முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 26
பிப்ரவரி 2011

  சாரு பதில்கள்
சாரு நிவேதிதா
 
 
       
நேர்காணல்:

எல்லா தவறுகளையும் அனுமதிக்கும் இந்த வாழ்வில், நான் சொல்ல என்ன கருத்து இருக்கிறது?

சஞ்சய் குமார் பெருமாள்குறும்பட விமர்சனம்:

'வாழ்க்கையை உரையாடுதல்' - சஞ்சய் குமார் பெருமாளின் ஜகாட் (Jagat)
கே. பாலமுருகன்மலேசிய இந்தியர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் 'இண்டர்லோக்' (Interlok) மலாய் நாவல் சர்ச்சை குறித்தான அலசல்கள்

"பறையனாக இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை?"
ம‌. ந‌வீன்

காலம் கடந்த ஞானமும் தண்டனையும்: “இண்டர்லோக் சமூகத்தின் ஆழ்மனம்”
கே. பாலமுருகன்

அடையாளமற்றவர்கள்
சு. யுவராஜன்சிறுகதை:

அமென்
கிர‌க‌ம்

விட்டாச்சு லீவு
சின்னப்பயல்கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதாபெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...8
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...15
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனிகவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...16

லதாமகன்

தவ சஜிதரன்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

ரெ. பாண்டியன்

ஜனவரி 2011 (இதழ் 25) தொடங்கி வல்லினத்தில் "சாரு பதில்கள்". 
வல்லினம் வாசகர்களின் கேள்விகளுக்கு சாரு நிவேதிதா எழுதும் பதில்கள் தொடர்ந்து இடம்பெறும். உங்களின் கேள்விகளை editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

நிர்ம‌ல்


1. தமிழ்நாட்டில் உங்கள் இலக்கியத்தை படிப்பவர்கள் அந்த இலக்கியத்தை அனுபவிக்காமல், அதை உள்வாங்க முயற்சிக்காமல் அதை எடைபோடுவதில் கருத்தாய் இருக்கிறார்கள் என்று நினைகிறேன்? 1, 2, 3... என தரம்பிரிப்பதில் அதிக கவனமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. இருந்தும் அதை உள்வாங்கி அதனின் அனுபவத்தை மற்ற துறைகளில் பயன்படுத்தவில்லை என்பது எனது எண்ணம். இது சரியா?

பதில்: அராத்துக்குக் கொடுத்துள்ள பதிலைப் பார்க்கவும்.

2. பின்நவீனத்துவ இலக்கியத்தில் குழந்தைகளுக்கான நூல் இருக்கிறதா? நீங்கள் குழந்தைகளுக்காக இலக்கியம் எழுதுவீர்களா? இது கேள்வி மட்டுமில்லை ஆசையும் கூட.

உங்கள் கேள்விக்கு ஒரு புத்தக அளவுக்கு பதில் எழுதலாம். ஜுமான்ஜி என்ற படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அது முதலில் புத்தகமாகத்தான் வந்தது. அது ஒரு பின்நவீனத்துவக் கதைதான். பின்நவீனத்துவ பாணியில் குழந்தைகளுக்கான கதை சொல்வதில் Francesca Lia Block மற்றும் Roald Dahl ஆகியோரை நான் முக்கியமானவர்களாகக் கருதுகிறேன். இதில் ரொவால் டால் குழந்தைக் கதைகளும் எழுதுவார்; வயது வந்தவர்களுக்கான மென்மையான போர்னோ கதைகளும் எழுதுவார்.

குழந்தைகளுக்கான கதை எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இன்னும் வயது வந்தவர்களுக்கான கதைகளையே முடிக்கவில்லை என்பதால் குழந்தை விஷயம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஆனால் தமிழ்க் குழந்தைகளுக்குக் கதை எழுதிப் பயனில்லை என்று நினைக்கிறேன். பெற்றோர்களின் சர்வாதிகாரப் பிடியில் அவர்கள் சிக்கியிருப்பதால் கதை படிக்கும் அளவுக்கு அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்படுமா என்று தெரியவில்லை. மேலும், இப்போதைய குழந்தைகள் விடியோ கேம்ஸ், தொலைக்காட்சி போன்றவைகளுக்கு அடிமைகளாகி விட்டனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் உலகம் கேட்கும் உலகமாக இருந்தது; இப்போது அது பார்க்கும் உலகமாக மாறி விட்டது. அதனால் நான் குழந்தைக் கதைகள் எழுத வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மேலும், இலக்கிய அறிவு இல்லாத காரணத்தால் தமிழ் சமூகத்தில் பெரியவர்களே எல்கேஜி நிலையில்தானே இருக்கிறார்கள்? சந்தேகம் இருந்தால் சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணன் கலந்து கொண்ட நீயா நானா நிகழ்ச்சியைப் பார்க்கவும். புத்தகம் படிப்பது பற்றிய கலந்துரையாடல் அது. நிகழ்ச்சி முழுவதும் எல்லோரும் சஞ்சிகைகளையே புத்தகம் என்று பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது அவர்கள் யாருக்கும் புத்தகத்துக்கும் பத்திரிகைக்குமே வித்தியாசம் தெரியவில்லை என்று தெரிந்தது. இப்படிப்பட்ட சமூகத்தில் நான் எழுதும் எல்லாமே குழந்தை இலக்கியம்தானே?

செந்தில் குமார்


1. சாரு... ஒரு எழுத்தாளனாக இதுவரை வாழ்ந்த காலத்தில் சமுதாயத்திற்கு என்ன செய்ததாக உணர்கிறீர்கள்?

யாரையும் கற்பழித்தது இல்லை. ஈவ் டீசிங் பண்ணியதில்லை. காரியம் ஆவதற்காக காக்கா பிடித்ததில்லை. போக்குவரத்து விதிகளை என்றுமே மீறியதில்லை. கோடிகளில் ஊழல் செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததில்லை. எறும்பு, கரப்பான், பூரான், பாம்பு, தேள், உணவுக்காக சில பல பிராணிகள் ஆகியவற்றைத் தவிர மனித ஜீவிகள் யாரையும் கொன்றதில்லை. (சிலரைக் கொல்ல வேண்டும் என்று மனதுக்குள் தோன்றினாலும்!) நம்பிக்கை துரோகம் செய்ததில்லை. இப்படி பல விஷயங்கள் உள்ளன. சமுதாயத்துக்கு எந்த நல்லதும் பண்ண வேண்டாம். மேலே குறிப்பிட்டுள்ள காரியங்களில் ஈடுபடாமல் இருந்தாலே போதும்; அதுவே மிகப் பெரிய சமுதாயத் தொண்டு.

2. மீடியா, தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு சிறந்த எழுத்தாளனை வெளிக்கொண்டு வரும். உதாரணம் ப்ளாக் (Blog) போன்றவை, சரியா?

சிறந்த எழுத்தாளனாக இருந்தால் எவற்றின் பலமும் ஆதரவும் இல்லாமலேயே ஒருவன் வெளியுலகத்துக்குத் தெரிய வந்து விடுவான். ஆதரவு இருந்தால் இன்னும் பலரை எட்ட முடியும் என்பதும் உண்மைதான். தொழில்நுட்ப வளர்ச்சியினால் நாம் அடைந்திருக்கும் ப்ளாக் போன்ற அனுகூலங்களை தமிழர்களாகிய நாம் சரியானபடி பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே என் கருத்து. பின்னூட்டம் என்ற பெயரில் வரும் ஆபாசங்களைப் பார்த்தாலே நான் சொல்வது உண்மை என்று புரியும். கிட்டத்தட்ட கக்கூஸ் கிறுக்கல்களைப் போல் ஆகி விட்டன பின்னூட்டங்கள். ப்ளாகில் எழுதுபவர்களிடம் ஒரு எழுத்தாளனுக்கு வேண்டிய அடிப்படை குணாம்சமான வாசிப்பு அனுபவமும், போர்க் குணமும் இல்லை. நடுத்தர வர்க்கப் பொழுதுபோக்காக மிஞ்சி விட்டது ப்ளாக் எழுத்து. ஆனாலும் பரவாயில்லை; தொலைக்காட்சி சீரியல் பார்ப்பதை விட இது தேவலாம்.

3. சன், ரெட் ஜெயன்ட் போன்ற நிறுவனங்கள் சினிமாவிற்குள் நுழைந்தது ஒரு நல்ல எதிர்காலத்தையும், சரியான சமூகத்திற்கு தேவையான படிப்பையும் கொடுக்குமா? இது போன்ற நிறுவனங்கள் சினிமாத் துறையை எப்படி மாற்றும்?

இந்த உலகத்திலேயே கள்ளம் கபடமில்லாத, வெகுளியான ஆள் நான் தான் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னை விட பெரிய ஆளாக இருக்கிறீர்கள். சன், ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் கருணாநிதியின் பேரன்களின் நல்ல எதிர்காலத்துக்காக உருவாக்கப்பட்டவை. இம்மாதிரி ஆட்களுக்கெல்லாம் ஓட்டுப் போட்டால் சமூகம் இப்படித்தான் ஆகும் என்ற படிப்பினையை அது நிச்சயம் கொடுக்கும். இது போன்ற நிறுவனங்கள் சினிமாத் துறையை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் பொழுதுபோக்காக மாற்றும்...

அராத்து


கேள்வி: சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்திருந்த ஒரு பட்டியலைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். புத்தக விழாவில் என்னென்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று சில பிரபலங்களிடம் கேட்க, அவர்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் அது. அதில் தமிழில் எழுதும் எல்லா எழுத்தாளர்களின் பெயரும் இருந்தது. உதாரணத்துக்கு, சு. தமிழ்ச்செல்வி, பொன். வாசுதேவன், பெருமாள் முருகன், கயல்விழி, கரிகாலன், ஷாஜி, ராஜ் கௌதமன், தமிழ்நதி, யோ. கர்ணன் போன்ற பெயர்கள். எல்லோரும் அறிந்த சுஜாதா, மனுஷ்ய புத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் பெயர்களும் அதில் இருந்தன. ஆனால் உங்கள் பெயரை மட்டும் காணோம். இது பற்றி உங்கள் கருத்து?

பதில்: இது போன்ற கேள்விகளுக்கு பலமுறை பதில் சொல்லி விட்டேன். அந்தப் பிரபலங்கள் என் புத்தகங்களை வாங்கியிருப்பார்கள். ஆனால் சொல்ல மாட்டார்கள். காரணம் சொல்கிறேன். எழுத்தில் இரண்டு வகை உண்டு. Status Quo மற்றும் Transgressive. முதல் வகை எழுத்து, அரசு, மதம், கல்வி நிறுவனங்கள், குடும்பம், மற்றும் இன்னோரன்ன சமூக அமைப்புகள் நமக்கு சிறுவயதிலிருந்தே போதிக்கும் மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக் கொள்வது. இரண்டாவது வகை, அந்த மதிப்பீடுகளை எதிர்த்துக் கலகம் செய்வது. உதாரணமாக, சமீபத்தில் ஒரு இலக்கிய விழாவில் எல்லோரும் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்து வரும்படி வாய் மொழி உத்தரவு போடப்பட்டு கூட்டத்துக்கு வந்த அத்தனை பேரும் அப்படியே வெள்ளை வேஷ்டி சீருடையில் வந்ததை எடுத்துக் கொள்வோம். இதுதான் அரசு, மதம், குடும்பம் என்று அதிகார அமைப்பின் எல்லா நிறுவனங்களும் வலியுறுத்தும் ஒழுங்கு (Order, Discipline). இதைத்தான் மிஷல் ஃபூக்கோ தன்னுடைய Discipline and Punish என்ற நூலில் வன்மையாக எதிர்க்கிறார். எங்கே ஒழுங்கு வலியுறுத்தப் படுகிறதோ அங்கே ஒழுங்கை மீறுபவர்கள் மீது தண்டனையும் உண்டு. மூன்று இடங்களில் சீருடை வலியுறுத்தப்படுகிறது. மருத்துவமனை, சிறைச்சாலை, பள்ளிக்கூடம். மனநலக் காப்பகத்தில் எல்லா மனநோயாளிகளுக்கும் வழங்கப்படும் சீருடையை ஞாபகத்தில் கொள்ளுங்கள். சிறைச்சாலையோடு தொடர்புடைய போலீஸ், ராணுவம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆக, மக்களை அடிமைப்படுத்தும் அதிகார அமைப்புகளே சீருடைகளை வலியுறுத்துகின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் காக்கி ட்ரௌசர் சீருடை. ஹிட்லரின் நாஜிக் கட்சியிலும் சீருடை கட்டாயமாக இருந்தது. வெள்ளை வேஷ்டி கோஷ்டியின் கூட்டத்தைப் பார்க்கும் போது, எழுத்தாளன் என்பவன் எப்படி அரசு நிறுவனங்கள் வலியுறுத்தும் கோட்பாடுகளுக்கு அடிமையாகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மிஷல் ஃபூக்கோவைப் படிப்பது என்பது நம் அறிவை விருத்தி செய்து கொள்வதற்காக அல்ல. பின்நவீனத்துவம் என்பது நம் புரிதலை இன்னும் செழுமைப்படுத்திக் கொள்வதற்காக வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. ஃபூக்கோவை இப்படித்தான் என் அன்றாட வாழ்விலும், தத்துவப் புரிதலிலும் பயன்படுத்திக் கொள்கிறேன். ஊரோடு ஒத்து வாழும் எழுத்தாளர்களுக்குத்தான் அதிகாரம் பட்டங்களையும், பரிசுகளையும் கொடுத்து கௌரவிக்கும்; (வைரமுத்து, நாஞ்சில் நாடன், இத்யாதி). கலகக்காரர்களுக்கு என்றுமே பட்டியலில் கூட இடம் இருக்காது.

இரண்டாவது வகையான ட்ரான்ஸ்க்ரெஸிவ் எழுத்து என்றால் என்ன? விக்கிபீடியாவில் ட்ரான்ஸ்க்ரெஸிவ் எழுத்து என்பதற்குப் போட்டுள்ள அர்த்தத்தைப் பாருங்கள். பிறகு புரியும் உங்களுக்கு, பிரபலங்கள் யாருடைய பட்டியலிலும் என் பெயர் ஏன் இல்லை என்று.

Transgressive fiction is a genre of literature that focuses on characters who feel confined by the norms and expectations of society and who break free of those confines in unusual and/or illicit ways. Because they are rebelling against the basic norms of society, protagonists of transgressional fiction may seem mentally ill, anti-social, or nihilistic. The genre deals extensively with taboo subject matters such as drugs, sex, violence, incest, pedophilia, and crime.

ஆனால் ஒரு விஷயம். இம்மாதிரி பட்டியல்களில் என் பெயர் இல்லை என்பதுதான் எனக்கு மரியாதை. ஏனென்றால், நான் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும், தமிழில் எழுதினாலும் நான் தமிழ் எழுத்தாளன் அல்ல. அல்ஜீர்யா, மொராக்கோ போன்ற மக்ரெப் (Maghreb) எழுத்தாளர்கள் பெரும்பாலும் ஃப்ரெஞ்சில்தான் எழுதுகிறார்கள்; அரபியில் அல்ல. அல்பேனியாவைச் சேர்ந்த இஸ்மயில் காதரை அல்பேனிய அரசு நாடு கடத்தி விட்டது. அவர் ஃப்ரான்ஸில் வாழ்ந்து வருகிறார். அல்பேனிய மொழியில்தான் எழுதுகிறார். அவர் எழுதுவதை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்க்க ஆட்கள் கிடைக்காமல், முதலில் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிறகு ஃப்ரெஞ்சில் மொழிபெயர்க்கிறார்கள். இன்று அவர் ஃப்ரான்ஸின் மிக முக்கியமான, மிகப் பிரபலமான எழுத்தாளர். அதே நிலைதான் எனக்கும். ஸீரோ டிகிரியை அமெரிக்கப் பல்கலைக்கழகம் மாடர்ன் ஏஷியன் க்ளாஸிக் என்று சொல்லிப் பாடமாக வைக்கிறது. இங்கே பிரபலங்களின் நூல் பட்டியலில் என் பெயரே இல்லை. இன்றைய தினம் ஆட்டோஃபிக்ஷன், ட்ரான்ஸ்கிரஸிவ் ஃபிக்ஷன் என்றாலே கேத்தி ஆக்கர், நபக்கோவ் போன்ற பெயர்களுடன் சாரு நிவேதிதா என்ற பெயரும் சேர்த்து விவாதிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு இந்து நாளிதழில் வந்த சர்வேயை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். இந்தியப் பெண்கள் அதிகம் படிக்கும் எழுத்தாளர்கள், ஜும்ப்பா லஹரி, ஸல்மான் ருஷ்டி, வி.எஸ்.நைப்பால், உம்பர்த்தோ எக்கோ மற்றும் சாரு நிவேதிதா. இதைச் சொல்வதற்குக் காரணம், நான் தமிழ் எழுத்தாளன் (மட்டும்) இல்லை என்பதை வலியுறுத்துவதற்காகத்தான்.

பட்டியலில் என் பெயர் இடம் பெறாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, நான் எழுதுவது ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து. அதைப் படிக்கிறேன் என்று சொல்ல பிரபலங்களுக்குக் கூச்சமாக இருக்கும். (ஆனால் அதிக வாசகர்களால் நான் படிக்கப் படுகிறேன் என்பது மற்றொரு விஷயம்). இரண்டு, இவர்களின் பட்டியலில் ஸல்மான் ருஷ்டி ஏன் இடம் பெறவில்லையோ அதே காரணம்தான் எனக்கும். அதாவது, தமிழ்நாட்டு எல்லையை விட்டு நான் வெளியே போய் விட்டேன். இகனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழில் 31.12.2010 அன்று Top Ten Personalities of the Decade என்று ஒரு பட்டியல் வந்தது. தமிழ்நாட்டிலிருந்து இரண்டு பேர். முதலில் என் பெயர்; அடுத்தது ரஜினிகாந்த். ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று காரணமும் சொல்லியிருக்கிறார்கள். இது கொல்கொத்தா, ஹைதராபாத், தில்லி, மும்பை எடிஷன்களில் வந்தது. நான் அன்றைய தினம் ஹைதராபாதில் இருந்ததால் என் மனைவி அவந்திகாவை போனில் அழைத்து “சென்னை எடிஷனில் வந்திருக்கிறதா, பார்” என்றேன். அவள் உடனேயே என்னிடம் சொன்ன பதில்: “அட போ சாரு; உன்னை யாராவது கிண்டல் பண்ணியிருப்பார்கள்.” அதைக் கேட்டதும் எனக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. சரி, அவந்திகாவுக்கு இலக்கியம் தெரியாது; அவள் அப்படிச் சொல்லலாம். ஒட்டு மொத்த தமிழ் சமூகமே இந்தச் செய்தியைக் கண்டு கொள்ளாமல் விட்டதே? ஒரு பத்திரிகையில் கூட இது பற்றிய செய்தி வரவில்லையே? அதனால்தான் இதைத் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறேன். புரிகிறதா?

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>