முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 31
ஜுலை 2011

  விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்
 
 
       
நேர்காணல்:

“முற்றிலும் பரதேசியாய் சுற்றி திரிந்தவன் நான்”

மஹாத்மன்பத்தி:

வரலாற்றின் ஓர் அத்தியாயம் முடிவுற்றது
கே. எல்.

ரஜினியின் தற்கொலை
ம. நவீன்

பீல்மோர் பாலசேனாவுக்கு ஒரு கடிதம்
மா. சண்முகசிவாவல்லினம் கலை, இலக்கிய விழா 3 - சில பதிவுகள்

கலை இலக்கிய விழா - 3
ம. நவீன்


புத்தக அறிமுக உரை: "விடிந்தது ஈழம்" - நம்மை நோக்கிய கேள்விகள்
சு. யுவராஜன்


புத்தக அறிமுக உரை: உலகின் ஒரே அலைவரிசை நாட்டுப்புறப்பாடல்கள்
கே. பாலமுருகன்சிறுகதை:

பூமராங்
எம். ரிஷான் ஷெரீப்புத்தகப்பார்வை:

தர்மினியின் "சாவுகளால் பிரபலமான ஊர்" - ஒரு பார்வை
யோகிகேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்திபெற்றோல் - (இப்போதைய "தலையங்கம்")
சேனன்


தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...13
எம். ஜி. சுரேஷ்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகுகவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...21

தேனு

தர்மினி

அதீதன்

நித்தியா வீரராகு

இமையத் தியாகம் : பெயரற்றவர்களின் சரித்திரம்

அ. ரெங்கசாமியின் 'இமையத் தியாகம்' நாவல் எனக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே அறிமுகமாகியிருந்தது. வாசிக்கத்தூண்டாதத் தலைப்பு; அட்டைப்படம். நேதாஜியின் படம் பிரதானமாக இடம் பெற்றிருந்ததால் நாவல் நேதாஜியின் புகழ் பாடும் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் என்றே தோன்றியது. உண்மையான போராளிகளை முன்னெடுப்பது தவறில்லை என்றாலும் நாவல் போன்ற ஓர் ஆக்கம் அத்தகையப் பணியைச் செய்வதை நான் விரும்புவதில்லை. ஒருவகையில் அது என் அந்தரங்கமான வாசிப்பின் தேர்வாகக் கூட இருக்கலாம்.

ரெங்கசாமி அவர்களை ஆவணப்படம் செய்யும் நோக்கில் நான், சிவா மற்றும் இளங்கோவன் அணுகிய போதுதான் அந்நாவல் 2006-ல் வெளிவந்தது என்றும் இன்னும் மலேசியாவில் வெளியீடு காணவில்லை என்ற தகவலும் கிடைத்தது. மலேசியா அல்லது சிங்கை போன்ற நாட்டில் வாசகர்களின் பரந்த அறிமுகத்துக்காகவேணும் புத்தக வெளியீட்டு விழாக்கள் அவசியமாகின்றது. புத்தக வெளியீடு ஒட்டிய செய்திகள், அப்புத்தகம் தொடர்பான பிற எழுத்தாளர்களின் கருத்துரைகள் என ஒரு புத்தகம் எப்படியும் தேர்ந்த வாசகர்களிடம் அறிமுகமாகிவிடுகின்றது. (புத்தகம் போட்டு சம்பாதிக்கும் நோக்கில் அரசியல்வாதிகளின் காலடியில் விழுந்துகிடக்கும் எழுத்தாளர்களையும் அவர்களின் எழுத்துகளையும் இங்கு நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.)

எவ்வித அறிமுகமும் இல்லாமல் ஒரு புத்தகம் புத்தகக் கடைகளில் அடையாளம் காணப்பட்டு வாங்கப்படும் சூழல் இங்கு கிடையாது. தமிழகத்தில் பதிப்பகங்கள் அப்பணியைத் திறம்பட செய்கின்றன. எல்லா எழுத்தாளர்களுக்கு இல்லாவிட்டாலும் பரவலாக அறியப்பட்ட, அல்லது 'விற்கும்' தகுதி கொண்ட புத்தகங்கள் பதிப்பாளர்களாலேயே முன்னெடுக்கப்படுகிறது. இது வரவேற்கப்பட வேண்டியதே. எழுத்து எனும் பெரும் உழைப்பிற்குப் பின் அதை புத்தகமாக்கி வாசகர்களிடம் சுமந்து செல்லும் பொறுப்பு படைப்பாளிக்கு இல்லாமல் இருப்பதே அவன் தொடர்ந்து தன் படைப்பாளுமையைத் தக்க வைத்துக்கொள்ளும் நிறைவைக் கொடுக்கிறது.

அவ்வகையில் அ. ரெங்கசாமியின் 'இமையத் தியாகம்' பரவலான அறிமுகத்துக்கு உரியது என்ற எண்ணம் தமிழகம் சென்று திரும்பிய போதுதான் ஏற்பட்டது. 'இளங்கோ நூலகம்' பதிப்பில் வெளிவந்திருந்த இந்நாவல் குறித்தும் ரெங்கசாமியின் எழுத்து குறித்தும் தமிழினி வசந்தகுமாரிடம் நானும் சிவாவும் பேசிக்கொண்டிருந்தோம். ஏற்கனவே ரெங்கசாமியின் பிற நாவல்களை வாசித்திருந்ததால் வரலாற்றுத் தகவல்களுடன் திணறிக்கொண்டு நகரும் அவரின் கதை சொல்லல் முறையை உணர முடிந்தது. 'எப்படி இருப்பினும் இந்நாவல் மலேசிய சூழலுக்கு அவசியமானது. இரண்டாம் உலகப் போரின் காலக்கட்டத்தில் மலேசியாவின் சூழலை இந்நாவல் மிக நன்றாகவே விளக்குகிறது' என்றார் வசந்தகுமார்.

நாவலின் முதல் பாகத்தை மேலோட்டமாக வாசித்தபோதுதான் அது தனிமனிதரின் துதி அல்ல என்ற நம்பிக்கை வந்தது. அதுவே அந்நாவலில் பயணிக்க தகுந்த வசதிகளைச் செய்து கொடுத்தது. இடையே 'புயலிலே ஒரு தோணி' நாவலின் காட்சிக்கு நினைவுகள் வருவதையும் தடுக்க முடியவில்லை.

0 0 0

370 பக்கங்களைக் கொண்ட இமயத் தியாக்கம் மூன்று பாகங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாகமும் மிக மெல்லியே இடைவெளியைக் கொண்டிருக்கின்றன.

முதல் பாகம் : ஜப்பானிய படை மலாயாவுக்குள் புகுந்து பரவுவது, ஜப்பானியர்களின் போர் தந்திரம், இந்திய தொண்டர் படை தோற்றம் என செல்கிறது.

இரண்டாம் பாகம் : இந்தியச் சுந்திரச் சங்கம், இந்திய தேசிய இராணுவத்தின் தோற்றம், நேதாஜியின் தலைமைத்துவம் இவற்றினூடே தமிழ் வீரர்களின் தியாகங்கள் என உயிர்ப்போடு நகர்கிறது.

மூன்றாம் பாகம் : ஐ.என்.ஏ வீரர்கள் இந்திய போர் எல்லையை நோக்கி பயணிப்பது, அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள் பின்னடைவுகள் என விவரித்து நேதாஜி மரணத்துடன் நிறைவு பெருகிறது.

அ.ரெங்கசாமி தனது இதர நாவல்கள் போலவே இதிலும் ஒரு கள ஆய்வாளராக பல ஐ.என்.ஏ வீரர்களை அணுகி, தகவல்களைத் திரட்டியதோடு ஆங்கிலம் தமிழ் என பல நூல்களையும் வாசித்து ஆய்வு செய்த பின்னரே நாவலை உருவாக்கியுள்ளார். காலம், பெயர், சூழல் என மிகத்துள்ளியமாக நாவல் நெடுகிலும் அவர் குறிப்பிடுவது அதன் நம்பகத்தன்மையை அதிகரித்தப்படியே செல்கிறது.

0 0 0

அசைக்க முடியாது என நம்பப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜியம் கிழக்காசியாவில் ஜப்பான் அரசால் தகர்க்கப்படுகிறது. உலக வல்லரசாக ஜப்பான் தனது சாம்ராஜியத்தை விரிவு படுத்த எண்ணும் போது பிரிட்டிஷ் காலணியின் கீழ் உள்ள இதர நாடுகளை அதிலிருந்து விடுவிக்கவோ அதன் மூலம் தன்கையகப்படுத்தவோ எண்ணியிருக்கிறது. மலாயா முழுமையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர இங்கு பிரிட்டிஷ் அரசால் உருவாகி இருக்கும் இந்திய இராணுவத்தை 'தொண்டர் படை' (மலாயா தமிழர்கள்) மூலம் பலவீனப்படுத்துகிறது. அவர்களின் (இந்தியா-ஐப்பான்) பொது எதிரியான பிரிட்டிஷை இந்தியாவிலிருந்து விரட்ட துணைப்புரிவதாகக் கூறி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்திய இராணுவத்தை தன் வசப்படுத்துவதிலும் சரணடையச் செய்வதிலும் முனைப்பு காட்டுகிறது. அதன் பின்னர் ஜப்பான் அரசு துணையுடன் இந்திய சுதந்திரச் சங்கம், ஐ.என்.ஏ தோற்றம் காண்கிறது. இப்படைகள் மூலம் பர்மாவுக்குள் புகுந்து இந்திய நாட்டை கைப்பற்ற திட்டமிடுகின்றனர். முதலில் இப்படையைத் திரட்டுவதில் முனைப்பாக இருந்த ராஷ் பிகாரி போஸ் தனது வயோதிகம் காரணமாக இப்படையை முன்னெடுத்துச் செல்ல நேதாஜி அவர்களே பொறுத்தமானவர் என முடிவெடுக்கிறார். ஜெர்மனில் தலைமறைவாகியிருக்கும் நேதாஜி புதிய உத்வேகத்தோடு மலாயா வந்து படை திரட்டிச் செல்கிறார். இறுதியில் போருக்கே உண்டான வெற்றிகளும் பலிகளும் தியாகங்களும் என நாவல் ஒரு உச்சமான இடத்தில் சென்று முடிகிறது.

ஒரு சிலவற்றைத் தவிர மேற்கண்ட தகவல்களில் பெரும்பான்மையானவை மிகச்சாதாரணமாக இடைநிலைப்பள்ளி வரலாற்று புத்தகங்களில் காணக்கூடியவைதான். ஒரு நாவலின் நோக்கம் இதையே சில கதாபாத்திரங்களின் வழி சொல்வதென்பதில் எவ்வகையான சிறப்பும் இருக்கமுடியாது. வரலாற்று நாவல் என்பது ஒரு காலத்தை மட்டும் பதிவு செய்வது என்பதை மீறி அதில் இருக்கின்ற அரசியலை, மொத்தமான மனநிலையை, மாற்று கருத்தை, மறைக்கப்பட்ட சுவடுகளை மீண்டும் எழுத்தின் மூலம் மீட்டெடுப்பதுதான் எனப் புரிந்துகொள்கிறேன். அவ்வகையில் ரெங்கசாமியின் இந்நாவலை மிக முக்கியமான ஒரு பிரதியாக கவனிக்க சில காரணங்கள் இருக்கின்றன.

இந்நாவல் மேற்சொன்ன நேர்க்கோட்டு கதைவடிவில் சென்றாலும் அதனூடே மிக நுணுக்கமாக ஒரு தமிழர் பார்வையிலிருந்து அரசியலைப் பேசுகிறது. போர் மிக மகத்தானதாக நம்பவைக்கப்படும் சூழலில் அதில் இயங்கும் அடையாளமற்றவர்களின் வாழ்வையும் மரணத்தையும் பதிவு செய்கிறது இந்நாவல். அவ்வாறு அடையாளம் இல்லாதவர்களின் பங்களிப்பையே ரெங்கசாமி 'இமையத் தியாகம்' என்கிறார்.

0 0 0

ஒருவகையில் இந்நாவல் சுரண்டப்படும் தமிழர்களின் வாழ்வை மையமாகப் பற்றிக்கொண்டு பயணிக்கின்றது எனச் சொல்லலாம்.

தொண்டர் படைகளால் அணுகப்படும் இந்திய இராணுவத்தினரிடம் ஆங்கிலேயர்கள் குறித்த நிறைய புகார்கள் இருக்கின்றன. ஜப்பானியர்கள் மலாயாவை முற்றுகையிடும் காலங்களில் ஆங்கிலேயர்கள் வகை வகையான உணவுகளுடன் பங்களாக்களில் வசதியாக இருக்க இந்திய இராணுவத்திற்கு மீன் டின்னும் அவித்த சோறும் மட்டுமே வழங்கப்படுகின்றது. கடும் குளிரில் அவர்கள் அவதிப்படுகின்றனர். இந்தப் பாராபட்சம் அவர்களை 'ஜப்பானியர்கள் இந்தியர்களின் நண்பர்கள்' என்ற வாசகத்தை எளிதில் ஏற்க வைக்கிறது. ஆனால் சில இந்திய இராணுவத்தினர் சரணடையச் சம்மதிக்கின்றனரே தவிர ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பாகச் செயல்படுவதில் தயக்கம் காட்டுகின்றனர். ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் வழங்கிய சத்திய பிரமாணத்தை அதற்கு காரணமாகக் காட்டுகின்றனர். மலாயா ஜப்பான் வசம் சென்றதற்கு இந்திய இராணுவத்தினரின் மனமாற்றம் ஒரு முக்கியக் காரணமாக இருக்கின்றது.

இதேபோல ஐ.என்.ஏ படையில் இணையும் பாட்டாளித் தமிழர்களின் நிலையையும் நாவல் தொடர்ச்சியாக விளக்கியபடி செல்கிறது. அவர்களில் பெரும்பாலோர் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். ஒருமுறை கூட இந்தியாவுக்குச் செல்லாதவர்கள் . ஆயினும் அவர்கள் இந்திய விடுதலைக்காகத் தங்கள் உயிரைப் பணையம் வைக்கத் தயாராக இருக்கின்றனர். அவர்கள் கால்கள் மலாயாவில் இருந்தாலும் மனம் முழுதும் இந்தியாவில் இருக்கின்றது. இவர்களின் ஒட்டுமொத்த மனப்போக்கின் குறியீடாக இளங்கோ எனும் இளைஞன் வருகிறான். ஒரு இளம் வீரனாகவே நாவலில் அவன் சித்தரிக்கப்படுகிறான். காப்பார் களகத்தில் பங்கெடுத்தக் காரணத்தால் ஆங்கிலேயர்களால் தேடப்படும் இளங்கோ ஜப்பானியர்களின் வருகைக்குப் பின் அவர்களுக்கு ஆதரவாக தொண்டர் படையில் இயங்குகிறான். ஐ.என்.ஏ படைக்கு வீரர்களை இணைப்பதில் பெரும் பங்கு ஆற்றுகிறான். ஜப்பானியர்களுக்காகவும் ராஷ் பிகாரி போஸுக்காகவும் சக நண்பர்களிடம் எல்லா வகையிலும் வாதாடுகிறான். இது போன்ற மலாயா தமிழர்களின் முயற்சியால் ஐ.என்.ஏ படைக்கு நிறையப் பாட்டாளித் தமிழர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டிருந்த இந்திய இராணுவத்தினர் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் இருக்கின்றனர். ஐப்பானியர்களிடம் சரணடைந்து திடமான முடிவுக்கு வரமுடியாத அவர்களின் இரண்டுங்கெட்டான் நிலையைக் கண்டு இளங்கோ ஒரு தருணம் "மலாயாவில் பத்து இலட்சம் இந்தியர்கள் இருக்கிறோம். இவர்களின் சுமார் நான்கு லட்சம் இளைஞர்கள் இருக்கிறோம். இவர்கள் இரண்டு லட்சம் இளைஞர்கள் இ.தே.இராணுவத்தில் சேர்ந்தாலே போதும். வெள்ளையர்களை இந்தியாவில் இருந்து விரட்டி விடுவோம். இந்த மண் பொம்மைகளை நம்பி பயனில்லை" என்கிறான். இந்திய இராணுவத்தினருக்கும் மலாயாவில் பிறந்த தமிழர்களுக்கும் இருக்கின்ற மனப்போக்கை ஓரளவு இந்த வசனங்களின் வழி கணிக்கலாம்.

இவ்வாறு சுதந்திர தாகத்தோடு இந்திய தேசிய இராணுவத்தில் இணையும் பாட்டாளித் தமிழர்கள் தொடர்ந்து ஜப்பானியர்களாலும் இந்திய தேசிய இராணுவத்தின் தளபதிகளாக இருக்கும் வட இந்தியர்களாலும் அவமதிக்கப்படுவதையும் ரெங்கசாமி பதிவு செய்துள்ளார்.

இ.சு.சங்கத்தின் சேமிப்புக்கிடங்கில் இந்திய இராணுவத்திற்கான உணவு, உடை, மருந்து போன்ற பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. அங்கிருந்த அரிசி மூட்டையில் இ.சு.சங்கத்தின் முத்திரைக் குத்தப்பட்டிருக்க அதை மாற்றி ஜப்பானியர் பெயரால் வழங்கப்பட வேண்டும் என ஜப்பானியர்களால் இந்தியர்கள் மிரட்டப்படுகிறார்கள். இப்பிரச்சனை பெரிதாக இந்தியர்கள் சார்பாக கேப்டன் நாதன், சாமிப் பிள்ளை ஆகியோரும் ஜப்பானியர் சார்பாக கர்னல் இவாகுரா, சைத்தோ, ஒமத்தோ ஆகியோரும் பேச்சு வார்த்தை நடத்தி சமரசத்திற்கு வருகின்றனர். அங்கு நடக்கும் அவர்களின் சம்பாஷனை வழி ஜப்பானியர்கள் இந்தியர்களை தங்கள் அடிமைகளாகவே நடத்த எண்ணினர் என்பதற்கும் இந்தியாவைக் கைப்பற்ற இந்தியர்களின் நட்பை அவர்கள் பேண வேண்டி இருந்த கட்டாயத்தையும் துள்ளியமாக ரெங்கசாமி பதிவு செய்துள்ளார்.

அதேபோல படையை முன்னெடுத்துச்செல்லும் ஒரு வட இந்தியன், 'கூலி வேலைக்கு வந்தவர்கள் இராணுவ உடை அணிவது வேடிக்கையாக இருக்கிறது ' என கேலி செய்ய கைகலப்பு மூழ்கிறது. ஐ.என்.ஏ வின் வெற்றி இந்தியர்களின் ஒற்றுமையில்தான் இருக்கிறது என நேதாஜி உட்பட ஏனைய மேலதிகாரிகளால் வழியுறுத்தப்படுகிறது. தமிழர்கள் தங்கள் தன்மான உணர்வுகளை அடக்கிக்கொள்கிறார்கள். ஒற்றுமை , தேசியம் என்ற வார்த்தைகள் தனிமனிதர்களைச் சுரண்ட எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என நாவல் முழுதும் இதுபோன்ற சான்றுகள் கிடைக்கின்றன.

இவற்றையெல்லாம் விட போருக்காகச் சயாமிலிருந்து பர்மாவரை இரயில் தண்டவாளம் அமைக்க தமிழர்கள் பிடித்துச் செல்லப்பட்டதையும் அங்கு அவர்களுக்கு நேர்ந்த அவலத்தையும் நாவலின் சில இடங்களில் ரெங்கசாமி காட்டுகிறார். கைகளை இழந்து தாடியுடன் சாமியார் போல சயாம் காட்டில் சந்திக்கும் ஒரு தமிழர் வழி போரின் இன்னொரு பக்கத்தை ஐ.என்.ஏ வீரர்கள் உணர்கிறார்கள். 'நினைவு சின்னம்' எனும் நாவல் மூலம் ரெங்கசாமி சயாம் மரண இரயில் குறித்து விரிவாக எழுதியிருந்தாலும் ஒரு போர் நம் கண்களுக்குத் தெரியும் காட்சிகளைத் தாண்டி எவ்வாறான அவலங்களை, மனித நசிவுகளை ஏற்படுத்துகின்றது என உணர ரெங்கசாமி நிறைய சந்தர்ப்பங்களை அளிக்கிறார்.


இவற்றைத் தவிர்த்து நாவலில் நெருடும் சில பகுதிகளும் உண்டு. முன்பே சொன்னது போல இந்நாவல் ஒரு தமிழர் பார்வையிலிருந்து எழுதப்படுவதால் பாட்டாளி மக்களை அதீதமான தேசப்பற்றாளர்களாகவும் பெரும் வீரர்களாகவும் காட்ட ரெங்கசாமி முயல்கிறார். ஐ.என்.ஏ வில் இணையும் பாரத்தை ஒருவன் இரத்தத்தால் எழுதுவது தொடங்கி கை இழந்து உடல் மெலிந்த நிலையிலும் மரண இரயில் ஊழையர் தேச பற்றுடன் 'வந்தே மாதரம்' சொல்வதாகவும் புனைந்துள்ளார். இது போன்ற மிகையான சம்பவங்கள் ஐ.என்.ஏ வீரர்களை நேரில் சந்தித்துப் பெற்ற தகவல்கள் மூலம் ரெங்கசாமிக்குக் கிடைத்திருக்கலாம். அவை எந்த அளவுக்கு நம்பகத் தன்மையானவை என்பதையும் அவற்றால் நாவல் சினிமாத்தன்மை அடைவதையும் ரெங்கசாமி எழுதும்போது உணர வாய்ப்பிருந்திருக்காது. இழந்து இழந்து மெலிந்த தமிழர்களுக்கான ஓர் ஆறுதலாக அவருக்கு அப்போது தோன்றியிருக்கலாம்.

0 0 0

இமையத் தியாகத்தில் வரும் தோட்டத்தொழிலாளர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என முனைப்புக் காட்டுகின்றனர். நீண்ட அவர்களின் பயணம் பல இடையூறுகளைக் கொண்டிருக்கின்றது. பல போர் தந்திரங்களால் அடுத்தடுத்த எல்லைகளுக்குத் தாவிச் செல்லும் அவர்கள் பர்மாவில் நுழைகிறார்கள். மழைக்காலம் நெருங்கிவிட்டதால் 'இம்பாலை' கைப்பற்ற தீவிரம் காட்டுகிறார்கள். அவ்வாறு கைப்பற்றினால் உணவுக்கும் தங்கும் இடத்திற்கும் 3 மாதங்கள் தொடரப்போகும் மழையால் பிரச்சனை இருக்காது. அதற்குள்ளாக மழை காலம் தொடங்க குளிரால் வீரர்கள் வாடுகிறார்கள். வனத்தில் நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. பாதை தவறுகிறார்கள். பிரிகிறார்கள். இரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளால் இறக்கிறார்கள். பசியால் மடிகிறார்கள். அவர்களின் மாட்டு வண்டிகள் சகதிகளில் சிக்கி போர் விமான குண்டுகளால் நாசமாகின்றன. இந்நிலையில் போரிலிருந்து பின்வாங்கி தற்காப்பு யுத்தம் மட்டும் நடத்த உத்தரவு வருகிறது. அவர்களது அத்தனை சிரமங்களும் அர்த்தம் இழந்து போகின்றன. நேதாஜியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு பின்வாங்கும் போதும் தாங்கள் வெற்றி அடைந்து விட்டதாகவும் புதிய வியூகத்தை நேதாஜி வகுத்துக்கொடுப்பார் என்றும் தங்களுக்குள் பாராட்டிக்கொள்கின்றனர். அது அவர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது.

போரில் உயிரிழப்புகளும் தியாகங்களும் லட்சியங்களும் அதில் பங்கெடுக்கும் எளிய மனிதர்களுக்கு எப்போதும் போல இங்கும் அர்த்தமிழந்து போகின்றது.

போர் என்பது தனி மனிதர்களை மறக்கடிப்பது. அவ்வாறான ஒரு மனோநிலையை ஏற்படுத்துவது மூலமே அது தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. சினிமாவும் இலக்கியங்களும் மொத்தமான ஒரு மனிதக்கூட்டத்தை மட்டுமே போர் என்றதும் மனதின் முன் வந்து நிர்க்க வகை செய்கிறது. அவர்கள் மரணிக்கவே படைக்கப்பட்டவர்கள் போல காட்சி கொடுக்கிறது. அதற்கு ஏதுவாக அவர்களின் அடையாளங்களை அழிக்கிறது. அங்கு போரை முன்னெடுப்பவரின் வாழ்வும் அவரின் வரலாறும் மட்டுமே அவசியம் பெருகின்றன. நிர்பந்தத்தினாலும் சம்பளத்திற்காகவும் உரிமைக்காகவும் போரில் பங்கெடுக்கும் அல்லது பணயம் வைக்கப்படும் எளிய மனிதர்களின் உயிர் குறித்து வரலாற்றில் எவ்வித அவசியமும் இல்லாமல் போகிறது. வரலாறு பெரும்பாலும் அதிகாரம் உள்ளவர்களால் அதிகாரம் உள்ளவர்களுக்காக புனையப்படுவதாகவே உள்ளது.

இதற்கு மாறாக போரில் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் ஆயுதம் ஏந்திச் செல்லும் ஒரு கடை நிலை வீரனின் வாழ்வு எவ்வகையான அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது என உற்று நோக்குவதால் மட்டுமே வீரம், பற்று, இனமானம் என்பன போன்ற அலங்காரங்கள் மனிதத்தின் மீது பூசி இருப்பதை விலக்கிப் பார்க்க முடியும்.

இந்த நாவல் அதற்கான சில சாத்தியங்களை உண்டாக்குகின்றது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768