முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 37
ஜனவரி 2012

  காமேக் புகான் ஓராங் சிதோக்... 9
நோவா
 
 
       
வல்லினம் பதிப்பக நூல்கள்:

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்

தீர்ந்து போகாத வெண்கட்டிகள்: நான் ஒரு கதை உருவாக்கி
கே. பாலமுருகன்

கடக்க முடியாத காலம்
ம. நவீன்

துடைக்கப்படாத இரத்தக்கறைகள்: நினைவில் உயிர்த்திருக்கும் வாழ்வு
யோகி

என்னை நாயென்று கூப்பிடுங்கள்
ரேணுகாகட்டுரை:

அபிநயம்
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

'உம்மை நீர் விற்க வேண்டும்!'
ஷம்மிக்காபத்தி:

புலம்பெயர் முகங்கள்... 5
வி. ஜீவகுமாரன்திரைப்பார்வை:

போராளி : மனநோய் சித்திரம்
கே. பாலமுருகன்பதிவு:

வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா
இ. ஏகன்
கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யாக‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

தர்மினி பக்கம்
தர்மினிநேர்காணல் இதழ் 4 (அக்டோபர் - டிசம்பர் 2011)கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...27

ந. பெரியசாமி

எம். ரிஷான் ஷெரீப்

கணேஷ்

ராஜா

ம. நவீன்

மரணத்தின் வாசல்

இன்னும் ஒரு வாரத்தில் இறக்க போகும் ஒரு மூதாட்டியினுடனான இறுதி சந்திப்பு அது தான் என அப்போது எனக்கு தெரியவில்லை. என் வாழ்வில் அப்படியொரு சூழ்நிலையும் வந்ததில்லை. ஆனாலும் மரண வருகையின் சாயல் அந்த மூதாட்டியின் முகத்தில் என்னால் அன்று கணிக்க முடியவில்லை. அவருடனான சந்திப்பின் நினைவு மட்டும் கூச்சிங் வந்தடைந்த பின்னரும் சில நாட்களுக்கு மனப்பொய்கையில் நீந்தி கொண்டிருந்தது. அதன் பின் நானும் என் ஆசிரியர் பணியில் ஐக்கியமாகிவிட்டேன்.

க்ரேஸி இன்னுமும் என் பள்ளியில்தான் ஒப்பந்த ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு வாரக்காலத்துக்கு பின் மீண்டும் பள்ளியில் சந்தித்தபோதுதான் என்னியாங் டம் சொன்னாள், “நோவா, கீத்தாக் தவுக் சிக்? நாங் நேனெக் காமேக் யாங் கீத்தாக் ஜும்பா தெம்போக் ஹாரி யாக், ஞா நிங்காள் பாகி கெள்மாரின் தோக்,” [நோவா உனக்கு தெரியுமா? அன்றைக்கு நீ பார்த்தாயே என் பாட்டி, அவர் நேற்று காலையில் காலமாகிவிட்டார்]. எனக்கு தூக்கி வாரி போட்டது. மரணத்தின் வருகைக்காகக் காத்திருந்தவரிடமா நான் பேசிக்கொண்டிருந்தேன்? ஏன் அவருக்கே கூட தெரிந்திருக்காது என்றோ ஒரு நாள் வரதான் போகிறது என அறிந்திருந்த மரணம் அன்று அருகாமையில் என்று. இப்படித்தானே நாம் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை எதிர்க்கொண்டு இருக்கிறோம். பள்ளியில் அலுவல் காரணமாக என்னால் அந்த மூதாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. என்ன தான் ஒவ்வொரு ஜனனமும் மரணத்தை முதற்கொண்டுதான் உருவாகிறது என தெரிந்திருந்தும் எதிர்பாராத நேரத்தில் நடக்கும் மரணத்தை நாம் மிரட்சியோடு பார்க்கிறோம். மரண உணர்வு எப்படி இருக்கும் என நான் எண்ணிப்பார்த்ததுண்டு. நான் நினைத்ததை இறைவன் எனக்கு உணர்த்த நினைத்தானோ என்னவோ அதை நான் உணரும்படி ஒரு சம்பவம் என் வாழ்வில் நடந்தது. அதே சமயம் சரவாக்கின் மருத்துவ வசதியை பற்றியும் அங்கு வேலை செய்பவர்களின் பண்பு நலன்களையும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பாவு (Bau) பயணத்துக்கு பின்னர் பள்ளி வருட இறுதி விடுமுறை வந்து விட்டதால் தீபகற்பதுக்கு திரும்பிவிட்டேன். அப்போது ஹெச்1என்1 (H1N1) கிருமியின் தாக்கம் அதிகமாக இருந்த காலக்கட்டம். அதன் காரணமாக மலேசியா முழுவதுமாக ஏறக்குறைய 47 பேர் இறந்து விட்டிருந்தனர். ஆனாலும் அக்கிருமியின் படையெடுப்பு நான்காவது அலையாக இருந்ததால் நான் அவ்வளவாக அதன் தாக்கத்தை கருத்தில் கொள்ளவில்லை. இருந்தாலும் எப்போதும் போலவே உள்நாட்டு நடப்பை தொடர்ந்து செய்திகளில் படித்து வந்தேன். மீண்டும் விடுமுறை முடிந்து கூச்சிங் திரும்ப வேண்டிய நேரத்தில் எனக்கு கடுமையான காய்ச்சல். அதே நிலையில் பார்க்கப்போனால் விமான நிலையம் சென்று இருக்க கூடாது. ஒன்றும் ஆகாது என்ற அலட்சிய எண்ணத்தால் வந்தது வினை. அப்போது எனக்கு தெரியவில்லை எனக்கு வந்திருப்பது H1N1 காய்ச்சல் என்று. கூச்சிங் வந்தடைந்ததும் நேராக சரவாக் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பகுதிக்குச் சென்று விட்டேன். முதலில் என் உடலில் ஏற்பட்ட கால் வலியையும் காய்ச்சலையும் வைத்து சிக்குன்குனியா என சந்தேகித்த மருத்துவ உதவியாளர் என்னை சிறிது நேரம் கண்காணிப்பில் வைத்தார். இல்லை என ஊர்ஜீதப்படுத்தியப்பின் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். பின்னர் மருத்துவமனை எனக்கு வாடிக்கைமனையாகி விட்டது.

கூச்சிங் பட்டணத்தின் மையத்தில் கச்சிதமாக அமைக்கப் பட்டிருக்கிறது சரவாக் பொது மருத்துவமனை (Hospithal Umum Sarawak/HUS). அதை சுற்றி கனக்கச்சிதமா சாலைகள் அமைக்க பட்டிருக்கின்றன. எந்த நேரமும் அவசரமும் கலவரமும் வலியும் சேர்ந்து நடனமாடிக்கொண்டு இருக்கும் இடம் இந்த மருத்துவமனை. பொதுவாக சொல்லப்போனால் காலம் பார்த்து போகவில்லையென்றால் கார் வைக்க இடம் கிடைக்காது. நமக்கு தோதான இடம் வேண்டுமானால் காலை 5.00 மணி முதல் 5.30 வரையில் தான் காலியாகவும் அமைதியாகவும் இருக்கும். எனக்கு காய்ச்சல் விட்டு விட்டு வந்து கொண்டிருந்ததால் இதையெல்லாம் தெரிந்து கொண்டேன் அனுபவ ரீதியாக. அதுவும் காலையில்தான் காய்ச்சல் அதிகமாக இருக்கும். இப்படியே ஒரு 3 வாரங்கள் ஓடின. காய்ச்சல், இருமல், இருமி இருமி அதனால் ஏற்பட்ட ரத்தக்கசிவுடைய வாந்தி, உடல் வலி என எல்லாமே என்னை வாட்டின. ஏதாவது சாப்பிடாலே வாந்தி. இவைதான் எனக்கு அன்று ஏற்பட்ட அறிக்குறிகள். இந்த அறிகுறிகள் நாளுக்கு நாள் அதிகரித்ததால் இந்த வருடம் 24-ஆம் தேதி ஜனவரி மாதம் மருந்துவமனையில் சிறப்பு கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டேன். என்னுடைய அடிதொண்டையிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரி செல்லை பரிசோதித்து எனக்கு வந்திருப்பது H1N1 தான் ஊர்ஜீதப்டுத்திவிட்டார்கள். ஆனால் என்னிடம் சொல்லவில்லை. சொன்னாலும் கேட்கக்கூடிய நிலையிலும் நான் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக என் சுய நினைவை நான் இழந்துகொண்டே வந்தேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட என்னால் உணர முடியவில்லை. ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு எங்கேயோ கூட்டி சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் இன்னொரு கட்டடத்துக்குள் நான்.

என்னை சுற்றி கண்கள் மட்டுமே தெரியும் அளவுக்கு பாதுகாப்பு கவச சீருடைகளை அணிந்த உருவங்கள் நிழலாடின. அப்போது அதில் ஒரு உருவம் என்னை பார்த்து கேட்டது, உங்களுக்கு என்ன என்று தெரியுமா? உங்களுக்கு H1N1 Positive. அந்த நிமிடம் ஒன்னும் பாதியுமாக துடித்து கொண்டிருந்த என் இருதயம் ஒரு நொடி நின்று விட்டது. அதன் பின் என்ன நடந்தது என என் நினைவில் இல்லை. மரணமும் அப்படிதான் இருக்கும் போல. அதன் பின் நினைவு திரும்பிய பின் ஒவ்வொரு முறையும் என் ரத்தநாளத்தில் Tamiflu என்ற மருந்தும் antibioticகும் திரவமாக செலுத்தப்படும் போது உயிர் போய் போய் வந்தது. இந்த நேரங்களில் எனக்கு ஆறுதலாய் அந்த முகம் தெரியாத தாதிமார்களும் பயிற்சி மருத்துவர்களும்தான். மருந்தின் தாக்கதால் வலி தாங்காமல் நான் அழும்போது மெது மெதுவாய் செலுத்தி வலி குறைய உதவினார்கள். இங்கே இருந்த 5 நாட்களில் அங்கே கடமையில் இருந்த தாதிகளும் மருத்துவர்களும் ஒரு நோயாளியின் உணர்வு பாதிக்காத வண்ணம் நடந்து கொண்டனர். அது அவர்களின் பணி நெறி என்பது ஒரு புறம் இருக்க, அதையும் தாண்டி உளமார செய்வதாய் தான் எனக்கு தோன்றியது.

சாதாரணமாக தாதிகளும் மருத்துவர்களும் நோயாளியிம் அவஸ்தயை புறந்தள்ளி அவர்களிடம் காரசாரமாக நடந்து கொண்டதை கண்கூடாக கண்டிருக்கிறேன். இருந்தும் இதை இவர்களிடம் என்னால் பார்க்க முடியவில்லை. 15 நிமிடத்துக்கு ஒரு முறை ஏதோ ஒரு முகமுடி அணிந்த ஒரு கவச தாதி அல்லது மருத்துவ உருவம் என் அறைக்குள் வந்து குசலம் விசாரித்து கொண்டே இருந்தது. ஒருக்கால் எனக்கு வேறு கடுமையான நோய் ஏற்கனவே இருந்திருந்தால் கிருமியின் தாக்கத்துக்கு நான் இறந்திருப்பேன். நல்ல வேளை. தப்பித்துக் கொண்டேன். மரணத்தின் எல்லையை தொட்டு வந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நான் அங்கு இருந்தவரை யாரையும் எனக்கு அடையாளம் தெரியவில்லை. அங்கிருந்து வெளியாகியப்பின் என்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. காரணம் இந்த நிலைக்கு முகக்கவசம் ஒரு பொருட்டாக இருந்தது. என் உடலின் இன்னுமும் கிருமியின் தாக்கம் இருக்கிறதா என்பதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போதுதான் அங்கே பெரும்பாலான நிபுண மருத்துவர்கள் இந்தியர்கள் என்பதை அறிந்து கொண்டேன். அது மட்டுமல்ல. பல புதிய நோய்களை கண்டறியும் ஒரு ஆராய்ச்சிக்கூடமாகவும் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

பெரும்பாலும் தீபகற்பதில் அதிகம் தென்படாத நோய்கள் சரவாக் வாழ் மக்களுக்கு அவர்கள் வாழும் சூழ்நிலையைப் பின்புலமாக கொண்டு வருவதாக ஒரு மருத்துவர் வழி அறிந்தேன். உதாரணதிற்க்கு Gout எனப்படும் மூட்டுவீங்கி நோய் இங்கே உள்ளவர்களுக்கு அதிகமாக வரும். இந்த நோய் வந்தால் கை கால் மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு அசைவு எதுவுமே இருக்காதாம். இதை குணமளிப்பு செய்ய மிகவும் கடினமாம். காரணம் இதில் மரபணுவும் சம்பந்தபட்டிருக்கிறதாம். இதை தவிர்த்து இன்னும் பெயர்த்தெரியாத பல நோய்களை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பதால் இந்த மருத்துவமனை ரொம்ப பிஸி. தட்டு தடுமாறி இந்த கண்டத்தை தாண்டிய நான் அடுத்த ஒரு வாரத்திலேயே மீண்டும் ஒரு கண்டத்தை சந்திக்க தயாரானேன்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768