேட்கையில் ரட்னராஜின் காலில் அவன் கையிலிருந்த குங்குமம் ஒட்டி கொள்கின்றது. அதன் பின்னர் அதே காலில் காயமும் ஏற்பட குங்குமத்திற்குச் சொந்தமான முண்டக்கண்ணியம்மன் மீது ரட்னராஜுக்கும் நம்பிக்கைப் பிறக்கின்றது. முண்டக்கண்ணியம்மன் கோயிலுக்கு முனியாண்டி அழைத்துச் செல்கின்றான். முனியாண்டியின் மீது முண்டக்கண்ணியம்மன் வந்திறங்க அவன் காலில் விழுந்து வணங்குகின்றார் ரட்னராஜ்.

அறிமுகமே முனியாண்டி முண்டக்கண்ணியம்மன் மீது வைத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையையும் பக்தியையும் நமக்கு விளங்க வைத்துவிடுகின்றது. இத்தகைய நம்பிக்கைகள்தான் இன்றளவும் பலருக்கு வாழ்வில் சாய்ந்துகொள்ளும் சுவர்களாக அமைந்துவிடுகின்றன. துன்பங்கள், சோதனைகள், இடர்கள் வாழ்வில் விலகி செல்ல இச்சுவர்கள் தடுப்புகளாக அவர்களின் மனதில் உருவெடுத்து விடுகின்றன. இதனைத் தவறென சுட்டிக்காட்ட முடியவில்லை. நம்பிக்கைச் சுவர்கள் இல்லாவிட்டால் விளைவுகள் இன்னும் பாதகமாகிவிடக்கூடும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் அது. ஆனால் ரட்னராஜின் நம்பிக்கையானது இத்தடத்திலிருந்து சற்று மாறுபடவே செய்கின்றது. இவ்வகை நம்பிக்கை மூட நம்பிக்கை வகையைச் சேர்ந்தது. இருவரின் நம்பிக்கைகளும் முண்டகண்ணியம்மன் மீதானது என்று பார்வைக்குச் சமமானதொரு காட்சியை உருவாக்கினாலும் இரண்டுமே வெவ்வேறானவை; வித்தியாசமானவை. முன்னது தாங்கிக்கொள்ளும் சுவர், பின்னது இடர வைக்கும் முட்டுக்கல்.

முனியாண்டியின் நண்பனாக வரும் பாலா, தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க சொல்கின்றான். ஆனால் இது நட்பின் தன்மையினால் அல்ல. அவனது கனவு அதன் பின்னால் ஒளிந்திருக்கின்றது. மறுக்க இயலாத இத்தகைய கதாப்பாத்திரங்கள் இன்றைய நாகரீகம் நிறைந்த உலகில் நிரம்பி வழிகின்றன. ஆனால் இரண்டு கண்களுக்குத் தெரிவதென்னவோ நட்பு மட்டும்தான். இக்கதாப்பாத்திரங்கள் தங்களின் சுயநலத்துக்காக நட்பெனும் சாயத்தைப் பூசி கொள்கின்றன. இக்கதையில் வரும் பாலா ‘என்னை மாதிரி ஆளுங்ககிட்ட கவனம்...!’ என எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது.

முதலாளித்துவம் இக்கதையில் வன்மையாக வெளிப்படாவிட்டாலும் ஆங்காங்கே சிறு துளிராய் நம் முன்னே தலை காட்டுகின்றது. ரட்னராஜின் மூட நம்பிக்கைகள் முனியாண்டிக்குக் கைக்கொடுக்கின்றன. முண்டகண்ணியம்மன் கோயில் பூசாரிக்கு அம்மன் வந்திறங்கும் கணத்துக்காக நாமும் ரத்னராஜுடன் பதற்றத்துடன் காத்திருக்கையில் முனியாண்டியின் மேல் முண்டகண்ணியம்மன் வந்திறங்க கதை விறுவிறுப்பாக நகர்கின்றது. அடுத்து பின்தொடரும் ஒவ்வொரு நகர்வுகளும் ஆர்வத்துடன் கவனிக்க வைக்கின்றன. சிரிப்பையும் வரவழைக்கின்றன. தன் காலைப் பிடித்து மன்னிப்பு கோரியவனின் காலிலேயெ விழுந்து வணங்கி ஆசியும் பெறும் நிலையை வந்தடைகின்றார் ரட்னராஜ்.

"காலாகாலத்துக்கும் இப்படிப் பின்னாடி ஒருத்தனைச் சொகுசா ஒட்கார வச்சி நான் வண்டியோட்டிதான் காலம் கழிக்கனுமா ... தாயே முண்டக்கண்ணம்மே கண் திறக்கமாட்டாயா” என தன் நிலையை முனியாண்டி நொந்துகொள்வதாய் கதை தொடங்குகின்றது. முண்டகண்ணியம்மனின் பார்வையால் ரட்னராஜ் காரைச் செலுத்த பின்னால் முனியாண்டி குறட்டையுடன் உறங்குவதாகக் கதை முடிவை எய்துகின்றது.

காலங்களின் விரைவான ஓட்டம் மாற்றங்களையும் சுமந்து கொண்டுதான் வருகின்றது. மாற்றங்களைச் சுமந்து கொண்டு மனிதர்கள் காலத்தோடு எவ்வித பிரக்ஞையுமின்றி ஓடிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும் காலத்தை மிஞ்சுகின்ற திடீர் மாற்றங்களைத் துரத்தும் மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர்.

“எப்பதான் இந்த உலகம் மாறும்? தாயே முண்டக்கண்ணம்மே கண் திறக்கமாட்டாயா..” என கதையை முடிக்கையில் எதிர்ப்பார்ப்புகளுடன் ஏக்கமாய் மனதினுள் பிறக்கின்றது. முனியாண்டியைப் போல பலித்துவிடும் என்ற பேராசையுடன்... இல்லை இல்லை நம்பிக்கையுடன்...

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768