முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 37
ஜனவரி 2012

  விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்... 3
ந. பச்சைபாலன்
 
 
       
வல்லினம் பதிப்பக நூல்கள்:

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்

தீர்ந்து போகாத வெண்கட்டிகள்: நான் ஒரு கதை உருவாக்கி
கே. பாலமுருகன்

கடக்க முடியாத காலம்
ம. நவீன்

துடைக்கப்படாத இரத்தக்கறைகள்: நினைவில் உயிர்த்திருக்கும் வாழ்வு
யோகி

என்னை நாயென்று கூப்பிடுங்கள்
ரேணுகாகட்டுரை:

அபிநயம்
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

'உம்மை நீர் விற்க வேண்டும்!'
ஷம்மிக்காபத்தி:

புலம்பெயர் முகங்கள்... 5
வி. ஜீவகுமாரன்திரைப்பார்வை:

போராளி : மனநோய் சித்திரம்
கே. பாலமுருகன்பதிவு:

வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா
இ. ஏகன்
கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யாக‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

தர்மினி பக்கம்
தர்மினிநேர்காணல் இதழ் 4 (அக்டோபர் - டிசம்பர் 2011)கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...27

ந. பெரியசாமி

எம். ரிஷான் ஷெரீப்

கணேஷ்

ராஜா

ம. நவீன்

தேர்வுக் களத்தில் நம் நாவல்கள்

இலக்கியம் மனித மனங்களைப் பண்படுத்தி நற்பாதையில் வழிநடத்தும் ஆற்றல் மிக்கது. மனிதனோடு மிஞ்சியிருக்கும் மிருக உணர்வுகளைச் சலவை செய்து மனிதனை மனிதனாக்கும் மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக, இளையோரிடையே இனத்தின் மீதும் சமூகத்தின் மீதும் காதலை அரும்பச் செய்யும் தன்மையது எனலாம். இதனால்தான் எஸ்.பி.எம். தேர்வில் தமிழ்மொழியோடு தமிழ் இலக்கியப் பாடத்தையும் படிக்கும் அரிய வாய்ப்பு நம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நம்நாடு அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு 54ஆண்டுகள் கடந்துவிட்டாலும் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நம் மாணவர்களுக்குத் தமிழக நாவல்களையே அரியபடைப்புகளாக அடையாளங்காட்டி அவற்றைப்படிக்கும் வாய்ப்பினை வழங்கிவந்துள்ளோம். இதனால் உள்நாட்டுப்படைப்புகளும் படைப்பாளர்களும் ஒதுக்கப்படுவது குறித்த குறைகூறல்கள் தொடர்கதையாகி வந்தன. எழுத்தாளர் இயக்கங்களின் ஆண்டுக் கூட்டங்களில் அதுபற்றித் தீர்மானம் நிறைவேற்றிப் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. 1994 ஆம் ஆண்டு மயில் வார இதழில் ‘நமக்கு இல்லையா நல்ல தமிழ் நாவல்?” என்ற கட்டுரையின்வழி என் ஆதங்கத்தைப் பதிவுசெய்தேன்.

இந்தோனேசியா நாவல்களையே நம்பியிருந்த மலாய் சமூகம், மலாய் இலக்கியம் பயிலும் தம் மாணவர்களுக்கு உள்நாட்டு நாவல்களைப் பாடநூலாக்கத் துணிந்ததைப் பார்த்தாவது நாம் திருந்த வேண்டாமா? நம் நாட்டு தமிழ் நாவல் வளர்ச்சிக்கு இதைக்கூடச் செய்யக்கூடாதா? நம் நாவல்களுக்கு இத்தகைய சமூக அங்கீகாரத்தை நாமே முன்மொழியாவிட்டால் யார்தான் வழிமொழிவார்கள்? இப்படி இடையறாது தொடர்ந்தன கேள்விக்கணைகள்.

பல தரப்பினரும் தொடர்ந்து அடிமேல் அடி அடித்ததால் இப்பொழுது அம்மி நகர்ந்திருக்கிறது. மலேசியத் தேர்வுக் கழகத்தின் தமிழ் அதிகாரிகளின் மனமும் கொஞ்சம் இளகியிருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் (2012) படிவம் நான்கு மாணவர்கள் ஐ.இளவழகு எழுதிய ‘இலட்சியப் பயணம்’ நாவலைப் படிக்க உள்ளனர். 1972இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் தேசியத் தோட்டத் தொழிற்சங்கம் நடத்திய நாவல் போட்டியில் முதற்பரிசான ஆயிரம் ரிங்கிட்டை இந்நாவல் வென்றுள்ளது. இந்த நாவல் உருவான கதை சுவையானது. சாலை விபத்தில் சிக்கி ஆறு மாதங்கள் கால் கட்டுடன் முடங்கிய சூழலில், நீட்டிய கால்களுடன் சாய்வு நாற்காலியில் வாசம் கொண்டு இந்நாவலை ஐ.இளவழகு எழுதியிருக்கிறார். அகிலனின் கருத்துரையோடு வெளிவந்த நாவல் இப்பொழுது மாணவர்ப் பதிப்பாக மாற்றங்களோடு மறுபிரசுரமாகியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு (2013 - 2015) இந்நாவல் தேர்வுக்குரிய பாடநூலாக இருக்கும். ஆண்டுதோறும் ஏறக்குறைய மூவாயிரம் மாணவர்கள் என்றாலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒன்பதாயிரம் மாணவர்களிடையே இந்நாவல் படிக்கப்பட்டு விவாதிக்கப்படும். இந்நாவலைப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய சிரமமும் மாணவர்க்கு இல்லை. மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் (இலக்கியகம்) பெருமுயற்சியில் அரசின் இரண்டு லட்சம் ரிங்கிட் மானியத்தில் நாவல், நாடகம், கவிதை நூல்கள் இலவயமாக மாணவர்களுக்குத் விரைவில் தரப்படவுள்ளன.

இறுக்க மூடியிருந்த தேர்வுக் கழகத்தின் கதவுகளைத் தட்டித் திறந்து ஒருவழியாக மலேசிய நாவலாசிரியர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டுள்ளது. போட்டிகளில் பரிசு பெற்ற நாவல்களும் ஏடுகளில் தொடராக வந்த படைப்புகளும் இனிநூலுருவம் காணலாம். தேர்வுக் களத்தை நோக்கிப் புதிய நாவல்களும் தயாராகலாம். இங்கே நாவல் துறையின் வளர்ச்சிக்கு இ•து உந்து சக்தியாக அமையுமானால் அனைவரும் மகிழ்வோம். “அடுத்து யார் படைப்பு தேர்வாகும்? மூத்த படைப்பாளியாகிய எங்களுக்கு வாய்ப்புண்டா? இளைய படைப்பாளிகளையும் கொஞ்சம் கவனிக்கக் கூடாதா?” இப்படி எதிர்பார்ப்புகள் எழுவதும் இயல்பே.

மலேசியாவில் விடுதலைக்குப் பிந்திய காலக்கட்டம் தொடங்கி 2008 வரை நூற்றுக்கும் குறையாத நாவல்கள் வெளிவந்துள்ளதாக ‘விடுதலைக்குப் பிந்திய மலேசியத் தமிழ் நாவல்கள்’ என்ற தமது முனைவர் பட்ட ஆய்வேட்டில் வே.சபாபதி குறிப்பிட்டுள்ளார். அவற்றில் பல, நல்ல நாவல்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. ஆயினும், தேர்வு நோக்கில் அவை மாணவர்க்குப் பொருத்தமான நாவல்களாக அமையுமா என்ற கேள்வி இப்பொழுது எழுகிறது.

கல்வி அமைச்சின் தேர்வுக் கழகம் ‘நல்ல நாவல்’ என்பதற்கான அளவுகோல்களைப் பின்வருமாறு தீர்மானிக்கிறது:

அ) தேர்வுமதிப்பீட்டின் அடிப்படையில் பாடநூலாகத் தேர்வு பெறும் நாவல், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குக் கேள்வி தயாரிக்கப் போதுமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும். இது நியாயமான எதிர்பார்ப்புத்தான். ‘கேள்வி கேட்பது எவ்வளவு சிரமம் எங்களுக்குத்தான் தெரியும்’ என்று அவர்கள் அங்கலாய்ப்பது காதில் விழுகிறது.

ஆ) தேர்வை எதிர்நோக்கும் 16 / 17 வயது மாணவர்களுக்குப் பொருத்தமான, நெருக்கமான கதைக் களத்தைக் கொண்டிருக்கவேண்டும். முடியுமானால் இளையோரையும் உள்ளடக்கிய கதைக்களமாக, ‘இளையோர் இலக்கியமாக’ (sastera remaja) இருப்பது சிறப்பு. அதற்காக, இனத்தின் வரலாறு, வாழ்வியல் சிக்கல்களை மையமிட்ட முக்கியக் கதைக்களங்கள் ஒதுக்கப்படும் என்று அர்த்தமாகாது.

இ) அவர்களுக்கு வழிகாட்டும் படைப்பாக, நன்னெறி மூலமாகப் பண்படுத்தும் படைப்பாக அமைய வேண்டும். இதுவும் நியாயமான எதிர்பார்ப்புதான். மலாய் மாணவர்க்கான இலக்கியப் பாட நூல்களும் இந்த நோக்கத்திலேயே அமைந்துள்ளன.

மேலே சொன்ன ‘அளவுகோல்கள்’ உங்களுக்குள் பல சிந்தனைகளைக் கிளறலாம். ஒரு நாவல் தேர்வில் இதையெல்லாமா பார்ப்பார்கள்? இவற்றை எண்ணிக்கொண்டா ஒரு படைப்பாளி புனைகதையில் ஈடுபடுவது? என்று பலரும் கேட்கலாம். மாணவர்க்கான நாவல் தேர்வு எவ்வளவு கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு ஓராண்டாய் அரங்கேறிய ‘இண்டர்லொக் நாவல் காட்சிகள்’ போதுமே. இந்தியரை இழிவுபடுத்தும் வாசகங்கள், இந்தியரை வந்தேறிகள் என இளையோருக்கு நினைவுறுத்தும் கதைக்களம், மூவின ஒற்றுமைக்குப் பதிலாக மூவினங்களையும் பிரிக்கும் படைப்பு என அது பல கண்டனத்துக்குள்ளானது. இனி, மாணவர்க்கான நாவல் தேர்வு அதிகவனத்தோடு மேற்கொள்ளப்படும் என்பது உறுதி.

மாணவரின் தேர்வு நோக்கை எண்ணிக்கொண்டா இலக்கியம் படைப்பது என நம் நாவலாசிரியர்கள் கேட்கலாம். எழுத்து என்பது ஒரு படைப்பாளி எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றிச் சுதந்திரமாகத் தன் மனவெளியில் மேற்கொள்ளும் பயணமாகும். அது அவனின் வாழ்வனுபங்களின் மீதான எதிர்வினையாகவோ, அவனுக்குள் உருவான கருத்தாக்கங்களின் கதைவடிவமாகவோ வாழ்க்கைச் சிக்கல்களுக்கு அவன் நீட்டும் தீர்வுகளாகவோ அவன் சொல்ல விரும்பிய நிகழ்வுகளின் தொகுப்பாகவோ எப்படியோ இருக்கலாம். அவனிடம் படைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என விதிமுறைகளை நீட்ட முடியாதுதான். ஆயினும், இளையோரையும் எண்ணிப்பார்த்து ‘கொஞ்சம் இறங்கி வந்து’ அவர்களுக்காகவும் இலக்கியம் படைக்கலாமே என்றுதான் தேர்வுக் கழகம் எதிர்பார்க்கிறது.

இளையோருக்கான புதிய நாவல்கள் எழுதப்படாவிட்டால் இதுவரை வெளிவந்த நாவல்களை வைத்துக்கொண்டு எந்தப் பகுதியை மாற்றலாம்? எப்படிச் சுருக்கலாம்? எதையெல்லாம் நீக்கலாம்? எதையெல்லாம் சேர்க்கலாம்? என தேர்வுக் கழக அதிகாரிகள் திணறவேண்டியிருக்கும். அதற்குப் பதிலாக, நாவல் தேர்வுக்குப் போகும் ஆசிரியர்களே நாமாவது தகுதியான ஒரு நாவலை எழுதிவிடலாமே என்ற முடிவுக்கு வந்து நாவல் களமிறங்கக்கூடும்.

இந்நாட்டுத் தமிழ் இலக்கியத்துறையில் ‘இளையோர் இலக்கியம்’ இன்னும் வெற்றிடமாகவே இருக்கிறது. சிறுவர் இலக்கியத்திற்கும் அதே நிலைதான். மலாய் இலக்கியத்தில் அதற்குக் குறையே இல்லை. ‘டேவான் பஹாசா டான் புஸ்தாகா’ நிறுவனம் மொத்த குத்தகைஎடுத்துக்கொண்டு அரசு நிதியில் ஏராளமான நூல்களை அச்சிடுகிறது. அங்குத் தேவைக்கு அதிகமாக இருப்பதால் மாணவர்க்கான நாவல் தேர்வு எளிதாகிவிடுகிறது. நமக்கோ முள் மேல் விழுந்த சேலையைக் கவனமாக எடுப்பதுபோல் எந்த நாவலை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதே சிரமமாயிருக்கிறது.

இதனை நன்கு உணர்ந்துதான் மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து அண்மையில் பத்தாயிரம் ரிங்கிட் பரிசுத்தொகையில் இளையோர், சிறுவர் சிறுகதைப் போட்டியை நடத்தின. இத்தகைய முயற்சிகள் பெருக வேண்டும். கலைத்தாகம் தீர்க்க அரங்கேறும் ‘ஆட்டம் நூறு வகை’ போன்ற வகையறாக்களுக்குச் செலவிடப்படும் லட்சங்களில் சில ஆயிரங்களைத் திசைமாற்றினால் மாணவர்களுக்குப் பொருத்தமான நாவல் எழுதும் போட்டியை இங்கு நடத்திவிட முடியும்.

இதுவரை மாணவர்கள், பெரியவர்கள் உலகத்தில் எட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் நம் நாவல்கள் உள்ளன. இலக்கியத்தின் முதல் படியில் கால்வைத்து அதன் சுவையை அனுபவிக்க முனையும் மாணவர்கள் தங்களைத் தாங்களே அடையாளம் காணும் வகையில் அவர்களின் சிக்கல்களும் அலசப்படும் படைப்புகள் உருவாகவேண்டும்.

போர்க்களத்தில் வெற்றிபெற வேண்டுமானால் வியூகம் அமைத்தாகவேண்டும். கர்ணன் தன் சக்தியை இழந்து நிராயுதபாணியாகப் போர்க்களம் புகுந்ததால்தான் தோல்வியைத் தழுவினான். தேர்வுக்களமும் அதுபோலத்தான். இங்கும் வியூகம் வேண்டும். எப்படியாவது நம் நாவல் தேர்வுக்குரிய நாவலாக ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தால் போதாது. மாணவர்க்குப் பொருத்தமான நாவலாக தேர்வுக் கழகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்வதாக அஃது அமையவேண்டும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768