முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 37
ஜனவரி 2012

  கடக்க முடியாத காலம் நூலில் இடம்பெற்ற முன்னுரை
ம. நவீன்
 
 
       
வல்லினம் பதிப்பக நூல்கள்:

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்

தீர்ந்து போகாத வெண்கட்டிகள்: நான் ஒரு கதை உருவாக்கி
கே. பாலமுருகன்

கடக்க முடியாத காலம்
ம. நவீன்

துடைக்கப்படாத இரத்தக்கறைகள்: நினைவில் உயிர்த்திருக்கும் வாழ்வு
யோகி

என்னை நாயென்று கூப்பிடுங்கள்
ரேணுகாகட்டுரை:

அபிநயம்
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

'உம்மை நீர் விற்க வேண்டும்!'
ஷம்மிக்காபத்தி:

புலம்பெயர் முகங்கள்... 5
வி. ஜீவகுமாரன்திரைப்பார்வை:

போராளி : மனநோய் சித்திரம்
கே. பாலமுருகன்பதிவு:

வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா
இ. ஏகன்
கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யாக‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

தர்மினி பக்கம்
தர்மினிநேர்காணல் இதழ் 4 (அக்டோபர் - டிசம்பர் 2011)கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...27

ந. பெரியசாமி

எம். ரிஷான் ஷெரீப்

கணேஷ்

ராஜா

ம. நவீன்

கடக்க முடியாத காலம்

2009-ல் என் கவிதை நூல் வெளிவந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் நூல் இது. 2006 முதல் 2011 வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் எழுதிய பத்திகளைத் தேடி எடுத்தபோது மனதுக்கு நிறைவானதாக 12 மட்டுமே இருந்தன. நேரடியாக அரசியல் பேசும் பத்திகளை இத்தொகுப்பில் இணைக்கவில்லை. அவற்றை மற்றுமொரு தருணத்தில் வெளியிடும் எண்ணமுண்டு.

பத்திகள் எழுதுவது சுவாரசியமானது; சுதந்திரமானது. அவற்றை நான் உள்ளிருந்து தொடங்கி திறந்த வெளி நோக்கி ஓடுவது போன்ற ஒரு சுதந்திரத்தையும் திறந்த வெளியிலிருந்து உள்வந்து அடைவது போன்றதொரு பதற்றத்தையும் ஒருங்கே அனுபவிக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்டப் பத்திகள் எனக்கு நெருக்கமானவை. அவை ஒவ்வொன்றிலும் எங்காவது நான் நின்றுக்கொண்டிருப்பதை என்னால் தவிர்க்க இயலவில்லை.

ஒருவகையில் நான் இந்த உலகை என் சின்னஞ்சிறிய கண்கள் கொண்டு மட்டும் அவ்வப்போது கணிக்க முயல்கிறேனோ என குழப்பம் அடைகிறேன். அது முழுமையற்றது எனத்தெரிகிறது. ஆனாலும் இதற்கு முன்பு திரைப்படங்களாலும், நிழல்படங்களாலும், இலக்கியங்களாலும் கோடான கோடி கலைஞர்கள் உலகைக் காணுவதாய், காட்டுவதாய் கொண்டிருக்கும் நம்பிக்கையில் நானும் இணைந்துகொள்ள இது போதுமானதாகப் படுகிறது.

இப்பத்திகள் அனைத்துமே 'காதல்', 'வல்லினம்', 'செம்பருத்தி' போன்ற இதழ்களில் வெளிவந்தவை. இவ்விதழ்கள் அனைத்துமே ஏதோ ஒருவகையில் நான் இயங்கிய ; இயங்கும் இதழ்கள். ஓர் இதழாசிரியனாக நான் சக எழுத்தாளர்களிடம் போராடிப் பெற்ற படைப்புகள் போல இல்லாமல் , எந்த வற்புறுத்தலும் அற்று இவற்றை நான் எழுதியுள்ளேன் என நினைக்கும் போது ஆச்சரியமாகவே உள்ளது. ஒருவேளை நான் ஒரு எழுத்தாளனாக மட்டுமே இருந்திருந்திருந்தால் எண்ணிக்கையில் பத்திகள் கூடியிருக்குமோ என்று தோன்றுகிறது. புறத் தேவைகள்; நிர்பந்தங்கள் இல்லாமல் என் வாழ்வில் மிக முக்கியமான சில கனங்களில் மட்டுமே நான் எழுதியுள்ளது ஒரு நிறைவையும் தருகிறது.

எல்லாப் பத்திகளையும் ஒன்றினைத்துப் பார்க்கும் போது ஓர் ஒற்றுமையை உணர்கிறேன். அவை மனிதர்களைப் பற்றியும் மனிதம் பற்றியும் பேசுகின்றன. வாழ்வில் நான் அன்பைத்தர தவறவிட்ட தருணங்கள், அலட்சியங்கள், அவசரங்கள், தேடல்கள் என ஒருதரம் நான் என்னைத் திரும்பிப்பார்க்க இத்தொகுப்பு தேவையானதாக உள்ளது. இவற்றினூடே மிகக்கூச்சமான என் இயலாமைகளும் ஆங்காங்கு முகம் காட்டுவதை மறைக்கமுடியவில்லை.

சுமார் ஆறு ஆண்டுகளின் வெவ்வேறு காலப்பகுதியை ஒன்றாய் கையில் பிடித்துப்பார்ப்பது போன்ற ஓர் உணர்வை இப்பத்திகளைத் தொகுக்கும் பணியின்போது அடைகிறேன். கற்பனைக்கு இடமில்லாத வாழ்வின் பகுதிகளை எழுத்தின் வழி ஒருபோதும் நெறிப்படுத்த இயலாது என உணரமுடிகிறது. முழுமையாக புரிந்துகொள்ள முடியாத இந்த வாழ்வின் சில தருணங்களை சந்தேகங்களோடு மட்டுமே கடக்க வேண்டியுள்ளது. அத்தருணங்கள் பல ஆண்டுகள் ஆனாலும் சந்தேகங்களைக் கைவிடாமல் பிசுபிசுப்புடன் மனம் எங்கிலும் வியாபித்து உள்ளது. பின்னர் அதுவே எழுத்தாய் மாறும் சாபத்தையும் பெற்றுக்கொள்கிறது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768