முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 37
ஜனவரி 2012

  சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்  
 
       
வல்லினம் பதிப்பக நூல்கள்:

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்

தீர்ந்து போகாத வெண்கட்டிகள்: நான் ஒரு கதை உருவாக்கி
கே. பாலமுருகன்

கடக்க முடியாத காலம்
ம. நவீன்

துடைக்கப்படாத இரத்தக்கறைகள்: நினைவில் உயிர்த்திருக்கும் வாழ்வு
யோகி

என்னை நாயென்று கூப்பிடுங்கள்
ரேணுகாகட்டுரை:

அபிநயம்
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

'உம்மை நீர் விற்க வேண்டும்!'
ஷம்மிக்காபத்தி:

புலம்பெயர் முகங்கள்... 5
வி. ஜீவகுமாரன்திரைப்பார்வை:

போராளி : மனநோய் சித்திரம்
கே. பாலமுருகன்பதிவு:

வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா
இ. ஏகன்
கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யாக‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

தர்மினி பக்கம்
தர்மினிநேர்காணல் இதழ் 4 (அக்டோபர் - டிசம்பர் 2011)கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...27

ந. பெரியசாமி

எம். ரிஷான் ஷெரீப்

கணேஷ்

ராஜா

ம. நவீன்

சென்னை புத்தகக் கண்காட்சி கடை எண் : 119

'கறுப்பு பிரதிகள்' பதிப்பகத்தோடு வல்லினமும் இணைந்து மலேசிய படைப்பிலக்கியங்களை தமிழகத்திற்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை முதலில் வகுத்துக்கொடுத்தவர் ஷோபா சக்திதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இத்திட்டம் குறித்து தோழர் நீலகண்டனிடம் பேசியபோது அவரும் உற்சாகமாக ஆமோதித்தார். முதலில் சீ. முத்துசாமியின் சிறுகதை தொகுப்பை வெளிகொணர்வதென முடிவானது. அதற்கான அடிப்படை வேலைகளையெல்லாம் செய்துமுடித்துவிட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

கடந்த ஆண்டு தமிழகப்பயணத்தின் போது தோழர் நீலகண்டனுடன் நடந்த சந்திப்பின் வழி மீண்டும் இணைந்து நூல் பதிப்பிப்பது குறித்து திட்டங்கள் வகுத்தோம். நீலகண்டனுக்கு மலேசிய இலக்கியங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் இருந்தது. இன்று அவ்வெளிய திட்டத்தின் வழி நான்கு நூல்கள் பதிப்பிக்க முடிந்துள்ளது.

வல்லினம் பதிப்பில் வரும் நூல்களின் விபரம்:

என்னை நாயென்று கூப்பிடுங்கள் - கவிதைகள்
ஆசிரியர் - ரேணுகா
விலை : 40 ரூபாய்

இந்நூல் தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளிவருகிறது. ரேணுகா என்ற புனைப்பெயரில் எழுதிவரும் சிவா பெரியண்ணின் முதல் கவிதை தொகுப்பு இது. சிறுகதைகள், கட்டுரைகள் வழி மலேசிய இலக்கிய பரப்பில் நன்கு அறிமுகமான சிவா பெரியண்ணின் கவிதைகளை சிங்கை இளங்கோவன் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். அந்தரங்க மன உணர்வையும் அரசியல் வெளிபாட்டையும் இக்கவிதைகள் நவீன மொழியில் சொல்லிச்செல்கின்றன.


தீர்ந்து போகாத வெண்கட்டிகள் - கட்டுரைகள்
ஆசிரியர் - கே. பாலமுருகன்
விலை : 75 ரூபாய்

பல உலகத்திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள குழந்தைகள் கதாபாத்திரங்களின் வாழ்வையும் உளவியலையும் ஆராய்கின்றன இக்கட்டுரைகள். நாவல், சிறுகதைகள், கவிதை என புனைவுகளில் இயங்கிகொண்டிருக்கும் கே.பாலமுருகனின் முதல் கட்டுரை தொகுப்பு இது. நிறைய ஆய்வுகள், ஆழ்ந்த ரசனை இவற்றினூடாக கே. பாலமுருகன் உலகம் முழுக்கவும் குழந்தைகளின் மனது எவ்வாறு கவனிக்கப்படாமல் இருக்கிறது என ஆதரப்பூர்வமாக இக்கட்டுரைகளின் வழி சொல்லிச்செல்கிறார்.


துடைக்கப்படாத இரத்தக்கறைகள் - பத்திகள்
ஆசிரியர் - யோகி
விலை : 50 ரூபாய்

யோகியின் பத்திகள் மலேசிய வாழ்வில் பெண்களுக்கு நூதனமாக நிகழும் வாழ்வியல் சிக்கல்கள் குறித்து பேசுகின்றன. கவிதைகள் மூலம் அறியப்பட்ட யோகியின் முதல் நூல் இது. வளர்ச்சி அடைந்த நாடாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மலேசியாவில் ஒரு பெண் எப்படி சமூகத்தால் நடத்தப்படுகிறாள் என யோகி தனது அனுபவங்களின் வழி பகிர்ந்துகொள்கிறார். இயல்பான அவர் மொழிநடை வாசகர்களை வெகு எளிதில் கவர்வதாய் அமர்கிறது.


கடக்க முடியாத காலம் - பத்திகள்
ஆசிரியர் - ம. நவீன்
விலை : 50 ரூபாய்

ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் எழுதப்பட்ட பத்திகளின் தொகுப்பு. வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் தான் சந்தித்த மனிதர்கள் குறித்த பதிவாக இப்பத்திகள் அமைகின்றன. இவ்வுலகை புரிந்துகொள்ள மீண்டும் மீண்டும் முயலும் எல்லா மனங்களைப்போலவும் ஆசிரியர் இம்மனிதர்கள் மூலம் வாழ்வை புரிந்துகொள்ள முயல்கிறார்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768