முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 26
பிப்ரவரி 2011

  அமென்
கிர‌க‌ம்
 
 
       
நேர்காணல்:

எல்லா தவறுகளையும் அனுமதிக்கும் இந்த வாழ்வில், நான் சொல்ல என்ன கருத்து இருக்கிறது?

சஞ்சய் குமார் பெருமாள்



குறும்பட விமர்சனம்:

'வாழ்க்கையை உரையாடுதல்' - சஞ்சய் குமார் பெருமாளின் ஜகாட் (Jagat)
கே. பாலமுருகன்



மலேசிய இந்தியர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் 'இண்டர்லோக்' (Interlok) மலாய் நாவல் சர்ச்சை குறித்தான அலசல்கள்

"பறையனாக இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை?"
ம‌. ந‌வீன்

காலம் கடந்த ஞானமும் தண்டனையும்: “இண்டர்லோக் சமூகத்தின் ஆழ்மனம்”
கே. பாலமுருகன்

அடையாளமற்றவர்கள்
சு. யுவராஜன்



சிறுகதை:

அமென்
கிர‌க‌ம்

விட்டாச்சு லீவு
சின்னப்பயல்



கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...8
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...15
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...16

லதாமகன்

தவ சஜிதரன்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

ரெ. பாண்டியன்

மேரியின் சொந்த ஊர் குருவாயூர். பள்ளிப்படிப்பைக் கான்வெண்ட் ஒன்றில் படித்தாள். கான்வெண்ட் குருவாயூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்ததாள் கான்வெண்ட் ஹாஸ்டலில் தங்கிபடித்தாள். கான்வெண்ட் நடத்தி வந்தவர்கள் கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்தவர்கள். பெண்கள் மட்டும் படிக்கும் கான்வெண்ட் அது. ஆண்கள் என்று பார்த்தால் சர்ச்சில் இருக்கும் பாதர். அவரும் பிரார்த்தனை நேரம் மட்டும் கான்வெண்டினுள் இருப்பார்.

மேரி வாரவிடுமுறை நாட்களில் அவள் வீட்டிற்கு வருவாள். மேரிக்கு அப்பா என்றால் மிகவும் இஷ்டம். அவள் ஊருக்கு வரும் தினத்தன்று வீட்டிலுள்ள அனைவரும் திரைப்படத்திற்கு செல்வார்கள். அந்தப்படத்தின் திரைப்பட பாடல்களை முணுமுணுத்தப்படி ஒரு மாதகாலம் இருப்பாள். அவள் வயதிற்கு வந்த சில மாதங்கள் கழித்து அவள் அம்மாவிடம் பேசினாள்.

"அம்மா நான் கல்யாணம் செய்து கொள்ள போவதில்லை. கன்னியாஸ்திரியாக போகிறேன். யேசுநாதர்தான் என்னோட கணவர்"

இந்த வார்த்தையை மேரி முதலில் சொன்னவுடன் அவள் அம்மாவிற்கு சிரிப்பு வந்தது. அவள் ஏதோ விளையாட்டாய் பேசுவதாய் எடுத்துக் கொண்டாள். சில வருடங்கள் கழித்தும் அதையே சொன்னாள்.

"ஆண்டவர் தான் என்னோட கணவர். எனக்கு கல்யாணம் வேண்டாம்."

மேரியின் அம்மாவிற்கு பதற்றமானது. இந்த விஷயம் அவள் அப்பாவிற்கு தெரிந்தால் அதிகம் கோபப்படுவார், கத்துவார் என்று பயந்தாள்.

"உன்னை யாரும் கன்னியாஸ்திரியாக சொன்னாங்களா?"

"யாரும் சொல்லவில்லை. இது நானாய் எடுத்த முடிவு"

"இல்ல மேரி, இந்த சமூகத்தில ஒரு பொண்ணு தனியா வாழ்வது கஷ்டம். உனக்கு ஒரு துணை தேவை. குடும்பம் தேவை"

"அம்மா, என்னை சமாதானம் செய்ய நினைக்காத. இது தான் என்னோட முடிவு"

மேரி கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான சடங்குகள், பிரார்த்தனைகள் வெகுவிமர்சியாக நடந்தது. அவள் குடும்பத்திலிருந்து அனைவரும் வந்திருந்தனர். அவர்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டாள். மேரி கன்னியாஸ்திரி ஆனாள்.

ஒரிஸா மாநிலத்திலுள்ள கந்தமால் மாவட்டத்தில் சாமியார் ஒருவரை முகம் தெரியாத கும்பல் சுட்டுக் கொன்றது. இந்த செயலை யார் செய்தார்கள் என்று தெரியவருவதற்கு முன்பே இந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையே பிரச்சனை ஆரம்பமானது. கிறிஸ்துவர்கள்தான் சாமியாரை கொன்றார்கள் என்று அவர்கள் பிரார்த்தனை கூடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சர்ச்கள் தீக்கு இறையாக்கப்பட்டன. இந்தப் பிரச்சனையில் அதிகப்படியாக கிறிஸ்துவ அமைப்பினரே பாதிக்கப்பட்டனர். அரசு கணக்கீட்டின்படி கந்தமால் மாவட்டத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதிகப் படியானோர் தலித்துகள், தினக்கூலி செய்து ஜீவனம் செய்பவர்கள், இந்துக்களிலிருந்து கிறிஸ்துவர்களாக மாறியவர்கள்.

மேரிக்கு கான்வெண்ட் பிடித்துப்போன இடமானது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பிரார்த்தனை, மற்ற நேரங்களில் படிப்பு என்று வாழ்க்கை மகிழ்ச்சியாய் சென்றது. மேரி கல்லூரியிலே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றாள். இயற்பியல் பாடம் எடுக்கும் ஸ்டெல்லா மேடத்துக்கு மேரியின் மீது நல்ல அன்பு. ஆனால் ஸ்டெல்லா மேடத்தை பற்றி ஏகப்பட்ட கதைகள் ஹாஸ்டலில் சுற்றித்திரிந்தன. தினமும் பின் இரவில் ஹேமாவுடன் ஒன்றாக கழிப்பறையினுள் செல்வதாகவும், சர்ச்சுக்கு வரும் பாதருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர். மேரி அது நடக்கும் வரை இதை எதுவும் நம்பவில்லை.

மாலைநேரம் கல்லூரி வகுப்பறையில் யாரும் இல்லாத ஒரு நாள் ஸ்டெல்லா மேடம் ஒரு கையை மேரியின் தொடையிலும், மறுகையை மேரியின் பின்புறத்திலும் வைத்து வருடினாள். ஸ்டெல்லா மேடம் கைகளை உதறிவிட்டு வகுப்பறையை விட்டு உடனே வெளியேறினாள். அன்றைய இரவு மேரி தன் உடலை யாரோ வருடுவதுபோல் உணர்ந்தாள். தூக்கம் வராமல் புரண்டுபுரண்டு படுத்தாள். அதிகாலை குளிர்த்த நீரில் குளித்த பின்னர் அந்த எண்ணம் கொஞ்சம் வடிந்திருந்தது. ஒரு நாள் ஸ்டெல்லா மேடம் கான்வெண்டிலிருந்து காணாமல் போனாள். சில நாட்கள் கழித்து ஸ்டெல்லா மேடம் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. கல்லூரி படிப்பு முடித்த பின் மேரி கந்தமால் மாவட்டத்திலுள்ள சர்ச் ஒன்றிற்கு மாற்றப்பட்டாள்.

மேரி சர்ச்சில் பணிக்கு சேர்ந்த இரண்டு மாதங்கள் கழித்து இந்துத்துவ அமைப்பினர் அந்த சர்ச்சினை முற்றுக்கையிட்டனர். சர்ச்சினுள் இருந்த நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன. பாதர் மண்டை உடைப்பட்டு மயக்கமடைந்தார். ஜந்தாறு குண்டர்கள் அவள் தங்கியிருந்த அறையினுள் நுழைந்தனர். எவ்வளவோ எதிர்த்தும் அடக்கிவிடும் உடல்பலம் கொண்ட‌ குண்டர்களிடமிருந்து மேரியால் தப்பிக்கமுடியவில்லை. குண்டர்கள் சர்ச்சை கொளுத்திவிட்டு சென்றனர். அப்போது அந்தப்பக்கமாக சென்று கொண்டிருந்த ஆண் மேரியை காப்பாற்றினான். மேரியை வெற்று உடம்பில் தூக்கிவருவதை பார்த்த ஊர்க்காரர்கள் அவன்தான் சர்ச்சிற்கு தீ இட்டது என்று அவனை ஊர்ஜனங்கள் அடித்தனர். அடித்ததில் அவன் வலதுகால் நொறுங்கிப்போனது. பாதர் காப்பாற்ற முடியாமல் தீயிலே கருகிப்போனார்.

அந்த ஆண் நொறுங்கிப்போன காலுடன் ஆறுமாத காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தான். இவன் தன்னை காப்பாற்ற வந்தவன் என்பதை மேரி சொல்லி ஊர்ஜனங்களுக்கு தெரிந்தது. பத்திரிக்கையாளர்கள், டி.வி ரிப்போர்டர்கள் மேரியை சுற்றிசுற்றி அலைந்தனர். உங்களை யார் கெடுத்தது? எத்தனை பேர் கெடுத்தது? கற்பழித்தவர்கள் இந்துவா இல்ல கிறிஸ்தவனா? சாட்சி யார்? என்று கேவலமாக கேட்கும் கேள்விகளுக்கு பயந்து மேரி குருவாயூரிலுள்ள அம்மா வீட்டில் தங்கியிருந்தாள். முதன் முறையாக தனக்கென்று ஒரு பாதுகாப்பு தேவை என்று உணர்ந்தாள். மேரி தன்னை தீயிலிருந்து காப்பாற்றியவன் தன்னைவிட பதினைந்து வயது மூத்தவன் என்றாலும் தன் பாதுகாப்பிற்காக அவனை திருமணம் செய்து கொண்டாள்.

0 0 0

அக்டோபர் மாதம் முப்பதாம் தேதி, 2010.

செகந்திராபாத் ஸ்டேஷன் மாலை நேரத்திற்கே உரித்தான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. சுந்தரம் ப்ளாட்பாரம் நம்பர் ஒன்றில் வண்டி எண் 2604க்கு காத்திருந்தான்.

"மேரி கோச் எஸ். பதிமூன்று அங்க வருது" என்று கூறிய அவனின் பின்னால் சென்ற பெண்ணை பார்த்தான் சுந்தரம். கோச் எஸ் பதிமூன்றில் நின்று கொண்டிருந்தாள் மேரி. ப்ளாட்பாரம் ஒன்றில் நின்று கொண்டிருந்த அதிகப்படியானோர் தமிழ் மக்கள், தீபாவளிக்காக சொந்த ஊர் செல்பவர்கள். வண்டி எண் 2604 சென்னை எக்ஸ்ப்ரஸ் செகந்திராபாத் ஸ்டேஷனுக்குள் நுழையும்போது அதிக டெசிபல் சப்தத்துடன் வந்தது. மேரி ஏறிய கோச்சில் சுந்தரமும் ஏறிக்கொண்டான். மணி அப்போது சரியாக 5:25.

செகந்திராபாத், ஹைய்தராபாத் இரட்டை நகரங்கள். குசைன்சாகர் லேக் இவ்விரு நகரங்களையும் பிரிக்கிறது. மழைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பித்திருந்தது. ஆனாலும் சிறுதூரல் தூரிக்கொண்டிருந்தது. வானம் நன்கு கருத்திருந்தது.

மேரி சைடுலோயரில் தன் மகனுடன் அமர்ந்திருந்தாள். சுந்தரம் அதே க்யூப்பிக்களில் லோயர் பெர்த்தில் அமர்ந்திருந்தான். மேரி வெள்ளை நிறமும் இல்லை, கருப்பு நிறமும் இல்லை, மாநிறம். சேலை உடுத்தியிருந்தாள். சேலையின் மடிப்புகள் களையாமல் பார்க்க அழகாகயிருந்தது. நெற்றிமுடியின் நடுவில் உச்சி எடுத்து தலையை படியவாரி ஜடை போட்டிருந்தாள். அவள் செயலில் எந்த அவசரமும் தென்படவில்லை, நிதானமாகவே இருந்தாள்.

மழைச்சாரல் ஜன்னல் வழியே உள்ளே தெறித்துக் கொண்டிருப்பதை பார்த்து கண்ணாடி ஜன்னலை கீழே இறக்கிவிட்டனர். மழைச்சாரல் கண்ணாடி ஜன்னல் மீது பட்டு தெறித்து கோடுகோடாக நெளிந்து வழிந்து கொண்டிருந்தது.

மேரியும், அவளது மகனும் ஜன்னலின் வெளியே கையை நீட்டி மழைச்சாரல் கையில் படும்படி வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சிறுவனின் முகம் நீர்த்துளியாய் இருந்தது. அவனது பேண்டை மழைத்துளி கொஞ்சம் கொஞ்சமாக ஈரம் ஆகிக் கொண்டிருந்தது. மேரியின் சேலையும் ஈரமாகியிருந்தது. பலத்தமழை பெய்யத் தொடங்கியது. மேரியும் அவனது மகன் ஆடையும் முழுவதும் நனைந்து போனது. அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையில் நீர்த்தேங்கியிருந்தது. வேகமாக அவர்கள் அருகில் வந்த ஆண் கண்ணாடி ஜன்னலை வேகமாக கீழே இழுத்துவிட்டான். மேரியின் முகத்தை பார்த்த அவன் "என்ன மேரி இது? சின்ன பிள்ளையாட்டம். பார் ட்ரஸ் எல்லாம் ஈரமாயிடுச்சி"

மேரி "ட்ரஸ் நனைஞ்சா ஒண்ணும் ஆயிடாது. வேற ட்ரஸ் மாத்திக்கலாம்" என்றாள்.

மேரி கொண்டு வந்திருந்த பேக்கிலிருந்து சேலை, ஜாக்கெட்டை எடுத்துக் கொண்டு உடைமாற்றச் சென்றாள். மேரியின் மகன் அவள் பின்னால் சென்றான். அந்த ஆண் அவர்கள் இடத்திலிருந்த மழைநீரை சுத்தமாக துடைத்தெடுத்திருந்தான். இரயில் சற்றுதூரம் சென்றதும் மாலை வெயில் கண்ணாடி ஜன்னல் வழியே உள்ளே நுழைந்தது. அந்த ஆண் கண்ணாடி ஜன்னலை மேலே தூக்கிவிட்டான். மாற்றுஉடை அணிந்து கொண்டு மேரியும் அவள் மகனும் அவர்கள் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இரயில்வண்டி அதற்கே உரித்தான தாலாட்டில் அனைவரையும் தாலாட்டியபடி தண்டவாள இரும்புக்கம்பிகளின் மீது வேகமாக ஊர்ந்து கொண்டிருந்தது. இரவுவிளக்குகள் போடப்பட்டன. இரவு உணவை விற்பனை செய்பவர்கள் ஆர்டர் எடுக்க வந்திருந்தனர், லேப்-டாப் எடுத்து வந்தவர்கள் ஆங்கிலப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர், சிலர் காதில் இயர்-போன் மாட்டிக்கொண்டு சினிமா பாடல் கேட்டுக்கொண்டிருந்தனர். சுந்தரம் மேரியையே பார்த்துக்கொண்டிருந்தான். பொட்டு இல்லாத மேரி நெற்றியில் சிகப்புநிற பொட்டுவைத்தும், பூக்கள் இல்லாத கூந்தலில் மல்லிகைபூ வைத்தும் கற்பனை செய்து பார்த்தான்.

மேரி தன் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். சுந்தரத்திற்கு ஏனோ அவளின் முகம் மிகவும் பிடித்துப்போனது. பிடித்ததற்கு காம உணர்ச்சிகள் காரணம் இல்லை, ஆனால் ஏதோ ஒன்று அவளை பார்க்கவேண்டுமென்று தூண்டியது. சுந்தரம் மேரியை பார்த்துக் கொண்டிருப்பதை மேரியும் இரண்டுமுறை பார்த்துவிட்டாள். ஜன்னலை சாத்திவிட்டு சென்ற அந்த ஆண் கதவின் ஒரமாக நின்று கொண்டிருந்தான். அந்த ஆண் அதிகவயது உடையவன் போல் இருந்தது. மேரி அந்த ஆணை மணிக்கொரு முறை பார்த்துக்கொண்டிருந்தாள்.

சுந்தரம் இரவு உணவை முடித்துக்கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். அவனிடம் கேட்காமல் விளக்கு அணைக்கப்பட்டது. ஆனால் சுந்தரத்திற்கு தூக்கம் வரவில்லை. அவன் கண்களுக்கு விரித்திருந்த பேப்பரில் எழுத்துருக்கள் தெரியாமல் எல்லாமே கருப்பாய் தெரிந்தது. சுந்தரம் சைடு-லோயரை பார்த்தான். மேரி, அவள் மகன், அந்த ஆண் நன்கு தூங்கிக்கொண்டிருந்தனர்.

000

அக்டோபர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி, 2010.

காலை 6:15க்கு இரயில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனை வந்தடைந்தது. சுந்தரம் சென்ட்ரலிருந்து கிழம்பி மதுரை வழி குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறுவதற்காக எக்மோர் ஸ்டேஷன் வந்து சேர்ந்தான். அவன் பயணம் செல்லும் அதே கோச்சில் மேரியும் இருந்தாள். கூடவே அந்த ஆணும் இருந்தான். சுந்தரத்திற்கு அவன் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.

சுந்தரம் ப்ளாட்பாரத்திலிருந்த தண்ணீர் குழாயின் அருகில் நின்று பல் துலக்கினான். மேரியின் உடனிருந்த ஆண் சுந்தரத்தின் அருகில் வந்தான்.

"கொஞ்சம் பேஸ்ட் கிடைக்குமா?"

"இந்தாங்க" என்று பேஸ்ட்டை கொடுத்தான்.

"அவசரத்தில பேஸ்ட் எடுத்து வைக்க மறந்துட்டேன்"

"பரவாயில்லை. நீங்க எங்க போறீங்க?"

"குருவாயூர், நீங்க?"

"மதுரை"

மேரி ஜன்னல் வழியே இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"மனைவி கிட்ட இந்த பேஸ்ட்டை கொடுத்துட்டு வர்றேன் காத்துட்டிருக்கா" என்றவன் மேரியை நோக்கி நடந்தான்.

000

தூக்கத்திலிருந்து எழுந்தவன் வேகமாக விளக்கை போட்டான். சைடு லோயர், அப்பர் பெர்த் காழியாக இருந்தது. வேகமாக மணியை பார்த்தான். கடிகாரம் 1 மணி காட்டியது. நாள் முப்பத்தி ஒன்றாம் தேதி. வேகமாக அப்பர் பெர்திலிந்து கீழே இறங்கி பைக்குளிலிருந்த நேற்றைய நியூஸ்பேப்பரை விரித்து பார்த்தான்.

"2008ல் கந்தமால் மாவட்டத்தில் நடந்த மதக்கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜந்து குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டனர். இன்னும் மூன்று குற்றவாளிகளின் மீதான விசாரணை அடுத்த மாதம் நடைபெறும்.................."

சுந்தரத்திற்கு தன்னுடன் பயணித்த மேரி யார்? அவளுக்கும் கந்தமால் கன்னியாஸ்திரி மேரிக்கும் ஏதும் தொடர்புள்ளதா என்று யோசித்தான். சுந்தரம் எதுவும் முடிவு எடுக்கமுடியாத குழப்பமான மனநிலையில் இருந்தான்.

"சார் கொஞ்சம் லைட்டை அணைங்க. காலையில பேப்பர் படிச்சிகிடலாம்"

சுந்தரம் வெற்றிடமாக இருந்த சைடு லோயரை பார்த்தான். விளக்கு அணைக்கப்பட்டது. மீண்டும் பேப்பரை பார்த்தான். பேப்பரில் எழுத்துருக்கள் மங்கி கருப்பாய் தெரிந்தது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>