முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 29
மே 2011

  மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள் ...4
ஏ. தேவராஜன்
 
 
       
நேர்காணல்:

பாலஸ்தீனப் பயண அனுபவங்கள் : "உலகின் அனைத்து துயரங்களின் மொழியும் ஒரே அலைவரிசையில்தான் இருக்கின்றன"

அ. முத்துகிருஷ்ணன்பத்தி:

அசுரனாகத் தொடங்கிய வாழ்வு
கே. பாலமுருகன்சிறுகதை:

ஒட்டிக் கொண்டது...
ஸ்ரீஜா வெங்கடேஷ்பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...11
எம். ஜி. சுரேஷ்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவாகவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...19

ஷம்மி முத்துவேல்

சூர்யகுமாரன்

ந. மயூரரூபன்

லதா

என். விநாயக முருகன்

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ரோதனைக் காலமும் நச்சரிப்புகளும்

 

மார்ச் 2011 இதழில் இடம்பெற்ற கட்டுரையைப் படித்துவிட்டுச் சிலர் என் மீது பட்டும் படாமலும் கோபப்படத் தொடங்கினர். தமிழ்க் கல்வியுலகில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை நடந்து வருகின்ற உண்மையைச் சொன்னதற்காக வந்த வசவு. இந்த ரோதணைகளை சம்பத்தப்பட்டவர்களிடம் நேரடியாகச் சொல்வதனால் அவர்களுக்கு வேண்டாதவர்களாகிவிடுவோம். இத்தனை காலம் சொல்லாமல் விட்டதனால்தானே இலக்கியம் சார்ந்த தமிழ்க் கல்வியுலகத்தில் நிதர்சனச் சரிவு ஏற்பட்டுள்ளது. அச்சு ஊடகங்களில் வெளியிடலாமென்றால் அவற்றிற்கான அரசியலில் அவை கட்டுண்டிருக்கின்றன. அவர்களுக்கு அதில் அக்கறையுமில்லை. எந்தத் துறையாயினும் நேர்மையற்ற முறை தலைதூக்குமேயானால் பாதிக்கப்படுவது சமுதாயந்தான். அப்படியே சொல்வதால் மட்டும் விமோசனம் கிடைக்குமா என்று விசாரிப்பதைவிட இன்றைய உலகுக்கு இந்த ஓட்டை ஒடிசல்கள் தெரியவரவேண்டும்.இல்லையெனில், காலம் முழுக்க ஜிகினாக்களின் மெல்லிய மினுமினுப்பில் முதுகு சொறிந்துகொண்டிருக்கும். இல்லையென்றால், மனித இயந்திரங்களின் கூடாரமாகத்தான் கல்விச் சாலைகள் அமைந்திருக்கும்.

கடந்த மாதக் கட்டுரையை வல்லினத்திற்கு மின்னஞ்சல் செய்த சில தினங்களுக்குப் பிறகு ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியிலிருந்து மாணவர் ஒருவர் அழைத்திருந்தார். எமது தொடர்பு எண் எப்படிக் கிடைத்தது என்று கேட்டதற்கு சுற்றி வளைத்து ஒரு பெரிய கதையையே அளந்தார். சரி, அது போகட்டும்.பிறகு, மிகுந்த பதிவிசோடு பேசிய பாவணையிலிருந்து அவர் எதற்கோ அடிபோடுகிறார் என்பது தெளிவாகவே சிந்தனையில் வெட்டியது. நானும் யோசித்து யோசித்துப் பார்த்தேன். கடந்த ஆண்டு தொடக்க மாதங்களில் இதே போலவே மாணவியொருத்தி பல்கலைக்கழகத்திலிருந்து அழைத்தது ஞாபகத்திற்கு வந்தது. இம்முறை மாணவன் அழைத்தது கவிதையைக் கேட்டு. ‘என்னடா இது, வருடம் முடிந்து வருடம் தொடங்கினால் இதே ஒரு தொல்லையாகப் போய்விட்டது. இது ஆண்டுதோறும் நடக்கின்ற ரோதணைக் காலம் போலும்!’ என நொந்துகொள்ளவேண்டியிருந்தது. நமக்கு இருக்கின்ற வேலைகளுக்கும் குடும்பச் சூழலுக்கும் மத்தியில் அந்தப் பதிவிசான அழைப்பை எதிர்கொள்ள முடியாமல் இம்முறை தாறுமாறாய் ஏசிவிட்டேன். இதற்குப் பிறகு அவமானம் கருதி அம்மாணவன் அழைக்கமாட்டான் என எண்ணிக்கொண்டிருந்தபோது விடாமல் நான்கைந்து நாட்கள் அழைத்தான். விடாக்கண்டனாய் இருக்கிறானே என அவனது தர்மசங்கட நிலையைக் கண்டு (தமிழ்ப் பற்றைக் குறித்தல்ல) கொஞ்சம் பொறுமை காத்தேன். நாட்டில் மூத்த எழுத்தாளர்/கவிஞர்கள் யாரேனும் அவர்களது கண்களுக்குத் தென்படவில்லையா, நாம் பெரிய படிப்புப் படித்து எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வுகளில் A பெற்றவர்கள், இவர்களிடம் போய்க் கேட்பதா, பயமா, அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையா என்பதான கேள்விகள் என்னுள் எழுந்தன. நான்கு அடிகள் கொண்ட மரபுக் கவிதையொன்றை நான்கு கண்ணிகளில் தயாரித்து வருமாறு விரிவுரையாளர் ஆணை பிறப்பிக்க மாணவர்களுக்குக் களம் கிடைக்கவில்லை போலும். சம்பத்தப்பட்ட மாணவரிடம் பேசியபோது கூடிய கோபத்துடன்தான் பேச வேண்டிவந்தது. இலக்கியம் என்பது கத்தரிக்காய் சமாச்சாரம் அல்ல. அதிலும் குறிப்பாக மரபார்ந்த கவிதை உணர்வும் அதைப் படைக்கும் திறனும் சமகாலத் தலைமுறையினரில் முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிட்ட நெருக்கடிக்கு மத்தியில் கற்றலுக்குத் தயாராகின்ற ஒரு கூட்டத்தில் அவர்கள் எல்லோரும் (விரிவுரையாளர்கள் உட்பட) பாவ்லா செய்துகொண்டிருக்கிறார்கள்.

அநேகமாக விரிவுரையாளர்களால் இலக்கிய வரலாற்றைப் பற்றி மட்டுமே தவிர படைப்புத் துறையை அவர்கள் வலியுறுத்தத் தவறியிருக்கிறார்களோ என்னவோ? இன்னொரு வார்த்தையில் அவர்களின் இயலாமையாய்க்கூட இருக்கலாம்! நான் சொல்வது பொய்யென்றால் நம் விரிவுரையாளர்கள் யாரேனும் ஒருவராவது இலக்கியத் தரம் வாய்ந்த ‘இலக்கியம்’ படைத்திருக்கலாமே? புத்தகம் ஏதும் போட்டிருக்கிறார்களா? அப்படியே புத்தகம் போட்டுவிடுவதால் மட்டும் அது இலக்கியமாகிவிடுமா? எனக்குத் தெரிந்த விரிவுரையாளர் ஒருவர் வெளியிட்ட கலவை நூலில் எல்லாம் இருந்தன. மரபென்றால் நூறு பிழைகள்! புதுக்கவிதையென்றால் அங்கொரு நூறு பிழைகள்! சிறுகதையென்றால் வடிவச் சிதைவு! இதில் பொய்க்கூவான ஹைக்கூக்கள் வேறு! இன்ன இலக்கிய வடிவம் என்பதை அறியாமலேயே எந்தத் துணிச்சலில் புத்தகம் வெளியிட்டார். இதில் தமிழ்த்துறைத் தலைவரின் வாழ்த்துச் செய்தி வேறு! அட, அவருக்கே புனைவிலக்கியம் தெரியுமா எனும் சந்தேகம் எழுகிறது. வேறு வழியின்றிப் புத்தகத்தை அப்படியே ஆரம்பப் பள்ளி மாணவனிடம் நெடுங்கணக்குப் பயிற்சிக்காகப் படித்துக்கொள்ளப்பா என்று படிக்கக் கொடுத்துவிட்டேன்! தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடவும் முடியாது.வேறென்னதான் செய்வது? உண்மையைச் சொல்வதால் கசப்பாகத்தான் இருக்கும். இதைச் சவாலாக எடுத்துக்கொண்டு அவர்கள் இலக்கியம் படைத்து முன்மாதிரியாய் இருக்கலாமே!? தமிழ் சார்ந்திருக்கிற அனைவரும் திரும்பவும் படைப்பிலக்கியத்தின் பக்கம் சென்றாக வேண்டும் என்பது திரும்பத் திரும்ப உணர்த்தப்பட்டுக்கொண்டுதானிருக்கிறது? ஆசிரியர்களாக வருகின்றவர்களுக்கு இது மிகவும் முக்கியம். நமது கவிதைகள் குறித்த பெருமை வாயளவில் இல்லாது படைப்பாகத்திலும் மிளிர வேண்டும். மற்ற இனத்தவரிடம் இதைப் பற்றிச் சிலாகித்துச் சொல்ல துணிவு வேண்டும். இளங்கலைப் பட்டப் படிப்பிற்காக மலாய் மொழியை முதன்மைப் பாடமாகப் படித்தபோது மலாய் விரிவுரையாளர் ஒருவர், மலாயில் இருக்கின்ற ‘பந்தூன்’ வகைக் கவிதைகள் போன்று தமிழ் மொழியில் இருக்கிறதா எனக் கேட்டார். ‘பந்தூனைவிட’ காலத்தாலும் தரத்தாலும் தமிழில் ஆயிரக்கணக்கில் கிடக்கின்ற என்று சொன்னதோடு அவற்றிற்கு மாதிரிப் பாக்களையும் செய்யுட்களையும் தமிழிலேயே விளக்கிச் சொன்னது இன்னும் ஞாபகத்தில் உள்ளது. அப்பொழுது என்னுடன் அமர்ந்திருந்த தமிழ் நண்பர்கள் என் கையைப் பிடித்துக் குலுக்க, இனிமேலாவது தமிழை ஒழுங்கா படிங்கப்பா. தெரிந்ததனால்தானே சொல்ல முடிந்தது! என்று சொன்னேன்.

திரும்பவும் மாணவன் கதைக்கு வருகிறேன். திடீரென அழைப்பதை விட்டுவிட்டான். பையனுக்கு என் மேல் கோபமோ என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் நான்கு அடிகள் கொண்ட இரண்டு கன்னிகளில் கவிதையொன்றை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தான். மின்னஞ்சலைத் திறப்பதற்கு எழுத்துருத் தடை ஏற்பட்டதால் வாய்மொழியாகவே கேட்டேன்.எப்படியப்பா எழுதினாய் எனக் கேட்டதற்குத் தமது கல்லூரியில் பயிலரங்கம் ஒன்று நடத்தப்பட்டதாம். அதைக் கம்பார் கனிமொழி குப்புசாமி ஐயா வழிநடத்தியதாகக் குறிப்பிட்டான். அதுதானே பார்த்தேன்! இந்த நாட்டில் சீனி நைனா முகம்மது அவர்களும், கனிமொழியார் அவர்களும், முரசு நெடுமாறன் அவர்களும் இல்லாவிட்டால் தமிழ்த் துறையின் பாடு பெரும்பாடுதான்! எத்தனை காலத்திற்குத்தான் அவர்கள் உடன்வருவார்கள்? இத்தனை காலமும் விரிவுரையாளர்களும் உடனிருந்தார்களா இல்லையா?! பிறகு அவனது கவிதையில் நான்கைந்து இடங்களில் திருத்தம் செய்து கொடுத்தேன். பையன் பெருமூச்சு விட்டான். அநேகமாகப் பையனுக்குக் கவிதை கிட்டிய மகிழ்ச்சியைவிட தமது வாணாளின் கடைசிக் கவிதையை எழுதிய ஆற்றலோ என்னவோ? இதுதான் கவிதையா என்று மெத்தனமாகக் கேட்டுவிட்டு இத்துனூண்டு எழுதுவதற்குத்தான் அரைநாள் பயிலரங்கா? அப்படியானால், முக்கால்வாசி தமிழின் பெருமையென்றும், இசைப்படலென்றும் நகர்த்தப்பட்டிருக்கிறது. அதுதான் உண்மை! இந்தப் பயிலரங்கத்தில் சாதாரண எதுகை,மோனையே கைவசமாகவில்லை. இதில் மற்றப் பாவினங்களுக்கு எப்படியப்பா நகரப் போகிறாய்? இன்னொரு நூறு ஆண்டுகளுக்குத்...

துங்கு துங்கு துங்கு
தங்க மான துங்கு... என்றும்

தோ தோ நாய்க்குட்டி
துள்ளி வா நாய்க்குட்டி... என்றும்

பத்மா பத்மா வண்டியிலே
பத்மா புருஷன் டில்லியிலே... என்றுந்தான்

கவிதை படித்துக்கொண்டிருக்கப் போகிறார்களா என்று காட்டமாய்ச் சொல்லி

இதுதான் கவிதையா என்று கேட்டதற்குப் பையனிடம் திடுதிப்பென்று மூச்சுச் சத்தமும் கேட்கவில்லை. ஐயையோ, பையனுக்கு ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டதோவென்று ஆ....டிப்... போய்விட்டேன்! அதன் பிறகு வாரங்கள் கடந்துவிட்டன. சேமமுடன் இருந்தால் என்னைப் பற்றிக் காரசாரமாக மேலிடத்தில் போட்டுக்கொடுத்துவிட்டுப் புள்ளிகளுக்கு யாசித்துக்கொண்டிருப்பான். கவிதைப் புனைதல் பற்றிய ஞானமின்றி விரிவுரையாளரும் ஏதோ போட்டுக்கொண்டிருப்பார்!

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768